Thursday, May 9, 2013

புறம் என்றால் என்ன?


بسم الله الرحمن الرحيم
ويل لكل همزة لمزة *
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اجمعين
அபூ உபைதா (ரளி) : همزة لمزة புறங்கூறுபவன், கெட்ட வார்த்தை கூறுபவன்.
அபுல் ஆலியா, ஹஸன், முஜாஹித், அத்தா இப்னு அபீரபாஹ் (ரஹ்): همزة لمزة நேரில் திட்டுபவனுக்கு, ஆள் இல்லாதபோது திட்டுபவனுக்கு
அபூ கதாதா ரளி) : همزة لمزة  தாய், தந்தை, குலத்தை திட்டுபவனுக்கும், சைகை செய்து குறைகூறுபவனுக்கு
இமாம் இப்னு கதீர் ரஹ் : همزة لمزة நாவால் குறைகூறுபவன், சைகையால் குறைகூறுபவன்.
இவர்களில் வலீப்னு முஙைரா, அக்னஸுப்னு ஷூரைக், உமய்யதுப்னு கலப் முக்கியமானவர்கள்.        
குற்றங்கள் இரு வகைப்படும்.
1) அல்லாஹ் சம்பந்தப்பட்டவை 2) அடியார் சம்பந்தப்பட்டவை
அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம்.
சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம்.
மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது.
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்  
                        .
“
எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்றுநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.(நூல்-புகாரி)
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)
வெற்றிக்கான வழியை கேட்ட உக்பத்து இபுனு ஆமிர் ரளி அவர்களுக்கு ஸல் அவர்கள்: உனது நாவை மூடு, வீட்டில் இருந்து உனது பாவங்களை நினைத்து அழு! என்றனர். (திர்மிதி)
முஃமினானவர் குத்தல் பேச மாட்டார், சபிக்க மாட்டார், பிறரை ஏச மாட்டார், மானக்கேடானவற்றை செய்ய மாட்டார் என்று ஸல் கூறினார்கள்.

நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18)
همزة لمزة புறம்பேசுதல்என்றால்என்ன?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْموَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًاأَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوه وَاتَّقُوا اللَّـهَُ إِنَّ اللَّـهَ تَوَّابٌ رَّحِيمٌ

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்:முஸ்லிம்)

ஏன் புறம் பேசுகிறார்கள் என்பதற்கு உளவியல் ரீதியாகப் பல காரணங்களை அடுக்கும் உளவியல் நிபுணர்கள், இது ஒரு வகையான மன வக்கிரத்தின் வெளிப்பாடு என்றே கருத்துத் தெரிவிக்கிறார்கள். தன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பவர்களைச் சகித்துக் கொள்ள இயாலாமைதான், புறமும் அவதூறும் பேசித் தனக்குத் தானே திருப்தி பட்டுக்கொள்ள வைக்கிறதாம்.

அநேக சமயங்களில் புறம் பேசுபவருக்குப் புறம் பேசப்படுபவரின் நன்மைகளான சமூக மரியாதை, மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல வாழ்க்கைத் துணை, உயர்குணம், இறை அருள், உயரம், வெளுத்த தோல், தோற்றம், செருப்பு,  இன்னும் என்ன வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.. இவற்றின்   மீதுள்ள  பொறாமை, விரோதம், குரோதம், ஆற்றாமை முதலியவற்றின் வெளிப்பாடே வாய் நாற்றமாக (உண்மைதான்!!. ஆங்கிலத்தில் இதற்கு Bad Mouthing என்ற ஒரு பெயரும் உண்டு) வெளியாகிறது. 
ஒருவரிடம் உள்ள குறைகளை அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லும் துணிவும், திராணியும் அற்றவர்கள்தான் புறம் சொல்லுவதைச் செய்கிறார்கள். இப்படிப் புறம் பேசுவதால் என்ன பயன் விளையும்? இதை நாம் யோசிக்க வேண்டும்.
நாம் பழகும் ஒருவரிடம் ஒரு குறையிருப்பின் அதை வெளியே சென்று டமாரம் அடிப்பதில் என்ன நியாயமிருக்கிறது? நம்மிடம் உண்மையான நட்போ, அன்போ இருந்தால் அவரது குறைகளை அவரிடமே பக்குவமாக எடுத்துச் சொல்ல முடியும். அதனால் ஒருவேளை நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் நிகழலாம்.
தன்னால்  எப்பொழுதும் செய்ய இயலாத கோழைத் தனமும் புறம் பேசுதலாக வெளிப்படும். தன் இயலாமையை மறைக்க, உருப்படியாக ஏதாவது செய்தவனைப் பற்றிக் கொஞ்சம் புறம் பேசினால் போயிற்று. மனம் சமநிலை அடைந்துவிடும். அடுத்த இயலாமையைச் சந்திக்கும்வரைத் தாக்குப்பிடிக்கலாம்.
‘ஒருவிரல் நீட்டி எதிரியைக் காட்டி குறை சொல்லும் வேளையிலே, மறுவிரல் நான்கும் மார்பினை நோக்கி வருவதை அறியாயோ,’ மற்றவர்களைப் பற்றி குறைபேசுவது ஒருவரின் ‘ego’வின் ஏற்றத்தை குறிக்கின்றது. அது சற்று நேரம் மனதுக்கு நிறைவைத் தரும். ஆனால், அந்த நிறைவு தற்காலிகமானது. நிறந்தர மனநிறைவு மற்றவர்களின் நன்மைக்காக பாடுபடுவதிலும், மற்றவர்களை சிறப்புப்படுத்துவதிலுமே இருக்கின்றது.

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும்.
 
قال ا لنبي صلى الله عليه وسلم: الغيبة اشد من الزنا، قالوا يارسول الله، كيف الغيبة اشد من الزنا؟ قال ان الرجل ليزنى فيتوب الله عليه وان صاحب الغيبة لايغفر له حتى يغفرها صاحبه (مشكوة)
عن وائلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تظهر الشتامة لأخيك فيرحمه الله ويبتليك . رواه الترمذى
 உன் சகோதரனை, அவனது குறையைக் குறித்து நீ குறை கூறாதே, அப்படிக் கூறினால் அல்லாஹுதஆலா அவன் மீது கிருபை செய்வான். உன்னை அந்தக் குறையில் சிக்க வைத்து விடுவான்' என்று ஸல் கூறினார்கள். (திர்மிதி)

ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

 
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

ஒரு அடியான் பிற மனிதரின் குறையை இவ்வுலகில் மறைத்தால் அல்லாஹ் மறுமையில் இவனது குறைகளை மறைத்து மன்னித்துவிடுவான்.


உமர் (ரளி) அவர்களும் இப்னு மஸ்வூத் (ரளி) அவர்களும் இரண்டு பேரும் நகர் வலம்...
ஒருவர் வீட்டில் மது குடித்துக் கொண்டு இருந்தார். உமர் (ரளி) அதட்டினார்கள், அவர் அமீருல் முஃமினீனே! நான் மது அருந்தியது என்னவோ உண்மைதான். ஆனால் நீங்கள் பிறர் குறையை தேடலாமா?
உமர் ரளி உண்மை சொன்னீர்; என்று புறப்பட்டு விட்டனர்.

உமர் ரளியும் அபூபக்கர் ரளியும் ஒரு பிரயாணத்தில் தனக்கு பணிவிடை செய்ய ஒரு நபரை வைத்திருந்தனர்.ஒரு தடவை தூங்கி எழுந்து பார்க்கின்றனர். ஒன்றும் சமைக்கவில்லை. இருவரும் இவர் தூங்கு மூஞ்சி என்று சொல்லி விட்டு. நபி ஸல் அவர்களிடம் சென்று நாங்கள் ஸலாம் சொல்வதாக சொல்லி ஸால்னா வாங்கி வாருங்கள் என்றனர்.அவரும் அவ்வாறே செய்ய ஸல் சொன்னார்கள் அவர்கள் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டனர் என்று சொல்லுங்கள் என்று சொல்ல, இருவரும் உடன் ஸல் அவர்களை சந்திக்க, உங்கள் சகோதரரின் இறைச்சியை சாப்பிட்டு விட்டீர்கள் என்றனர். எங்களுக்காக மன்னிப்பு தேடுங்கள் என்றனர். யாரைப்பற்றி புறம் பேசினீரோ அவரிடம் சென்று மன்னிப்பு கேளுங்கள். (ஹயாதுஸ் ஸஹாபா)

உமர் ரளியும் இப்னு மஸ்வூதும் நகர் வலம்.. அப்போது ஓர் வீட்டில் ஒரு வயோதிகர் கையில் புட்டியும் பக்கத்தில் மாது ஆடிக்கொண்டு இருந்தார். உமர் ரளி அருகில் செல்லும்வரை அவருக்கு தெரியவில்லை. பக்கத்தில் போய், போகும் நிலையில் உள்ள உங்களுக்கு இதுதேவையாக? இன்று இரவைப்போன்று நான் என்றும் பார்க்கவில்லை என்றனர்.வயோதிகரும் உண்மைதான் இன்று நீங்கள் எவ்வளவு அருவருப்பான செயலை செய்துவிட்டீர். குறைகளை தேடித் திரிவதை அல்லாஹ் தடுத்திருக்க, என் அனுமதியின்றி உள்ளே வந்து விட்டீர்கள். உமர் ரளி உண்மையே கூறினீர் என்று சொல்லிவிட்டு, கிளம்பி உமர் நஷ்டவாளி இந்த வயோதிகர் மறைமுகமாக செய்த தவறை நான் பார்த்து விட்டதால் இனி பகிரங்கமாக செய்வாரே! வருத்தப்பட்டார்கள். வயோதிகரும் உமர் ரளி சபைக்கு வரவில்லை. சில நாட்கள் கழித்து ஒழிந்து ஒழிந்து வந்து அமர்ந்தார். உமர் ரளி பார்த்து அழைக்கிறார்கள். அவர் பயந்து அருகில் வருகிறார், உமர் ரளி அவரின் காதில் அருகில் சென்று நான் அன்று பார்த்ததை யாரிடமும் சொல்லவில்லை, மஸ்வூதிடம்கூட என்றனர்.வயோதிகர் சொன்னார் காதில் நான் நான் அன்றே அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன். (ஹயாதுஸ் ஸஹாபா217)

ஒரு பெரியவர் அவரைப்பற்றி புறம் பேசியவருக்கு அதிகமான வெகுமதிகளை அனுப்பினார்.

இமாம் ஸஅதி (ரஹ்) அல்லாஹ் மனிதனுக்கு இரண்டு கண்களை கொடுத்து, ஒரு கண்ணில் தனது குறையையும் மறுகண்ணில் மற்றவர்களின் நலவை பார்க்கவும்தான். இரண்டு கண்களாலும் பிறருடைய குறையை மட்டுமே பார்த்தால் தன் குறையை பார்க்க கண்ணே இல்லையே என்றுதான் கவலைப்படுகிறேன்.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எதிர்பாராதவிதமாக யாருடைய குறையாவது நம் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது? இல்லை அப்படி இருக்கலாம். அல்லது இப்படி இருக்கலாம் என்று 70 விதமான காரணங்களை கற்பனை செய்து அவனை நிரபராதி ஆக்க முயல வேண்டும். அதன் பிறகும் உன் மனம் அவன் குற்றவாளி என வாதாடினால், 70 காரணங்களையும் ஏற்கமுன்வராத நீ எவ்வளவு கொடியவன் என்று தன்னை தானே பழித்துக்கொள்ளவும்.

நபி (ஸல்) கஃபாவை பார்த்து மகிழ்ச்சியால் கஃபாவே நீ எத்துனை பரிசுத்தமாக இருக்கிறாய்! உனது நறுமனம் எவ்வளவு உயர்ந்தது. மரியாதைக்குரியதாய் இருக்கிறாய். ஆனால் முஃமினுடைய கண்ணியம், மரியாதை உன்னை விட மகத்தானது. அல்லாஹ் உன்னை மரியாதைக்குரியதாய் ஆக்கியுள்ளான். அதுபோல் முஃமினுடைய, பொருள், இரத்தம், மானம் மரியாதைக்குரியதாய் ஆக்கியுள்ளான். ஒரு முஃமின் மீது தீய எண்ணம் கொள்வதை விளக்கியுள்ளான். (தப்ரானி)

மிகத் தீய வட்டி தன் முஸ்லிம் சகோதரனை மானபங்கப்படுத்துவது. (தப்ரானி)
ஒரு முஸ்லிம் சகோரரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும் வகையில், அவர் இல்லாதபோது பேசப்படுவதை எவர் தடுப்பாரோ, அவரை நரகில் இருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் கடமையாகிவிட்டது.  (அஹ்மத், தப்ரானி)

‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனைசெய்யப்படுகிறார்கள்.புஹாரி.
- நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

“
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப்பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளைஉயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையைசர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர்நரகத்தில் போய் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.     நூல் : புகாரி (6478)
நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

 மனிதர்களை மட்டுமின்றி உண்ணும் உணவைக் கூடக் குறை கூறுதல் கூடாது.
""நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள்; பிடிக்காவிடில் (உண்ணாமல்) அமைதி காப்பார்கள்'' என அபுஹீனரா (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்).
எவர் தன் (முஸ்லிம்) சகோதரரின், பாவமீட்சி பெற்று (தஃபா)செய்துவிட்ட குற்றத்தைப் பற்றிக் குறை கூறுகிறாரோ, அவர் அந்த பாவத்தில் சிக்காதவரை மரணம் அடைய மாட்டார். (திர்மிதி)

புறம் பேசப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை பெற்றுக்கொள்ளவில்லையானால்...
 قال رسول الله صلى الله عليه وسلم: ان كفارة الغيبة أن تستغفر لمن اغتبته تقول : اللهم اغفرلنا وله (مشكوة)

சில இடங்களில் புறம் பேசலாம்
عن فاطمة بنت قيس اتيت النبي صلى الله عليه وسلم فقلت ان اباالجهم ومعاوية خطبانى فقال رسول الله أمّا معاوية فصعلوك وَاَمَّا ابوجهم فلا يضع العصا عن عاتقه
பாத்திமா பின் கைஸ ரளி வந்து ஸல் அவர்களிடம் என்னை முஆவியா ரளி அபு ஜஹ்ம் ரளி இரண்டு பேரும் பெண் கேட்கிறார்கள். யாரை தேர்ந்தெடுப்பது. ஸல் சொன்னார். அபு ஜஹ்ம் வறிய நிலையில் உள்ளார். முஆவியா தன் ஆயுதத்தை தோல் பட்டையை விட்டும் கீழே இறக்காதவர் என்றனர். நூல்: முஸ்லிம் 295

ஸல் அவர்களிடம் ஹிந்தா (ரளி) அவர்கள் வந்து எனது கணவர் கஞ்சதனம் கொண்டவர் செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை என்றனர். ஸல் அவர்கள் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ளவும் என்றனர்.

1. ஒருவர் வெளிப்படையாக ஹராமானவற்றைச் செய்யும்போது (உதா. சிகரட்,மதுவிற்கு பழக்கப்பட்டவர், வட்டிவாங்குபவர்,)
2. நாம் சொல்வது கேட்பவரை (அதாவது இரண்டாம் நபரை) ஏதேனும் இழப்பிலிருந்து பாதுகாக்கும் என உறுதியாக தெரிந்தால். மாப்பிள்ளையை பற்றியோ, வியாபாரத்தில் இணையும் பார்ட்னரைப்பற்றியோ நம்மிடம் விசாரிக்கப்பட்டால் உறுதியாக தெரிந்ததை மட்டும் சொல்லவும்.
3. மருத்துவத்திற்கு அவரது குறைகளைச் சொல்லியே ஆகவேண்டிய நிலையில்.
4.
இப்படி நாம் சொன்னால் குறிப்பிட்ட நபர் தன்னை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது. (உதா. அதிகமாகக் கோபப்படுபவர்)
5. ஒருவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாகத் தெரிந்தால் அவரிடம் நமக்கு அநீதி இழைத்தவர் செய்த அநியாயங்களை விவரித்தல் 
6) தகுதியில்லாதவராக இருந்தால் பழி உணர்வு இல்லாமல் நன்னோக்கத்தில் மேல் அதிகாரியிடம் முறையிடலாம்.
8) உரிமைகள் பறிக்கப்பட்டவர்,
7) (ஸல்) பெரும்;பாவியைக்குறித்தும் புறம் பேசுவது குற்றமாகாகது. தான் மறைவாக செய்கின்ற பாவத்தை குறித்து பேசுபவனையும் குறித்து புறம்பேசுவது குற்றமாகாது. (அபூ ஹூரைரா(ரளி))
ويل لكل همزة لمزة * الذي جمع مالا وعدَّده
அவன் பொருளை சேகரித்து அதனை எண்ணி வைத்தான்.
நல்ல காரியங்களுக்கு செய்ய வேணும் என்று அவன் சேர்க்கவில்லை. திரட்டி வைத்திருக்கனும் என்பதற்காகவே சேர்கிறான். அதன் மீது பேராசை, இது பாவத்திற்கு ஆணிவேர்! கடமைகளை சரியாக செய்யாமல், நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாமல் சேர்த்து வைத்துக்கொள்வான். கேட்டால் சமயத்துக்கு உதவும் என்பான்.
يحسب ان ماله اخلده
நிச்சயமாக தன்னுடைய பொருள் தன்னை நிரந்தரமாக்கி வைக்கும் என அவன் எண்ணுகிறான்.
மரணத்தைவிட்டும், ஆபத்துக்களை விட்டும் நோய்களை விட்டும் தடுத்துவிடும் என...
நபி ஸல் காலத்தில் இப்படிப் பட்ட குணம் படைத்தவர்கள் நிரம்ப இருந்தார்கள்.
இவர்களில் வலீப்னு முஙைரா, அக்னஸுப்னு ஷூரைக், உமய்யதுப்னு கலப் முக்கியமானவர்கள்.
كلا لينذ ن فى الحطمة وما ادرك ماالحطمة نار الله الموقدة
حطمة என்றால் முறிக்கக் கூடியது, அதில் போட்டால் உடலை முறித்து விடும்.
வெளியிலிருந்து எந்த காற்றும் உள் புகாது. உள்ளிருக்கும் அனலும் வெளியேறாது.
நரக நெருப்பை ஆயிரம் ஆண்டுகள் சிகக்கும் வரை, 1000 ஆண்டுகள் வெளுக்;கும் வரை 1000 ஆண்டுகள் கருக்கும் வரை எரிக்கப்படும். (திர்மிதி)
التى تطّلع على الأفئدة انها عليهم مؤصدة فى عمد ممددة
இமாம் குர்துபீ: இதயத்தை மட்டும் இறைவன் சொன்னது, இதயத்துக்கு கடுமையான வேதனை வந்து விட்டால் அதற்கு சொந்தக்காரன் மரணித்து விடுவான், அந்த அடிப்படையில் நரகவாசிகளின் இதயம் தாக்கப்படும்போது அவர்கள் மரணித்தவர்களைப் போன்று ஆகிவிடுவார்கள். ஆனால் மரணமடைமாட்டார்கள்.
இறைவன் திருமறையில் ''அவர்கள் மரணமடையவும் மாட்டார்கள் உயிராக இருக்கவும் மாட்டார்கள். என்கிறான்.
மஃரூபுல்கர்கி எனும் இறைநேசர் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அதில் சில வாலிபர்கள் இசை கருவிகளை வைத்து இசைத்துக்கொண்டும்,பாட்டு பாடிக்கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்து கோபமுற்ற ம்ஃரூப் (ரஹ்) அவர்களின் தோழர்கள்,இந்த பாவிகளுக்காக பத்துஆ செய்யுங்கள் என்றனர்.
அப்போது யாஅல்லாஹ்.உலகில் இவர்களை நீ சந்தோஷமாக வைத்ததுபோல் மறுமையிலும் சந்தோஷப்படுத்துவாயாக!என்று துஆச்செய்தார்க

Friday, May 3, 2013

இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (FREE SOFTWARES )

இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (FREE SOFTWARES )

நாம் நமது கணினியில் பல வகையான மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக இருக்கும் . பல இலவச மென்பொருள்களாக இருக்கும் . இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கும் முன் மூன்று விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் .

1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?

இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் .

1.REGISTRY - RECYCLER

உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Registry-Recycler_program_84479.html
2. UNDELETE 360 V2.16

இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://download.cnet.com/Undelete-360/3000-2094_4-75329667.html

3.YOU TUBE VIDEO DOWNLOADER :

நீங்கள் இணையத்தில் ரசித்த YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Youtube-Video-Downloader_program_25206.html
4. T.V 3.0

உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/TV-V_program_12454.html

5. PAINT STAR

உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/PaintStar-V_program_19504.html

6. ZIP PASSWORD FINDER 1.0

ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம் பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Zip-Password-Finder_program_1126.html

நன்றி :
என் ராஜபாட்டை : ராஜா
http://rajamelaiyur.blogspot.com/2013/03/7-FREE-SOFTWARE.html

Sunday, April 28, 2013

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?
*****************************************************

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

Thursday, April 25, 2013

இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா?




இறுக்கிப் பிடிக்கும் உடை பாதிக்குமா?

உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என மாடர்ன் கலாசாரத்தில் சிட்டாகப் பறக்கின்றனர். ‘நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.
காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.
இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில்,
‘இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது.  இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன், அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும். மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு,  இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும். அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும்.  காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே  அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.
பார்த்து டிரெஸ் பண்ணுங்க! 
நன்றி: விகடன்.காம்

Tuesday, March 26, 2013

நன்றி மறப்பது நன்றன்று




வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147

Sunday, March 24, 2013

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..


அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

Tuesday, March 19, 2013

லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்: அதிர்ச்சி தகவல்




Lips
வேலைக்கு செல்பவர்களோ, இல்லத்தரசிகளோ திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது லிப்ஸ்டிக் இன்றி வெளியேகிளம்புவதில்லை.

அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனத்தினால் இருதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆய்வாளர்கள் அபாய மணியை ஒலிக்க விட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் (triclosan) என்ற ரசாயனம் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களில் அனைத்திலும் உள்ளது.
இந்த ரசாயனம் இருதயம் உட்பட மூளையிலிருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளை வைத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. எலிகளுக்கு டிரைக்ளோசன் கொடுக்கப்பட்ட 20 நிமிடத்திலேயே அவைகளின் இருதயச் செயல்பாடுகள் படிபடிப்படியாக குறைந்தது.
இதுவே மனித உடல்களிலும் நடக்கலாம் என்று இவர்கள் எச்சரித்துள்ளனர். டிரைக்ளோசன் அனைத்திலும் உள்ளது, சுற்றுப்புறச் சூழலில் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறுகின்றனர்.
ஆனாலும் எலிகளில் பரிசோதனைக்காக ஏற்றப்பட்ட டிரைக்ளோசன் அளவுகள் அதிகம், ஆனால் லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் உள்ள இந்த ரசாயனத்தின் அளவு மிகக்குறைவே என்று இந்தப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்துவருகின்றனர்.
மருத்துவமனைகளில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பாக்டீரியா நுண்ணுயிரித் தாக்கத்தை இது தடுப்பதாகவே டொக்டர்கள் கருதுகின்றனர்.
ஆனால் கலிபோர்னியா விஞ்ஞானிகளோ இந்த ரசாயனத்தின் தாக்கம் உடல் உறுப்புகளிலும் விளைவை ஏற்படுத்தும் என்று உறுதியாக கூறுகின்றனர்.
டிரைக்ளோசன் பற்றி ஏதோ தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக இந்த ரசாயனத்திற்கும் தைராய்டு பிரச்சனை மற்றும் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தசைகளில் இதன் தாக்கம் பற்றி தற்போதுதான் ஆராய்ப்படுகிறது.
நல்ல இருதய ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இந்த ரசாயனத்தினால் 10 சதவிகிதம் இருதயச் செயல்பாடு குறைந்தால் தெரியாது. ஆனால் இருதயப்பிரச்சனைகள் ஏற்கனவே உள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் செயல்பாட்டுக் குறைவு என்பது ஆபத்துதான் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே லிப்ஸ்டிக் போடும் பெண்களே லிப்ஸ்டிக் போட்டால்தான் அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள் இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்

Monday, March 18, 2013

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்





ஒரு சிலர் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் துர்நாற்றம் அடிக்கும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள்.
காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும். இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.
மருத்துவ ரீதியான காரணங்கள்
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-fluxஎன்பார்கள்.
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக் கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves)வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பின்பு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும்.
மேலும் இரவு படுக்க போகும் முன்னர் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும்.
பற்களோடு ஈறுகளையும் லேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். பற்பசை விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பின்னரே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என்று இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும்.
இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி

பன்றி இறைச்சி தடை ஏன் ?


**************************

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

Thursday, February 7, 2013

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!


எறும்பு மூளையின் சிறந்த முடிவு!

‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?
ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள் ஆச்சரியமானவை. உதாரணமாக, புற்று சேதமடைந்து விட்டாலோ, ஜனத்தொகை பெருத்துவிட்டாலோ வேறு வீடு தேடவேண்டும். இதை எறும்புகள் எப்படிச் செய்கின்றன என்பதில் ஒரு நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.

எறும்புக் கூட்டத்திற்கும் நம் மூளையின் நியூரான் கூட்டத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. ஒரு ஒற்றை நியூரானுக்கு அதிகம் தகவல் நினைவு கிடையாது. ஆனால் நம்முடைய பத்தாயிரம் கோடி நியூரான்களின் தொகுப்புக்கு எத்தனை விஷயம் தெரிந்திருக்கிறது… என்னுடைய ஒரு நியூரானில் ‘சீ’, மற்றொன்றில் ‘னி’, இன்னொன்றில் ‘வா’ என்றெல்லாம் செய்தி பதிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் சீனிவாசன் எனக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்பது மட்டும் மறக்க முடியாமல் நினைவிருக்கிறது.
அதே போல் ஒரு எறும்புக்கு மூளை சின்னதாக இருந்தாலும் எறும்புக் கூட்டத்துக்கு அறிவு அதிகம். ஒவ்வொரு எறும்பும், ஒவ்வொரு நியூரானும் ஒரு தனித்த பிறவி என்றும் சொல்லலாம்; அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என்றும் சொல்லலாம். மத்திய கட்டுப்பாடு இல்லாமலேயே கூட்டாகச் சேர்ந்து அவை எடுக்கும் முடிவுகள், ஒற்றை மனம் எடுத்த முடிவுகள் போல ஒருமித்துத் தெளிவாக இருக்கின்றன.
எனவே, நம் மூளையைப் பற்றின ரகசியங்களை அகழ்ந்தெடுக்க விஞ்ஞானிகள் கைக்கொள்ளும் புதிய கருவி - எறும்புப் புற்று! பிரிட்டனின் பயோ விஞ்ஞானிகளும் கம்ப்யூட்டர் வல்லுனர்களும், இப்போது எறும்புகள், நியூரான்கள் இவை கூட்டாகச் சேர்ந்து எப்படி முடிவெடுக்கின்றன என்பதைத்தான் கூட்டாகச் சேர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதுசாகக் கல்யாணமானவர்கள் மட்டுமில்லாது, எறும்புக் கூட்டமும் தீர்மானிக்க வேண்டிய மிகச் சிக்கலான பிரச்னை, புது வீடு தேடுவது. முதலில் ஒரு ஸ்கவுட் படை போய், புற்று கட்டப் பொருத்தமான இடத்தைத் தேடும். தனித் தனியே அவைகள் கொண்டு வரும் சிபாரிசுகள் சபையில் பரிசீலிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு இடத்திற்கு ஓட்டு கிடைத்தால் அந்த இடம்தான் தேர்ந்தெடுக்கப்படும்.
நமது மூளையின் தனித் தனி நியூரான்கள் சேர்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்பதும் இதைப் போன்றதே. நம் கண் காணும் காட்சியைப் பற்றி மூளை ஒரு தீர்மானத்துக்கு வருவதை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இதை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் ஒரு குரங்கைப் பிடித்து வந்து தாஜா செய்து அதன் விஷுவல் கார்ட்டெக்ஸ் என்ற பார்வை உணரும் பகுதியைக் கவனித்தார்கள். கண் முன்னால் கம்ப்யூட்டர் திரையில் பல புள்ளிகள் பல திசைகளில் அலைந்துகொண்டிருக்கும். அதிக பட்ச புள்ளிகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதைக் குரங்கு சரியாகக் கணித்தால் ஒரு வாழைப்பழம்.
விஷுவல் கார்ட்டெக்ஸில் உள்ள நியூரான்கள் தனித்தனிப் புள்ளிகளைப் பற்றிய தகவல் துணுக்குகளைப் பெறுகின்றன. அதிகமான புள்ளிகளைச் சேகரித்த நியூரான்கள் உற்சாகமாக நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ரசாயன குண்டுகளைச் சுட ஆரம்பிக்கின்றன. சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்ட நியூரான்களின் வேகம் மெல்ல அதிகரித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுடும் ரேட் அதிகரித்தவுடன் குரங்கு ஒரு முடிவுக்கு வருகிறது.
எனவே, முடிவு எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட எறும்புகளோ நியூரான்களோ சம்மதம் தர வேண்டும். இந்த threshold - கடவு ரேகையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். சூழ்நிலையைப் பொருத்து, சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டுமா, அல்லது துல்லியமான முடிவுகள் தேவையா என்பதைப் பொருத்து இந்தக் கடவு ரேகையை முன்னோ பின்னோ தள்ளி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் நாளைக்கு அதே போல் சிந்தித்து முடிவு எடுக்கும் இயந்திரங்களைத் தயாரிக்க முடியும்.
கார்னெல் பல்கலையின் தாமஸ் சீலி, சமுதாயமாகச் சேர்ந்து வாழும் பூச்சியினங்கள் (social insects) என்ற ஐடியாவை மேலும் விரிவு படுத்தி, அரசாங்கங்கள் செயல்படும் விதம் வரையில் கொண்டுபோகலாம் என்கிறார். ‘தேனீக்களின் ஜனநாயகம்’ என்று அவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் அடுத்த வருடம் வெளிவருகிறது.
தேனீக்களிலிருந்து காப்பி அடித்தால் நம்முடைய கூட்டு முடிவுகளும் அரசாங்க நிர்வாகமும் கூட மேம்படும் என்கிறார் சீலி. தேனீயும் எறும்பு போலவே சமுதாயப் பூச்சிதான். பல லட்சம் வருடமாக இந்தப் பூச்சிகள், கூட்டு முடிவுகள் எடுப்பதை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. எனவேதான் இந்தக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டன.
தேனீயுடன் ஒப்பிட்டால் பண்டைய கிரீஸ், ஏதென்ஸ் என்று மனித ஜனநாயகத்துக்கு வெறும் 2500 வயதுதான் சொல்லலாம். இன்னும் நாம் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கத் திணறுவதிலும், மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொள்வதிலும் ஆச்சரியமே இல்லை.
எறும்பும் தேனீயும் நல்ல முடிவுகளை விரைவாக எடுப்பதற்குக் காரணம், அதன் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் மிக எளிமையானவர்கள். பரோபகாரிகள். நம்மைப் போல மறைமுக அஜெண்டா, கோஷ்டிப் பூசல் போன்றவை அவற்றுக்குக் கிடையாது. சுயநலம் இல்லாமல் பொது நலம் எது என்பதை மட்டுமே பார்த்து, சரியான தீர்மானத்தை நோக்கி விரைவில் வந்து குவிந்துவிடும்.  நம் ஜனநாயகத்தில், உடனடிப் பிரச்னைகளில் சிக்கி நீண்ட கால முடிவுகள் தாமதமாகின்றன.
நியூரான்களையும் எறும்புகளையும் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது : தனித்தனியாகப் பார்த்தால் இருப்பதிலேயே புத்திசாலிகளை விட அறிவுத் திறன் அதிகம் கொண்ட குழுக்கள் அமைப்பது எப்படி என்பதுதான் அது.  ஆக, எறும்புப் புற்றைக் கவனித்து அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இரண்டுக்குமே எறும்பு மூளைதான் என்று சொல்ல வருகிறார்களோ ?
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைக
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}