சுன்னத்தான தொழுகைகள்
ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்:
ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத், ளுஹர், அஸர் இஷா ஜும்ஆ இவைகளுக்கு முன்பாக நான்கு ரக்அத்துகளும், ளுஹர், அஸர் மஃரிப் இஷா
பின்பு இரண்டு ரக்அத்துகளும், ஜும்ஆக்கு பின் நான்கு
ரக்அத்துகளும்,ஸுன்னத்தான
தொழுகைகளாகும். இவைகளில் அஸர், இஷாவுக்கு முன்னுள்ள சுன்னத் தொழுகைகளை
தவிர மற்றவைகள் கண்டிப்பாக தொழ வேண்டிய சுன்னத்துகளாகும். (அவசியமின்றி விட்டால் தண்டனை
பெறுவார்)
ஃபர்ளான தொழுகையை விட்டால் களா செய்வது
கடமையாவது போல் சுன்னத்தான தொழுகையை விட்டால் அதை களா செய்வது சுன்னத்தாகும்.
வித்ருதொழுகை:
இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து
அதிகாலைப் பொழுது உதயமாகும் வரை வித்ரு தொழுகையை தொழுது கொள்ளலாம். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என
ஒற்றைப் படையாகத் தொழ வேண்டும். குறைந்த அளவு ஒன்றும் அதிகளவு பதினொன்று
ரக்அத்துகளும் ஆகும்.
மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம' சூராவும், இரண்டாவது ரக்அத்தில்
குல்யாஅய்யுஹல் காபிரூன' சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, குல்அவூது
ரப்பில் பலக்,
குல்
அவூது ரப்பின்னாஸ்' சூராக்களும் ஓதுவது சுன்னத்தாகும்.
இதன் முதல் ரக்அத்தில் 'வஸ்ஸம்ஸி' அல்லது காபிரூன்' சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'அஹது' சூராக்களை ஓதுவது சுன்னத்தாகும்.
இதன் முதல் ரக்அத்தில் 'வஸ்ஸம்ஸி' அல்லது காபிரூன்' சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'அஹது' சூராக்களை ஓதுவது சுன்னத்தாகும்.
ஸலாத்துல் உளு: உளு செய்த பின் தொழ வேண்டிய தொழுகை
உளு செய்தபின் உளுவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும்
தஹிய்யத்துல் மஸ்ஜித்:
உளு செய்தபின் உளுவின் சுன்னத் என நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும்
தஹிய்யத்துல் மஸ்ஜித்:
இதன் பொருள் 'பள்ளியின் காணிக்கைத் தொழுகை' என்பதாகும். உள்
பள்ளிக்கு செல்பவர் அங்கு சென்று அமருவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழுது விட்டு
அமருவது சுன்னத்தாகும். தகுந்த காரணமின்றி இத்தொழுகையை விடுவது மக்ரூஹ் ஆகும்.
பள்ளியில் ஜமாஅத் நடைபெறப் போகிறது என்றால், அங்கு நின்று கொண்டு பர்ளான
தொழுகையை எதிர்பார்ப்பது சுன்னத்தாகும். ஏதாவது காரணத்தினால் பள்ளியினுள் சென்ற
பிறகு தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழ விரும்பாதோர் மூன்றாம் கலிமாவை .
سبحان الله والحمد لله ولا اله
الا الله والله اكبر ولا حول ولاقوّة الاّ بالله العليّ العطيم.
நான்கு தடவை ஓதுவது
சுன்னத்தாகும்.
ஸலாத்துள் ளுஹா:
ளுஹாவின் குறைந்த அளவு இரண்டு ரக்அத்தும்
விரிந்த அளவு எட்டு ரக்அத்தும் மிக விரிந்த அளவு பன்னிரண்டு
ரக்அத்துகளுமாகும். சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் 'ளுஹர்' தொழுகையின்
வக்து வரை இதன் நேரமாகும். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை தொழுவது
மிகச் சிறப்பாகும்.
இஸ்திகாராத் தொழுகை:
நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப்
பெயர். ஒருவர் ஒரு செயலை செய்வதா அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? தீமையா? எனத்
தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது
ரக்அத்தில் ஃபாத்திஹா ஸூராவிற்குப் பின் குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும், இரண்டாவது
ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு
அஹது' சூராவையும்
ஓதுவது சுன்னத்தாகும். ஒரு தெளிவான முடிவு தெரியும்வரை திருப்பித் திருப்பித்
தொழுவது சுன்னத்தாகும்.இதை தொழுத பின்பு ஓத வேண்டிய துஆ: .
الّلهمّ انّي اسْتخيرك بعلمك واستقدرك بقدرتك. واسالك من فضلك
العضيم. فانّك تقدر ولا اقدر. وتعلم ولا اعلم. وانت علاّمالغيوب. الّلهمّ ان كنت
تعلم انّ هذا الامر خيرلي في ديني ودنياي وعقبة امري وبجله وآجله فقدّره لي.
وباركل لي فيه. ثمّ يسّره لي. وان كنت تعلم انّ هذا الامر شرّلي في ديني ودنياي
وعاقبة امري وعاجله وآجله فاصرفني عنه. واصرفه عنّي. واقدر لي الخير اينما كان
انّك علي كلّ شيئ قدير.
ஸலாத்துல் அவ்வாபீன்:
ஸலாத்துல் அவ்வாபீன்:
மதி மறக்கும் நேரத்தில்
அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும்
இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான நபில் தொழுகைகள், தஸ்பீஹ்களை நிறைவு செய்தபின் மிக உச்ச அளவான இருபது ரக்அத்துகளை அல்லது மிகக்
குறைந்த அளவான இரண்டு ரக்அத்துகளை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது
சுன்னத்தாகும். அதன்பின் கீழ்வரும் துஆவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
اللهم اني
أستودعك ايماني في حياتي وعند مماتي وبعد مماتي فاحفظه عليّ انّك علي كلّ شيئ قدير
ஸலாத்துல் குஸூபைன்: சந்திர, சூரிய கிரகணத் தொழுகைகைள்:
சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கத் துவங்கியது முதல்
அது நீங்கும் வரை அல்லது கிரகணம் பிடித்த நிலையிலேயே சூரியன் மேற்கில் மறையும் வரை
அல்லது சந்திர கிரகணம் ஏற்பட்ட நிலையில் காலை பொழுது புலரும் வரை கிரகணத்
தொழுகைகளைத் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.
சாதாரண சுன்னத் தொழுகையைப் போன்று கிரகணத் தொழுகைக்காக நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுது முடிப்பது இதன் குறுகிய அமைப்பாகும்.
சாதாரண சுன்னத் தொழுகையைப் போன்று கிரகணத் தொழுகைக்காக நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுது முடிப்பது இதன் குறுகிய அமைப்பாகும்.
இரண்டாவது முறை முதல் ரக்அத்தில் பாத்திஹாவிற்குப்
பின் சூரா பகரா அல்லது அதே அளவில் வேறு சூரா ஓதி முடித்து ருகூவிற்கு சென்று சூரா
பகராவின் நூறு ஆயத்துகள் அளவிற்கு அங்கு தஸ்பீஹ் ஓத வேண்டும். பின்பு அங்கிரு:ந்து
நிலைக்கு வந்து திரும்பவும் பாத்திஹா சூராவையும் ஆலஇம்ரான் சூராவை அல்லது அதே
அளவில் வேறு சூராவை ஓதிய பின் இரண்டாவது முறையாக ருகூவிற்கு செல்ல வேண்டும். அதில்
சூரத்துல் பகராவின் எண்பது
ஆயத்துக்கள் அளவிற்கு தஸ்பீஹ் ஓத வேண்டும்.
சூரத்துல் பகராவின் நூறு மற்றும் எண்பது
ஆயத்துகள் அளவு தஸ்பீஹ்களை முதலாவது ஸுஜூதிலும் இரண்டாவது ஸுஜூதிலும் ஓத வேண்டும்.
இதே போல் அடுத்த ரக்அத்தில்பாத்திஹா சூராவிற்குப் பின் சூரத்துன் னிஸாவையோ அதே
அளவுள்ள சூராக்களையோ ஓத வேண்டும்.இரண்டாவது நிலைகயில் பாத்திஹாவிற்குப் பின்
சூரத்துல் மாயிதாவையோ அதே அளவுள்ள வேறு சூராவையோ ஓத வேண்டும். இரண்டாது ரக்அத்தின்
முதல் ருகூஉ,
ஸுஜூதுகளில்
சூரத்துல் பகராவின் எழுபது ஆயத்துகள் அளவிற்கும், இரண்டாவது ருகூஉ, ஸுஜூதுகளில்
சூரத்துல் பகராவின் ஐம்பது ஆயத்துகள் அளவிற்கும் தஸ்பீஹுகள் ஓதி தொழ வேண்டும்.
இதுவே கிரகணத் தொழுகையின் பரிபூரண அமைப்பாகும்.
தொழுகைக்குப் பின்பு ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டு குத்பா ஓதுவது சுன்னத்தாகும்.
தொழுகைக்குப் பின்பு ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டு குத்பா ஓதுவது சுன்னத்தாகும்.
ஸலாத்துல் இஸ்திஸ்கா: மழை தேடித் தொழுதல் .
தண்ணீர் அறவே இல்லாத போது அல்லது தேவையான அளவை விட குறைவாக கிடைக்கும் போது மழை தேடி தொழுவது சுன்னத்தாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்ற பின் நான்காவது நாளில் நோன்பு நோற்ற நிலையில் வயோதிகர்கள் சிறார்கள் அனைவரும் பழைய ஆடைகளை அணிந்து பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுவது இதன் அமைப்பாகும்.
முதல் ரக்அத்தில் ஏழு முறை தக்பீh கூறி கைகளைக் கட்டிக் கொண்ட பின் பாத்திஹா சூh ஓதி காப் அல்லது ஸப்பிஹிஸ்ம சூரா ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து முறை தக்பீர் கூறிய பின் பாத்திஹா சூரா ஓதி முடித்து இக்தரபத்திஸ்ஸாஅத்து' அல்லது 'ஹல் அதாக' சூரா ஓதுவதும் ஸுன்னத்தாகும்.
பெருநாள் குத்பா போன்று இதிலும் இரண்டு குத்பாக்கள் ஓதுவதும் இதன் முதல் குத்பாவில் ஒன்பது தடவையும், இரண்டாவது குத்பாவில் ஏழு தடவையும் 'இஸ்திக்பார்' கொண்டு ஆரம்பிப்பதும் சுன்னத் ஆகும்.
இரண்டாவது குத்பாவின் இடையில் இமாம் கிப்லாவை
நோக்கித் திரும்பியவாறு தனது மேனியிலுள்ள துண்டை-அதன் மேல் பகுதியைக் கீழ்ப்
பகுதியாகவும் இடப் பகுதியை வலப் பகுதியாகவும் புறப்பகுதியை உட்பகுதியாகவும்
மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்று மக்களும் செய்வதோடு அனைவரும் சப்தமின்றி துஆ
செய்வதும் சுன்னத்தாகும்.
தஹஜ்ஜுத் தொழுகை: இரவுப் பொழுதில் சற்றேனும் உறங்கி விழித்பின்பு தொழும் சுன்னத்தான
தொழுகையாகும். இதை வழமையாக தொழுபவர் காரணமின்றி இதை விடுவது மக்ரூஹ் ஆகும் .
இதன் குறைந்த அளவு இரண்டு ரக்அத்துகள். கூடிய அளவு பன்னிரண்டு ரக்அத்துகள். மிக விரிந்த அளவு கணக்கற்ற ரக்அத்துகள்.
இதன் குறைந்த அளவு இரண்டு ரக்அத்துகள். கூடிய அளவு பன்னிரண்டு ரக்அத்துகள். மிக விரிந்த அளவு கணக்கற்ற ரக்அத்துகள்.
தராவீஹ்தொழுகை:
'ஓய்வு கொள்ளும் தொழுகை' என்பது இதன் பொருள். தராவீஹ் தொழுகை நோன்பு
காலங்களில் இஷாவிற்கு பின் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாமில் 20 ரக்அத்துகள் தொழ
வேண்டும். இதை ஜமாஅத்தாக தொழுவது போன்று தனியாகவும் தொழுது கொள்ளலாம். ரமலான் 30 நாட்களுக்குள்
குர்ஆன் ஷரீபை பரிபூரணமாக ஓதித் தொழுவது சுன்னத்தாகும். எனினும் அவரவர்களுக்குத்
தெரிந்த சூராக்களை ஓதியும் தொழுது கொள்ளலாம்;.
தஸ்பீஹ் தொழுகை:
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை
அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும். .
இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு
ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒரு ஸலாமில் தொழ வேண்டும். இரண்டு இரண்டு
ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது. முதல்
ரக்அத்தில் பதிஹா ஸூராவிற்குப் பின் அல்ஹாக்கு முத்தகாதுரு சூராவும் இரண்டாவது
ரக்அத்தில் வல்அஸ்ரி சூராவம் 3வது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன சூராவும், நான்காவது
ரக்அத்தில் அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா
இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது
சுன்னத்தாகும்.
நின்ற நிலையில் ஸனா ஓதிய பின்பு 15 விடுத்தம் சூராக்களை முடித்த பின்10 விடுத்தம், ருகூவில் 10 விடுத்தம், இஃதிதாலில் 10 விடுத்தம், முதல் ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதின்
நடுவில் 10
விடுத்தம், இரண்டாவது
ஸுஜூதில் 10
விடுத்தம், இவ்வாறு ஒரு
ரக்அத்தில் 75
வீதம்
நான்கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓத வேண்டும். இரண்டாவது
ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.
முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவம், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும், நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது.
முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவம், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும், நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது.
ளுஹர், அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு
ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும்
மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும்
ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று
பெயர். .
விதிமுறைகள்:
விதிமுறைகள்:
1. பயணத் தொலைவு 82 கி.மி அல்லது அதற்கு
அதிகமாக இருக்க வேண்டும். .
2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும். .
3. கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.
4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.
5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.
6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் இமைய வேண்டும்.
7. அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும், மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.
இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும். .
2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும். .
3. கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.
4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.
5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.
6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் இமைய வேண்டும்.
7. அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும், மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.
இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும். .
ஹாஜத் (தேவை) நிறைவேற தொழுகை
தேவைகள் நிறைவேறுவதற்காக இரண்டு அல்லது நான்கு
ரக்அத்கள் தொழுது துஆ செய்யலாம். முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்கு பின் ஆயத்துல்
குர்;ஸி மூன்று முறையும்
மற்ற மூன்று ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்கு பின்,குல்ஹுவல்லாஹுஅஹது, குல்அஊது பிரப்பில்
பலக், குல்அஊது பிரப்பின்னாஸ்
ஆகிய சூராக்களை ஒவ்வொரு முறையும் ஓதுவது நல்லது. இவ்வாறு தொழுது முடித்தபின் துஆ ஓத வேண்டும்.
ஜனாஸாத்
தொழுகையைத்
ஒரு முஸ்லிம் இறந்ததுவிட்டால் அவரை குளிப்பாட்டி
கபனிட்டு தொழுகை நடத்தி அடக்கம் செய்வது பர்ளு கிபாயாவாகும். ஒரு ஊரில் ஒருவர் செய்தாலும்
எல்லோருடைய கடமையும் நீங்கிவிடும். எல்லோரும் அதில் கலந்து கொள்வது எல்லோருக்கும் நன்மையாகும்.
யாருமே செய்யாவிட்டால் எல்லோரும் குற்றவாளியாவார்கள்.
ஜனாஸா தொழுகையின் பர்ளு இரண்டு
1.நான்கு தக்பீர் சொல்வது
2.நிலை நிற்பது
ஜனாஸா தொழுகையின் சுன்னத்துகள்
1. மய்யித் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
அதன் நெஞ்சுக்கு நேராக இமாம் நிற்பது.
2. முதல் தக்பீருக்கு பின் தனா ஓதுவது
3. இரண்டாம் தக்பீருக்குப் பின் அத்தஹிய்யாத்துக்கு
பிறகு ஓதக்கூடிய ஸலவாத் ஓதுவது.
4. மூன்றாம் தக்பீருக்குப் பின் மய்யித்திற்காக
துஆ செய்வது ஆகியவைகளாகும்.
நிய்யத் செய்யும்
முறை
ஜனாஸா தொழுகையின் நான்கு தக்பீர்களை இந்த மய்யித்திற்கு
துஆ செய்தவனாக இமாமை பின்பற்றி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் அல்லாஹுஅக்பர்
என்று தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment