தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்:
நபி (ஸல்) கூறினார்கள்:-
மீசையைக்கத்தரித்து தாடியை வளர்ப்பதன் மூலம் முஷ்ரிகீன்களுக்கு மாற்றம் செய்யுங்கள் (ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் மீசையை வளர்ப்பார்கள், தாடியைச் சிரைப்பார்கள்) நூல்: முஸ்லிம்
ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:-
நபி (ஸல்) அவர்கள் அடர்ந்த தாடி உடையவர்களாக இருந்தார்கள்.
(நூல்: முஸ்லிம்)
மேலும், அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும்போது (இறைவனின் கட்டளைக்கிணங்க, மூஸா (அலை) ‘’தவ்ராத்’’ வேதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பியபோது பனீ இஸ்ரவேலர்கள் வழி கேட்டில் இருப்பதைக் கண்டு கோபம் கொண்டவராக தன் சகோதரர் ஹாரூன் (அலை) உடைய தலைமுடியையும், தாடியையும் பிடித்து உலுக்கி இவர்கள் வழிதவறுவதை நீங்கள் பார்த்தபோது அதை நீர் தடுக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்டதாகவும், அதற்கு ஹாரூன் (அலை) ‘’என் தாயின் மகனே! (சகோதரனே!) என் தலைமுடியையும், தாடியையும் பிடிக்காதீர்கள்’’ என்று கூறி தன் சூழ்நிலையை விளக்கியதாகவும் ‘’அல்லாஹ் கூறுவதைப்பார்க்கும்போது, நபிமார்கள் தாடி வைத்துள்ளார்கள் என்பதும் அது கையால் பிடிக்கக்கூடிய அளவுக்கு இருந்தது என்பதும் தெளிவாகிறது. தாடி வைக்க வேண்டுமென்பது ஒரு சட்டம். அது இந்த அளவு இருக்க வேண்டுமென்பது மற்றொரு சட்டம். இரண்டு சட்டங்களையும் பேணுபவர்தான் சுன்னத்தான தாடி வைத்திருக்கிறார் என்று சொல்லப்படும்.
தாடி - உடல் ரீதியான பலன்
ஆண்களின் உடம்பில் ஆண்மையை அதிகரிக்கச் செய்யக்கூடிய பாலியல் சுரநீர்களை விஞ்ஞானிகள் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். 1. முதலாம் தர பாலியல் சுரநீர். 2. இரண்டாம் தர பாலியல் சுரநீர் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை முழுமையாக தொழும்போது அவனுடைய முதுகுத்தண்டு குறைந்த பட்சம் 34 தடவையாவது வளைந்தெடுக்கப்படுவதால் அவனுடைய கிட்னிக்கு மேல் தொப்பி போல இருக்கின்ற ஒரு வித சுரப்பி தூண்டப்பட்டு ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியையும், பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியையும் உண்டாக்குகின்றது.
இது முதல் தர சுர நீர் ஆகும். அடுத்ததாக ஆண்கள் தாடி வைப்பதாலும் உடம்பில் ஒரு வித சுரநீர்கள் தூண்டப்பட்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்கின்றன. இது இரண்டாம் தர சுரநீர் ஆகும். இவ்விரண்டு சுரநீர்களும் சேர்ந்து கூட்டாக செயலாற்றி ஆண்மையை அதிகரிக்கச் செய்கின்றன.
ஆண்மைக்கு அழகு சேர்க்கும் தாடி
இன்றைய முஸ்லிம்கள் பலர் தாடி வைப்பதை அழகுக்குறைவாக கருதுகின்றனர். ஆனால், இஸ்லாத்தின் கண்ணோட்டத்திலும், இயற்கை அமைப்பின்படியும் தாடி என்பது ஆண்மைக்கு அழகு சேர்க்கும் அம்சமாகும்.
ஆண் சிங்கத்திற்குத்தான் பிடரி மயிர் இருக்கிறது.
ஆண் யானைக்குத்தான் தந்தம் இருக்கிறது.
ஆண் மயிலுக்குத்தான் தோகை இருக்கிறது.
ஆண் கோழிக்கு (சேவல்)த்தான் கொண்டை இருக்கிறது.
இவ்வாறு மிருகங்களிலும் பறவைகளிலும் ஆண் இனத்தை தாடியைக் கொண்டு அல்லாஹ் சிறப்பாக்கி வைத்துள்ளான். ஆனால், ‘மொழு, மொழு வென்று இருக்கும் பெண்களை அழகிய உருவமாக கருதிப்பழகி விட்ட ஆண்களுக்கு தாடியுடன் இருப்பவர்களைக்கண்டால் அசிங்கமாகத்தோன்றும். ஆனால், உண்மையில் தாடிதான் ஆண்மைக்கு அழகானதாகும்.
தாடியை ஒழுங்கு படுத்துவது
தாடி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய இஸ்லாம், சந்நியாசிகளைப்போல அளவுக்கு மீறி வைக்கச்சொல்லவில்லை. அந்த வகையில் தாடியை எவ்வளவு நீளம் வளர்ப்பது என்பதில் ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் மேதைகளின் கருத்துகள் பின்வருமாறு:-
அம்ரு ப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் தன் பாட்டனாரின் வாயிலாக அறிவித்துள்ளார்கள்:-
நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தனது தாடியை அகலத்திலும், நீளத்திலும் (ஆங்காங்கே நீண்டு கிடக்கும் முடிகளை) எடுப்பவர்களாக இருந்தார்கள். (திர்மிதி)
தாடியை ஒரு பிடியைவிட நீளமாக வளர்ப்பது மக்ரூஹ் என இமாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள். வேறு சிலர் ஒரு கைப்பிடி அளவு என்றும் அதைவிட அதிகமாக உள்ளதை வெட்டி விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். காழி இயாள் (ரஹ்) கூறும்போது ‘’நீளத்திலும், அகலத்திலும் தாடியைச் சரி செய்வது சிறந்ததாகும். தன்னுடைய தாடியைப் பெரிதாக வளர்த்து, அதன் மூலம் பிரபலமாக ஆக முயற்சிப்பது மக்ரூஹ் ஆகும்’’ என கூறியுள்ளார்கள்.
நூல்: நவவீ (ரஹ்) எழுதிய ஷஷஷரஹு முஸ்லிம்||)
மீசையைக்கத்தரிக்க வேண்டும்
நபி (ஸல்) கூறினார்கள்:-
யார் மீசையைக் கத்தரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்’’
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்:-
ஐந்து விஷயங்கள் நபிமார்களின் சுன்னத்துகளாகும். 1. கத்னா செய்தல். 2. மறைவிட ரோமங்களைக்களைதல். 3. மீசையைக் கத்தரித்தல் 4. நகம் வெட்டுதல் 5. அக்குள்முடிகளைப் பிடுங்குதல். (நூல்: புகாரி, முஸ்லிம்)
மற்றோர் அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-
நபி (ஸல்) கூறினார்கள்:-
பத்து விஷயங்கள் ஆரம்ப கால சுன்னத்துகளாகும். 1. மீசையைக்கத்தரிப்பது. 2. தாடியை வளர்ப்பது. 3. மிஸ்வாக் செய்வது. 4. நாசிக்கு நீர் செலுத்துவது. 5. நகம் வெட்டுவது. 6. (கை, கால், விரல்) இடுக்குகளைக் கழுகுவது 9. தண்ணீரைக்குறைவாகச் செலவு செய்வது 10. வாய்க்கொப்பளிப்பது. (நூல்: புகாரி, முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
நபி (ஸல்) அவர்கள் தங்களின் மீசையை கத்தரிப்பவர்களாக இருந்தார்கள். மேலும், கூறுவார்கள்:- அல்லாஹ்வின் நண்பர் ஹழ்ரத் இப்றாஹீம் (அலை) இவ்வாறுதான் செய்பவர்களாக இருந்தார்கள்|| (நூல்: பஜ்ஜாஜ்)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நீளமான மீசை வளர்த்திருந்த ஒருவரைப் பார்த்ததும் (தோழர்களிடம்) குச்சியையும், கத்தரியையும் கொண்டு வாருங்கள்! என்று கூறி அந்த குச்சியை மீசையில் வைத்து அதைவிட அதிகமாக உள்ள முடிகளை கத்தரித்தார்கள். (நூல்: பஜ்ஜாஜ்)
மீசையை மழிப்பது மக்ரூஹ்
ஷஷமீசையைக் கத்தரியுங்கள்|| என்ற ஹதீஸின் மூலம் ஷஷமீசையை முற்றிலுமாக மழிப்பது மக்ரூஹ்|| என்பதாக ஃபிக்ஹ்|| நூற்களில் கூறப்பட்டுள்ளன.
மீசையை கத்தரிக்க வேண்டும் மாறாக மீசையை முற்றிலுமாக சிரைத்து விடுவது பித்அத் ஆகும். (நூல்: துர்ருல் முக்தார்)
ஒருவருடைய புருவ முடிகள் எவ்வளவு இருக்குமோ அந்த அளவு மீசையை விட்டுவிட்டு அதற்கு அதிகமானவற்றை கத்தரிக்க வேண்டும். (நூல் : ஆலம்கீரி)
மீசையை முற்றிலுமாகச் சிரைத்து விடுவது மக்ரூஹ்’’ என காழி இயாழ் (ரஹ்) கூறியதாக முஸ்லிம் ஷரீபுடைய விரிவுரையில் நவவீ (ரஹ்) கூறியுள்ளார்கள்.
மீசையை நீளமாக வைப்போரின் கவனத்திற்கு.....
ஹழ்ரத் யஜீது இப்னு அபூ ஹுபைப்(ரலி) அறிவித்துள்ளார்கள்:
நெருப்பை வணங்குபவர்களான இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர் இவ்விருவரும் தாடியை முழுமையாகச் சிரைத்து மீசையைப் பெரிதாக வளர்த்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்விருவரையும் பார்த்து அருவருப்படைந்தவர்களாக உங்கள் இருவருக்கும் நாசம் உண்டாகட்டும்! என்று கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் எங்கள் அரசன் இவ்வாறு தான் எங்களை செய்யச் சொன்னார்’’ என்று கூற ‘’நிச்சயமாக எனது ரப்பு (அல்லாஹ்) எனது தாடியை நீளமாகவும், எனது மீசையைக்கத்தரித்துக் கொள்ளும்படியும் ஏவினான்|’’ என்று கூறினார்கள்.
குறிப்பு :-
கீழ் உதட்டின் அருகில் உள்ள முடிக்கு குட்டி தாடி என்று கூறப்படும். இதை முற்றிலுமாக நீக்கி விடுவது தவறான செயலாகும். அதே போல புருவத்தின் முடிகளை எடுப்பதும், சரியானதல்ல, அதுபோல மூக்கின் துவாரத்திற்குள் வளர்ந்துள்ள முடிகளை அவை வெளியே நீட்டிக்கொண்டிருந்தால் கத்தரிக்க வேண்டுமே தவிர நாசியின் முடிகளை முற்றிலுமாக சிரைப்பது கூடாது. மூக்கு துவாரத்திற்குள் முடிகள் இருப்பதால் தூசிகளும் நோய்க்கிருமிகளும் உள்ளே செல்வது தடை செய்யப்பட்டு வெண்குஷ்டம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.||
தாடிக்கு மருதாணி
ஆண்கள் மருதாணி இடுவது கூடாது என நபி (ஸல்) தடுத்துள்ளார்கள். ஆனால், நரைத்துப்போன தாடி, மற்றும் தலைமுடிக்கு மருதாணி இட்டு சிவப்பாக்கிக் கொள்வதை வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள்:-
நிச்சயமாக யூதர்களும், கிருஸ்தவர்களும் (தலைமுடிக்கும், தாடிக்கும்) சாயம் போட மாட்டார்கள். நீங்கள் அவர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். (நூல்:புகாரி, முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்:-
நிச்சயமாக நரைமுடியை (நிறம்) மாற்றுவதற்கு மிகச் சிறந்த சாதனமாகிறது மருதாணி இலையாகும். (நூல் : திர்மிதி, அபு தாவூத்)
உதுமான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய (தலை) முடிகளில் ஒன்றை எங்களுக்கு எடுத்துக்காட்டினார்கள். அது (மருதாணியால்) சாயம் இடப்பட்டதாக இருந்தது. (நூல்: புகாரி)
No comments:
Post a Comment