ஏனைய துன்பங்களைப் போலவே பொருள் சார்ந்த தேவையும் அது இல்லையென்றால் ஏற்படும் துன்பமும் அளப்பெரியது. அதற்கு மாற்று வழி கடன் பெறுவது. 'நான் கடனே வாங்க மாட்டேன்' என்று எந்த ஒருவரும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது, எதாவது ஒரு சூழலில் இருப்புக்கு மிகுதியாக பணத்தின் தேவை ஏற்படும் போது கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது.
கடன் வாங்குவதற்கு உடனடியாக நெருங்கிய உறவினர்களையோ, நண்பர்களையோ தான் நாடுவார்கள். அவர்களில் மனது உள்ளவர்களே உதவி செய்வார்கள். வருபவர்களின் தேவை அப்படி ஒன்றும் மூழ்க்கக் கூடியது இல்லை என்றால் அவர்களுக்கு உதவுவதும் உதவாததும் அவரவர் விருப்பம் தான். ஆனால் உண்மையிலேயே இக்கட்டான சூழலில் கடன் உதவி கேட்பவர்களுக்கு செய்வதால் நமக்கு கிடைக்கும் மனநிறைவு விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று. நம்மையும் மதித்து ஒருவர் உதவி கேட்கிறார் என்பது தனிப்பட்ட மனிதருக்கு பெருமையான ஒன்று தான்.
அதைவிட வாங்கும் சூழலைவிட கொடுக்கும் சூழல் நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைத்தால் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைத்த கொடுப்பினை தான்.
அதைவிட வாங்கும் சூழலைவிட கொடுக்கும் சூழல் நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைத்தால் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைத்த கொடுப்பினை தான்.
இன்றைய தேதியில் வங்கி அல்லது ஏதோ ஒரு வழியில் கடன் பெறாதவர் அல்லது கடனே இல்லாதவர் என்று எவரும் இலர். கடன் வாங்குவது என்பது தேவையாகவும் கடன் என்பது விற்பனையாகவும் ஆகிவிட்டதால் கடன் கொடுப்பது என்பது இன்றைய உலகில் பொருளியலுக்காக இயங்கும் மாபெரும் சந்தை.
,இஸ்லாத்தின் மூலாதாரமான திருக்குர்ஆன் மனித இனத்தின் பூரண வாழ்க்கைக்கு வழிகாட்டவல்லது. அந்த அடிப்படையில் மனிதர் தம்மிடையே கடன் கொடுத்தல் வாஙகுதல் பற்றி குர்ஆன் சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. அவற்றைப் பூரணமாக ஏற்றுப் பின்பற்றும் போது, பிரச்சினைகள் தோன்றாது சுமுகமான தீர்வுகள்தான் ஏற்படுகின்றன.
ஒருவர் தான் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாத பொருளாதாரக் கஷ்டத்தில் தள்ளப்படும் நிலையில் கடன் கொடுத்தவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
அவன் (கடன் பெற்றவன்) சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.(2:28)
இந்தக் குர்ஆன் வசனத்தின் பிரகாரம், மனிதர்கள் உளப்பூர்வமாகச் செய்யும் தர்மங்களை மாத்திரமே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை, ஆயினும் ஒரு மனிதனுக்குக் கடன் கொடுத்து அந்தக் கடன் திரும்ப வரவில்லையானால் வராத கடனைத் தள்ளுபடி செய்வதை இறைவன் தர்மமாக அங்கீகரித்து அதற்கு அளப்பரிய நன்மைகளைத் தருகின்றான்.

ஆயிஷா(ரலி)அறிவித்தார்.
"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி
அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி
அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி
அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி
"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி
அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி
அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். நூல்: புகாரி
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி
ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2392
ஒருவர் தன்னிடம் நபி(ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை) நோக்கி, ‘அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிக்கட்டும்” என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்து விடுங்கள். ஏனெனில், (தான் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துகிறவரே மக்களில் சிறந்தவராவார்” என்று கூறினார்கள்.
மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.
1044. கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), ‘இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!” என்று கூறினார்கள்.
புஹாரி :2298 அபூஹூரைரா (ரலி).
No comments:
Post a Comment