Wednesday, September 21, 2011

கொழுப்பைக் குறைக்கும் கேரட்: ஆண்மை சக்தியையும் பெருக்கும் அதிசயம்!








இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.



கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் "ஏ" விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறியதாவது: இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

Tuesday, September 20, 2011

மனிதனில் ஜின் நுழைதல்


கேள்வி : மனிதனில் ஜின் நுழையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறதா?
ஃபத்வா: மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறது.
வட்டியை உண்போர் (மறுமையில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்’ (அல்குர்ஆன் அல்பகரா 2:275)
இவ்வசனத்திற்கு விரிவரை எழுதும் போது பிரபல தஃப்ஸீர் ஆசிரியர் இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் வட்டி சாப்பிடுவோர் (இவ்வுலகில்) ஜின் பிடித்தவன் எழுவது போன்றே மறுமையில் கப்ரிலிருந்து எழுவார்கள்என்று கூறுகிறார்கள்.
ஆதமுடைய மகனின் நாடி நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஜின் மனிதனில் நுழைய முடியுமென்பதே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினினரின் நிலைப்பாடாகும் என்று இமாம் அல் அஷ்அரீ தனது மகாலாது அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக 2:275 வசனத்தை முன் வைக்கிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களது மகன் அப்துல்லாஹ் இமாம் அவர்களிடம் தந்தையே! சிலர் மனிதனில் ஜின் நுழைய முடியாது என்று கூறுகின்றனரே? என்று வினவினார். அதற்கு இமாம் அவர்கள் மகனே! அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறினார்கள்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. (அஹ்மது, ஹாகிம், பைஹகீ)
ஆக, மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஒரு ஆதாரமும் சுன்னாவிலிருந்து இரண்டு ஆதாரங்களும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுவே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரதும் ஸலஃபிய அறிஞர்களதும் நம்பிக்கையாகும். அத்துடன் பல நிகழ்வுகளும் இதற்குச் சான்றாக இருக்கிறது.
அதேவேளை பைத்தியம் ஏற்படுவதற்கு மூளைக்கோளாறு நரம்புத் தளர்ச்சி போன்றவையும் காரணமாக அமையும் என்பதை நாம் மறுக்கவில்லை

Monday, September 19, 2011

மோடியின் காமெடி கலாட்டா

மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதமாம் !

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிய மத நல்லிணக்க, அமைதியை வலியுறுத்தும் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.
உண்ணாவிரதம் நடந்து வரும் குஜராத் பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் பெரும் கூட்டம் கூட்டி நெரிசல் ஏற்பட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.
மத நல்லிணக்கம், அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நேற்று 3 நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வரை திரண்டு வந்து மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அத்வானி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதற்குப் போட்டியாக முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர் சிங் வகேலா தலைமையில் காங்கிரஸாரும் போட்டி உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர்.
இன்றும் மோடியின் உண்ணாவிரதம் நீடித்தது. நேற்றை விட இன்று பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் பல்கலைக்கழக கூட்ட அரங்கம் நிரம்பி வழிந்தது.
இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்த நேரிட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
மோடி உண்ணாவிரதம் இருந்து வரும் அரங்கில் பாஜக கொடிகளோ, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரின் படங்கள் அடங்கிய பேனர்களோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி-வணக்கம் 
 
 
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}