Tuesday, November 5, 2013

தந்தையின் சிறப்பு



தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை. 

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம்,தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து,அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

“ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080)மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்?அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள்,பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள்,தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால்,அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தை அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும்,குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும்,உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று,தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். “இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை” என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை,தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

                                                      

நூ. அப்துல் ஹாதி பாகவி 

Thursday, October 24, 2013

பொய் சொல்வது ஈமானை தின்றுவிடும்


بسم الله الرحمن الرحيم
ويل يومئذ للمكذبين
يايها الذين آمنوا اتقوالله وكونوا من الصدقين
قال النبي صلى الله عليه وسلم آية المنافق اربع .1 اذا حدّثَ كَذَ بَ 2.اذا ئتمن خان 3. واذا وعد اخلف (بخارى، مسلم)
قال النبي صلى الله عليه وسلم : قل الحق ولوكان مرا

நபி (ஸல்); அவர்கள் சொன்னார்கள்: நெருப்பு விறகைத் தின்று விடுவது போல் பொய்யானது ஈமானை தின்று விடுகிறது.

فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ  22:30
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்: விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உண்மை பேசுபவது நன்மையின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நிச்சயமாக ஒருவன் உண்மையே பேசிக்கொண்டிருந்தால் இறைவனிடத்தில் சித்திக்'உண்மையாளர்' என்று எழுதப்படும்.
பொய் பாவத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது, பாவம் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது. நிச்சயமாக ஒருவன் பொய்யே பேசிக்கொண்டிருந்தால் இறுதியாக அவன் அல்லாஹ்விடம் பொய்யன் என்று எழுதப்பட்டுவிடுவான். - புகாரி, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு மனிதன் ஒரு பொய்யை சொன்னால் அந்த பொய்யின் வாடை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடுகிறது. - நூல்: திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : 3 மனிதர்களிடம் அல்லாஹ் தஆலா கியாமத் நாளென்று பேசவும் மாட்டான். அவர்கள் ரஹ்மதுடைய பார்வையால் பார்க்கவும் மாட்டான். பாவங்களிலிருந்து அவர்களை பரிசுத்தப்ப படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதணையுண்டு. என்ற ஆயத்தை 3 முறை ஓதினார்கள். ஸஹாபாக்கள் யாரஸுலல்லாஹ் நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள் யார்? என அபுதர் ரளி கேட்டார்கள்.
1.கைலியை கெரண்டைக்கு கீழ் தொங்க விடுபவர். 2. உபகாரம் செய்து விட்டு சொல்லிக் காட்டுபவர். 3. பொய் சத்தியம் செய்பவர். (முஸ்லிம்)

وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُواْ حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّواْ أَن لاَّ مَلْجَأَ مِنَ اللّهِ إِلاَّ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوبُواْ إِنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ 9:118
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உண்;மை முஸ்லிம் அந்நிய பெண்ணிடத்தில் ஈடுபடுவானா?
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : சில வேலைகளில் நடப்பதுண்டு.
உண்மை முஸ்லிம் பொய்யுரைப்பானா? 
(ஸல்)சொன்னார்கள்: உண்மை முஸ்லிம் பொய் சொல்ல மாட்டான். பொய் சொல்பவன் உண்மை முஸ்லிம் அல்ல.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றை தன் இரு கண்களுக்கும் காட்டுவது அனைத்தையும் விடப் பெரிய பொய் ஆகும். (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு முஸ்லிம் கோழையாக இருக்கலாம்? இருக்கலாம்.
கஞ்சனாக இருக்கலாமா? இருக்கலாம்
பொய்யனாக முடியாது. கூடாது.

إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ (2)
ஒரு போருக்கு சென்றுவிட்டு வந்த போது, அப்துல்லா இப்னு உபை முஹாஜிர்களை மதினாவை விட்டு வெளியேற்றி விடவேண்டும் என்று அவனது நண்பர்களிடத்தில் பேசிக்கொண்ட விஷயம் ஜைது ரளி காதுக்கு வந்தது, அதை ஸல் அவர்களிடம் சென்று சொன்னார்கள். ஸல் அப்துல்லாஹ் இப்னு உபையை விசாரித்தார்கள். அவன் ஸைது பொய் சொல்கிறார் என்னை மாட்டவைக்க பார்க்கிறார். ஸல் : ஜைது ரளியிடம் கேட்ட போது அவர்கள் ரொம்ப கவலையடைந்து வீட்டிற்கு சென்று அழுதார்கள். இதை வெளிக்கொண்டு வா என்று அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒருவன் குற்றவாளி அநியாயக்காரன் என்று தெரிந்தும் அவனுக்காக வாதாடுபவன், உதவி செய்வன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்.


பெரியவர் இந்த உலகத்துல கெட்ட பழக்கமில்லாத ஒருத்தர் கூட இல்லையே! 
ஒரு இளைஞர் ஏன் அப்படி நினைக்கிறீங்க நான் இல்ல!
பெரியர்: சிக்ரெட் பிடிப்பீங்களா?
இளைஞர்: இல்லை.
பெரியவர்: மது?
இளைஞர்: இல்லை.
பெரியவர்:பெண் சகவாசம்?
இளைஞர்:இல்லை.
பெரியவர்: தம்பி நீதான் மகாத்மா!
இளைஞர்: பெரியவரே! ஒரு சின்ன வீக்னெஸ் எனக்கு. நான் பொய் மட்டும் தான் பேசுவேன்.


நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : வாடிக்கையாளர், வியாபாரி தங்களின் கொடுக்கல் வாங்களில் உண்மைபேசி நாணயத்தோடு நடந்து கொள்ளும் வரை இறைவளம் அவர்களுக்கு வழங்கப்படும். அப்படியில்லையென்றால் இறைவளம் இல்லாமல் ஆக்கப்பட்டுப்போகும். (புகாரி)


மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வாங்க சாப்பிடலாம் என்று சொல்பவருக்கு அவர் அழைப்பை ஏற்று கொள்ளவிலையானால் ஒரு குற்றம் ஏற்றுக்கொண்டால் இரண்டு குற்றம். 1.பொய்யாக அழைத்தது2.அவர் அழைப்பை ஏற்று சாப்பிட்டு விட்டால், விரும்பி கொடுக்காத சாப்பாட்டை உண்மை புரியாமல் அவர் சாப்பிட்டது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : நீ சொன்னது உண்மை என்று நம்பிக்கொண்டிருக்க நீ சொன்னது பொய்யாக இருந்தால் இதைவிட அயோக்கியத்தனம் வேறு என்னவாக இருக்க முடியும். (அபு தாவுத்)

قُتِلَ الْخَرَّاصُونَ (11)الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ 

பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். 51:11அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : மறுமையில் பொய் பேசுபவனை நெருப்பிலான இரண்டு நாக்குலோடு எழுப்புவான் (அபு தாவூத்)

7.ஒரு மனிதர் ஸல் அவர்களிடம் வந்து தான் இஸ்லாத்தை தழுவ பிரியப்படுவதாகவும். ஆனால் விபச்சாரம், களவு, பொய், மது இவைகளை விட மனசில்லை என்றார். ஆனால் ஏதாவது ஒன்றை விட்டு விடுகிறேன்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : பொய் பேசுவதை அறவே விட்டு விடு என்றனர். ஒரு நாள் விபச்சாரம் நாடி சென்றபோது அவருக்கு (ஸல்) சொன்னது  நினைவு வந்தது. நாளை (ஸல்) கேட்டால் உண்மை சொன்னால் தண்டனை ஏற்க வேண்டியது வருமே! பொய் சொல்ல முடியாதே! என்று அந்த எண்ணததை விட்டுவிட்டார். இப்படியே களவையும், மதுவையையும் விட்டு விட்டார். பின் (ஸல்) அவர்களிடம் வருகிறார் யாரஸுலல்லாஹ்! சத்தியம் என்ற அரும்பொருளால் எனது பாவச்செயல்களை அடைத்து விட்டீர்கள் என்று பாராட்டினார். (தப்ஸீர் ராஸி)


மனிதர்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கேடு விளையட்டும். அவன் நாசமாகட்டும். (அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு பெண் ஸல் யா ரஸுலல்லாஹ் என் கணவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறாள் என் கணவர் எனக்கு அளித்ததை விட அதிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து சக்களத்தியிடம் இது அனைத்தும் என் கணவர் வாங்கித் தந்தது என்ற தோரணையில் நடந்து கொள்ளலாமா?  (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் (கிடைக்காத ஒன்றை) உண்மைக்கு மாறான முறையில் வெளிப்படுத்துகின்றாரோ அவர் பொய் என்ற ஆடையை அணிந்தவர் போன்றவராவார். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

பெருமைக்காக, பகட்டுக்காக, மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக இல்லாததை இருப்பது காட்டுவது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழியில் ஒரு பெண்மணி தன் குழந்தையை வா இனிப்பு தருகிறேன் என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் உண்மையில் உங்களிடம் இனிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்கள். ஆம்! என்றார் பெண்மணி. நபி (ஸல்) அவர்கள் இனிப்பு இல்லையென்றால் அதுவும் பொய்யில் சேர்க்கப்படும் என்றனர்.

துணைவியாக ஒருவரை மணமுடித்து புதிதாக வீட்டிற்கு அழைத்து சென்றோம். ஸல்: ஒரு கோப்பையில் பாலை எடுத்து வந்து திருப்தியாக குடித்து விட்டு, மணமகளிடம் கொடுத்தார்கள். பசியிருந்தும் விருப்பமில்லை என்றர். ஒப்புக்கு பதிலளிப்பதை புரிந்து கொண்டு  நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ' நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே! என்று கூறினார்கள். (தப்ரானி)


இஸ்லாத்தில் பெரும்பாவங்கள் எவை?  நபி (ஸல்) அவர்கள் கேட்கப்பட்டது. 1.ஷிர்க் 2. பெற்றோருக்கு நோவினை 3. பொய் சாட்சி சொல்வது.

வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்

வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
3. நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)

இப்னு மஸ்வுத் ரளி தம் நாவைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்கள். 'நீ நல்லதைப் பேசு. அதில் நன்மையுண்டு. கெட்டதை என்றைக்கும் பேசாதே வருந்த வேண்டிய நிலையைத் தவிர்த்துக் கொள்வாய். ''என்ன பேசுகிறீர்கள்? என்றார் ஒருவர் இதை நீங்களாகவே சொல்கிறீர்களா அல்ல இதற்கு ஆதாரமுண்டா?
இப்னு மஸ்வுத் நானாக கூறவில்லை. இதற்கு ஆதாரமுண்டு' மனிதனின் தவறுகளில் பெரும்பாலனாவை நாவிலிருந்தே உண்டாகின்றன என்று அண்ணல் நபி ஸல் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். தன் நாவை ஒரு மனிதன் காத்துக் கொண்டால் அவன் மானத்தை இறைவன் காத்துக்கொள்வான்! என்பது நபிமொழி கருத்து.


உஹத் போரில் ஒரு தோழர் வெட்டப்பட்டு கிடந்தார், அவர் வயிற்றில் கல் கட்டப்பட்டு இருந்தது. அவரது தாய் தேடி வருகிறார். தன் மகனின் நிலையை பார்த்து பரவசப்பட்டு மகனே உன்னைப் பாராட்டுகிறேன் சுவர்க்க வாழ்வுக்கு உரிமை பெற்று விட்டாய் என்றார். இதைக் கவனித்த )ஸல்( அவர்கள் அப்படி தீர்க்கமான எப்படி சொல்ல முடியும். அவர் வீண் பேச்சுக்கல் பேசவில்லை என்று எப்படித் தெரியும்.

அதுபோல் கஅப் )ரளி( நோயுற்று இருக்கும்போது )ஸல்( பார்க்க வந்தார்கள். அப்போது வயோதிகப் பெண் கஅப் உனக்கு சுவர்க்கம் தயாராக இருக்கிறது என்றார். யார் இவர் என்று ஸல் கேட்டு, கஅபின் தாயார் என்றதும் உங்களுக்கு எப்படித் தெரியும் இவர் வீண் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்றும் அதை தவிர்ந்து கொள்ளவில்லையென்றும் தீர்க்கமாக எதையும் கூறாதீர்கள்.

எவர் வீணான விஷயங்களை அதிகமாகப் பேசி நேரத்தை வீணாக்குகிறாரோ, அவருக்கு பாவம் அதிகமாகிறது. எவரது பாவம் அதிகமாகிறதோ, அவரது இதயம் மரணித்துவிடுகிறது. எவரது இதயம் மரணித்து விடுகிறதோ, அவர் நரகம் அடைவார்'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

'மனிதன் தனக்குத் தேவையில்லாத உரையாடல்களை விட்டொழித்தல் இஸ்லாத்தின் நற்குணங்களில் உள்ளதாகும். (முஅத்தாஇ திர்மிதி)


லுக்மான் அலை அவர்கள் சிறுவயதில் ஆடு மேய்ப்பவராக இருந்தார்கள். அவர்களின் புத்திக் கூர்;மையைக் கண்ட முதலாளி அவர்களின் சோதிக்க நாடி ஒரு ஆட்டை அறுத்து அதிலுள்ள நல்ல உறுப்புகளை கொண்டு வா என்றனர். அவர்கள் அறுத்து நாக்கை கல்பை(இருதயம்)யும் கொண்டு வந்தார்கள். பின் கெட்ட உறுப்பை கொண்டு என்றனர், அப்பொழுதும் அதையே கொண்டு வந்தனர்.காரணம் கேட்க, இது இரண்டும் நன்றாக இருந்தால் அவை போல் நல்ல பொருள் இல்லை. கெட்டதாக இருந்தால் அதுபோல் கெட்டது இல்லை என்றார்கள்.

Sunday, September 29, 2013

ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன. பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய் காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய் மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய் ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய் நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய் உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய் பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்.

Monday, August 26, 2013

எத்தனை ஆணவம் மனிதா...நீ

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது... எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை ! எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? அறுபது நாட்களில் அடையாளமற்றுப்போகும் உடலில் மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...இவையெல்லாம்....? மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை... 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு... 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது... எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை ! எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ? அறுபது நாட்களில் அடையாளமற்றுப்போகும் உடலில் மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...இவையெல்லாம்....?
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}