இஸ்லாம்

நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம்

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.
இரைப்பை குடல் பாதை பாதிப்பு
நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். Show 

சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்

ஆர்த்ரிடிஸ் சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்

நரம்புகள் டென்சன் ஆகும் பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்




மிஸ்வாக்


இஸ்லாத்தில்  சுத்தம் என்பது  தொழுதல், குர்ஆன் ஓதுதல், தவாஃப் செய்தல் போன்ற அமல்களுக்காக மட்டும் வலியுறுத்தப் படவில்லை. எல்லா நேரங்களிலும் தானும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புற சுழ்நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவ்வாறு தம்மையும் சமூகத்தையும் தூய்மை பெறச் செய்வதில் மிஸ்வாக் என்னும் பல் துலக்குதல் பெரும் பங்கு வகிக்கிறது.

அல்லாஹ் கூறும் மிஸ்வாக் 
 "இன்னும் இப்ராஹீமை அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் (என்பதையும் நினைவு கூறுங்கள்)                                                                                           (அல்குர்ஆன் 2:142)
இந்த வசனத்தில் வரும் 'கலிமாத்' (கட்டளைகள்)  என்ற அரபிப் பதத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஹள்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் "அக்கட்டளைகள் 10 என்றும் அவற்றில் மிக முக்கியமானது மிஸ்வாக் என்றும் கூறுகிறார்கள்.

அனைத்து நபிமார்களின் சுன்னத் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ அய்யூப் அல்  அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "4 செயல்கள் அனைத்து நபிமார்களின் சுன்னத்தாகும். 1) கத்னா செய்வது 2) நறுமணம் பூசுவது 3) மிஸ்வாக் செய்வது 4) திருமணம் முடிப்பது.                                                                                       (நூல்: இப்னு அபீ ஷைபா)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பர்ளாக்கப்பட்ட மிஸ்வாக் 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "வித்ரு தொழுவது, தஹஜ்ஜத் தொழுவது, மிஸ்வாக் செய்வது ஆகியவை உங்களுக்கு சுன்னத்தாகவும்  எனக்கு ஃ பர்ளாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஹதீஸில் "ஆரம்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (அவர்கள் உளூவுடன் இருப்பினும்) ஒவ்வொரு தொழுகைக்கும் உழு செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது. சில சமயங்களில் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போது அச்சட்டம் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக மிஸ்வாக் செய்வதைக் கடமையாக்கப்பட்டது.                                                                                     (நூல்: அபூதாவூத்)

தூங்கும் முன்....
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தூங்குவதற்காக வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக மிஸ்வாக் செய்வார்கள்.                                                                          (நூல்:  முஸ்னத் அஹ்மத் )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஒருமுறை நான்  என்னை மிஸ்வாக் செய்பவனாக கனவில் கண்டேன்.  என்னருகில் ஒரு சிறியவரும் பெரியவரும்  இருந்தனர்.  அவர்களில் நான் சிறியவனுக்கு  மிஸ்வாக்கைக்  கொடுத்த போது கொடுக்கவும் என்று  அறிவிக்கப்பட்டது நானும் அவ்வாறே செய்தேன்.                                   (நூல் : புகாரி )

நடு இரவிலும்.. 
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன்  இரவு தங்கினேன். இரவின் நான்கு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழித்தார்கள். நான்கு  முறையும் மிஸ்வாக் செய்தார்கள்.                                                                                                             (நூல்: அபூதாவூத்)

விழிக்கும் பொழுது.....
இரவிலோ பகலிலோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கி எழுந்ததும் உளூ செய்வதற்கு முன் மிஸ்வாக் செய்வார்கள்.                                                (நூல்: அபூதாவூத்)

சுய  தேவைக்கு முன் ...
இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் தண்ணீரும் மிஸ்வாக்கும்  வைக்கப்பட்டிருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது விழிப்பார்களோ  தனது சுய தேவையை முடித்தப்பின் மிஸ்வாக் செய்வார்கள்.                                                                                                            (நூல்: அபூதாவூத்)

சாப்பிடும்  முன்பும் பின்பும் .....
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு மிஸ்வாக் செய்வதை மிகவும் வலியுறுத்தியதிலிருந்து நான் தூங்கும் போதும் விழித்த பின்பும் சாப்பிடும் முன்பும் பின்பும் மிஸ்வாக் செய்வதை நான் தவறாமல் கடைபிடித்து வந்தேன்.                             (நூல்: மஜ்மஃ )

வீட்டில் நுழையும் போது...
ஹள்ரத் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்)  அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் நுழைந்ததும் செய்யும் முதல் எது? என்று அன்னை ஆயிஷா (ரலி)அவர்களிடம் கேட்ட போது "மிஸ்வாக்" என்று பதிலளித்தார்கள்.                                                                                                                                                       (நூல்: முஸ்லிம்)

வீட்டிலிருந்து வெளியேறும் போது...
ஹள்ரத் ஜைத் பின் காலித் ஜுஹ்னீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளியேறுவார் களோ மிஸ்வாக்  விட்டுத்தான் வெளியேறுவார்கள்.                                           (நூல்: அத்தர்கீப்)

குர்ஆன் ஓதுவதற்காக......
ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; "உங்கள் வாய் குர்ஆனின் பாதைகள். எனவே மிஸ்வாக் செய்வதின் மூலம் அதை சுத்தமாக வைத்திருங்கள்.                 (நூல்: இப்னு மாஜா)

தொழுகைக்கு முன்....
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:  எனது உம்மத்திற்கு சிரமம் ஏற்படும் என்ற பயம் எனக்கு இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் மிஸ்வாக் செய்வதை நான் வலியுறுத்தியிருப்பேன்.                                                          (நூல்: முஸ்லிம்)

ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும்....
ஹள்ரத்  அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்தாக தஹஜ்ஜத் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் மிஸ்வாக் செய்வார்கள்.               (நூல்: அத்தர்கீப்)



70 மடங்கு நன்மையாகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “மிஸ்வாக் செய்து தொழப்பட்ட தொழுகை மிஸ்வாக் அன்றி தொழப்பட்ட தொழுகையை விட 70 மடங்கு சிறந்தது.          (நூல் : மிஷ்காத்)

அடிக்கடி மிஸ்வாக் செய்வது
ஹள்ரத் யஜீத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஹள்ரத் மைமூனா (ரலி) அவர்களின் பாத்திரத்தின் மீது எப்பொழுதும் மிஸ்வாக் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அடிக்கடி மிஸ்வாக் செய்வார்கள்.            (நூல் : மஜ்மஃ)

பற்கள் இல்லாதோருக்கும் மிஸ்வாக்
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “பற்கள் இல்லாதவர் மிஸ்வாக் செய்ய வேண்டுமாஎன்று நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “அவர்கள் எந்த முறையில் மிஸ்வாக் செய்ய வேண்டும்” என்று  கேட்டதற்கு “அவர்களின் விரல்களால் செய்து கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.                  (நூல் : சுனனுல் குப்ரா)

பிரயாணத்திலும் மிஸ்வாக்
ஹள்ரத் உம்மு தர்தா (ரலி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணம் புறப்படும் முன் தாங்கள் முக்கியமாக எதையெல்லாம் எடுத்து வைப்பீர்கள்” என வினவியதற்கு “எண்ணெய்கண்ணாடிசீப்புகத்தரிக்கோல்சுர்மா குடுவை,மிஸ்வாக்” என பதிலளித்தார்கள்.       (நூல் : மஜ்மஃ)
மிஸ்வாக் வைத்திருந்த இடம்
ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எழுத்தாளர் காதில் பேனா வைக்குமிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்வாக்கை வைத்திருப்பார்கள்.  (நூல் : கதீப்)
இந்த அறிவிப்பின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் மிஸ்வாக்கை உடன் வைத்திருப்பார்கள் என்று விளங்குகிறது.

மரணத்தருவாயிலும் மிஸ்வாக்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்தறுவாயில் இருக்கும் பொழுது அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் மிஸ்வாக் இருப்பதைக் கண்டு அதை தனக்களிக்கும்படி சைக்கினை செய்தார்கள். நான் அதை என் வாயில் வைத்துமென்று மிருதுவாக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்வாக் செய்தார்கள்.   (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புஹாரி)

கலிமா ஞாபகம் வருகிறது
அல்லாமா முல்லா அலி காரீ (ரஹ்) கூறுகிறார்கள்: “மிஸ்வாக் செய்வதால் 70பிரயோஜனங்கள் உள்ளது. அவைகளில் மிக உயர்ந்தது மரண தறுவாயில் கலிமா ஞாபகம் வருவதாகும்!
மரணத்தைத் தவிர அனைத்திற்கும் மருந்து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மிஸ்வாக் செய்வது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணமளிக்கிறது,            (நூல்: கன்ஜூல் உம்மால்)

மிஸ்வாக் உபயோகிக்கும் சுன்னத்தான முறைகள்
* அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “கட்டை விரலும்சுண்டு விரலும் மிஸ்வாக்கிற்கு கீழ் பக்கமாகவும் மற்ற விரல்கள் மேல் பக்கமாகவும் இருப்பது மிஸ்வாக் பிடிப்பதற்கான சுன்னதான முறையாகும்.           (நூல்:ஷாமி)
*     மிஸ்வாக் குச்சியின் இரு பக்கமும் உபயோகிக்காமல் ஒரு பக்கம் சீவி வைத்து மிருதுவாக்கி மிஸ்வாக் செய்ய வேண்டும்.
*     பற்பொடிபற்பசை உபயோகிப்பது அதில் ஹராமான பொருள் கலக்காத பட்சத்தில் ஆகுமானதாகும். ஆனால் மிஸ்வாக்கின் நன்மை கிடைக்காது! எனவே மிஸ்வாக் செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*     ஆரம்பத்தில் மிஸ்வாக் ஒரு ஜான் அளவு இருக்க வேண்டும். தொடர் உபயோகத்தின் மூலம் அளவு குறைவதால் பரவாயில்லை.
*     மிஸ்வாக் குச்சி இல்லாதபட்சத்தில் விரல்மூலம் மிஸ்வாக் செய்ய வேண்டும். மிஸ்வாக்கை உபயோகப்படுத்திய பின் கழுகி நிறுத்தி வைக்கவேண்டும்.
*     கழிப்பிடங்களில் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ் ஆகும்.
*     குளிக்கும் பொழுது மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும்.
*     மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அனைத்து குச்சிகளைக் கொண்டும் மிஸ்வாக் செய்வது ஆகுமானதாகும். எனினும் சிறந்தது அராக் என்னும் மிஸ்வாக் மரக்குச்சிஅதற்கு பிறகு ஷைத்தூன் மரக்குச்சியாகும்.
*     விஷத்தன்மை கொண்டவை மூலம் மிஸ்வாக் செய்வது ஹராமாகும்.
*     மிஸ்வாக் செய்யும் பொழுது, “இறைவா! என் வாயை சுத்தப்படுத்துவாயாக! எனது உள்ளத்தை ஒளியாக்குவாயாக! எனது உடலை சுத்தப்படுத்து வாயாக! நரகத்தின் மீது என் உடலை ஹராமாக்குவாயாக” என்ற துஆவை ஓத வேண்டும்.
மிஸ்வாக் பற்றி விஞ்ஞானம் கூறுவதென்ன
*     நவீன ஆய்வின் படி PLAZMA (பிளாஸ்மா) எனும் கிருமிகள் வெறுமனே வாய் கொப்பளிப்பதால் அழிவதில்லை. எனவே இரவில் படுக்கைக்கு செல் லும் முன் கண்டிப்பாக மிஸ்வாக் செய்ய வேண்டும். ஏனெனில் மனிதனின் வாய் மூடியிருக்கும் இரவு சமயங்களில் தான் றிலிகிஞீவிகி வேலை செய்து பற்களை பழுதாக்குகிறது.
*     மிஸ்வாக் செய்வதால் வாயில் ஒரு விதமான எச்சில் ஊறுகிறது. அதனால் உச்சரிப்பு தெளிவாகி ஓதுவது இலகுவாகிறது.
*     பற்களுக்கும்ஈறுகளுக்கும் மிக உறுதியளித்து அதன் நோய்களை மிஸ்வாக் நீக்குகிறது.
*     பலவிதமான உயர்தர பற்பசைகளை உபயோகித்தும் வாய் வாடை நீங்காத ஒருவருக்கு மிஸ்வாக்கை தொடர்படியாக செய்வதின் மூலம் நிவாரணம் கிடைக்கிறது.
*     இருதயக் குழாய்கள் பழுதடைவதற்கு ஈறுகளின் நரம்புகள் பழுதடைவதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு அந்நோய் தாக்கிய ஒருவருக்கு மிஸ்வாக்கின் மூலம் நிவாரணமளிக்கப்பட்டது.
*     பற்கள்ஈறுகள் பழுதடைவதால் மூளைகாதுகண்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைந்து அவ்வுறுப்புகள் பழுதடைகிறது. இதற்கு மிஸ்வாக் சிறந்த நிவாரணியாகும்.
*     நாவில் சுவைக்கும் திறன் இல்லாதவர்களுக்கும் மிஸ்வாக் சிறந்த மருந்தாக பயன்பட்டுள்ளது.
*     TONSILS எனப்படும் தொண்டை நோயுள்ளவர்கள் மிஸ்வாக் செய்வதின் மூலம் நிவாரணம் பெற்றுள்ளார்கள்.
*     அதிகமான தலைசுற்றல்ஒற்றைத் தலைவலிக்கு மூளை சிகிச்சை நிபுணர்(BRAIN SPECIALIST) கள் மருத்துவம் செய்தும் குணமாகாத போது மிஸ்வாக் கின் மூலம் சிறந்த நிவாரணம் கிடைத்துள்ளது.
*     நெஞ்சு சளிபித்தம்சைனஸ் போன்ற நோய்களை மிஸ்வாக் விரைவில் குணமாக்குகிறது.
*     மிஸ்வாக் செய்வதை விட்டதிலிருந்து தான் Dental Surgeon எனும் பற்களின் அறுவை சிகிச்சை முறை ஆரம்பமானது. ஆக எல்லா நோய்களுக்கும் மருந்தாக மிஸ்வாக் உள்ளது.  (நூல் : சுன்னத்தே நபவி அவ்ர் ஷதீத் சைன்ஸ்)
நவீன விஞ்ஞானத்தின் பிரயோஷனங்களும் மேலே கூறப்பட்டுள்ளன. நாம் நபியின் சுன்னத் என்ற நோக்கில் பின்பற்ற வேண்டும். விஞ்ஞானத்தை அல்ல! ஏனெனில் மனிதனின் அறிவு அழிந்துவிடக் கூடியது. இறைவனின் கட்டளை நிரந்தரமானது. எனவேஇவ்வளவு சிறப்புகள் ஒருங்கே பெற்ற மிஸ்வாக்கினை தொடர்ந்து செய்து ஈருலக பேற்றுகளை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.

கண்புரை நோய்க்கு குர்ஆன் கூறும் மருந்து!!
**********************************************
சுவிஸ் மருந்துக்கம்பெனி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள்.
இது சம்மந்தமான செய்தி கத்தார்நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை(Secretions of human Sweat Gland)யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார்.
பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.
சூரா யூசுஃப் என்ற திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுஃப் படித்துக் கொண்டு இருந்தேன், அச்சூராவின் 84 மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது
“நீங்கள் என்னுடைய இந்தச்சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். (அல்குர்ஆன் 12:93).
நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கவலையினாலும், வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையினால் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்தது.
டாக்டர் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார்.
அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில் 250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம் தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது.
அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார்.
மேலும் அந்த மருந்தில் “Medicine of Quran” என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார். அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;
''நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 17:82).
அல்லாஹ் மிக அறிந்தவன்.

பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் முஸ்லிம்களேஎன்ற முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சொல்லை
ஆய்வின் மூலம் உறுதி செய்த பிரிட்டன் ஆய்வாளார்
********************************************
حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم :« مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ ، كَمَا تُنْتَجُ البَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ؟ » ثُمَّ يَقُولُ ( فِطْرَةَ اللَّهِ الَّتِى فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ ) –صحيح البخاري
(2568)
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இஸ்லாமிய) இயல்பிலேயே பிறக்கின்றன வளர்ப்பு முறையில் தான் அந்த குழந்தைகள் யுதனாகவும் கிருதுவனகவும் நெருப்பை வணங்ககுடியவனாகவும் வார்த்தெடுக்க படுகின்றனர்
அறிவிப்பவர் அபுஹீரை புகாரி 2568
அண்ணல் நபியின் அருள் மொழிகளில் இதுவும் ஒன்று அந்த மாமனிதரின் இந்த சொல்லும் அவரின் தனித்துவத்தையும் அவர்களின் துதுத்துவத்தையும் அறுதியிட்டு உறுதி கூறும் அற்ப்புத சான்றுகளில் ஒன்றாக ஒளிர்கிறது
பிரிட்டனை சார்ந்த ஆய்வாளார் டாக்கர் ஜெஸ்டின் குழந்தைகள் பற்றிய ஒரு ஆய்வில் ஈடு பட்டிருந்தார் சில ஆண்டுகள் தொடர்ந்த அவரது ஆய்வில் குழந்தைகள் பற்றிய பல அரிய தகவல்களை கண்டிறிந்தார்
பிறக்கும் குழந்தைகள் தனது தாய் மற்றும் தந்தை மற்றும் தன்னை சார்ந்தவர்களின்கொள்கை களையும் கோட்பாடுகளையும் பார்க்காத நிலையிலும் அறியாத நிலையிலும் வேறு எந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் போதிக்க படாத நிலையிலேயும் வளர்க்க பட்டால் அப்படி வளர்க்க பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் ஏகத்துவம் மட்டுமே குடிகொண்டிருக்கும் என்பதும் அவர் கண்டிறிந்த உண்மைகளில் ஒன்றாகும்
ஆக இஸ்லாம் என்பது ஏகத்துவம் என்பது இயல்பானது திசைதிருப்பாமலும் எதையும் போதிக்க மலும் வளர்க்க்படுகின்ற குழந்தைகளின் உள்ளங்களில் இயல்பாகவே அது தான் குடிகொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் முடிவாகும்
இப்போது நாம் மேலே குறிப்பிட்டுள்ள அண்ணல் நபியின் அமுதமொழியை மீண்டும் படியுங்கள்
அண்ணல் நபியின் அந்த அருள் மொழியில் வார்த்தைகள் சொல்லி வைத்தது போல் அளந்து பயன் படுத்த பட்டுள்ளது
வளர்ப்பு முறையில் தான் குழந்தைகள் முஸ்லிமாக ஏகத்துவ வாதியாக வார்த்து எடுக்க படுகின்றனர் என்று சொல்ல படவில்லை
மாறாக அந்த ஏகத்துவம் இயல்பாகவே அந்த குழந்தைகளின் உள்ளங்களில் நிலை பெற்றுள்ளது வளர்ப்புமுறையில் தான் அந்த குழந்தைகள் மாற்று மத த்தவர்களாக வார்க்கபடுகின்றனர் என்ற அற்புதமான உண்மையை நயமாக நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்
ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பல்வேறு சோதனைகளை செய்து இந்த உண்மையை கண்டு பிடிப்பது பெரிய விசயமல்ல
எந்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈடுபடாத முஹம்மது நபி (ஸல்) அவர்களால் இந்த உண்மையை சர்வ சாதாரணமான வார்த்தைகளில் எப்படி சொல்ல முடிந்தது
அவர் சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு எந்த அறிவு இருந்ததோ அந்த அறிவை கொண்டு மட்டுமே அவர்கள் பேசியிருக்க வேண்டும்
1400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஆய்வாளான் சில ஆண்டுகளை ஆய்வில் செலவு செய்து பெற்ற அறிவை அன்றே அண்ணல் நபியால் எப்படி சொல்ல முடிந்தது!!
அவர்கள் யாவற்றையும் அறிந்த படைத்தவனின் துதராக இருந்த தால் மட்டு மே இதை அன்றே சொல்ல முடிந்தது இந்த நபி மொழியும் உத்தநபியின் நுபுவத்தை உறுதி செய்யும் அற்புத வார்த்தைகளில் ஒன்றாகும்

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன்”என்று கூறியது மட்டுமின்றி தந்தையை விட மேலாக தங்கள் சமுதாயத்திற்கு (பிள்ளைகளுக்கு) அணு அணுவாக தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். மலம்ஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தர தவறவில்லை.ஒரு முறை ஹள்ரத் ஸல்மான் (ரலி) அவர்களிடம் முஷ்ரிகீன்கள் கேலி செய்த வண்ணம் ‘என்னஉங்கள் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு மலம்ஜலம் கழிக்கும் முறைகளை கூட கற்றுத் தருகிறாராமே!’ என்று கேட்டதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூறி அதன் சில முறைகளையும் கூறினார்கள்.         (நூல் : முஸ்லிம்)அன்று முஷ்ரிகீன்கள் கேலியாக கேட்ட இந்த நபிகளாரின் வழிமுறை இன்று அந்த வழிமுறையில் ஏற்படும் மருத்துவ பலன்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கண்டு விஞ்ஞானமே ஆச்சரியப்பட்டு நிற்கிறது. அந்த வழிமுறைகள் என்னபலன்கள் என்னசிலவற்றையாவது தெரிந்து கொள்வோமே!
தூரமான இடத்திற்குச் செல்வதுநபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிப்பதற்காகச் சென்றால் தூரமான இடத்திற்கு செல்வார்கள்.     (அறிவிப்பாளர் : ஹள்ரத் முஃஙீரதுப்னு ஷுஃபாநூல் : அபூதாவூது)கழிப்பிடம் நுழையும் முறைநபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான இடங்களுக்குள் நுழையும் போதும் செருப்பு அணி யும் போதும் தலை சீவும் போதும் வலது பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள்.  (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூல் : இப்னுமாஜா)இதனடிப்படையில் மலம் ஜலம் கழிக்க கழிப்பிடம் நுழையும் பொழுது இடது காலை முதலில் வைத்தும் வெளியேறும் பொழுது வலது காலையும் முதலில் வைத்தும் வெளியேற வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் : “ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தலங்களுக்கும் மத்தியில் மறைப்பு ஏற்பட (வேண்டுமானால்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் முன் ‘பிஸ்மில்லாஹ்’ என்று ஓதிக் கொள்ளட்டும். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அலி (ரலி)நூல்: திர்மிதி)
மல ஜலம் கழிக்கச் செல்லும் பொது ஓதும் துஆநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்ல நாடினால் “அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! நிச்சயமாக நான் கெட்ட ஆண் ஜின்கள்பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.) என்ற துஆவை ஓதுவார்கள்.        (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : புகாரி)எனவே நாம் கழிப்பிடம் செல்லும் போது இவ்விரு துஆக்களையும் ஓதிக் கொள்ள வேண்டும்.
தலையை மறைத்தல், செருப்பு அணிதல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தலையை மறைத்துகால்களுக்கு செருப்பு அணிந்தவர்களாக செல்வார்கள்.(அறிவிப்பாளர் : ஹள்ரத் ஹபீப் இப்னு ஸாலிஹ் (ரலி)நூல் : ஸுனனுல் குப்ரா)
உட்காருந்து சிறுநீர் கழிப்பது “ஒரு முறை நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதீர்” என்று தடுத்தார்கள்: அதன் பிறகி லிருந்து நான் நின்ற நிலையில் சிறுநீர் கழித்ததேயில்லை. (அறிவிப்பாளர் : ஹள்ரத் உமர் (ரலி),நூல் : திர்மிதி)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாரேனும் கூறினால் அதை உண்மைப்படுத்தாதீர்கள்: ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதில்லை”    (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூல் : திர்மிதி)குறிப்பு : ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை நின்று சிறுநீர் கழித்ததாக வருகிறது. ஆனால் அந்நேரத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவ் வாறு செய்தார்களே தவிர அவர்களின் நிரந்தர வழி முறை உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதாகத்தான் இருந்துள்ளது.
உட்காரும் முறை1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு மலம்,ஜலம் கழிக்க உட்காரும் போது சற்று இடது பக்கமாக (பாரம் கொடுத்து) சாய்ந்து அமருவதற்கு கற்றுக் கொடுத்தார்கள்.(அறிவிப்பாளர்: ஹள்ரத் சுராகதுப்னு ஜூஃஷா (ரலி), (நூல் : திர்மிதி)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்கியோபின்னோக்கியோ அமர வேண்டாம். மாறாக கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : புகாரி)குறிப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவைக் கருத்தில் கொண்டு கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். ஆனால் இந்தியாவைக் கவனித்து கிப்லாவின் திசை மேற்கில் இருப்பதால் வடக்கு அல்லது தெற்கு திசையை முன்னோக்கி அமரவேண்டும்.3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிக்க அமரும் போது பூமிக்கு மிக நெருக்கமாகும் போதுதான் தங்களது ஆடையை உயர்த்துவார்கள். (இதனால் நமது மர்மஸ் தானத்தை மற்றவர்கள் பார்க்க முடியாது) (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : திர்மிதி)
இடது கையால் சுத்தம் செய்வது1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன். எனவே உங்களுக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுக்கிறேன். நீங்கள் (மலஜலம் கழித்தபின்) வலது கையைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டாம். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி)நூல் : இப்னு மாஜா)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலது கை உணவருந்துதல் மற்றும் சுத்தமான விஷயங்களுக்காகவும்இடது கை (மலம் ஜலம் கழித்த பின்) சுத்தம் செய்யவும்அசுத்தத்தை நீக்குவதற்கும் பயன்பட்டு வந்தது. (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)
டேலா உபயோகப்படுத்துவதுஉங்களில் ஒருவர் மலம்ஜலம் கழிக்கச் சென்றால் அவர் தன்னுடன் 3கற்களை எடுத்துச் செல்லட்டும். அவைகளைக் கொண்டு சுத்தம் செய்யட்டும். நிச்சயமாக கற்கள் அசுத்தத்தை நீக்கிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)பொதுவாக நாம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோம். எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 3 கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 3 கற்களைக் கொண்டும் சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்வது சிறந்தது. அவ்வாறு இரண்டைக் கொண்டும் சுத்தம் செய்பவர்களை அல்லாஹ்வே புகழ்ந்து கூறியுள்ளான்.அதிலே (குபா எனும் ஊரிலே) மிக பரிசுத்தவான்களாக இருப்பதை விரும்புபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை விரும்புகிறான்.            (அல்குர்ஆன் 8:108)என்ற வசனம் இறங்கியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குபாவாசிகளை நோக்கி “அல்லாஹ்வே உங்களின் சுத்தத்தை புகழ்ந்து கூறுமளவிற்கு நீங்கள் சுத்தம் செய்யும் முறைதான் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “யாரஸூலல்லாஹ்! நாங்கள் (மலம்ஜலம் கழித்த பின்) கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்வோம். (ஏதேனும் ஒன்றைக் கொண்டு மட்டும் போதுமாக்கிக் கொள்ள மாட்டோம்) என்று பதில் கூறினார்கள்.            (நூல் : இப்னு மாஜா)
இவைகளைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது.நீங்கள் விட்டை (சாணம்) யைக் கொண்டும் எலும்புகளைக் கொண்டும் அசுத்தத்தை நீக்காதீர்கள். ஏனெனில் அவை உங்களின் சகோதர சமுதாயமான ஜின்களின் உணவாக பயன்படுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.     (அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி)நூல்: திர்மிதி)ஒரு முறை ஜின்களில் ஒரு கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஜராகி, ‘யாரஸுலல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்! உங்களின் சமுதாயம் எலும்புகளைக் கொண்டும்,விட்டையைக் கொண்டும்அடுப்புக் கரிகளைக் கொண்டும் (மலம்ஜலம் கழித்தபின்) சுத்தம் செய் கிறார்கள். ஆனால் அவைகளில் தான் எங்கள் உணவை அல்லாஹ் வைத்துள்ளான்’ என்று முறையிட்டது. அதன் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளைக் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களை தடுத்தார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு மஸ்ஊத்(ரலி)நூல்: அபூதாவூது)
இந்த இடங்களில் கழிக்கக் கூடாது1) “உங்களில் எவரும் (சுவர்களிலோபூமியிலோ) உள்ள பொந்துகளில் சிறுநீர் கழிக்கவேண்டாம்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஸர்ஜஸ் (ரலி)நூல்: அபூதாவூது)பொந்துகள்பூச்சிகள் மற்றும் பாம்புதேள் போன்ற விஷ ஜந்துக்களின் வீடுகள். அதில் சிறுநீர் கழிப்பதால் அவைகளுக்கு தீங்கு நேரிடுகிறது. சில சமயம் விஷ ஜந்துக்கள் வெளியே வந்தால் சிறுநீர் கழிப்பவருக்கு தீங்கு நேரிட வாய்ப்புள்ளது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விட்டும் தடுத்துள்ளார்கள்.2) “சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறஅவை எவைஎன்று ஸஹாபாக்கள் வினவினார்கள்” (1) நடமாடும் பாதையில் மலம்ஜலம் கழிப்பது, (2) மக்கள் ஓய்வெடுக்கும் மர நிழலில் மலம்ஜலம் கழிப்பது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம்)
மல ஜலம் கழித்த பின் ஓதும் துஆ1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்துவிட்டு வெளியே வந்த பிறகு ‘குஃப்ரானக’ என்று ஓதுவார்கள்.     (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்த பின்பு ‘அல்ஹம்துலில்லாஹில்லதி அத்ஹப அன்னியல் அதா வஆஃபானீ’ (என்னை விட்டும் அசுத்தத்தை நீக்கி எனக்கு ஆரோக்கியமளித்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்) என்ற துஆவை ஓதுவார்கள்.   (அறிவிப்பாளர்: ஹள்ரத் அனஸ் (ரலி)நூல்: இப்னுமாஜா)எனவே நாம் கழிப்பிடம் விட்டு வெளியேறும் போது இவ்விரு துஆக்களையும் ஓதிக் கொள்ளவேண்டும்.
கையை நன்றாக கழுவுவதுநான் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன்! ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்தபின் அதைக் கொண்டு சுத்தம் செய்தார்கள். பிறகு மண்ணில் தமது கையை தேய்த்தார்கள். பிறகு மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் வர வைத்து உளுஃ செய்தார்கள்.(அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத்)ஹதிஸ் ஒளியில மேலும் சில மஸாயில்கள்1  கழிவறையில் பேசக்கூடாது - அவ்வாறு பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்.2 கழிவறையில் இருப்பவர் பாங்கு சப்தத்தைக் கேட்டால் பதில் கூறக்கூடாது. வெளியே வந்தபிறகு தான் கூறவேண்டும். தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் என்று கழிவறையில் நாவினால் கூறக் கூடாது. மனதில் கூறிக்கொள்ளலாம். (ஏனெனில் அது அல்லாஹ்வை துதிப்பதிற்குரிய இடமில்லை. யாரேனும் ஸலாம் சொன்னாலும் பதில் கூறக்கூடாது. சிறுநீரை முழுமையாக வெளியேற்றுவதற்காக சிறுநீர் கழித்ததும் அடி வயிற்றுப் பகுதியை தடவிக் கொடுப்பது அல்லது சற்று கனைப்பது நல்லது. குளியலறையில் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். அதனால் வஸ்வஸா எனும் (தனது சுத்தத்தின் மீது) சந்தேகம் வரும்.7 சிறுநீர் துளிகள் நம்மீது தெறிக்காத வண்ணம் சிறுநீர் கழிக்க வேண்டும்.8 மேட்டுப் பகுதியை நோக்கி சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். ஏனெனில் சிறுநீர் நம்பக்கமே திரும்பிவரும். தேங்கியிருக்கும் நீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது.10 கட்டியான பூமியில் சிறுநீர் கழிக்கக் கூடாது. அப்படி கட்டியாக இருப்பினும் அதை கம்பு போன்றதால் சிறிது குத்திவிட்டு அதை இலகுவாக்கிய பிறகு தான் அதில் சிறுநீர் கழிக்கவேண்டும்.
நவீன விஞ்ஞானம் கூறும் பலன்கள்BIO-CHEMISTRY கலை நிபுணர் ஒருவர் கூறுகிறார் : மலம் கழிப்பதற்காக தூரமான இடத்திற்கு செல்லுங்கள். இன்று கிராமங்களெல்லாம் நகரங்களாக மாறி தன் அறையிலேயே கழிவறை இருப்பதால் மனிதன் மலம் கழிக்கும் முன் சிறிது நேரம் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை. எனவே தான் மலச் சிக்கல்வாயுப் பிரச்சனை போன்ற கோளாறுகள் உண்டாகிறது. சிறிது நேரம் நடப்பதால் குடல் இயக்கங்கள் சீராகி மலம் முழுவதுமாக இலகுவாக வெளியேறுவதால் மனிதன் ஆரோக்கிய மடைகிறான்.PHYSIOLOGY யில் முதிர்ச்சி பெற்ற வல்லுநர் ஒருவர் எழுதுகிறார். என்னிடம் ஒரு மாற்றுமத விஞ்ஞானி நீங்கள் (முஸ்லிம்கள்) உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு நடை முறையை பேணி வந்தால் உங்களுக்கு நோயே வராது! உங்களிள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிப்பதற்கு கற்று கொடுத்துள்ள முறையில் நாமும் மல ஜலம் கழித்தால் (APPERTICITIS) குடல்வாழ் சுழற்சிமூலம்நீங்காத மலச்சிக்கல்கழுத்து சம்பந்தமான நோய்கள் வராது என்று கூறினார்.* மண் கட்டி - டேலாவை உபயோகிப்பதால் நன்றாக சுத்தம் ஏற்படுவது மட்டு மின்றி அதில் இருக்கும் (Ammonium Chloride) நவச்சாரம் சிறுநீர்ப்பை தொற்று நோய் களில் சிறுநீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.* டாக்டர் ஹலூக் என்பவர் கூறுகிறார்: பொதுவாக மண்ணிற்கு கிருமிகளை அடியோடு அழித்திடும் தன்மை உள்ளதால் அதன் மூலம் சுத்தம் செய்வதின் மூலம் (Cancer of Penis) ஆணுறுப்புப் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மட்டுமின்றி உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக காயாமல் இருக்கும் காயங்கள் உள்ள ஒருவருக்கு தொடர்ந்து டேலாவை உபயோகப்படுத்த அறிவுறுத்தி பின்பு அதனால் அவருக்கு நிவாரணமும் ஏற்பட்டது.* டாக்டர் முஹம்மது தாரீக் மஹ்மூத் அவர்கள் கூறுகிறார்கள் : டாய்லட் பேப்பர் தயாரிக்கும் ஃபேக்டரியான அதிகாரியை சந்தித்த போது அவர் “பலவகையான கெமிக்கல் சேர்ப்பதின் முலமே இது போன்ற பேப்பர்களை உருவாக்க முடியும். இதனால் தோல் நோய்கள் (Eczema) படைஅரிப்பு,எரிச்சல்ஒவ்வாமை நோய்கள்கொப்புளங்கள் உண்டாக அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே டேலாவே சிறந்தது” என்று என்னிடம் இரகசியமாக கூறினார்.* மேலும் லண்டனிலுள்ள டாக்டர் கெனன் டேவஸ் என்பவர் ஐரோப்பிய மக்களிடம் “நீங்கள் கலர் கலரான டாய்லெட் பேப்பர்களை மட்டுமே உபயோகப் படுத்திக் கொண்டிருப்பதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வெகு சீக்கிரமே மர்மஸ்தான கேன்ஸர்தோல் அலர்ஜி(Skin Infection)ரைவஸ் எனும் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்கள் (viral Diseases)உங்களை தாக்குவதை எதிர்பாருங்கள்” என்று எழுத்து மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.* எலும்புகள் விட்டைகளில் டெட்டனஸ் Tetanusமற்றும் டைபி என்னும் நோயணுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அதன் மூலம் சுத்தம் செய்தால் கிருமிகள் உடலில் ஊடுருவி குடற்காய்ச்சல் (Typhoid) வாய் திறக்க முடியாமல் பூட்டிக் கொள்ளுதல்தசைகள் விறைத்தல்விட்டுவிட்டு வலிப்புமூச்சுவாதம் போன்ற கடும் நோய்கள் மனிதனை தாக்குகின்றன. அது மட்டுமின்றி கிழே கிடக்கும் எலும்புகளில் விஷத்தன்மையுள்ள கிருமிகள் நிறைந்த எச்சில் கொண்ட விலங்குகள்உயிரினங்கள் வாய் வைத்திருந்தால் மேலும் பல நோய்கள் உண்டாகும்.* நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதால் (Prostatitis) சுக்கிலப்பை அழற்சி ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. போகப்போக சிறுநீர் அடைப்புசொட்டு சொட்டாக சிறுநீர் வந்து கொண்டேயிருப்பதுகிட்னியில் கல்குடலிறக்கம் போன்ற நோய்கள் உருவாக ஆரம்பிக்கின்றன.* சிறுநீர் கழித்தபின்பு இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். இயற்கையாகவே மனிதனின் வலது கையில் ஆரோக்கியமளிக்கும் திரவமும் இடது கையில் நோயின் திரவமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும். வலது கையைக் கொண்டு அசுத்தத்தை நீக்கினால் திரவ அமைப்பு மாறி அதன் தாக்கம் மூளையிலும் நரம்பு திசுக்களால் உருவாக்கப்பட்ட தண்டுவடத்திலும் ஏற்படுகிறது.* மலம்ஜலம் கழித்ததும் மண் (அல்லது சோப்பு) போட்டு கையை கழுக வேண்டும். ஏனெனில் மண்ணில் உயர் தரமான (Anti Septic) ஆண்டி செப்டிக் உள்ளது. நாயின் எச்சியில் இருப்பது போன்ற விஷத்தன்மை கொண்ட கடுமையான கிருமிகளையும் முழுமையாக அழித்துவிடுகிறது. எனவே முடிந்தளவு மண்ணைக் கொண்டு தேய்த்துக் கழுக வேண்டும்.* சிறுநீரை அடக்கக் கூடாது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தொழுகை நேரத்தில் சிறுநீர் வந்தாலும் சிறுநீர் கழித்துவிட்டு தொழுகச் சொல்லியுள்ளார்கள். ஏனெனில் சிறுநீரை அடக்குவதால் மூளைகுடல்கள்நரம்புகள் பாதிப்படைகின்றன.      (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் ஸைன்ஸ்)ஆக நபிகள் நாயகத்தின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறைகளை பேணி நடக்கும் போது ஈருலக பலன்களையும் ஒரு சேர பெற்றுவிடமுடியும். வல்லோன் அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை வழங்குவானாக

நன்றி: யூசுப் காஷிபி 


நபிகள் நாயகம்

ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம்
அவர்களின் உபதேசங்கள்...
------------------------------
01. Fajr மற்றும், அசர் மற்றும் மக்ரிப்,
மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க
------------------------------
வேண்டாம். 02. நாற்றமுற்றவர்கலோடு அமர
03. தூங்கும் முன் மோசமான
வேண்டாம். ------------------------------
---------------------------------
பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
------------------------------
04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
-----------------------------
05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
07. காலணிகளை அணியும் முன்
06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம். ------------------------------ சரிபார்க்கவும்.
------------------------------
------------------------------ 08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது. 09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------ 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது. ------------------------------ 11. உங்கள்
------------------------------
------------------------------ 12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது. ------------------------------ 13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம். ------------------------------ 15. Azan மற்றும் Iqamath இடையே பேச வேண்டாம். ------------------------------
------------------------------
------------------------------ 17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம். ------------------------------ 18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம். 19.
------------------------------
நடைபயிற்சியின் போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம். ------------------------------ 20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.
------------------------------
21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம். ------------------------------ 22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது. ------------------------------ 23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும ்படி தெளிவாக பேசுங்கள். ------------------------------ 25. தனியாக பயணம் செய்ய வே ண்டாம் . ------------------------------ 26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் ------------------------------
ை விரட்டியடிக்காதீர்கள்.
27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது. ------------------------------ 28. உணவை குறைக்கூற வேண்டாம். ------------------------------ 29. பெருமை வேண்டாம். ------------------------------ 30. பிச்சைக்காரர்கள ------------------------------
தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள். ------------------------------ 32. வறுமையின் போது பொருமை காக்கவும். ------------------------------ 33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள். ------------------------------ 34. செய்த
------------------------------
------------------------------ 35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள். ------------------------------ 36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள். ------------------------------ 37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம்
38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள். ------------------------------ 39. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------

2 comments:

  1. 20. நடக்கும் போது உங்கள்
    கால்களை பூமியில்
    முத்திரை பதிக்க வேண்டாம்

    25. தனியாக பயணம் செய்ய வே
    ண்டாம் . இவைகளுக்கான விளக்கம் என்ன ?

    ReplyDelete
  2. 20. நடக்கும் போது உங்கள்
    கால்களை பூமியில்
    முத்திரை பதிக்க வேண்டாம்

    25. தனியாக பயணம் செய்ய வே
    ண்டாம் . இவைகளுக்கான விளக்கம் என்ன ?

    ReplyDelete

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}