நோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:-
நோயாளியை சந்திப்பவருக்கு ஏராளமான நன்மைகள் வழங்கப்படுகின்றன. நோயாளியைச் சந்திக்கும் போது மனத்தூய்மையுடன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகளை பின்பற்றுகிறோம் என்ற எண்ணத்துடனும் செய்யப்படுமேயானால் அதற்கு கிடைக்கும் நன்மைகள் சொல்லவும் தான்வேண்டுமா?
நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷயாரேனும் ஒருவர் ஒரு நோயாளியை காலையில் சந்திப்பாரோ அவருக்காக 70000 மலக்குமார்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் யாரொருவர் ஒரு நோயாளியை மாலையில் சந்திப்பாரோ அவருக்காக 70000 மலக்குமார்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்னும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் அமைக்கப்படுகிறது|| என்று கூறியுள்ளார்கள்.(நூல்: மிஷ்காத்)
வேறொரு அறிவிப்பில்,
‘’எவரேனும் ஒருவர் ஒரு நோயாளியை சந்திக்க செல்வாரானால், ஒரு அழைப்பாளர், வானத்திலிருந்து குரல் கொடுப்பார். ஷநீர் நல்லவர் உமது நடையும் நல்லுத. நீர் சொர்க்கபதியில் ஒருவீட்டை சம்பாதித்துக் கொண்டீர்!|| என்றும் கூறியுள்ளார்கள்.(நூல்: திர்மிதி)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நோயாளியை சந்திப்பதினால் கிடைக்கின்ற நன்மைகளைக் கண்டு கொண்டோம். இதன் சிறப்புகளைக் கூற மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை இப்பகுதியின் விரிவு அஞ்சி தவிர்த்து விட்டு, இனி நோயாளியை சந்திப்பதின் சுன்னத்தான முறைகளைப் பார்ப்போமா?
முதலில்.......
1. நோயாளியை சந்திக்க செல்பவரின் எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். அதாவது, இறைவனின் மகிழ்ச்சிக்காக நோயாளியைக் காணச் செல்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
2. நோயாளியை சந்திக்கும் போது முதலில் ஸலாம் சொல்ல வேண்டும். அதன் பின் அவரது நோயின் தன்மையை விசாரிக்க வேண்டும்.
3. (நோயாளியைச் சந்திப்பவர்) நோயாளிக்கு உற்சாகம் ஆறுதல் தர வேண்டும் (அதாவது உற்சாகம் தரும் பேச்சுக்களையே பேச வேண்டும். விரக்தி தரும்) நம்பிக்கை இழக்கும் பேச்சுக்களை பேசுவதை விட்டும் தவிர்ந்து (கவனமாக) இருக்க வேண்டும் (நூல்: திர்மிதி)
இவைகள் கூடாது
நோயாளியை சந்திக்கும் போது பின்வரும் விஷயங்களை செய்யக்கூடாது. கவனமாய் பேன வேண்டும்.
4. (நோயாளியை சந்திக்கச் செல்பவர்) நெடு நேரம் அங்கு இருக்க கூடாது.
(நூல்: பைஹகீ)
நோயாளியைக் காணச் செல்லும் போது வெகுநேரம் தங்கி இருக்காமலும் சப்தம் செய்யாமலும் இருப்பது ஷசுன்னத்| ஆகும். (நூல்: ரஜீன்)
5. உங்களின் நோயாளிகளை உண்ணுமாறும் அருந்துமாறும் வற்புறுத்தாதீர்கள். அல்லாஹ் அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் தருகின்றான்.|| என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: திர்மிதி)
அன்பளிப்பு.......
முடிந்தால் நோயாளிக்கு அன்பளிப்பை எடுத்துச் செல்லலாம். தேவையிருந்தால் பணத்தால் உதவி செய்யலாம். ஏனென்றால் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஷ(மக்களில் சிறந்தவர்) மனிதவர்க்கத்திற்கு உதவுபவரே|| என்று கூறியுள்ளார்கள்.
ஓத வேண்டிய ஷதுஆ| க்கள்.
நோயாளி சந்திப்பவர் கீழ்வரும் ‘துஆ| வை ஓத வேண்டும்.
லா பஃஸ துஹுருன் இன்ஷா அல்லாஹ்
பொருள் :-
கவலை இல்லை. அல்லாஹ் நாடினால் இந்த வியாதி உங்களைப் பாவங்களை விட்டுத் தூய்மையானதாக்கி விடும்.
(நூல்: திர்மிதி)
அத்தோடு கீழ்கண்ட ‘துஆ| வை ஏழு தடவை ஓத வேண்டும்.
அஸ்அலுகல்லாஹ் ரப்பல் அர்ஷில் அழீமி அய்யஷ் குபீ(க்)க
பொருள்:-
இறைவனே! மகத்துமுள்ள அர்ஷின் ரப்பே! இவரின் வியாதி சுகமடைவதை உன்னிடத்தில் நான் வேண்டுகிறேன்.
பலன் :-
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கூறியுள்ளார்கள் ஒருவர் மேற்கண்ட ‘துஆ| வை ஏழுமுறை நோயுற்றவரை சந்திக்கும் பொழுது ஓதினால், நோயுற்றவர் மரணத்தை தவிர (அனைத்து) நோயிலிருந்து குணமடைவார் .
8. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நோயாளியிடம் சென்றாலும் அல்லது (எந்த) நோயாளியும் அவர்களிடம் வந்தாலும்
இத்ஹபில் பஃஸ ரப்பன்னாஸி வஷஃபி அன்(த்) தஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபாஅன் லா யுகாதிர் ஸக்மன்.
பொருள்:-
மக்களின் இறைவா! கடும் வேதனை தரும் நோயை நீக்குவாயாக! மேலும் குணமாக்குவாயாக! நீயே குணம் அளிப்பவன். நீ குணமளித்தாலொளிய குணமில்லை! (உன்னுடைய) குணளிக்கும் தன்மை எந்த வியாதியையும் கைவிட்டதில்லை!
(நூல்: திர்மிதி)
நோயாளியிடம் ‘துஆ| நோயாளியின் ‘துஆ| ஏற்றுக் கொள்ளப்படுவதால்
9. நோயாளியிடம் ‘துஆ| ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.
(நூல்: பைஹகீ)
10. ‘’நோயாளியிடம் நீர் செல்வீரானால் அவரிடம் ‘துஆ|ச் செய்ய வேண்டுவீர்! நோயாளிகளுடைய ‘துஆ| வானவர்களுடைய ‘துஆ| வைப் போன்றதாகும்|| என்று காரூண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
11. கஷ்டம் - நோயிலிருந்து பாதுகாப்பு:-
நோய், கஷ்டம் ஆகியவற்றில் கஷ்டப்படும் ஒருவரை சந்திப்பவர் கீழ்கண்ட துஆவை ஓதினால் அவர் அதில் இருந்தும் பாதுகாப்பு பெறுவார்.
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப்தலா(க்)க பிஹீ வஃபழ்ளளனீ கஸீர(ன்)ம் மிம்மன் ஹலக தஃப்ளீலா
பொருள்:-
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நீ இருக்கும் நிலையை விட்டும் அவன் என்னைக் காத்துக் கொண்டான். மேலும் தன்னுடைய அநேக படைப்புகளுக்கும் மத்தியில் அவன் என்னை சிறப்பாக்கி வைத்தான்.
இதுவரை நோயாளியை சந்திப்பதின் சுன்னத்துகளைப் பார்த்தோம். இனி நோய் சம்பந்தமான நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள சில ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நோயைத் திட்டக்கூடாது.
‘’உங்களுக்கு நோய் வந்தால் திட்டாதீர்கள். ஏனென்றால் நெருப்பு இரும்பின் துருக்களை எப்படி சுத்தம் செய்கின்றதோ அப்படியே நோய் உங்களின் பாவங்களை சுத்தப்படுத்துகிறது.
(நூல்: முஸ்லிம்)
நன்மை குறையாது
‘’ஒருவன் நோயாளியாகி விட்டால் நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் என்று இறைவன் கட்டளை பிறக்கும்.(நூல் :மிஷ்காத்)
வெண்குஷ்டம்
வெயிலில் கொதித்த (வெயில் பட்டு சூடேரி கொதித்த) சுடுநீரில் குளிக்காதீர்கள். அது வெண்குஷ்டத்தை உண்டாக்கிவிடும்.
ஒரு முஃமினை வியாதி வாட்டி வதைக்கிறது என்றால் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் வருங்காலத்தில் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிடுகிறது.
நூல்: முஸ்லிம்
-ஹம்ஸா முபாரக் பிலாலி
No comments:
Post a Comment