Thursday, April 21, 2011

செயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே


திருமறைக்கு அடுத்த சிறப்பைப்பெற்ற புகாரி ஷரீஃபின் முதல் பாடத்தில் ஸய்யிதினா ஹுமைதி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவித்த ஹதீஸான  நிச்சயமாக செயல்கள் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன|| என்ற ஹதீஸ் முதலில் இடம்பெறுகின்றது. ஸய்யிதினா ஹுமைதி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களோடும், இமாம் ஷாபிஈ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களோடும் தொடர்பு உடையவராக இருப்பதால்தான் அந்த ஹதீஸை முதலில் வைத்திருக்கின்றார்கள்.
எந்த விஷயமாக, செயலாக இருந்தாலும் ஷஎண்ணம்| மிகவும் அவசியம் என்பதைத்தான் மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது. ஒரு செயல் துன்யாவிற்காக இருப்பதும், மறுமைக்காக மாறுவதும் அவரவர்களின் எண்ணத்தைப் பொறுத்துதான் அமையும்.
ஒருமுறை ஸய்யிதினா ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு வழியான சென்று கொண்டிருக்கும் பொழுது ஷஷமுனகல்|| சப்தம் கேட்டது. திரும்பிபார்த்த பொழுது ஒரு மனிதன் மது அருந்தியவனாக ஷஷஅல்லாஹு....|| என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஷஷஅல்லாஹு|| என்ற பரிசுத்தமான திருநாமம் துர்நாற்றமான வாயிலிருந்தா (வெளி)வருவது! என்று நினைத்து, சிறிது தண்ணீரை எடுத்து அவர் வாயை மட்டும் துடைத்து விட்டு சென்று விட்டார்கள். மறுநாள் பள்ளியில் ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒரு ஷஅழுகை| சப்தம் கேட்டது. சப்தத்தை நோக்கி திரும்பிப் பார்த்த ஸய்யிதினா ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பெரும் ஆச்சர்யம்!
நேற்று எந்த மனிதரின் துர்நாற்றமான வாயிலிருந்து ஷஅல்லாஹ்| என்ற சப்தம் வந்ததோ, இன்று அதே மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் வெளிவந்து, ஷஷயா அல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னித்துவிடு!|| என்று அழுது கொண்டிந்தார்.
ஆச்சர்யமடைந்த ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஷஷஓ! ஜாபிரே! எனது திருநாமம் அசுத்தமான வாயிலிருந்து வரக்கூடாது என்ற உங்களது தூய்மையான எண்ணத்திற்காக அந்த மனிதரையே தூய்மையாக்கிவிட்டேன் பார்த்தீர்களா! என்ற சப்தம் (அசரீரி) கேட்ட உடன் பேரானந்தம் அடைந்தார்கள்.
ஆக, ஒவ்வொரு செயலின் செயல்பாடும். அதன் விளைவும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. இதனால்தால் புகாரி இமாமவர்கள் முதல் ஹதீஸே ஷஷ எண்ணத்தின் சிறப்பை|| விளக்கியுள்ளார்கள்.
இன்று உலகமெங்கும் புகாரி ஷரீஃபின் விளக்கங்கள் புகழ்பாடிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? புகாரி இமாம் அவர்களின் பரிசுத்தமான எண்ணமும், பேணுதலும். இறையச்சமும் தான் காரணம்.
புகாரி ஷரீஃபை இமாமவர்கள் தொகுத்த நிலைமைகளை அறிந்தால் இமாமவர்களின் மீது பாசம் கூடுமே தவிர குறையாது. புகாரி ஷரீஃபை புகாரி இமாமவர்கள் எப்படி தொகுத்தார்கள் என்பதைப்பற்றி ஒரு சிறு கண்ணோட்டம்.
புகாரி இமாம் அவர்கள் ஹிஜ்ரி 197- ல் பிறக்கின்றார்கள். சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடைய இமாமவர்கள் 17 வயதில் ஹஜ் என்ற புனித யாத்திரையை நிறைவு செய்கிறார்கள். 18 வது வயதில் புகாரி ஷரீஃபை எழுதத்துவங்குகிறார்கள். அவர்களுக்கு ஆசிரியராக இருந்தது ஸய்யிதினா அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 10 இலட்சம் ஹதீஸ்களை ஒன்று சேர்த்த இமாம் அவர்கள், 6 இலட்சம் ஹதீஸ்களை ராவியோடு (அறிவிப்பாளர்களோடு) மனனம் செய்திருக்கின்றார்கள். அப்படி 6 இலட்சம் ஹதீஸிற்கு எத்தனை ராவிகள் இருந்தார்களோ அத்துனை அறிவிப்பாளர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து வைத்திருந்தார்கள்.
திரு மக்காவில் புகாரி ஷரீஃபை எழுதத்துவங்கிய இமாம் அவர்கள் திருமதினாவில் பெருமானாரிடம் மறைமுகமான அனுமதியும் வாங்குகிறார்கள். தங்களது வாழ்நாளில் சுமார் 14 ஆண்டுகள் புகாரி ஷரீஃபை தொகுப்பதிலேயே கழித்தார்கள்.
புகாரி இமாம் அவர்களுக்கு முன் தொகுத்த ஹதீஸ்களில் தொழுகை, ஈமான்.... என்று தனித்தனி அத்தியாயங்கள் இல்லை. ஒரு இடத்தில் தொழுகை பற்றிய ஹதீஸ் இருந்தால் பிரிதொரு இடத்தில் அதன் சம்பந்தமான மற்றொரு ஹதீஸ் இடம்பெறும். ஆனால் பின்வரும் மக்கள் எளிதாக திரு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் செயல்களையும், எண்ணங்களையும் நிறைவாக நிறைவேற்ற வேண்டுமென்ற ஆவலில் தொழுகை, ஈமான்.... என்று தனித்தனி பிரிவுகளாக பிரித்த பெருமை புகாரி இமாம் அவர்களையேச்சாரும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
புகாரி இமாம் அவர்களிடத்தில் ஏதேனும் ஒரு ஹதீஸை சொன்னவர் யார்? அவர் எப்படிப்பட்டவர் என்ற ஆராய்ச்சி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வரை தொடரும், அப்படி, இடையில் எத்தனை நபர்களிடமிருந்து ஹதீஸ் கிடைக்கின்றதோ, அவர்கள் அனைவருடைய முழு வாழ்வையும் ஆராய்ந்து, பின் தான் அந்த ஹதீஸை எழுதுவார்கள். அப்படி ஒருவேளை அவர் வாழ்வில் ஏதேனும் ஓரே ஒரு ஷபொய்| தான் சொன்னார் என்ற செய்தியை கேள்விப்பட்டாலும் கூட அந்த ஹதீஸை அப்படியே விலக்கி விடுவார்கள்.
ஒரு ஹதீஸிற்கே இவ்வளவு  ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள் என்றால் சுமார் 10 இலட்சம் ஹதீஸ்களை தொகுத்து, அதில் 6 இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருக்கின்றார்கள் என்றால், அவர்கள் செய்த தியாகத்தை நம்மால் நினைத்து பார்க்கத்தான் முடியுமா?
ஒவ்வொரு ஹதீஸையும் எழுதும்போது 2 ரகஅத் தொழுதுவிட்டுதான் எழுதுவார்கள். ஒவ்வொரு பாடங்களை ஆரம்பிக்கும் முன் திருமதீனா சென்று நாயக திருமேனி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ரவ்ழா ஷரீஃபில் அனுமதி பெற்ற பின்பு தான் எழுதுவார்கள்.
ஒரு ஹதீஸிற்கு 2 ரகஅத் என்றால், 10 இலட்சம் ஹதீஸை தொகுத்த இமாமவர்கள் சுமார் 20 இலட்சம் ரகஅத்துகளாவது தொழுதிருப்பார்கள். நாம் வழிதவறி விடக்கூடாது என்பதற்காக தங்களின் வாழ்வையே அர்பணித்த இமாமவர்களின் கால் தூசுக்கு நாம் சமமாவோமா?
ஹதீஸ்களை தொகுப்பதற்காக செய்த இந்த ஒரு வணக்கத்தில் கூட நாம் நெருங்க முடியாது எனும் போது, புகாரி இமாமும் ஷநம்மைப்போன்றவர்கள் தான்| என்று வாய் கூசாமல சொல்லும் மனசாட்சி அற்றவர்கள் இனியேனும் திருந்துவார்களா?
ஒரு ஹதீஸை தொகுப்பதற்கு ஏன் இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை நமமுன் எழலாம்?
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) சொன்னார்கள் ஷஷயார் என் மீது வேண்டுமென்று ஒரு பொய்யை இட்டுகட்டுகிறாரோ அவர் தனக்குரிய இடத்தை நரகத்தில் தயார் செய்து கொள்ளட்டும்|| என்ற ஹதீஸின் விளக்கத்தில் தான் அவர்களின் தியாகம் அடங்கியிருக்கிறது.
மாதங்கள், ஆண்டுகள், நூற்றாண்டுகள் கடந்தாலும் புகாரி இமாம் தொகுத்த ஷபுகாரி ஷரீஃப்| நாளுக்கு நாள் மெருகோடு உலகெங்கிலும் அதன் புகழ் ஒளித்துக்கொண்டிருப்பதின் காரணம், புகாரி இமாம் அவர்களின் தூய்மையான எண்ணமும், பேணுதலும், இறையச்சமுமே காரணம் என்பதை எவர் மறுக்க இயலும்?
                         - அல்ஹாபிழ் முஹம்மது இஸ்மாயில் பிலாலி


Tuesday, April 19, 2011

குர்ஆன் ஷரீபை திருத்தமாக ஓத, கேளுங்கள்! ஓதுங்கள்!

ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க

ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்

i
Quantcast
சமீபத்தில் நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவருக்கு பி.இ.படிக்கும் ஒரு மகன் -+ 2 மற்றும் 10th  படிக்கும் இரண்டு மகள்கள்.இணையம் பற்றி பேசும்போது தேவையில்லாமல் அடல்ஸ்ஒன்லி படங்கள் தோற்றுவதாகவும் அதை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்றும் கேட்டார். அவருக்கான பதிவு இது.தேவையில்லாமல் வரும் படங்களை தடைசெய்வதோடு அல்லாமல் கம்யுட்டரில் அதிக நேரம் Games விளையாடுவதையும் Chat செய்து பொழுதினை கழிப்பதையும் தடுக்கலாம்.சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதுவும் 4 எம்.பி. கொள்ளளவு தான். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையே – நாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.
இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. தாருங்கள்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/aa.jpg?w=400&h=290
இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையேநாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/a.jpg?w=400&h=171
இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/b.jpg?w=196&h=400
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் .கே. தாருங்கள்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/g.jpg?w=400&h=297
அடுத்துள்ளது சாட்இதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் சாட் செய்யும் நேரத்தை சேட் செய்துகொள்ளலாம். அந்த நேரம் மட்டும் சாட் வேலை செய்யும்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/f.jpg?w=400&h=291
இதைப்போலவே விளையாட்டை யும் தேவையான நேரம் கொடுத்து மற்ற நேரங்களை தடை செய்துவிடுங்கள்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/e.jpg?w=400&h=293
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். வெளியில் செல்ல நேரலாம். அவ்வாறான நேரங்களில் குழந்தைகள் கம்யுட்டரில்  அமரும் நேர்த்தை செட் செய்துவிடலாம். அந்த நேரம் கடந்துவிட்டால் கம்யுட்டர் வேலை செய்யாது.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/d.jpg?w=400&h=296
குழந்தைகளும் சரிநாமும் சரி..தொடரந்து மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண் என்ன ஆவது. அதற்கும் இதில் கண்ணை காப்பதற்கான வழி வைத்துள்ளார்கள். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கம்யுட்டர் ஆப் ஆகி பின்னர் எவ்வளவு நேரத்திற்கு பின் ஆன் ஆக வேண்டும் என செட் செய்துவிட்டால் நாம் மறந்துவிட்டாலும் கீழ்கண்ட விண்டோ தோன்றி கம்யுட்டர் ஆப் ஆகிவிடும்.
http://azeezahmed.files.wordpress.com/2010/09/c.jpg?w=400&h=315
இவ்வளவு தடைகளும் தேவையானல் வைத்துக்கொள்ளலாம் தேவையில்லையென்றால் எடுத்துவிடலாம்.
http://azeezahmed.files.wordpress.com/2010/04/end_bar.gif?w=583&h=28&h=28

Tuesday, April 12, 2011

மஹான் : பல்லாக்கு நாயகம் (ரளியல்லாஹு அன்ஹு)







நோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:-


நோயாளியை சந்திப்பதின் சிறப்புகள்:-

நோயாளியை சந்திப்பவருக்கு ஏராளமான நன்மைகள் வழங்கப்படுகின்றன. நோயாளியைச் சந்திக்கும் போது மனத்தூய்மையுடன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகளை பின்பற்றுகிறோம் என்ற எண்ணத்துடனும் செய்யப்படுமேயானால் அதற்கு கிடைக்கும் நன்மைகள் சொல்லவும் தான்வேண்டுமா?
நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷயாரேனும் ஒருவர் ஒரு நோயாளியை காலையில் சந்திப்பாரோ அவருக்காக 70000 மலக்குமார்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் யாரொருவர் ஒரு நோயாளியை மாலையில் சந்திப்பாரோ அவருக்காக 70000 மலக்குமார்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்னும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் அமைக்கப்படுகிறது|| என்று கூறியுள்ளார்கள்.(நூல்: மிஷ்காத்)
வேறொரு அறிவிப்பில்,
‘’எவரேனும் ஒருவர் ஒரு நோயாளியை சந்திக்க செல்வாரானால், ஒரு அழைப்பாளர், வானத்திலிருந்து குரல் கொடுப்பார். ஷநீர் நல்லவர் உமது நடையும் நல்லுத. நீர் சொர்க்கபதியில் ஒருவீட்டை சம்பாதித்துக் கொண்டீர்!|| என்றும் கூறியுள்ளார்கள்.(நூல்: திர்மிதி)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நோயாளியை சந்திப்பதினால் கிடைக்கின்ற நன்மைகளைக் கண்டு கொண்டோம். இதன் சிறப்புகளைக் கூற மேலும் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை இப்பகுதியின் விரிவு அஞ்சி தவிர்த்து விட்டு, இனி நோயாளியை சந்திப்பதின் சுன்னத்தான முறைகளைப் பார்ப்போமா?
முதலில்.......
1. நோயாளியை சந்திக்க செல்பவரின் எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். அதாவது, இறைவனின் மகிழ்ச்சிக்காக நோயாளியைக் காணச் செல்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
2. நோயாளியை சந்திக்கும் போது முதலில் ஸலாம் சொல்ல வேண்டும். அதன் பின் அவரது நோயின் தன்மையை விசாரிக்க வேண்டும்.
3. (நோயாளியைச் சந்திப்பவர்) நோயாளிக்கு உற்சாகம் ஆறுதல் தர வேண்டும் (அதாவது உற்சாகம் தரும் பேச்சுக்களையே பேச வேண்டும். விரக்தி தரும்) நம்பிக்கை இழக்கும் பேச்சுக்களை பேசுவதை விட்டும் தவிர்ந்து (கவனமாக) இருக்க வேண்டும் (நூல்: திர்மிதி)
இவைகள் கூடாது
நோயாளியை சந்திக்கும் போது பின்வரும் விஷயங்களை செய்யக்கூடாது. கவனமாய் பேன வேண்டும்.
4. (நோயாளியை சந்திக்கச் செல்பவர்) நெடு நேரம் அங்கு இருக்க கூடாது.
(நூல்: பைஹகீ)
நோயாளியைக் காணச் செல்லும் போது வெகுநேரம் தங்கி இருக்காமலும் சப்தம் செய்யாமலும் இருப்பது ஷசுன்னத்| ஆகும்.  (நூல்: ரஜீன்)
5. உங்களின் நோயாளிகளை உண்ணுமாறும் அருந்துமாறும் வற்புறுத்தாதீர்கள். அல்லாஹ் அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் தருகின்றான்.|| என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
                  (நூல்: திர்மிதி)
அன்பளிப்பு.......
முடிந்தால் நோயாளிக்கு அன்பளிப்பை எடுத்துச் செல்லலாம். தேவையிருந்தால் பணத்தால் உதவி செய்யலாம். ஏனென்றால் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஷ(மக்களில் சிறந்தவர்) மனிதவர்க்கத்திற்கு உதவுபவரே|| என்று கூறியுள்ளார்கள்.
ஓத வேண்டிய ஷதுஆ| க்கள்.
நோயாளி சந்திப்பவர் கீழ்வரும் ‘துஆ|  வை ஓத வேண்டும்.

லா பஃஸ துஹுருன் இன்ஷா அல்லாஹ்
பொருள் :-
கவலை இல்லை. அல்லாஹ் நாடினால் இந்த வியாதி உங்களைப் பாவங்களை விட்டுத் தூய்மையானதாக்கி விடும்.        
                 (நூல்: திர்மிதி)
அத்தோடு கீழ்கண்ட ‘துஆ|  வை ஏழு தடவை ஓத வேண்டும்.

அஸ்அலுகல்லாஹ் ரப்பல் அர்ஷில் அழீமி அய்யஷ் குபீ(க்)க
பொருள்:-
இறைவனே! மகத்துமுள்ள அர்ஷின் ரப்பே! இவரின் வியாதி சுகமடைவதை உன்னிடத்தில் நான் வேண்டுகிறேன்.
பலன் :-
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கூறியுள்ளார்கள் ஒருவர் மேற்கண்ட ‘துஆ|  வை ஏழுமுறை நோயுற்றவரை சந்திக்கும் பொழுது ஓதினால், நோயுற்றவர் மரணத்தை தவிர (அனைத்து) நோயிலிருந்து குணமடைவார் .
8. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நோயாளியிடம் சென்றாலும் அல்லது (எந்த) நோயாளியும் அவர்களிடம் வந்தாலும்
இத்ஹபில் பஃஸ ரப்பன்னாஸி வஷஃபி அன்(த்) தஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபாஅன் லா யுகாதிர் ஸக்மன்.
பொருள்:-
மக்களின் இறைவா! கடும் வேதனை தரும் நோயை நீக்குவாயாக! மேலும் குணமாக்குவாயாக! நீயே குணம் அளிப்பவன். நீ குணமளித்தாலொளிய குணமில்லை! (உன்னுடைய) குணளிக்கும் தன்மை எந்த வியாதியையும் கைவிட்டதில்லை!
                 (நூல்: திர்மிதி)
நோயாளியிடம் ‘துஆ| நோயாளியின் ‘துஆ|  ஏற்றுக் கொள்ளப்படுவதால்
9. நோயாளியிடம் ‘துஆ| ச் செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.               
                (நூல்: பைஹகீ)
10. ‘’நோயாளியிடம் நீர் செல்வீரானால் அவரிடம் ‘துஆ|ச் செய்ய வேண்டுவீர்! நோயாளிகளுடைய ‘துஆ| வானவர்களுடைய ‘துஆ| வைப் போன்றதாகும்|| என்று காரூண்ய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
11. கஷ்டம் - நோயிலிருந்து பாதுகாப்பு:-
நோய், கஷ்டம் ஆகியவற்றில் கஷ்டப்படும் ஒருவரை சந்திப்பவர் கீழ்கண்ட துஆவை ஓதினால் அவர் அதில் இருந்தும் பாதுகாப்பு பெறுவார்.
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆஃபானீ மிம்மப்தலா(க்)க பிஹீ வஃபழ்ளளனீ கஸீர(ன்)ம் மிம்மன் ஹலக தஃப்ளீலா
பொருள்:-
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! நீ இருக்கும் நிலையை விட்டும் அவன் என்னைக் காத்துக் கொண்டான். மேலும் தன்னுடைய அநேக படைப்புகளுக்கும் மத்தியில் அவன் என்னை சிறப்பாக்கி வைத்தான்.
இதுவரை நோயாளியை சந்திப்பதின் சுன்னத்துகளைப் பார்த்தோம். இனி நோய் சம்பந்தமான நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள சில ஹதீஸ்களைப் பார்ப்போம்.
நோயைத் திட்டக்கூடாது.
‘’உங்களுக்கு நோய் வந்தால் திட்டாதீர்கள். ஏனென்றால் நெருப்பு இரும்பின் துருக்களை எப்படி சுத்தம் செய்கின்றதோ அப்படியே நோய் உங்களின் பாவங்களை சுத்தப்படுத்துகிறது.
                (நூல்: முஸ்லிம்)
நன்மை குறையாது
 ‘’ஒருவன் நோயாளியாகி விட்டால் நற்செயலை பதிவு செய்யும் வானவருக்கு இவன் முன்பு சுகமாக இருக்கும்போது செய்த நற்செயல்களின் நன்மைகள் இப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும் என்று இறைவன் கட்டளை பிறக்கும்.(நூல் :மிஷ்காத்)
வெண்குஷ்டம்
வெயிலில் கொதித்த (வெயில் பட்டு சூடேரி கொதித்த) சுடுநீரில் குளிக்காதீர்கள். அது வெண்குஷ்டத்தை உண்டாக்கிவிடும்.
ஒரு முஃமினை வியாதி வாட்டி வதைக்கிறது என்றால் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் வருங்காலத்தில் அவருக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிடுகிறது.
            நூல்: முஸ்லிம்
-ஹம்ஸா முபாரக் பிலாலி
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}