கவனச் சிதறல்களும் விளைவுகளும்:
அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் குழந்தைகளும் இளைஞர்களும் ஒருநாளில் குறைந்த பட்சம் மூன்று மணிநேரம் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்றும், DVD அல்லது சினிமா பார்ப்பதில் ஒரு மணி நேரமும் , கணினி மற்றும் டிஜிட்டல் மீடியா முன்பாக இரண்டு மணி நேரம் அமர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மூன்று மணி நேரத்தை ஒருநாளில் தொலைக்காட்சி முன்பாக செலவிடுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சியின் முன்பாகவே அதிக நேரத்தை இளைஞர்களும் குழந்தைகளும் செலவழிக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது சமூக நலனுக்கும் உகந்ததல்ல. தனி நபர் நலனுக்கும் நல்லதல்ல. பெரும்பாலும் இளைஞர்கள் தொலைக்காட்சியும் சினிமாவும் பார்ப்பதால் சிகரெட், குடிக்கு அடிமையாகும் போக்கும், பாலியல் சம்பந்தமான கெட்ட சிந்தனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் மூலமாக வன்முறை சிந்தனைகளும் வக்கிரச் சிந்தனைகளும் அதிகமாகின்றன.
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டுள்ளனர். குடும்பத்துக்குள் கூடிப்பேசுதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது. குழந்தைகளும், இளைஞர்களும் தங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக்கூட காணாது தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அதிக பணிச்சுமையும் கல்விச் சுமையும் காரணமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் விருந்தினரை சென்று பார்ப்பதிலும், வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை உபசரிப்பதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக் காணும் பொருட்டு தங்களின் செயல் திட்டங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். பலருக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன்னே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமும் பெருகி உள்ளதைக் காண இயலும்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் சினிமா, பாடல், மற்றும் விளையாட்டு ஆகியவற்றை காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெரும்பாலும் தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டுமே தங்களின் ஆர்வத்தை செலுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் மத்திய மந்திரிகளைப் பற்றியோ, மாநில அரசின் அமைச்சர்களைப் பற்றியோ, நாட்டின் பொதுநலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிய அறிவோ ரொம்பவே குறைவாக உள்ளது அல்லது இல்லை என சொல்லலாம். ஒருவேளை சில மந்திரிகளை தெரிந்து வைத்தாலும் அவர்களின் அமைச்சரவை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வோ அது குறித்த அறிவோ இல்லை.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை சில புள்ளி விவரங்களுடன் காணலாம்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உடற்பருமனாவதற்கும் தொடர்புள்ளது என RTL (Radio Television Luxumberg Entertainment channel) மற்றும் OECD (Organaisation for Economic Cooperation and developement) ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஓடி விளையாடுவது குறைந்துள்ளது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து , அதில் காட்டுகிற உணவுப் பொருட்களையும், அதிக கொழுப்புள்ள தின் பண்டங்களை வாங்கி உண்ணுவதாலும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதாலும்தான் உடற்பருமன் ஆகிறது.
OECD மற்றும் World Values Data Bank Survey ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் சமூக நலனில் அக்கறையின்மையும், பொது நலச்சேவை செய்வது பெருமளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. Social Trust மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிற நாடுகளில் ஊழலும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நரம்பியல் விஞ்ஞானிகள் விளம்பரங்களுக்கும் நுகர்வு மனநிலைக்கும் நாம் ஏன் தள்ளப்பட்டுளோம் என்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள்.
முதலாவதாக மனித மூளையானது சூழ்நிலைக்கேற்றார் போல மாறும் தன்மை கொண்டது. ஆகையால் கேட்கிற, பார்க்கிற விடயங்கள் மூளையில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. இது போன்ற காரணங்களால் மூளை காலத்துக்கேற்றார் போல தொடர்ச்சியாக புதுப்புது நிகழ்வுகளை பதிவு செய்து கொள்கிறது. தியானம் செய்வது மன அமைதியைத் தரும். ஆனால் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் மன அமைதி கெடும். மேலும் மகிழ்ச்சி இராது என நரம்பியல் விஞ்ஞானிகள் கருத்துரைக்கிறார்கள் .
இரண்டாவதாக பெண்களைக் கவர்ச்சியாகக் காண்பிப்பதாலும் பாலியல் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாலும் மனிதர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகின்றன.
மூன்றாவதாக விளம்பரதாரர்களால் அறிமுகம் செய்யப்படும் பொருட்களை மேலும் மேலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வு மனநிலையை இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் விளம்பரங்கள் ஏற்படுத்தியுள்ளன.
நான்காவதாக, பெரும்பாலும் தெளிவற்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆகையால் நாம் வாங்குகிற பொருள் தேவையா தேவையற்றதா என அறியாத குழப்ப நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.
விளம்பரங்களின் மூலமாக ஏற்பட்ட அடிமை நுகர்வு மனப்பான்மையாலும், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் மன அமைதி கெடுகிறது. இதிலிருந்து வெளிவர மனதைத் தன்வயப்படுத்த வேண்டும். நுகர்வு கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டும். ஓய்வு நேரத்தை நல்வழிகளில் உபயோகப்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறந்த கல்வி, இயற்கையோடு இயைந்த தன்மை, அடுத்தவர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுதல் என சிறு வயதிலிருந்தே பள்ளிகளும் பெற்றோரும் இயங்கவேண்டும். வளமிக்க வாழ்வைத் திரும்பப் பெறவும் தங்களை மேம்பட்ட சமூகவாதிகளாக அடையாளப்படுத்தவும் வேண்டுமானால் இளைய சமுதாயத்தின் கனவுச் சிதறல்களைத் தடுத்தாகவேண்டும்.
நன்றி :தமிழ் பேப்பர்
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}
No comments:
Post a Comment