Sunday, November 11, 2012

வாங்கஆலோசனைசெய்யலாம்!

வாங்கஆலோசனைசெய்யலாம்!
ஒரு விஷயத்தைப் பற்றி மற்றவரிடம் கலந்துரையாடுவதுபொதுவாக எளிதானதாக தோன்றினாலும்நடைமுறையில் அது பலருக்கும் மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
மனிதன் அறிவில் குறைந்தவன். எல்லா நேரமும் ஒரே மாதிரியான சிந்தனை பயன் தராது. எப்போதும் அறிவாக பேசிக்கொண்டு இருப்பான். அவனே சில நேரத்தில் சின்ன விஷயத்தில் கூட கோட்டை விட்டுவிவான். எனவே தான் நாம் எந்த காரியம் செய்ய நினைத்தாலும் அதிலும் மற்றவரிடம் ஆலோசனை பெற்று செய்யப் பழக வேண்டும்.
எக்காரியமாக இருந்தாலும்சரிஆலோசனையின் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நியதி நேற்றின்று உருவானதல்ல. மனித அறிவினால் உருவாக்கப்பட்டதும் அல்ல. இத்தரணியையும்தரணிவாழ் மக்களையும் படைத்து நிர்வாகம் செய்கின்ற அல்லாஹ்வே எதுவாக இருந்தாலும் ஆலோசனையுடன் செயல்படுத்து என்று கற்றுத்தருவதற்காக தானும் அதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறான்.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அனைத்தையும் படைத்து பரிபாளிக்கக்கூடிய இறைவன்யாரிடம் போய் ஆலோசனை கேட்பதுஆலோசனைக் கேட்க வேண்டிய அவசியம்தான் என்னஆனால் ஆலோசனை கலக்கின்றான்.
எதற்காக?
நாமும் ஆலோசனை செய்து காரியமாற்றவேண்டும் என்கின்ற முக்கியமான பண்பை விளங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக!
இறைவன் திருமறையில் இரண்டாவது அத்தியாயமான அல்-பகரா’ வின் 30 ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்: இறைவன் இவ்வையகத்தைப் படைத்து அதில் தனது பிரதிநிதியாக மனித வர்க்கத்தை உருவாக்கி நினைத்தபோது 'நான் பூமியிலே எனது பிரதிநிதிகளைப் படைக்கப் போகின்றேன்’ என மலக்கு(வானவர்)களிடம் கூறினான். அவ்வானவர்களின் பதில் வேறொன்றாக இருந்த போதிலும்இறைவன் மலக்குகளுக்கு தெரிவித்ததிலிருந்து கலந்தாலோசிக்கும் பண்பை நமக்குக் கற்பிக்கிறான் என்பதை சிந்தித்துணர வேண்டாமா? 
       உலகில் தோன்றிய அனைவர்களின் ஞானமும் கொடுக்கப்பட்ட நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே எல்லா விஷயத்திலும் தங்களின் தோழர்களிடமும் சில நேரங்களில் தங்களின் துணைவியரிடமும் கூட ஆலோசனை பெற்றிருக்கிறார்கள். ஆலோசனையின் அவசியத்தைத்தையும் அதை தனக்கு மேலுள்ளவர்களிடம்தான் பெறவேண்டும் என்பதில்லை தனக்கு கீழுள்ளவர்களிடமும் பெறலாம் என்ற அழகான முன்மாதிரியையும் தன் வாழ்க்கையில் செய்து காட்டியுள்ளார்கள். அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
'செயல் திட்டங்களில் அவர்களிடம் கலந்தாலோசனை செய்திடுவீர்! செயலாற் முடிவெடுத்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்திடுவீர்.          (அல்குர்ஆன்: 3:159)
இவ்வசனம் நாடாள்வோரும் வீட்டை நிர்வகிப்போரும் தொழில் செய்போரும் அனைத்து தரப்பினரும் ஆலோசனை பெற்றே அனைத்தையும் செயல்படுத்த வேண்டுமென்ற பொது நியதியை இத்திருவசனம் நமக்கு கற்றுத்தருகிறது.
 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.
பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹுஉமர் ரளியல்லாஹு அன்ஹுஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாதுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும்மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும்ஏன் ...தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!
இதற்கு நாம் மிகச் சிறந்த உதாரணமாக ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளைப்படி ஹுதைபிய்யா எனுமிடத்தில் குறைஷிக் காஃபிர்களுடன் சில ஒப்பந்தங்தளைச் செய்து அதில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால் அந்த வாசகங்களை வெளிப்படையாகப் படிக்கின்ற யாரும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது தான் என்றே கருதுவார்கள். அது போன்றே அருமை ஸஹாபாக்களுக்கும் நபி (ஸல்) அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவித்தது அதிர்ச்சியாகஅமைந்துவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி ''எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்க வில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும்அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தினால் (தம் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடம் இருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும் (அதனால் அவர்கள் தமக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலை முடியையும் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணியை அறுத்து விட்டுமுடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்துஅவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டுதம் நாவிதரை அழைத்து தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்துஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். (நூல்: புகாரி 2731)
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாடாளுமன்னராக அரசாண்டு வருகிறார்கள். அக்காலையில் ஒரு சமூகத்தவரின் ஆடுகள் வேறொருவரின் கதிர் கொழிக்கும் வயலில் மேய்ந்து துவம்சம் செய்துவிடுகின்றன. வயலுக்குச் சொந்தக்காரர் இதுபற்றி மன்னரிடம் முறையிடுகிறார். ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆடுகளைக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக அந்த ஆடுகளை வயலுக்குச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டுமென மன்னர் தாவூத் (அலை) அவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
அப்போது அவ்வவையில் இருந்த இளவரசர் சுலைமான் (அலை) அவர்கள் 'தந்தையே! இந்தப் பிரச்சனையில் வேறு விதமாகத் தீர்ப்பு அளித்தால் நீதியாக இருக்குமென நான் கருதுகிறேன். மன்னர் அனுமதியளித்தால் அதைக் கூறுகிறேன் என்று கேட்டுக் கொள்கிறார்கள். தந்தையும் அனுமதியளிக்கிறார்கள்.
'ஆடுகளை வயலுக்குச்சொந்தக் காரரிடம் சிரிது காலத்துக்கு விட்டு வைக்கவேண்டும். அக்கால கட்டத்தில் அவர்கள் அந்த ஆடுகளின் பலனை ஆனுபவிக்கலாம். ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வயலை உழுது பண்படுத்தி பயிரிட வேண்டும். கதிர் கொழிக்கும் பருவம் வந்தவுடன் விளை நிலத்தை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்து விட்டு ஆடுகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று சுலைமான் (அலை) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
நபி தாவூத் (அலை) அவர்கள் தனது மகனின் ஆலோசனையை வரவேற்று அதன்படி தீர்ப்பு அளித்தார்கள். அல்லாஹ் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில் இடம்பெறச் செய்து தனக்கு கீழுள்ளவர்களிடமும் கூட ஆலோசனை பெறலாம் அதன் மூலம் கூட நாம் எதிர்பார்க்காத நல்முடிவு கிட்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறான்.
இதில் இன்னொரு நிஜமும் உள்ளது. நமக்கு கீழுள்ளவர்களிடம் ஆலோசனை பெறும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் நம்மை மதித்து நம் கருத்துக்களை கேட்கிறாரே என்று நம்மீது நல்லெண்ணம் ஏற்படும்.
இதன்மூலம் பற்பல இடையூறுகள் தவிர்க்கப்படுகின்றன. கருத்துவேற்றுமை ஏற்படாமலிருக்கின்றன. எக்காரியத்தையும் இலகுவாக சாதிக்க ஏதுவாகின்றது. இதுபோன்ற மேலும் பல நற்பயன்களும் இதில் புதையுண்டு கிடக்கின்றன.
ஒப்பந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் ஆலோசனை செய்வதற்கு ஏராளமான உதாரணங்களைக் காணலாம்.
பத்ருகளம் வெற்றியடைந்த கையோடு களிப்போடு அனைவரும் அமர்ந்திருக்க பிடிபட்ட கைதிகள் குறித்து தமது மூத்த தோழர்களான அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹுஉமர் ரளியல்லாஹு அன்ஹுஅப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் ஆலோசனை செய்த வரலாற்றுக் குறிப்பை எவர்தான் மறக்க முடியும்?
அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்அம்ருப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதமொன்று வரைகிறார்கள். அதில் நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் விஷயங்களில் கலந்தாலோசித்திருக்கிறார்கள். எனவே அதையே தாங்களும் பின்பற்றுங்கள்.’ (நூல்: தப்ரானி) என்று செய்தி அனுப்புகிறார்கள்.
இதற்கு மேலும் வலுவுhட்டும் ஆதார சம்பவமாக அகழ்போரை நினைவு படுத்திப் பார்க்கலாம். போர் தந்திரங்களில் அகழ் தோண்டும் பழக்கம் அரபிகளிடத்தில் இல்லாத நிலையில் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையை ஏற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல்பட்டதோடு மட்டுமல்லாது தாமே முன்னின்று அகழ் தோண்டுவதற்கு உதவி செய்து மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனை குறித்து புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வரலாற்றுக் குறிப்புகள் ஆலோசனையின் அவசியத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஹுதைபியா உடன்படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எடுத்த முடிவில் ஸஹாபாக்கள் திருப்தி கொள்ளாதுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியபோது உம்முல் முஃமினீனான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட்டு அதற்கு தீர்வு கண்டார்கள் என்பது பெண்களின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
திருக்குர்ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் 33 ஆவது வசனத்தில் குடும்பவியலைப் பற்றி பேசுகிற இறைவன் கணவனும் மனைவியும் இனிமேல் இணைந்து ஒற்றமையாக வாழ முடியாத வண்ணம் பிணக்குகள் அதிகமானால் கணவன் சார்பாக ஒரு நீதவானையும்மனைவியின் சார்பாக மற்றொரு நீதமானவரையும் கலந்தாலோசித்து இருவரும் இணைந்திருப்பதே நல்லது எனில் இருவரையும் இணைத்து வைப்பார்கள் என்று கருத்து கூறுகிறான்.
இங்கே இருவரின் சார்பாகவும் பிரதிநிதிகள் வரவேண்டும் என்பதிலிருந்தே கலந்தாலோசிப்பதின் அவசியம் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஆலோசனை பெறப்படும் ஒவ்வொருவருமே தமது கருத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நப்பாசைக் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் நினைவுகூற இந்த இடம் பொறுத்தமானதே!
சமூகப்பிரச்சனையாக இருந்தாலும் குடும்பப் பிரச்சனையாக இருந்தாலும்ஏன் ...தனிப்பட்ட சிறு சிறு விஷயங்களில்கூட இந்த யுக்தியைக் கையாண்டால் வாழ்க்கையில் வெற்றி என்பது கையருகில் என்று சொல்லவும் வேண்டுமோ!
இதற்கு நாம் மிகச் சிறந்த உதாரணமாக ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவத்தைக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளைப்படி ஹுதைபிய்யா எனுமிடத்தில் குறைஷிக் காஃபிர்களுடன் சில ஒப்பந்தங்தளைச் செய்து அதில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால் அந்த வாசகங்களை வெளிப்படையாகப் படிக்கின்ற யாரும் அது முஸ்லிம்களுக்கு எதிரானது தான் என்றே கருதுவார்கள். அது போன்றே அருமை ஸஹாபாக்களுக்கும் நபி (ஸல்) அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்குச் சம்மதம் தெரிவித்தது அதிர்ச்சியாகஅமைந்துவிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி ''எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்க வில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும்அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தினால் (தம் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடம் இருந்து தாம் சந்தித்த அதிருப்தியையும் (அதனால் அவர்கள் தமக்கு கீழ்ப்படியாமல் இருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலை முடியையும் களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணியை அறுத்து விட்டுமுடி களையப்) புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்துஅவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டுதம் நாவிதரை அழைத்து தலை முடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை யாரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்துஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு சென்றனர். (நூல்: புகாரி 2731)
மேலும் ஷுஐப் (அலை) அவர்கள் தன்னுடைய மகளின் ஆலோசனையை ஏற்று நபி மூஸா (அலை) அவர்களைத் தனக்கு பணியாளராக அமர்த்திக் கொள்கிறார்கள். தன்னுடைய இரண்டு மகள்களில் ஒருவரை அவருக்குத் திருமணம் செய்தும் கொடுக்கிறார்கள்.

''என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள். ''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார் (அல்குர்ஆன் 27:26,27)

ஒரு வசதிபடைத்தவர் தன் பிறந்த நாள் அன்று மனநோயாளிகளுக்கு உணவளிக்க மனநல காப்பகம் சென்றார். உணவு பரிமாறிய பின் தன் காருக்கு வந்தார் அங்கே கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவரின் காரின் ஒரு வீலில் (சக்கரத்தில்) நான்கு போல்டுகளையும் காணவில்லை. எப்படி போக முடியும் என்று சிந்தனையில் நின்று கொண்டு இருந்தார்.
 அந்நேரத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு வந்து என்ன ஆச்சுஏன் இப்படி நிக்கிறீர்கள் என்றார். அவர் பைத்தியம் என்று  இவர் கண்டு கொள்ளவில்லை. திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கஇவர் எரிச்சல் அடைந்து நடந்ததை சொன்னார். உடனே ''ப்பூ'' இவ்வளவு தானாஎன்று சொல்லிவிட்டுமிச்சம் மூன்று வீல் இருக்கிறது இல்லையாஓவ்வொன்றிலும் ஒரு போல்டை எடுத்து இதில் போட்டால் வீடு வரையுமோஅல்லது மெக்கானிக் செட் வரையுமோ போக முடியுமல்லவாஎன்று சொல்லி விட்டு போய்விட்டார்.
வசதிபடைத்தவருக்கு அதைவிட அதிர்ச்சி இவரிடம் இருந்து இப்படியொரு ஐடியாவா?
எனவே யாரையும் சாதாரணமாக எடைபோட வேண்டாம். நினைத்து பார்க்க முடியாத நபரிடமிருந்து கூட ஒரு ‘’குட்ஐடியா’’ கிடைக்கலாம். வாங்க ஆலோசனை செய்யலாம்!

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}