Thursday, April 21, 2011

செயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே


திருமறைக்கு அடுத்த சிறப்பைப்பெற்ற புகாரி ஷரீஃபின் முதல் பாடத்தில் ஸய்யிதினா ஹுமைதி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவித்த ஹதீஸான  நிச்சயமாக செயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன|| என்ற ஹதீஸ் முதலில் இடம்பெறுகின்றது. ஸய்யிதினா ஹுமைதி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களோடும், இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களோடும் தொடர்பு உடையவராக இருப்பதால்தான் அந்த ஹதீஸை முதலில் வைத்திருக்கின்றார்கள்.
எந்த விஷயமாக, செயலாக இருந்தாலும் ஷஎண்ணம்| மிகவும் அவசியம் என்பதைத்தான் மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது. ஒரு செயல் துன்யாவிற்காக இருப்பதும், மறுமைக்காக மாறுவதும் அவரவர்களின் எண்ணத்தைப் பொறுத்துதான் அமையும்.
ஒருமுறை ஸய்யிதினா ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு வழியான சென்று கொண்டிருக்கும் பொழுது ஷஷமுனகல்|| சப்தம் கேட்டது. திரும்பிபார்த்த பொழுது ஒரு மனிதன் மது அருந்தியவனாக ஷஷஅல்லாஹு....|| என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஷஷஅல்லாஹு|| என்ற பரிசுத்தமான திருநாமம் துர்நாற்றமான வாயிலிருந்தா (வெளி)வருவது! என்று நினைத்து, சிறிது தண்ணீரை எடுத்து அவர் வாயை மட்டும் துடைத்து விட்டு சென்று விட்டார்கள். மறுநாள் பள்ளியில் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒரு ஷஅழுகை| சப்தம் கேட்டது. சப்தத்தை நோக்கி திரும்பிப் பார்த்த ஸய்யிதினா ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பெரும் ஆச்சர்யம்!
நேற்று எந்த மனிதரின் துர்நாற்றமான வாயிலிருந்து ஷஅல்லாஹ்| என்ற சப்தம் வந்ததோ, இன்று அதே மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் வெளிவந்து, ஷஷயா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னித்துவிடு!|| என்று அழுது கொண்டிந்தார்.
ஆச்சர்யமடைந்த ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஷஷஓ! ஜாபிரே! எனது திருநாமம் அசுத்தமான வாயிலிருந்து வரக்கூடாது என்ற உங்களது தூய்மையான எண்ணத்திற்காக அந்த மனிதரையே தூய்மையாக்கிவிட்டேன் பார்த்தீர்களா! என்ற சப்தம் (அசரீரி) கேட்ட உடன் பேரானந்தம் அடைந்தார்கள்.
ஆக, ஒவ்வொரு செயலின் செயல்பாடும். அதன் விளைவும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. இதனால்தால் புகாரி இமாமவர்கள் முதல் ஹதீஸே ஷஷ எண்ணத்தின் சிறப்பை|| விளக்கியுள்ளார்கள்.
இன்று உலகமெங்கும் புகாரி ஷரீஃபின் விளக்கங்கள் புகழ்பாடிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? புகாரி இமாம் அவர்களின் பரிசுத்தமான எண்ணமும், பேணுதலும். இறையச்சமும் தான் காரணம்.
புகாரி ஷரீஃபை இமாமவர்கள் தொகுத்த நிலைமைகளை அறிந்தால் இமாமவர்களின் மீது பாசம் கூடுமே தவிர குறையாது. புகாரி ஷரீஃபை புகாரி இமாமவர்கள் எப்படி தொகுத்தார்கள் என்பதைப்பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.
புகாரி இமாம் அவர்கள் ஹிஜ்ரி 197- ல் பிறக்கின்றார்கள். சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடைய இமாமவர்கள் 17 வயதில் ஹஜ் என்ற புனித யாத்திரையை நிறைவு செய்கிறார்கள். 18 வது வயதில் புகாரி ஷரீஃபை எழுதத்துவங்குகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியராக இருந்தது ஸய்யிதினா அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 இலட்சம் ஹதீஸ்களை ஒன்று சேர்த்த இமாம் அவர்கள், 6 இலட்சம் ஹதீஸ்களை ராவியோடு (அறிவிப்பாளர்களோடு) மனனம் செய்திருக்கின்றார்கள். அப்படி 6 இலட்சம் ஹதீஸிற்கு எத்தனை ராவிகள் இருந்தார்களோ அத்துனை அறிவிப்பாளர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து வைத்திருந்தார்கள்.
திரு மக்காவில் புகாரி ஷரீஃபை எழுதத்துவங்கிய இமாம் அவர்கள் திருமதினாவில் பெருமானாரிடம் மறைமுகமான அனுமதியும் வாங்குகிறார்கள். தங்களது வாழ்நாளில் சுமார் 14 ஆண்டுகள் புகாரி ஷரீஃபை தொகுப்பதிலேயே கழித்தார்கள்.
புகாரி இமாம் அவர்களுக்கு முன் தொகுத்த ஹதீஸ்களில் தொழுகை, ஈமான்.... என்று தனித்தனி அத்தியாயங்கள் இல்லை. ஒரு இடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸ் இருந்தால் பிரிதொரு இடத்தில் அதன் சம்பந்தமான மற்றொரு ஹதீஸ் இடம்பெறும். ஆனால் பின்வரும் மக்கள் எளிதாக திரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் செயல்களையும், எண்ணங்களையும் நிறைவாக நிறைவேற்ற வேண்டுமென்ற ஆவலில் தொழுகை, ஈமான்.... என்று தனித்தனி பிரிவுகளாக பிரித்த பெருமை புகாரி இமாம் அவர்களையேச்சாரும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
புகாரி இமாம் அவர்களிடத்தில் ஏதேனும் ஒரு ஹதீஸை சொன்னவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்ற ஆராய்ச்சி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வரை தொடரும், அப்படி, இடையில் எத்தனை நபர்களிடமிருந்து ஹதீஸ் கிடைக்கின்றதோ, அவர்கள் அனைவருடைய முழு வாழ்வையும் ஆராய்ந்து, பின் தான் அந்த ஹதீஸை எழுதுவார்கள். அப்படி ஒருவேளை அவர் வாழ்வில் ஏதேனும் ஓரே ஒரு ஷபொய்| தான் சொன்னார் என்ற செய்தியை கேள்விப்பட்டாலும் கூட அந்த ஹதீஸை அப்படியே விலக்கி விடுவார்கள்.
ஒரு ஹதீஸிற்கே இவ்வளவு  ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்றால் சுமார் 10 இலட்சம் ஹதீஸ்களை தொகுத்து, அதில் 6 இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருக்கின்றார்கள் என்றால், அவர்கள் செய்த தியாகத்தை நம்மால் நினைத்து பார்க்கத்தான் முடியுமா?
ஒவ்வொரு ஹதீஸையும் எழுதும்போது 2 ரகஅத் தொழுதுவிட்டுதான் எழுதுவார்கள். ஒவ்வொரு பாடங்களை ஆரம்பிக்கும் முன் திருமதீனா சென்று நாயக திருமேனி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ரவ்ழா ஷரீஃபில் அனுமதி பெற்ற பின்பு தான் எழுதுவார்கள்.
ஒரு ஹதீஸிற்கு 2 ரகஅத் என்றால், 10 இலட்சம் ஹதீஸை தொகுத்த இமாமவர்கள் சுமார் 20 இலட்சம் ரகஅத்துகளாவது தொழுதிருப்பார்கள். நாம் வழிதவறி விடக்கூடாது என்பதற்காக தங்களின் வாழ்வையே அர்பணித்த இமாமவர்களின் கால் தூசுக்கு நாம் சமமாவோமா?
ஹதீஸ்களை தொகுப்பதற்காக செய்த இந்த ஒரு வணக்கத்தில் கூட நாம் நெருங்க முடியாது எனும் போது, புகாரி இமாமும் ஷநம்மைப்போன்றவர்கள் தான்| என்று வாய் கூசாமல சொல்லும் மனசாட்சி அற்றவர்கள் இனியேனும் திருந்துவார்களா?
ஒரு ஹதீஸை தொகுப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை நமமுன் எழலாம்?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொன்னார்கள் ஷஷயார் என் மீது வேண்டுமென்று ஒரு பொய்யை இட்டுகட்டுகிறாரோ அவர் தனக்குரிய இடத்தை நரகத்தில் தயார் செய்து கொள்ளட்டும்|| என்ற ஹதீஸின் விளக்கத்தில் தான் அவர்களின் தியாகம் அடங்கியிருக்கிறது.
மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் கடந்தாலும் புகாரி இமாம் தொகுத்த ஷபுகாரி ஷரீஃப்| நாளுக்கு நாள் மெருகோடு உலகெங்கிலும் அதன் புகழ் ஒளித்துக்கொண்டிருப்பதின் காரணம், புகாரி இமாம் அவர்களின் தூய்மையான எண்ணமும், பேணுதலும், இறையச்சமுமே காரணம் என்பதை எவர் மறுக்க இயலும்?
                         - அல்ஹாபிழ் முஹம்மது இஸ்மாயில் பிலாலி


No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}