Friday, April 4, 2014

ஆற்காடு நவாப் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்

ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள் 
இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....

இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று......... 

உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார் அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப். 

மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள் அதில் ஒருவர் பெரியவர் மட்டும் கை, முகம், கால்கள் என்று சாவகசமாக எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்... 

எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன விளக்கங்கள் மன்னருக்கு நிம்மதி தரவில்லை. ..... 

அந்த ஒரு பெரியவர் மன்னரிடத்தில் உங்கள் கேள்வி என்ன என்று கேட்க அந்த மன்னர் அந்த ஹதீஸின் வசனத்தை கூறினார். 

இதை பொறுமையாக கேட்ட அந்த பெரியவர் அந்த மன்னரிடம், 

நீங்கள் தான் மன்னர் ஆச்சே உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கா என்று நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் பல பெண்களுடன் உறவு வைத்து உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் சூது விளையாடியது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று. 

இப்படி ஒவ்வொன்றாக கேட்டு விட்டு பிறகு அந்த பெரியவர் நவாபிடம் கூறினார் ஒரு மன்னர் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று இருந்தும் அல்லாஹ் தடுத்த விஷயத்தை விட்டும் உங்கள் கல்ப்ஹை சிறை வைத்து இருப்பதால் நீங்களும் சிறைவாசிதான்..... கவலை பட தேவை இல்லை என்று சொன்னதும் நவாப் மகிழ்ந்து விட்டார்... 

அந்த பெரியவருக்கு நவாப் அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்க வில்லை, அந்த பெரியவரோ எனக்கு எதுவும் வேண்டாம் அப்படி தருவதாக இருந்தால் அல்லாஹ்வின் பாதையில் ஒரு பள்ளிவாசலை மட்டும் கட்டுங்கள் என்று கூறினார்கள்..... அது தான் மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல் ....


மார்க்க விளக்கம் தந்த அந்த பெரியவர்கள் தான் கீழக்கரையில் மறைந்து வாழும் ......சதகத்துல்லா அப்பா அவர்கள்...............

Thursday, March 27, 2014

நற்குணத்தின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்)

ஒரு சந்தர்ப்பத்தில் பூமான் நபி (ஸல்) அவர்கள் ரோட்டிலே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு யூதர் நபியவர்களது துண்டைப் பிடித்து இழுத்தார், சட்டையைப் பிடித்து முறுக்கினார். வாங்கிய கடனைத் திருப்பித்தரத் தெரியாதோ...? அப்துல் முத்தலிபுடைய பிள்ளைகளுக்கெல்லாம் இந்த புத்தி தானோ? என்று நடு ரோட்டிலே வைத்து நாலு பேருக்கு முன்பாக கேவலப்படுத்தும் படி உணர்ச்சியைத் தூண்டி பேசினார். 

மதினாவிலே இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிற சமயத்திலே ஒரு யூதர் இப்படி செய்த பொழுது அருகில் இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) இப்படிச் செய்யாதே யாரைப் பிடித்து எச்சரிக்கை செய்தாய்!” என்று திருப்பி அவரை எச்சரிக்கை செய்து கைகலப்பு ஏற்பட்டு விடும் என்ற கட்டத்திற்கு வந்த பொழுது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே உமர் (ரலி) அவர்களை அழைத்துச் சொன்னார்கள் ;

உமரே நானும் அவரும் இதைவிட வேறு ஒன்றின் பக்கம் உங்களின் பால் தேவை உடையவராக இருக்கிறோம். நீர் இப்படி செய்யக் கூடாது. நீர் என்ன செய்ய வேண்டும் என்றால், கடன் வாங்கியிருக் கிறீர்களே அதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் நல்லதுதானே என்று என்னிடத்தில் சொல்ல வேண்டும், சரி கடன் கொடுத்திருக்கிறாய். மென்மையாக, ஒழுங்காக கேட்டு வாங்கக் கூடாதாப்பா இப்படியா முரட்டுத் தனமாக நடந்து கொள்வதுஎன்று அவரிடத்தில் சொல்ல வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்துவதற்குறிய தவணை முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அவர் அநியாயமாகத்தான் நடந்திருக்கிறார். ஆனாலும் கூட அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி தயவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் இன்ன ஆளிடத்திலே பேரித்தம் பழங்கள் இருக்கிறது. அதை வாங்கிக் கடனை அடைத்து விடுங்கள். மட்டுமல்ல அவர் என்னிடம் கடனைத் திருப்பிக் கேட்டதற்காக நீர் அவரோடு சண்டைக்கு போனீர் அல்லவா அதற்காக 20 ஸாஃ [40 கிலோகூடுதலாகக் கொடுங்கள் என்று சொல்லி மென்மையை போதித்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்க்கிறோம். 

Tuesday, March 25, 2014

வறுமையை போக்கும் தஸ்பீஹ்!

ஒரு தோழர் நபி இடம் வந்து சொன்னார். நாயகமே உலகம் என்னை விட்டும் விரண்டு ஓடுகிறது என்னை புறக்கனித்து செல்கிறதுஎன் கஷ்டம் நீங்கி என் குடும்பத்தை காப்பாற்ற வழி சொல்லுங்கள் என்று கேட்ட பொழுது நபி அவரிடம் கேட்டார்கள் மலக்குமார்களின் தொழுகை விட்டு. இன்னும் எதைக் கொண்டு படைப்புகளுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறதோ அந்த தஸ்பீஹை விட்டு நீ எங்கே சென்றாய் என்று கேட்டு விட்டு சொன்னார்கள்.தினமும் ஃபஜ்ரு உதயமாகி பஜ்ர் தொழுகை தொழுவதற்குள்

سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله
சுபானல்லாஹி வபிஹம்திஹீ சுபானல்லாஹில் அழீம் அஸ்தக்பிருல்லாஹ்

என்ற திக்ரை 100 முறை தினமும் ஓதி வந்தால் உலகம்
 உங்களிடம் சரண்டர் அடைந்து விடும் இதைக் கேட்டு அந்த மனிதர் சென்று விட்டார் அதை ஓதினார் சிலநாட்கள் கடந்த பின் நபி இடம் வந்து சொன்னார் நபியே நான் இந்த அமலை செய்த பிறகு உலகத்தின் செல்வங்கள் என்னை முன்னோக்கி வந்து விட்டது அது மிக நிறப்பமாகவும் இருந்தது எந்த அளவு என்றால் அந்த செல்வங்களை எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை அந்த அளவுக்கு தந்து விட்டான்


நூல். கஸாயிசுல் குப்ரா. இஹ்யா.

Monday, March 3, 2014

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ


ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும்.
பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியாவடக்குஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை.
இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும்

முட்செடிகளும்,  காய்ந்த சருகுகளுமாகும் !.
முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ளப பாலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.

முளைக்கின்ற முட்செடிகளை அவற்றிற்கு உணவாக்கி அதை இலகுவாக உண்பதற்கு அவற்றின் உதடுகளை ரப்பர் போன்று இறைவன் வடிவமைத்தான்.

முட்செடிகளை உண்ணும்பொழுது அதனுடைய ரப்பர் போன்ற உதடுகளில் முட்கள் பட்டு நொறுங்கி விழுந்து இலைகள் மட்டுமே வாயிக்குள் செல்லும். அந்தளவுக்கு கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்
அதற்கு கொடுப்பதை வட அதனிடமிருந்து பயணடைவது அதிகம். அது
பால்
ஒட்டக பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும்.  ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது.  மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.[

அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் அரேபியர்கள் அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு கீரைகாய்கறிகள்,பழங்கள் போன்றவைகள் சாப்பிடவில்லை அவைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை அவர்களுடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும்ஆரோக்கியத்தையும் வழங்கிக் கொண்டிருந்ததற்கு அவர்கள் தினந்தோறும் அருந்தி வந்த ஒட்டகப்பால் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது.

நோய் நிவாரணிகளும், உடல் ஆரோக்கியமும்
ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இதுநீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியாவைரஸ் எதிரப்பு சக்திகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosisபோன்ற நோய்களையும் குணப்படுத்தும்.

விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில்,பசும் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால்வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள்.  விட்டமின் சத்துடையது என்பது மட்டுமல்ல,புற்றுநோய்எயிட்ஸ் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியையும் ஒட்டகப்பால் கொண்டிருக்கின்றதுஆதாரம்:http://tamilcyber.com/home/index.php?option=com_content&task=view&id=80&Itemid=1

ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில்ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக்கூறுகிறார்கள். 

. சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது
ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 

மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை''என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்)அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம். 5685.
இறைச்சி[
ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக சாப்பிடப்பட்டு வருகிறது. ஒட்டக இறைச்சி இன்னும் சோமாலியாசீபூத்தீசவூதிஅரேபியாஎகிப்துசிரியாலிபியாசூடான்எதியோப்பியாகசக்ஸ்தான் போன்ற பகுதிகளில் உண்ணப்படுகிறது.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு நீர் அருந்தாமல் பலநாள் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு.
மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது .


ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.
மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாதுز
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளுதல் சிறப்பம்சமாகும்.

அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்ததும் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக்கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.

ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது.
ஒட்டகங்களின்உடல்பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது.
நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது.
ஒட்டகங்களின்உடல்பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது.
நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.
ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன் சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 °செல்சியசிலிருந்து 41.7 °செ வரை (93°F-107°F.) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கமுடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியசு என்று வெப்பநிலை உள்ள போது, வெப்பம் கடத்தாத தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும்,
பாலைவனக் கப்பல்
ஒட்டகத்திற்கு பாலைவனக் கப்பல் என்று செல்லமாக அழைக்கப்படுவதுண்டு.ஏன்என்றால்  அன்று  பாலைவனத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்கு அங்கு வாழ்ந்த மக்களையும்,அவர்களுடைய வணிகப் பொருட்களையும் சுமந்து கொண்டு குண்டும்குழியும்மணல் முட்டுகளுமானப் பகுதிகளில் தங்கு தடையின்றி சவாரி செய்து கொண்டிருக்கும் அதனால் அதற்கு பாலைவனக் கப்பல் என்று சாதிமத பேதமின்றி உலகில் அனைவராலும் கூறப்படுவதுண்டு.

ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது.
.அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றன.
குடிக்கும் நீர் கிடைத்தால் ஒட்டகம் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் பம்பிங்க் செய்து கொள்ளும்  இவ்வாறு பம்பிங்க் செய்து அனுப்பிய 100 லிட்டர் நீரும் அதனுடைய பிற உறுப்புக்களுக்கு எவ்வாறுப் பிரித்து அனுப்புகிறது.

மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட வித்தியாசமான ரெத்தத்தின் சிகப்பனுக்கள்
·                     பம்பிங்க் செய்து அனுப்பும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.
·                     அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது.
·                     குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.

நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன் உட்பட) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழத் தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகுசூட்டினால் வெடிப்பு மரணம் (Explosive Heat Death) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராத அளவுக்கு அதனுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்கிறது.

கை தேர்ந்த படைப்பாளனாகிய இறைவனின் திட்டமிட்ட ஏற்பாடு. 
பிற நாடுகளின் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட அளவு தூரத்திற்கு குடிநீர் குழாய்கள்அல்லது குட்டைகள்குளங்கள் இருப்பது போல் பாலைவனத்தில் இருக்காது அதனால் மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற அளவில் ஒட்டகத்திற்கும் இரத்தத்தின் சிகப்பணுக்களின் அளவு இருக்குமேயானல் குறைந்தளவு நீரையே தேக்கிக்கொள்ள முடியும்.

நீர் கிடைக்காத வழியில் பயணிகளையும்சரக்குகளையும் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓட்டத்திற்கு தேவையான தண்ணீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இரத்தம் பாகுபோல் உறைந்து ஒட்டகத்திற்கு வெடிப்பு மரணம் (Explosive Heat Death) ஏற்பட்டு விட்டால் படைப்பாளனுடைய வல்லமைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் அதனால் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல்ஆலமீன் அதன் இரத்தத்தின் சிகப்பணுக்களை மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் பெரிதாக அமைத்தான்.

பெரிய அளவிலான இரத்தத்தின் சிகப்பணுக்கள் நீர் கிடைக்கும்பொழுது தேவைக்கதிமாகவே தேக்கி வைத்துக் கொண்டு இரத்தத்தை உறைய விடாதளவுக்கு இரத்தத்திற்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது. அதனால் அளவுக்கதிகமான வெப்பத்தினால் ஒட்டகத்தின் உடல் திசுக்களில் உள்ள நீர் குறைந்தாலும் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும்.

·                     அதனால் ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.
·                     ஆனால் மனிதர்களின் உடலில் 12%  நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும்.

எரி பொருள் நிரப்பி வாகனத்தை ஸ்டார்ட் செய்ததும் எரி பொருள் அசுர வேகத்தில் எஞ்ஜினை அடைவதைப் போல்
ஒட்டகம் தண்ணீரை பம்பிங் செய்ததும் தண்ணீர் அசுர வேகத்தில் இரத்தத்தின்  சிகப்பணுக்களை நோக்கிப் பாய்கிறது.  அவ்வாறு தண்ணீர் பாய்ந்தோடி வருவதை அறிந்த அதனுடைய சிகப்பு அனுக்கள் பழைய நிலையை விட அதிகமாக விரிந்து இடமளித்து அதகிபட்ச தண்ணீரை உறிஞசிக் கொண்டு ரெத்தத்தை உறைய விடாமல் பாதுகாக்கிறது.


சளைக்காமல் பயணிகளையும்சரக்குகளையும் சுமந்து கொண்டு பாலைவனக் கப்பல் (ஒட்டகம்) ஓடிக் கொண்டே இருக்கும். சுப்ஹானல்லாஹ் இறைவன் தூய்மையானவன். ... ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

சுட்டெரிக்கும் வெயில்

ஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார். அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாதுமூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும்.

அதற்கு காரணம்.

·                     மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.

·                     அதன் காதுகளின் உள்ளேயும்வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோதூசியோகாதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. 

·                     அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

·                     அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்புபாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass)  

·                     கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்புகண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை.

·                     அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.

·                     பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு