குர்ஆன் பற்றிய குயிஸ்
1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது?
ப : 40 வயதில்
2. முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம்) எது?
ப: இக்ர..; பிஸ்மி ரப்பிகல்லதீ (சூரா அலக்)
3. திருக்குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் எத்தனை?
ப: 1.தவ்ராத் 2. ஸபூர் 3.இன்ஜீல்
4. திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
ப: ரமளான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் இரவில்.
5. கடைசியாக இறங்கிய சூரா எது?
ப: சூரா நஸ்ரு.
5. ஜாமிஉல் குர்;ஆன் (குர்ஆனை ஒன்று சேர்த்து முடித்தவர்) என்ற சிறப்பு பெயர் யாருக்கு கூறப்படும்?
ப: உஸ்மான் (ரளி) அவர்களுக்கு.
7. திருக்குர்ஆன் முதலில் எங்கு அருளப்பட்டது?
ப: மக்கா நகரில் ஹீரா மலைக்குகையில்.
8. தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா வெளியிட்டது யார்?
ப: அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஹழ்ரத்.
9. திருக்குர்ஆனில் தலைசிறந்த அத்தியாயம் எது?
ப: சூரா ..;பாத்திஹா.
10. திருக்குர்ஆனில் தலைசிறந்த ஆயத்(வசனம்) எது?
ப: ஆயத்துல் குர்ஸீ
11. 'திருக்குர்ஆனின் இதயம்' எந்த அத்தியாம்?
ப: சூரா யாஸீன் என்ற அத்தியாயம்.
12. வறுமை ஏற்படாதிருக்க இரவில் எந்த சூராவை ஓதிவரும்படி நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?
ப: சூரா வாகிஆ
13. திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
ப: 25 நபிமார்கள்
14. திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
ப: 5 இடங்களில் (4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது
என்றும் கூறப்பட்டுள்ளது)
15. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழர் பெயர் என்ன? ப: ஸைத் இப்னு ஹாரிஸா (ரளி)
16. ஒரு பெண்ணின் பெயரைக்கொண்ட சூரா எது?
ப: சூரா மர்யம் (எண்:19)
17. திருக்குர்ஆனில் எத்தனை மன்ஜில்கள் உள்ளன?
ப:7 மன்ஜில்கள் உள்ளன.
18. திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய சூரா எது? மிகச் சிறிய சூரா எது?
ப: பெரிய சூரா அல்பகரா -எண்.2 சிறியது சூராத்துல் கவ்ஸர் எண்.2
19. திருக்குர்ஆனை ஒளுவின்றி தொடலாமா? ஓதலாமா?
ப: ஒளுவின்றி தொடக்கூடாது. ஒளுவின்றி
ஓதுவது கூடும்.
20. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள், பிள்ளைப்பேறு தொடக்கு உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாமா? தொடலாமா?
ப: ஓதுவதும் கூடாது. தொடுவதும் கூடாது ஹராமாகும்.
21. திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்யலாமா?
ப: அல்லாஹ்வை தவிர வேறு யார் மீதும்
சத்தியம் செய்வது கூடாது.
22. முதல் சூரா எது? கடைசி சூரா எது?
ப: முதல் சூரா ..;பாத்திஹா, கடைசி சூரா நாஸ்
23. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீமில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
ப: 19 எழுத்துக்கள்
24. பிஸ்மில்லாஹ் இல்லாத சூரா எது?
ப: சூரா தவ்பா
25. குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
ப: 114
26. திருக்குர்ஆனின் ஆயத்துக்கள் எத்தனை? ப: (ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்துப்படி)
ப: 6666
No comments:
Post a Comment