ஸஜ்தாவாகிறது தொழுகையில் செய்யக்கூடிய தனித்துவமான,சிறப்பு வாய்ந்த
ஒரு செயலாகும். கடமையான வணக்க வழிபாடான தொழுகையின் அடிப்படை தத்துவம்,மனிதர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியை கொடுப்பது
மட்டுமல்ல,மேலும் மனித
உடல் முழுவதற்கும் தேவையான மருத்துவ நன்மைகளை அதிகம் வழங்க கூடியதாக இருப்பதாக
வல்லுனர்களால் ஆராய்ந்து உணர்த்தப்பட்டது.
இப்னு மாஜா எனும் ஹதீது கிரந்தத்தில் ஒரு ஹதீது,சர்வலோக அரசர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,“தொழுகையாகிறது அனேக நோய்களுக்கு அருமருந்தாகும்”,மேலும் ஸஜ்தாவுடைய நிலை மனிதனை ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்குமிக நெருக்கமாக்கி வைக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,“மனிதன் தன்னுடைய ரப்பை ஸஜ்தா செய்யும்போது மிகவும் நெருங்குகிறான்,எனவே இந்த நிலையில் மனப்பூர்வமான பிராத்தனையை செய்து கொள்ளட்டும்”. ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,“தொழுகையில் ருகூவையும்,ஸஜ்தாவையும் சரியாக செய்யும்படி முஸ்லிம்களுக்கு அறிவுரை பகர்ந்த்தார்கள் கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”.
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,“மனிதன் தன்னுடைய ரப்பை ஸஜ்தா செய்யும்போது மிகவும் நெருங்குகிறான்,எனவே இந்த நிலையில் மனப்பூர்வமான பிராத்தனையை செய்து கொள்ளட்டும்”. ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,“தொழுகையில் ருகூவையும்,ஸஜ்தாவையும் சரியாக செய்யும்படி முஸ்லிம்களுக்கு அறிவுரை பகர்ந்த்தார்கள் கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”.
ஸஜ்தா செய்வதால் மனம் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது,கவலையே தங்கள் வாழ்க்கையாக கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் அதிலிருந்து விடுபட வழிவகை செய்கிறது. ஒரு மனிதன்
ஸஜ்தாவில்
இருக்கும்போது அவனுடைய முழு உடலும் சுறுசுறுப்பாகி விடுகிறது. அவன் தன்னுடைய
நெற்றியை பூமியிலும்,கைகளை
பக்கத்தில்
வைத்துள்ள ஸஜ்தாவுடைய நிலையானது,உடலிலுள்ள அனைத்து தசைகளையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைத்து அவைகளுக்கு சிறந்த
உடற்பயிற்சியையும் கொடுக்கிறது. கைகள் பிரத்தியேகமான முறையில் வைக்கப்படுவதால் முன்னங்கைகள்
மற்றும் கைகளில் உள்ள
தசைகளுக்கு
நன்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு
அவைகளுக்கு உறுதியை அளிக்கிறது. இறைத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,‘ஸஜ்தாவில் முன்னங்கைகளை தரையில் சமமாக பரப்பி வைக்காமல் சிறிது
உயர்த்தி வைக்குமாறு’
அறிவுரை பகர்ந்த்தார்கள். இப்படி செய்வதால் கைகளின்
தசைகளுக்கு
சிறந்த பயிற்சி கிடைத்து அவைகளை வலுவானதாக ஆக்கும்.
ஸஜ்தா என்ற சிறப்புவாய்ந்த தனித்துவமான
இந்த ஒரு நிலையில் மட்டுமே, மூளை இதயத்திற்கு கீழ் வருவதால், முதல்முறையாக இரத்தம் மிக வேகமுடன்
மூளையை நோக்கி பீறிட்டுப் பாய்வது கொண்டு,மூளைக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துகள்
கிடைத்து,நினைவாற்றல்,பார்வை,கேள்வி,ஒருமுகப்படுத்துதல்,ஆன்மா ஆகிய
இவற்றில் சிறந்த பலன்களை உண்டாக்கி அறிவுக்கூர்மையை ஏற்படுத்துகிறது.
தொழுகையை முறையாக நேரம் தவறாமல் நிறைவேற்றி வருபவர்கள் அதிக
மனோதிடம் பெறுவதோடு,அவர்களால் எந்த ஒரு கடினமான பிரச்சினையையும் இலகுவாக
சமாளிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள். அவர்களுக்கு தலைவலிகளோ,மனம்,அறிவு சார்ந்த
குறைபாடுகளோ மிகவும் குறைவாக இருக்கும். ஸஜ்தா நிலையில் நெற்றியை தரையில்
வைக்கும்போது தலையின் முழு பாரத்தை கழுத்து தசைகள் தாங்குவதால் அவைகள்
வலுப்பெறுகின்றன.
கழுத்து தசைகள் மிக உறுதியாக இருக்கும்போது,அதனோடு தொடர்புடைய முதுகு எலும்பும் உறுதியடைகின்றன. கழுத்து தசைகளின் உறுதி மிக முக்கியம் ஏனெனில்,அவைகள் தான் முதுகெலும்புக்கு மேலே அமையப் பெற்றுள்ள தலையை தாங்கிப் பிடிக்கிறது. தலையை சுழற்றுவதற்கும், பல கோணங்களில் திருப்புவதற்கும் உறுதுணை புரிகிறது. தலையில் ஏதாவது விபத்து ஏற்படும் சமயத்தில் மருத்துவர்கள் மிக முக்கியமாக பரிசோதிப்பது கழுத்துப் பகுதியேயாகும்,இதிலிருந்து இதன் முக்கியத்துவம் தெளிவாகும். தொழுகையை ஒழுங்காக நிறைவேற்றி வருபவர்களுக்கு கழுத்து சம்பந்தமான நோய்கள் வருவது மிக மிக அரிது ஏனெனில், தினமும் ஐவேளை தொழுகையில் 34 தடவை ஸஜ்தா செய்து வருவதால் கழுத்து தசைகள் மிகவும் வலுவடைந்து விடும்.
ஸஜ்தாவிற்கு செல்லும்போதும் எழும்பும்போதும்,நமது முதுகு
தசைகள் நேரடியாக இயக்கப் படுவதால் அவைகள் மிகவும் உறுதியடைகின்றன. ஆதலால்
முதுகுவலி வரக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
இறுதியாக நினைவில் கொள்ள வேண்டியது யாதெனில், தொழுகையானது அனைத்து உடல் உறுப்புகளுக்கும் தேவையான மிகச்சிறந்த பயிற்சியை கொடுப்பது மட்டுமல்ல,நிறைய மருத்துவ நன்மைகளையும் வழங்கி நாம் முழு ஆரோக்கியமானவர்களாக வாழ்வதற்கும் வழிவகை செய்கிறது. மேலும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் ஜல்ல ஜலாலஹுவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு அவனுக்கு முற்றிலும் வழிபட்டு அவன் ஏவிய தொழுகையை நேரந்தவறாமல் நிறைவேற்றி வருவது கொண்டு கிடைப்பதற்க்கு அறிய பாக்கியமான “மன அமைதி” கிட்டு
தொகுப்பு: W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன்
No comments:
Post a Comment