Sunday, September 29, 2013

ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்.

Monday, August 26, 2013

எத்தனை ஆணவம் மனிதா...நீ

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது... எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை ! எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? அறுபது நாட்களில் அடையாளமற்றுப்போகும் உடலில் மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...இவையெல்லாம்....? மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது... எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை ! எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? அறுபது நாட்களில் அடையாளமற்றுப்போகும் உடலில் மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...இவையெல்லாம்....?

Monday, July 22, 2013

ஸபீலுல் உலமா உயர்பணி

ஸபீலுல் உலமா உயர்பணி இயக்க சார்பாக கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் (தேதி மாற்றம் 11-08-2013 ஞாயிற்றுக்கிழமை)

Saturday, July 13, 2013

தவறு செய்யனுமா? தாராளமாக! ஆனால்....?


பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி நடந்துவிட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார்.

அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்திபெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் -- உணவு எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் -- உணவுதானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? '' 

ஆம்!  நியாயமில்லைதான்.இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''.

 '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் --இடத்திலும் தங்காதே! அவனுடைய நாட்டை -- இடத்தை விட்டும் முதலில்வெளியேறிவிடு.

'' முன்பை விட இப்போது அதிர்ச்சி அடைந்த அவ்வாலிபன்,எங்குஇருந்தாலும்,சென்றாலும்,எல்லாம் அவனுடைய நாடாக -- இடமாக இருக்க,இது எப்படி சாத்தியமாகும்?.

என்னப்பா! அப்படியென்றால் அவனுடைய நாட்டில் - இடத்தில் இருந்து கொண்டே அவனுக்கு எதிராக பாவம் செய்யப் போகிறாயா? '' 

இல்லை.இல்லை செய்யமாட்டேன் செய்யவும் கூடாது,'' சரி சரி மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்.

நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்குத் தெரியாமல்,அவன் பார்க்காத இடமாகப் பார்த்து அங்கு போய் பாவம் செய்! ''  

'' இது எப்படி முடியும்?அவன் பார்வை படாத இடமே இவ்வுலகில் இல்லையே! அவன் அந்தரங்கங்களை அறிந்தவனாயிற்றே.'' நிச்சயமாக அவன் ரகசியத்தையும், அதை விட மறைவாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான்.'' (அல்குர்ஆன் 20 ; 7) கும்மிருட்டில்,கறுப்புப் பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்,அவன் பார்ப்பவனாயிற்றே!

 '' அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா?
 நீ தனியறையில் யாருக்கும் தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது, அந்தஅறையினுள்ள ஒரு துவாரத்தின் வழியாக யாரோ ஒரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால்,உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா ? உனது உடம்பில் டெம்பரேச்சர் அப்படியே இறங்கிவிடாது! ஆம்! நீ வியர்த்து விறு விறுத்துப் போவாய்.உன்னால் அப்போது எந்த தவறும் செய்ய முடியாது.அப்படியானால் உன்னைப் போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன்,உன்னைப் படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கின்றான் எனத் தெரிந்தும் வெட்க மில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா ? இது தகுமா ?

கூடவே கூடாது! நான்காவதைக்கூறுங்கள்'' 

உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் -- மரண தூதன் உன்னிடம் வந்தால் அவரிடம் கெஞ்சித் கூத்தாடி கொஞ்சம் டைம் -- தவனை கேள்! தௌபா -- பாவ மன்னிப்புக் கேட்டு மீட்சி பெறுவதற்கு ''

'' அது நடக்கவே நடக்காதே '' அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '' (அல்குர்ஆன் 7 ; 34) 
என்று அல்லாஹ் கூறுகின்றானே.

'' மரணத்தை தள்ளி வைக்க முடியாது என்று தெரிந்திருக்கும் நீ, பாவத்தில்மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்து விட்டால் உனது கதிஎன்னவாகும்''? '' விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது அவன் முஃமினாக -- இறை விசுவாசியாக இருக்கமாட்டான்.திருடன் திருடும்போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்.குடிகாரன் குடிக்கும்போது முஃமினாக இருக்கமாட்டான் '' (புகாரி ; 2475, முஸ்லிம் ; 57) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.ஈமானின் -- இறை நம்பிக்கையின் -- பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்?

'' ஆகா! ரொம்ப ஆபத்தாகும்.ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்.''
நரகத்தின் காவலர்களான சபானிய -- மலக்குமார்கள்,வானவர்கள் உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே!''

இதுவெல்லாம் நடக்கக்கூடியதா? ஒருக்காலும் நடக்கமுடியாத காரியம்,எனக்கூறி அழ ஆரபித்த அவ்வாலிபர் முடிவில் போதும் போதும் ..... மகான் அவர்களே! நான்  இஸ்திஃக்பார் -- பாவ மன்னிப்பு அல்லாஹ்விடம் கேட்டு,அவனிடமே தௌபா -- மீட்சி பெறுகிறேன்.எனக்கூறி விடைபெற்றார்.

அதற்குப் பிறகு அவர் திருந்தி வாழ்ந்து இறைவணக்கத்திலே முழுமையாக ஈடுபட்டு இறைநேசரானார்.உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் ஒரு போதும் பாவம் செய்யவே மாட்டார்.அவனது கடவுள் மெய்யாகவும்,அவனது நம்பிக்கை உண்மையாகவும் இல்லாத போதுதான் அவன் பாவம் செய்ய முற்படுகின்றான்.


மெய்யான கடவுளின் வரைவிலக்கணம் அவன் அகிலங்களின் அதிபதி.அவனேபடைத்தவன்.உணவளிப்பவன்.எங்கும் நிறைந்த அவனது ஞானம்,பார்வை படாத இடமே இல்லை.அவனுக்கு எங்கும் எதுவும் மறைவானது இல்லை.அவன் ஏகன் இணை துணையற்றவன்.அத்தகய அல்லாஹ்வின் பேரருள் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..

Monday, June 10, 2013

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்
உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இஸ்லாத்தை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு அல்லாஹ், இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

இறைத்தூதர் (ஸல்)அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் பற்றிய சம்பங்கள் குழந்தைகளின் உள்ளத்தை பண்படுத்த வல்லது.

அவர்கள் வழிதவறும் பொழுதெல்லாம் மேற்கண்ட சம்பவங்கள் அவர்களை பண்படுத்தப் பயன்படும். இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு வழியமைக்கும்.

இன்றைக்கு நம் குழந்தைகள் சக்திமான், இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் மற்றும் வரலாற்றுத் தொடர்களால் பாதிக்கப்படுகின்றன. அவர்களைப் போல அமானுஷ்யமான வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று கனவு காண்கின்றன. அதனால் தான் மாடியிலிருந்து குதித்து சக்திமான் போல சகாசம் செய்யப் பார்க்கின்றன. சக்திமான் வந்து காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை தான் அவர்களை மாடியிலிருந்து குதிக்க வைக்கின்றது. இது போன்ற கதைகளை விட.., இஸ்லாமிய வரலாற்று நாயகர்களின் உண்மை வாழ்வு படிப்பினை மிக்கதாகும். இன்னும் நீங்களும் கூட அவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்

Tuesday, May 28, 2013

இதய நோய்க்கு நிவாரணம்

இதய நோய்க்கு நிவாரணம் 
மாமேதை ஹஸன் பஸரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். நான் வாலிபர் ஒருவருடன் பஸரா நகர வீதியொன்றில் சென்றுக் கொண்டிருந்தேன். வழியில் மருத்துவர் ஒருவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டிருக்க ஆண்களும்,, பெண்களும், ,, சிறுவர்களும் அவரைச் சுற்றிலும் நின்றுக் கொண்டு தத்தம் நோய்களைப் பற்றி அவரிடம் கூறி மருந்துக்களை வாங்கிக் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது என்னுடன் வந்த வாலிபர் அம்மருத்துவரிடம் சென்று மருத்துவரே! பாவங்களை கழுவி சுத்தப்படுத்தி இதய நோய்க்கு நிவாரணம் அளிக்கும் மருத்துவம் தங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

ஆம். எமக்கு தெரியும் என்று கூறிய அவர், என்னிடமிருந்து பத்து பொருட்களை பெற்றுக் கொள்வீராக! முதலில் ஏழ்மை எனும் மரத்தின் வேரையும் , பணிவு எனும் மரத்தின் வேரையும் சேர்த்து அத்துடன் பச்சாதாபம் என்னும் கடுக்காயை கலந்து பின்னர் அவற்றை இறைப் பொருத்தம் எனும் உரலில் இட்டு போதுமாக்கிக் கொள்ளுதல் எனும் உலக்கையால் அவற்றை இடித்துப் பொடியாக்கி கொள்வாயாக!

பிறகு இறைபக்தி எனும் சட்டியிலிட்டு நாணம் எனும் நீரை அதில் ஊற்றி இறைநேசம் எனும் நெருப்பின் மூலம் அதனை சூடேற்றி கொதிக்க வைப்பாயாக!

பின்னர் அதனை நன்றியெனும் கோப்பையில் ஊற்றி நல்லாதரவு எனும் விசிறியினால் அதனை வீசி ஆற வைத்து புகழ் எனும் கரண்டியினால் எடுத்து அதனை பருகிவிடுவாயாக!

இவ்வாறு நீ செய்து வந்தால் ஈருலகை சேர்ந்த எல்லா வித நோய்களும் துன்பங்களும் நீங்கப் பெற்று நல்ல நிவாரணம் கிடைத்திடும் என பதிலளித்தார்.

இவ்வாறு 

الفقر والتواضع والتوبة والتقوى والرضا والحياء والمحبة والشكر والرجاء والحمد

ஆகியவற்றைக் கடைபிடித்து அமல் செய்வதின் மூலம் பாவமென்ற நோய் நீங்கப் பெற்று சுகம் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை
tanks. mail of islam

Monday, May 27, 2013

பேராசை

بسم الله الرحمن الرحيم (1)
أَلْهَاكُمُ التَّكَاثُرُ (2) حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ (3) كَلَّا سَوْفَ تَعْلَمُونَ (4) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ (5)كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ (6)
لَتَرَوُنَّ الْجَحِيمَ (7) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ (8) ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ (9(
மக்காவில் செல்வாக்கான குரைஷி கோத்திரத்தார் இரண்டு பிரிவுகளாக 'அப்துல் முனாஃப் - ஸஹ்ம்' பிரிந்து சபைகளில் பெருமை பேசிக் கொள்வார்கள். உச்சகட்டமாக இருவரும் கப்ருகளுக்கு சென்று யார் பிரிவினர் அதிகமிருந்திருக்கிறார்கள் என்று எண்ணினார்கள். அப்பொழுது.
عن عبد الله بن الشخير رضي الله تعالى عنه انه قال اتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ الهاكم التكاثر قال  يقول ابن آدم: مالي مالي. وهل لك من مالك إلا ما أكلت فأفنيت، أو لبست فأبليت، أو تصدقت فأمضيت؟
ஒரு தடவை ஆயிஷா ரளி அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுத்து பங்கிடப்படுகிறது. நபி (ஸல்) பங்கிட்டாகி விட்டதா? என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஸா (ரளி) கொடுத்தாகி விட்டது. நமக்கு இந்த பகுதி உள்ளது என்றனர். அதற்கு நபி (ஸல்); நம்முடையது நாம் எதை பங்கிட்டு கொடுத்தோமோ அது தான்.
ஆசைப்படுவது மனித இயல்பு. மனித மனங்கள் ஆசைகளால் உயிர் பெருகின்றன. ஆசையில்லாத உள்ளங்கள் பிணவறைகளே! ஆனால், நமது ஆசைகள் எப்படிப்பட்டவை என்பது மிகமிக முக்கியமானது ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஆசைகளுக்கு" அனுமதி தந்திருக்கின்றார்கள். "நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான் இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்
அங்கு பஷர் பின் மூஸா அவர்களும் இருக்கின்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு புன்னகை பூத்த வண்ணம் தம் தோழர்களைக் கேட்கிறார்கள்; "நண்பர்களே! வாருங்கள், இனிய மாலைப்பொழுதில் ஆசைகளைப் பரிமாறிக் கொள்வோம். தோழரே! உங்கள் ஆசை என்ன?" ஒருவர் கூறுகிறார்: " எனக்கு இந்த வீடு முழுக்க தங்கக்கட்டிகளும், நகை நட்டுகளும் கிடைக்கணும். அதை நான் இறைவழியில் மகிழ்வுடன் செலவழிக்கணும் என்பதே எனது ஆசை"

உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றவரிடம் கேட்கிறார்கள்: "உங்கள் ஆசை என்ன?"
அவர் கூறுகிறார்: "எனக்கு இந்த வீடு முழுக்க முத்துமணிகள், பவளங்கள், ரத்தினங்கள், வைரங்கள் நிரம்பி வழிய வேண்டும்
அதனை நான் மகிழ்வுடன் இறைவழியில் செலவழிக்க வேண்டும் என்பதே என் ஆசை"
உமர் ரளியல்லாஹு அன்ஹு மீண்டும்: "இன்னும் எவராவது?
நண்பர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களுக்கு எதை ஆசிப்படணும் என்பதே தெரியவில்லை
உமர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: "எனக்கு இந்த வீடு நிறைய அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சத்திய சீலர்கள் வேண்டும்.

62:10. பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

அய்யூப் அலை அவர்கள் தனிமையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது தங்கத்தாலான வெட்டுக்கிளிகளை அவர்கள் மேனியில் உதிர்ந்த்தான். உடனே அவர்கள் அதை பிறக்க ஆரம்பித்தார்கள். அய்யூபே அவசரமாக பொறுக்கும் அளவு உம்மை ஏழையாக வைத்திருக்க வில்லையே என்றான் அல்லாஹ். '' லா கினாஅன் பரகதிக' ( யா அல்லாஹ் என்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறாய். உண்மைதான். ஆனால் உனது பரக்கத் கிடைக்கும் போது நான் எப்படி பாராமுகமாக இருக்க முடியும்) என்று பதில் அளித்தார்கள். (புகாரி)
எப்போது அது பேராசையாக மாறுகிறதோ அப்போது அது அவனை எந்த நிலைக்கும்...
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் சூழ்ந்துள்ளஅல்லது சூழ்ந்து கொண்டுவிட்டவாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.. -Gfhhp

பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஃபுப்னு மாலிக் (ரலி) நூல்:திர்மிதீ

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
قال النبي صلى الله عليه وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان حب المال وطول العمر
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لو كان لابن ‏ ‏آدم ‏ ‏واديان من ذهب لأحب أن يكون له ثالث ولا يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب
قال النبي صلى الله عليه وسلم :لا يزال قلب الكبير شاب فى اثنتين فى حب الدنيا وطول العمر
இறைத்தூதர்http://www.readislam.net/sall.gif அவர்களிடம் நான் (நிதயுதவி) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி) கேட்டேன். அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே! இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும். கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க, தானும்) பேராசையின்றி எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும். பேராசயுடன் இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் (நிறையத்) தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான் (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக! தங்களுக்குப் பின், நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும் எதையும் பெற மாட்டேன்" என்று கூறினேன். அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) , நூல்:புகாரி
உமர்(ரலி) அறிவித்தார்.
      
நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)" என்றார்கள். நூல்: புகாரி
அவா என்னும் பேராசை உடையவர், தாம் மட்டுமே தமக்கு மட்டுமே என்ற தன்னலத்தால் பிறர்க்கு உரியதையும் பறித்துக் கொண்டு அவர்க்குக் கெடுதல் செய்து விடுவார்.
நடுத்தக் குடும்பங்களிலும், செல்வ வளமிக்க குடும்பங்களிலும்தான் ”

பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தங்களின் ”மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்பு தாங்கள் ”வளமிக்கவர்கள்” என்று காட்டுகிற மனப்பாங்கே உள்ளது. அதில்தான் அந்தஸ்து அடங்கியுள்ளது என  நினைக்கிறார்கள். எதிர் பாலியலை கவர்வதற்கும் மயக்குவதற்குமாக பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். 

சுற்றத்தினருக்கு இணையாக வாழ வேண்டும். தங்களின் சுற்றத்தார் படிக்க வைக்கிற பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற விடுமுறை நாட்களில் கூட பணிபுரிகிறார்கள். ஓய்வு பெறும் நாள் வரை ஓயாது ஓடுகிறார்கள். ஒருவர் ஓடுவதைப் பார்த்து அடுத்தவர் ஓடுகிற சமூகமாகத்தான் நுகர்வு மனநிலை இவர்களை மாற்றியுள்ளது

ஜும்மா அன்று கூட கடை அடைக்காமல்...
பெரும்பாலும் பைனான்ஸ் கம்பேனிகள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி
மக்களின் பேராசையை வைத்து வித விதமான பேர்களில் மோசடி
பேராசைகளினால் மனிதர்கள் படும்பாடு... பணத்திற்காக மற்ற எல்லா சுகத்தையும் இழக்கவும் தயார் உடல் நலத்தையும் இழக்கிறார்கள்.

 முல்லா கதை ஒன்னு...

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா "அடடே..., உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, "என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிசென்றார்.அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் "முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். " அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு" என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் "என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் " என்று கோபமுற்றார். அதற்கு முல்லா " பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? " என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்....
சிலபேர் அளவோடு சாப்பிடாமல் சாப்பாட்டில் பேராசைபட்டு பிரியாணி
     'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்http://www.readislam.net/sall.gif அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
ع أنس بن مالك يقول: قال رسول الله صلى الله عليه وسلم: "يتبع الميت ثلاثةٌ، فيرجع اثنان ويبقى معه واحد: يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله، ويبقى عمله
vg;gb Nguhirapy; ,Ue;J jg;gpg;gJ
நமக்கு மேலுள்ளவர்களை பார்க்கும்போதுதான் இந்த வித வீணான ஆசை வரும் நாம் நமக்குள்ள கீழுள்ளவர்களை பார்க்க வேண்டும்.
قال النبي صلى الله عليه وسلم : اذا نظر احدكم الى من فضل عليكم بالمال والخلق فلينظر الى من هو اسفل منكم
انظروا الى من اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو اجدر الا تزدروا نعمة الله   
قد أفلح من أسلَمَ ورُزقَ كفافا وقَنّعَهُ اللّهُ بما آتاهُ

அல்லாஹ்வின்அருட் கொடைகள்
இப்னு அப்பாஸ்:   அன்னயீம்' என்ற சொல்லின் கருத்து, உடல் , காதுகள், கண்கள் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதாகும். இதனைப் பற்றி நீங்கள் மறுமையில் வினவப்படுவீர்கள்' எனக் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு மஸ்வூத் : அன்னயீம்' உடல் ஆரோக்கியமும், பாதுகாப்பும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இப்னு முஜாஹித்: உலகில் கிடைக்கும் இன்பம் தரும் அனைத்து பொருட்களும்.
அபூஹுரைரா ரளி அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் மதினாவில் அபூ பக்கர் ரளி, உமர் ரளி மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி ஸல் வந்தார்கள். அபுல் ஹைதம் அல் அன்ஸாரி ரளி வீட்டிற்கு வந்தார்கள். (முஸ்லிம், திர்மிதி, அபூ தாவூத்)
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளை பற்றி விசாரிப்பான்
பேருகள் இரு வகைப்படும் 1) இம்மைப்பேறு. மனிதன் அழகாக இருத்தல் உடல் நலம், செல்வம், வீடு, மனைவி மக்கள், பிறர் போற்றக்கூடிய அளவு கண்ணியமாக வாழ்தல்
2) மறுமைக்காக சம்பாதித்தல்,

 நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, ‘இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்என்று கூறினார்கள்” . புஹாரி : 116 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி).
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}