Tuesday, October 26, 2010

கோபம் வரும்போது ...

.கோபம் வரும்போது ...

இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3:134)
”உங்களில் வீரன் யார் தெரியுமா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். குத்துச் சண்டை யுத்தத்தில் எதிரியை வீழ்த்துபவன் வீரன் அல்ல; தனக்குக் கோபம் வரும்போது அதனை அடக்கி ஆள்பவனே உண்மையான வீரன் ஆவான்” என்று அதற்கு பதிலும் அளித்தார்கள்.


பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.
ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை  காரணமாக உண்டாகிறது.
·        நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள்  மதிக்காத போது...
·        நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
·        நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
·        எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...
இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம்.  அல்லது நம்மை நாமே  தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு  கோபமாகும்
கோபப்படும் மனிதர்கள் ஒவ்வொரு வரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம். ஒரு வகையில் பார்த்தால் கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம்தான். கோபத்தின் உச்சகட்ட நிலையை அடைந்த ஒருவன், அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான முட்டாள்த் தனமான செயல்களில் ஈடுபடுவான். (உ.ம்) தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் கதவையே திட்ட ஆரம்பித்து விடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இது வெல்லாம் கோபம் என்ற பைத்தியக் காரத்தனத்தின் வெளிப்பாடு.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை,  கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...
·        வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
·        திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.
·        தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.
·        மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.
·        முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது.
கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
·        கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது  மாரடைப்பில் விட்டு விடும்.
·        இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.
·        மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு.
·        கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.
கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று சிந்தித்துப் பார்த்தால்…. நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும். சே… அவசரப்பட்டு விட்டோமே… அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டி வராத மனிதர்களே யாரும் இருக்க முடியாது. கோபத்தோடு ஒருவன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால் … அவன் நஷ்டத்தோடுதான் உட்கார வேண்டியது ஏற்படும். கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை முதலில் புரிந்துகொள் வேண்டும்.

ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள்.  அவ்வாறாயின் உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காணபீர்கள். (41:34)

ஒருவனை மன்னிப்பதின் மூலம் அவனுடைய அன்பு, நன்றி உணர்வு போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெற முடியும். இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மன அமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல; எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் ஆளாகிறோம். கோபத்தில் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைது அறிவுடமையா? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் நெறிநூலாகிய அல்குர்ஆன் கூறுகிறது: நிலைகுலையாது நின்று மன்னிக்கும் மாண்புடையோர், நிச்சயமாக இது உறுதி படைத்த நெஞ்சினரின் பணியாகவன்றோ உள்ளது? (42:43)
எனவே, அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (5:13)

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால், அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே-செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும். (அபூதாவூத்)

அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு அமைதி காப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டால் தானே, மனது ஆறும்! என்று நீங்கள் கேட்கலாம்… உங்கள் மனதை ஆறுதலாக்க கூடிய இந்த நபி மொழியைக் கொஞ்சம் சிந்தியுங்கள்!

ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய் தாக்கி விடுவதில்லை. அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப் படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது. ஆனால் வானத்தின் கதவுகள் மூடப் பட்டிருக்கும். உடனே அது இந்த பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே பூமியின் கதவுகளும் மூடப்பட்டு விடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது. இதற்குப் பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத் தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்ச நேரம் நின்று யோசிக்கும். உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும். இல்லையயன்றால் …. சுவற்றில் எறியப்பட்ட பந்துபோல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன தெளிவான அந்த செய்தியானது அபூதாவூத் என்ற நபி மொழி நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? இத்தகைய மனோநிலை, நம் வீட்டில், சமூகத்தில், மக்கள் தொடர்பில் வந்து விட்டால் பிரச்சனைகள் தோன்றுமா? குழப்பங்கள் உருவாகுமா? சிந்தியுங்கள்?

நமக்குத் துன்பம் தருபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்குரிய அடையாளம் அல்ல! ஒரு நாய் கடித்து விட்டது என்பதற்காக அதைத் தேடிக் கண்டு பிடித்து கடிக்கவா செய்கிறோம்? அப்படிச் செய்பவன் அறிவாளியாக இருக்க முடியுமா? என்பதைச் சற்று சிந்தியுங்கள். அப்படியானால் எனக்குத் துன்பம் விளைவிப்பவனை, என்னை அவமானத்திற்கு உள்ளாக்குபவனை நான் என்ன தான் செய்வது? மன்னித்து விடுங்கள்!

பலவிதங்களிலும் நமக்கு உதவி செய்யக் கூடியது பல்; ஆனால் சில சமயங்களில் தவறி நமது நாக்கைக் கடித்து விடுவது உண்டு. அப்போது அதன் மீது ஆத்திரப்பட்டு தண்டனை கொடுத்துவிடவா செய்கிறோம்? ஏதோ தவறு நடந்து விட்டது என்று பொறுத்துக் கொள்கிறோம். அது போலத்தான் நமக்குத் துன்பம் விளைவிப்போரை பொறுத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சனை என்று வரும்போது நம்மிடம் தோன்றக் கூடிய முதல் விஷயம் டென்ஷன்!. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. இந்த டென்ஷனுடனும், கோபத்துடனும் ஒரு பிரச்சனையை அணுகும்போது அந்த காரியம் சிந்திய காரியமாகிவிடும். மேலும் பிரச்சனைகளைத் தவறாக அணுகிடும்போது மேலும் சிக்கலாக்கிக் கொள்வது தான் மனிதர்களின் வழக்கம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு சரியான தீர்வு இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடித்துச் செயல்படுத்துவது என்பதில் தான் திறமை அடங்கியிருக்கிறது. எந்த பிரச்சனை என்றாலும் முதலில் கோபம் அல்லது உணர்ச்சி வசப்படக் கூடாது. யார் அல்லது எதன் மேல் தப்பு/ தவறு என்று எடுத்த உடன் முடிவுக்கு வரக்கூடாது. இதுதான் இதற்குத் தீர்வு என்று உடனடியாகத் தீர்மானிக்கக் கூடாது. எல்லா பக்கங்களில் இருந்தும் யோசிக்க வேண்டும்
.
பிரச்சனைகளை கிரியேட்டிவாக அணுகுவது சிறப்புக்குரியது. கிரியேட்டிவாக பிரச்சனையை அணுகுவது என்பது, பிரச்சனையின் எல்லா கோணங்களையும் தெளிவாக ஆராய்ந்து அதற்குரிய சரியான தீர்வைக் கண்டடைவது தான் அது; கிரியேட்டிவ் திங்கிங். இதற்கு இறைநம்பிக்கை, இறையச்சம், நியாயம், நிதானம், லேட்டரல் திங்கிங் எனப்படும் பலமுகப் பார்வை இதெல்லாமே தேவைப்படும். நாம் சில வேளை தவறுகள் புரிந்து விட்டு இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுகிறோம். அதை இறைவன் மன்னித்து விட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். என் இறைவன் என்னுடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என விரும்பக்கூடிய நாம், நமது சக மனிதர்களின் குற்றங்களை மன்னிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது முரண் இல்லையா….. என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்.
இறுதியாக நம் மனப் பதிவுக்கான செய்திகளோடு இறுதி முடிவுக்கு வருவோம். இன்னல் தந்தவர்களுக்கும் நீங்கள் இன்பம் தர முயலுங்கள். இந்தக் கருத்தை இறைவனின் நெறிநூலாகிய அல்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நன்மையும் தீமையும் சமமாகி விடாது; நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்போது, யார் உங்களுக்கு கடும் விரோதியாக இருந்தாரோ அவர் உங்களின் உற்ற நண்பராக மாறி விடுவார். (41:34)

எனவே, கோபமும் முகச்சுளிப்பும் நம்மைத் தனித் தீவுகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? இல்லை பொறுமையும் சகிப்புத்தன்மையும் நம்மை தோப்புகளாக்கும். இதை நீங்கள் விரும்புகிறீர்களா? பதில் உங்கள் விருப்பம்.
நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும். 

Monday, October 25, 2010

தீங்கை விளைவிக்கும் புகைத்தல்


தீங்கை விளைவிக்கும் புகைத்தல்;
நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

இன்று புகைத்தல் பழக்கம் சர்வசாதாரணமாகி சமூகத்தின் வயது வந்தவர்களையும் கடந்து பாடசாலை செல்லும் இளைஞர்கள் மத்தியிலும் அதிகமதிகம் இழையோடிக் காணப்படுவது கவலை தரும் அம்சமாகும். அதேநேரம், அதுவே ஒரு கலாசாரமாகவும் பருவ வயதை அடைகின்ற போது நாகரீகமாகவும் சமூகத்தின் முதுகெலும்புகளான இளைஞர் சமூகத்தின் நடத்தைகளுடன் இரண்டறக் கலந்திருப்பது சமூகத்தின் உயிர்த்துடிப்பை நசுக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செயலாகும்.

புகைத்தல் பழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இடம்பெற்ற ஒன்றல்ல. பிற்பட்ட காலத்தில் அது தோன்றிய போது அதன் யதார்த்தத்தையும் தீங்குகளையும் அறிஞர்களால் உடன் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்றாலும் பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் புகைத்தல் உண்மையில் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாகவுள்ளது என்பதை உணர்ந்து ‘புகைத்தல் ஹராம்’ என்றே தீர்ப்பளித்துள்ளனர்.
தீங்கிழைக்கக்கூடிய அனைத்தும் ஹராம்” என்பது இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்றாகும். இவ்வகையில் புகையிலையும் கூட மனிதனது உடல் மற்றும் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிப்பதால் ஹராமானவற்றின் பட்டியலிலேயே உள்ளடக்கப்படுகின்றது. அல்குர்ஆன், சுன்னா, இஜ்மாஃ கியாஸ் முதலிய சட்ட மூலாதாரங்களினூடாக இது நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீங்கள் உங்களை அழித்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நன்மையே புரியுங்கள். நன்மை புரிபவர்களே அல்லாஹ் நேசிக்கின்றான். (பகரா-195
)
இவ்வசனம் மனிதனுக்கு தீங்கின் பக்கம் இட்டுச் செல்லும் அனைத்தையும் தடை செய்வதாக அமைகின்றது. இவ்வகையில் மனிதனை தீங்கிற்கு உட்படுத்தும் புகைத்தல் உட்பட கண்ணாடி, கல், விஷம் போன்று எவற்றையெல்லாம் உட்கொள்வதால் தீங்கேற்படுமோ அவற்றையெல்லாம் உண்பது ஹராமாகும். அருவருக்கத்தக்கவற்றைத் தவிர எவற்றையெல்லாம் உட்கொள்வதன் மூலம் தீங்கேற்படாதோ அவற்றை உண்பது ஹலாலாகும் என இமாம் நவவீ ‘அர்ரவ்ழா நதிய்யா’ எனும் நூலில் விளக்குகின்றார்.

“நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் கருணையுடையவனாக இருக்கின்றான்.” (அந்நிஸா 29)

அதேநேரம் புகைத்தல் (தடுக்கப்பட்ட) ‘ஃபாஹிஷா’ என அல்குர்ஆன் குறிப்பிடும் மிக மோசமான அருவருக்கத்தக்க பாவங்களுள் ஒன்றாகும். மேலும் சிறந்தவற்றையே புசிக்குமாறும், அவையல்லாதவற்றைத் தவிர்ந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி பல வசனங்கள் திருமறையில் இடம் பெற்றுள்ளன.

“மக்களே! பூமியில் நீங்கள் ஹலாலான, சிறந்தவற்றையே உட்கொள்ளுங்கள்!” (பகரா)

“தூதர்களே! நல்லதையே புசித்து நற்காரியங்களைப் புரியுங்கள்!” (முஃமினூன்)

விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அளித்ததில் சிறந்தவற்றையே உண்ணுங்கள்!” (பகரா)

மேலும், மோசமானவை, அசிங்கமானவை பற்றியும் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். “மோசமானவை அதிகமாக இருந்த போதிலும், நல்லதும், மோசமானதும் ஒரு போதும் நிகராகமாட்டாது. அறிவுள்ளவர்களே! ஜெயம் பெற அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்! (மாயிதா - 100)

எனவே சிறந்தவை எப்போதும் சிறந்தவைதாம். மோசமானவை என்றும் மோசமானவைதாம். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றாயிருக்க முடியாது. சுத்தமான மனித வாழ்வுக்கு பயன்மிக்க சிறந்த விடயங்கள் அனைத்தும் ஹலால் எனவும் அழுக்கான தீங்கு பயக்கின்ற மோசமான அனைத்தும் ஹராம் எனவும் ஒரு சட்ட விதி குறிப்பிடுகின்றது.

மேற்குறித்த இவ்விதியானது உணவாகவும், பானமாகவும் கொள்ளப்படுகின்ற அனைத்துக்கும் பொருந்துவதாக அமையும். அதேநேரம், மேற்சொன்ன குர்ஆன் வசனத்தில் “மோசமானது” எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘கபீஸ்’ எனும் சொல் வெருக்கத்தக்க சுவையும் வாசனையும் கொண்ட அருவருக்கத்தக்க ஒன்றைக் குறிக்க அரபு மொழியில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பின்புலத்தில் புகைத்தல் என்பது தீங்கிழைக்கின்ற அதேவேளை பிரயோசனமற்றதாகவும் உள்ளது. பிரயோசனமற்ற ஒன்றிலே செல்வத்தை வீண்விரயம் செய்வது ‘ஹராம்’ என்பது தெளிவானதே.

  ஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
  உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)

மேலே கண்ட றைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா? மற்றுமோர் இடத்தில்....
“நீங்கள் வீண்விரயம் செய்ய வேண்டாம்.” (இஸ்ராஃ - 26)

வீண்விரயம் என்பது பின்வருனவற்றை உணர்த்துகின்றது.
01. செல்வத்தை ஹராமான ஒன்றில் செலவு செய்தல்.
02. செல்வத்தை பிரயோசனமற்ற, அவசியமற்ற விடயங்களில் செலவு செய்தல்.
03. செல்வத்தை அளவுக்கதிகமாக விரயம் செய்தல். (ஆகுமான விடயங்களிலும் சரியே..)
மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற சீர்கேட்டை ஏற்படுத்துகின்ற அநியாயமான விடயங்களில் செலவு செய்வதை (வீண்விரயம் செய்தலை) ‘தப்தீர்’ எனும் பதம் குறிப்பதாக இமாம் கதாதா விவரிக்கின்றார். எனவே, இந்த விளக்கத்தினூடாகப் பார்ப்பினும், புகைத்தலுக்காகச் செலவு செய்வது வீண்விரயம் என்பது வெள்ளிடைமலை போன்றதாகும்.
“தனக்குத் தீங்கிழைப்பதோ, பிறருக்குத் தீங்கிழைப்பதோ கூடாது.” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்க, இமாம் அஹ்மத், இப்னு மாஜா போன்றோர் பதிவு செய்துள்ளனர்.
மேற்குறித்த நபிமொழி மூலம் தனக்கோ, பிறருக்கோ தீங்கிழைப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது என்பது புலனாகின்றது. சமூக சூழலில் பலர் இத்தகைய பாவச் செயலை செய்வதையும் அவதானிக்க முடிகின்றது. மட்டுமல்லாது வீட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைத்தலை மேற்கொள்வதால் சூழலியல் ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
அதேவேளை புகையிலை உடலியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பை உண்டு பண்ணும் எனும் உண்மையை வைத்தியர்கள், துறைசார் அறிஞர்கள் வாயிலாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் ஆதாரமின்றி பேசுவதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீண்விரயம் தடுத்துள்ளார்கள்” என அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்க்ள. மற்றுமோர் அறிவிப்பில்... “தன் வாழ்நாளை எவ்வாறு கழித்தான். தன் உடம்பை எதில் அழித்தான். தன் செல்வத்தை எங்கிருந்து பெற்றான். ஆகிய நான்கு விடயங்கள் வினவப்படும் வரை ஓர் அடியானின் பாதங்கள் மறுமை நாளில் நகரமாட்டாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆதாரம்: திர்மிதி)
இந் நபிமொழியின் அடிப்படையில் நான்கு விடயங்களுக்கு அவன் மறுமையில் பதில் சொல்ல வேண்டும்.
01 வாழ்நாள்:
புகைப்பிடிப்பவன் வாழ்நாட்களை வீணாக்கி அழித்துக் கொள்வதனால் இறைவனுக்கு மாறு செய்கிறான்.
02. அறிவு:
புகைப்பிடிப்பவன் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களையும் அது ஷரீஆவில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதையும் அறிந்த பின்னரும் அப்பழக்கத்திலே பிடிவாதமாயிருப்பானாயின் அவனுக்களிக்கப்பட்ட அறிவு அவனுக்கெதிராகவே மறுமையில் சாட்சி சொல்லும்.
03. செல்வம்:
புகைத்தலுக்காக பணம் ஒதுக்குவது, செல்வத்தைப் பிரயோசனமற்ற வகையில் வீண்விரயம் செய்வதாகும். செல்வமானது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அமானிதம். அதனை அவன் திருப்தியுறும் வகையில், ஆகுமான விடயங்களில் செலவளித்தல் அவனது பொறுப்பாகும்.
04. உடல்:
    சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் இருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்
 புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது "புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே" என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட தையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

குழந்தை அறிவு திறனை 
மழுங்கடிக்கும் புகைத்தல்
புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள், அதை பிடிப்பவரை மட்டும் பாதிக்காமல், சுவாசிப்பவர்களையும் பாதிக்கும் என்று தெரியும். அதிலும் புகையை சுவாசிப்பவர்கள் குழந்தைகளாக இருந்தால் உடல் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்பதும் அறிந்ததே. ஆனால் புகையிலைப் பொருட்கள் மூலம் உண்டாகும் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு அறிவுத் திறன் மங்கும் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 
அமரிக்காவில் செகண்ட் hண்ட் ஸ்மோக்கிங் பழக்கத்தால் சிறுவர்களின் அறிவுத் திறன் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது? என்று கண்டுபிடிக்க 4400 சிறுவர்கள் பங்கேற்ற ஒரு ஆய்வு நடந்தது. இந்த சிறுவர்கள் அனைவரும் 6 முதல் 16 வயது வரை நிரம்பியவர்கள். முதலில் புகையிலையில் காணப்படும் நிகோட்டின் எனும் வேதிப்பொருளால் உண்டாகும் மாற்றத்தின் அளவு கணக்கிடப்பட்டது. பின்னர் குழந்தைகளின் அறிவு திறன் சோதிக்கப்பட்டது.

இதற்காக வாசிக்கும் திறன், கணித அறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது மேற்படி வேதிப்பொருள் அதிகமாக காணப்படும் குழந்தைகளின் அறிவுத் திறன் குறைந்து இருந்தது தெரிய வந்தது. 

குறிப்பிட்ட வேதிப்பொருள் அதிகமாக காணப்படுகிறதென்றhல் அக்குழந்தை செகண்ட் hண்ட் ஸ்மோக்கிங்கினால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்று அர்த்தம். இதற்கு தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவுகளே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குழந்தைகள் பெரும்பாலும் வீடுகளில் தான் அதிக நேரத்தை கழிக்கிறார்கள். இதுமாதிரி நேரத்தில் அவர்களுக்கு செகண்ட் hண்ட் ஸ்மோக்கிங் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் நெருங்கிய உறவுக்காரர்களாக தான் இருக்க முடியும். அடுத்து குழந்தைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பவர்களும் இதற்கு காரணம். 

இந்நிலையில் தாங்கள் விடும் புகையால் குழந்தைகள் எந்தளவுக்கு பாதிக்கப் படுகிறhர்கள் என்ற அறிவு, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே குழந்தைகளை இப்பிரச்சினையில் இருந்து காப்பாற்ற முடியும்.

. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.

ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர்  கிம்பர்லி யோல்டன். நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது


மனித உடல், அதனுள் பொதிந்துள்ள பலம், சக்தி என்பன அவனது ஒவ்வொரு உறுப்பையும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட அமானிதங்களாகும். இதற்கு மாற்றமாக அவன் தனதுடலை நோய்களின் பாவங்களின் உறைவிடமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. புகைத்தல் எனம் துறையினூடாக அவனது உடலினுள் ஷைத்தான் நுழைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
“கேள்வி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்” என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

சுவாசப்பையில் புற்றுநோய்
சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.


ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.

புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள்.  புகை சார்ந்த நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் 6 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் மாள்கிறார்கள். இளம் வயதிலிருந்து புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவரின் ஆயுட்காலம் 8 – 10 வருடங்களால் குறைந்துவிடுகிறது. புள்ளி விபரங்களின்படி, அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆண்களில் 50 வீதமும் பெண்களில் 8 வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஆண்களில் 41 வீதமும் பெண்களில் 21 வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

கைத்தொழில் நாடுகளில் வருடாந்தம் 5 இலட்சம் பெண்கள் புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். 20 ஆம் நூற்றாண்டில் புகைத்தலினால் உலகில் 100 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளனர். ஆகவே, புகைத்தலைக் கட்டுப்படுத்தாவிட்டால் 21ஆம் நூற்றாண்டில் மரணமாவோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக அதாவது 100 கோடியாக அதிகரிக்குமென சுயாதீனதகவல்கள்தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. முற்றும் சிலருடைய பார்வை குறைந்தவிடுகிறது


ஆகவே புகைப்பவர்கள் புகைத்தலை நிறுத்தி புகைத்தலால் வரும் கேடுகளைத் தவிர்த்து சுகதேகிகளாக வாழ வேண்டும். உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?  புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்..................

புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. 

மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். 

இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். 

ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.

இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர். 

ஆனாலும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன: 

புற்றுநோய் வருவதற்கான் காரணங்கள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல் இருமல் வாய்மணம் போன்றவை இல்லாமல் போகின்றன. 

பற்கள் பழுப்பு நிறங்கள் நீங்கி வெண்மையாகின்றன. 

புகைப்பதை நிறுத்தினால் ஒரு காலகட்டத்தில் உடலும் மனநிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புவகைக்காதவர்களின் உடல் மனநிலைக்கு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

புகைப்பதை நிறுத்துவதற்கு புகைப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்பதை நிறுத்துவதற்கான விருப்பமும் உறுதியும் வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் எந்த சிரமமும் இன்றி கிப்னோற்றிக் (Hypnotic) முறைமூலமும் அக்கு பஞ்சர் (Axupuncture) முறை மூலமும் புகைத்தலை நிறுத்த முடியும். ஆயினும் சிறது காலத்தின் பின் இச் சிகிச்சை பெற்றவர் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களளால் புகைத்தலை மீண்டும் நாடக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்துப் புகைப்பதை நிறுத்துவதே 100 வீதமான வெற்றியைத் தரும். 

புடிப்படியாக ஒருவர் புகைப்பதை நிறுத்துவதாகக் கூறி பின் மீண்டும் பழைய நிலைக்கு வரக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே இனிப் புகைப்பதில்லை என்ற முடிவை உறுதியாக எடுத்து உடன் நிறுத்துவதே சிறந்த வழி.


யேர்மனியில் பிறைபேக் (Freiberg) பல்கலைக் கழகப் பேராசிரியர் டொக்டர் யோர்கன் ட்ரொஸ்கே (Dr. Jurgen Troschke) தனது ஆராய்ச்சியில் 80 தொடக்கம் 90 விதமானோர் புகைத்தலை உடனடியாகக் கைவிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என அறிவித்திருக்கிறார். எனவே இந்த வழியை நீங்களும் பின்பற்றி வெற்றியடையுங்களேன்.


-குளச்சல் மீரான்


அன்புக்குரியவர்களே!
1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களைச் சிறுக சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இளம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவி கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?


10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?


16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?


18) புகைப்பிடிப்பது நாகரிகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரிகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?


20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களா?


உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெறுங்கள்.




body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}