Tuesday, June 30, 2015

தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது


தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது.? அனுக்கதிர் சொட்டு மருந்து மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம்.? பூரண விளக்கம் தரும் பதிவு.!
தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?
கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான்.
இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.
தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?
நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.
காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் ? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?
ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.
தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?
தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.
தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?
தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.
1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.
ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.
ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.
உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?
பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.
தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?
குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.
1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.
அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை .?
இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.
சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?
பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.
இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.
படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.
தைராய்டில் புற்றுநோய் வருமா?
தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.
1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.
தைய்ராய்டு அளவு.
(Thyroid Stimulating Hormone)
TSH: less than 0.50 TSH: 0.50-1.4 TSH: 1.5-2.4 TSH 2.5-3.5 TSH: 3.6 and higher
பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்

Thursday, June 25, 2015

நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம்

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 



ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.

ரைப்பை குடல் பாதை பாதிப்பு

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். Show 

சிறுநீரக பாதிப்பு 
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்

ஆர்த்ரிடிஸ்
 சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்

நரம்புகள் டென்சன் ஆகும் 
பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற
போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்




Wednesday, June 24, 2015

நீண்ட நேரம் நிற்பதால் கால் பாதிப்பா?


வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு தீர்வு
நீண்ட நேரம் நின்று பணிபுரியும் பெரும்பாலானவர்களுக்கு வெரிகோஸ் வெயின் என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. அதுபோல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு
சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் வண்டலூர் உயிரியியல் பூங்காவினுள் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் விற்பனை அங்காடியில் கிடைக்கும்.
நிரந்தர தீர்வு காண அத்திக்காயில் இருந்து வெளிவரும் பாலை எடுத்து கால் மூட்டு பகுதியில் நரம்பு முடிச்சு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் 2 மணி நேரம் மருந்து பூச்சு இருக்கட்டும் அதன் பின் வெண்ணீரால் கழுவலாம். காலை நேரம் உகந்தது என்றாலும் உங்கள் வேலை நேரத்திற்கு தக்கபடி தினமும் பூசுங்கள். முழுமையான குணம் கிடைக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ( அத்திக்காய் பால் தடவும் இடங்களில் புண் ஏற்பட்டால் கஸ்தூரி மஞ்சள் பூசலாம்)
முதல் 9 நாட்களுக்குள் வலி குறைந்து விடும்,
முக்கிய குறிப்பு:
பரோட்டா , மஸ்கத் அல்வா , ஊறுகாய் , அப்பளம் , ஐஸ்கீரிம் மற்றும் அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜ் ல் இருந்து எடுக்கும் குளிந்த நீர் அருந்த வேண்டாம்.
48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
தகவல்,நன்றி :- http://salampalsingam.blogspot.in/

டை பயன்படுத்துவதால்.புற்றுநோய் வரை ஆபத்து

டை அடிப்பது சகஜமாகிவிட்ட இக்காலத்தில்... இப்படியரு அதிர்ச்சியா..?' என்று திகைத்த நாம், 'இது எந்த அளவுக்கு உண்மை?' என்று சென்னை, ராஜீவ் காந்தி, அரசு பொது மருத்துவமனையின் 'அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் முத்து செல்லக்குமாரிடம் கேட்டோம்.
''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்'' என்கிற அதிர்ச்சியோடு ஆரம்பித்தவர்,
''தொடர்ந்து உபயோகிக்கும்போது, நம் தலைமுடியுடன் மட்டும் அது வினைபுரிவதில்லை. உடலிலும் சென்று ரத்தத்திலும் கலக்கிறது. இரண்டு நாட்கள் வரை தங்கும் செமி டெம்ப்பரரி டை; 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும் பெர்மனன்ட் டை; ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் பெர்மனன்ட் டை என எல்லா டைகளுமே ரசாயன தயாரிப்பு என்பதுதான் பிரச்னையே!
டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும். அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்'' என்று எச்சரிக்கை கொடுத்த டாக்டர்,
''செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, நரையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். எல்லாவற்றையும்விட, நரை முடியை அதன் அழகோடு ஏற்றுக்கொள்வது மிகமிகச் சிறந்தது!'' என்று எளிமையான வழியைக் காட்டினார்.
அழகுக்கலை நிபுணர் வசுந்தராவிடம் பேசிய போது, ''டை என்ற வார்த்தையே இப்போது உபயோகத்தில் இல்லை. 'டை' (Dye) என்ற வார்த்தையின் உச்சரிப்பு, இறப்பு (Die) என்பதையும் குறிப்பதால்... 'கலரிங்' (Coloring) என்கிற சொல்லுக்கு உலகம் மாறிவிட்டது.
பொதுவாக... 'டை'யில் மூன்று வகை உண்டு மெட்டாலிக் டை, ஹெர்பல் டை, அனிலைன் டை. இதில் சின்ன சின்ன பாக்கெட்டுகளில் ஏழு ரூபாய்க்குகூட கிடைக்கும் டை... மெட்டாலிக் வகையைச் சார்ந்தது. இதில் ஏகப்பட்ட கெமிக்கல்கள் சேர்ந்திருக்கும். இதை உபயோகித்தால், அப்படியே முடியில் தங்கிவிடும். 'ப்ளீச்செய்ய முடியாது. இது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக வந்த ஹெர்பல் டை... அவுரி விதை மற்றும் ஹென்னா கலந்து வந்தாலும், கூடவே கெமிக்கலும் கலக்கப்பட்டே வருவதால்... இதுவும் உடலுக்கு கேடு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட டைகள் எல்லாம் முடியில் மட்டும் இல்லாமல்... உடலுக்குள்ளும் ஊடுருவி சென்று விடுவதுதான் ஆபத்துகளுக்கு அழைப்பு வைத்துவிடுகிறது.
மூன்றாவது வகையான 'அனிலைன் கலர்' எனப் படும் டை, அமோனியா கலக்காமல் வந்துள்ளது. இதையும்கூட எல்லோருக்குமே உடனே நாங்கள் போட்டுவிடுவதில்லை. பேட்ச் டெஸ்ட் என்கிற டெஸ்ட் செய்வோம். அதாவது, காதுக்கு பின்புறம் இதை அடித்துவிட்டு, வீட்டுக்கு போகச் சொல்லி விடுவோம். 24 மணி நேரத்துக்குக்குள்... அரிப்பு, தடிப்பு எந்த பிரச்னைகளும் வராமல் இருந்தால் மட்டுமே... அதை அவர்களுக்கு கலரிங் செய்ய பயன்படுத்துவோம்'' என்ற வசுந்தரா...
''அலர்ஜி உள்ளவர்கள், சிம்பிளாக மரு தாணியை தலையில் தடவ சொல்லிவிடுவோம். இயற்கையான கலரிங் பொருளான மருதாணியில் எந்தத் தீங்கும் இல்லையே!’' என்று சொன்னார்.
ஆக, இனி டை அடிக்கும் முன்... யோசியுங்கள்!


Monday, June 22, 2015

மல ஜலம் கழிப்பதின் சுன்னத்

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன்”என்று கூறியது மட்டுமின்றி தந்தையை விட மேலாக தங்கள் சமுதாயத்திற்கு (பிள்ளைகளுக்கு) அணு அணுவாக தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். மலம்ஜலம் கழிக்கும் முறையைக் கூட கற்றுத் தர தவறவில்லை.ஒரு முறை ஹள்ரத் ஸல்மான் (ரலி) அவர்களிடம் முஷ்ரிகீன்கள் கேலி செய்த வண்ணம் ‘என்னஉங்கள் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்கு மலம்ஜலம் கழிக்கும் முறைகளை கூட கற்றுத் தருகிறாராமே!’ என்று கேட்டதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூறி அதன் சில முறைகளையும் கூறினார்கள்.         (நூல் : முஸ்லிம்)அன்று முஷ்ரிகீன்கள் கேலியாக கேட்ட இந்த நபிகளாரின் வழிமுறை இன்று அந்த வழிமுறையில் ஏற்படும் மருத்துவ பலன்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கண்டு விஞ்ஞானமே ஆச்சரியப்பட்டு நிற்கிறது. அந்த வழிமுறைகள் என்னபலன்கள் என்னசிலவற்றையாவது தெரிந்து கொள்வோமே!



தூரமான இடத்திற்குச் செல்வதுநபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிப்பதற்காகச் சென்றால் தூரமான இடத்திற்கு செல்வார்கள்.     (அறிவிப்பாளர் : ஹள்ரத் முஃஙீரதுப்னு ஷுஃபாநூல் : அபூதாவூது)கழிப்பிடம் நுழையும் முறைநபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான இடங்களுக்குள் நுழையும் போதும் செருப்பு அணி யும் போதும் தலை சீவும் போதும் வலது பக்கத்தை முற்படுத்துவதையே விரும்பி வந்தார்கள்.  (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூல் : இப்னுமாஜா)இதனடிப்படையில் மலம் ஜலம் கழிக்க கழிப்பிடம் நுழையும் பொழுது இடது காலை முதலில் வைத்தும் வெளியேறும் பொழுது வலது காலையும் முதலில் வைத்தும் வெளியேற வேண்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் : “ஜின்களின் கண்களுக்கும் மனிதர்களின் மர்மஸ்தலங்களுக்கும் மத்தியில் மறைப்பு ஏற்பட (வேண்டுமானால்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் முன் ‘பிஸ்மில்லாஹ்’ என்று ஓதிக் கொள்ளட்டும். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அலி (ரலி)நூல்: திர்மிதி)



மல ஜலம் கழிக்கச் செல்லும் பொது ஓதும் துஆநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்ல நாடினால் “அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி” (இறைவா! நிச்சயமாக நான் கெட்ட ஆண் ஜின்கள்பெண் ஜின்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.) என்ற துஆவை ஓதுவார்கள்.        (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : புகாரி)எனவே நாம் கழிப்பிடம் செல்லும் போது இவ்விரு துஆக்களையும் ஓதிக் கொள்ள வேண்டும்.



தலையை மறைத்தல், செருப்பு அணிதல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது தலையை மறைத்துகால்களுக்கு செருப்பு அணிந்தவர்களாக செல்வார்கள்.(அறிவிப்பாளர் : ஹள்ரத் ஹபீப் இப்னு ஸாலிஹ் (ரலி)நூல் : ஸுனனுல் குப்ரா)


உட்காருந்து சிறுநீர் கழிப்பது “ஒரு முறை நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதீர்” என்று தடுத்தார்கள்: அதன் பிறகி லிருந்து நான் நின்ற நிலையில் சிறுநீர் கழித்ததேயில்லை. (அறிவிப்பாளர் : ஹள்ரத் உமர் (ரலி),நூல் : திர்மிதி)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாரேனும் கூறினால் அதை உண்மைப்படுத்தாதீர்கள்: ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதில்லை”    (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி)நூல் : திர்மிதி)குறிப்பு : ஒரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை நின்று சிறுநீர் கழித்ததாக வருகிறது. ஆனால் அந்நேரத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவ் வாறு செய்தார்களே தவிர அவர்களின் நிரந்தர வழி முறை உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதாகத்தான் இருந்துள்ளது.


உட்காரும் முறை1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு மலம்,ஜலம் கழிக்க உட்காரும் போது சற்று இடது பக்கமாக (பாரம் கொடுத்து) சாய்ந்து அமருவதற்கு கற்றுக் கொடுத்தார்கள்.(அறிவிப்பாளர்: ஹள்ரத் சுராகதுப்னு ஜூஃஷா (ரலி), (நூல் : திர்மிதி)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் கழிப்பிடம் சென்றால் கிப்லாவை முன்னோக்கியோபின்னோக்கியோ அமர வேண்டாம். மாறாக கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக அமர்ந்து கொள்ளுங்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : புகாரி)குறிப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவைக் கருத்தில் கொண்டு கிழக்கு மேற்காக அமரச் சொன்னார்கள். ஆனால் இந்தியாவைக் கவனித்து கிப்லாவின் திசை மேற்கில் இருப்பதால் வடக்கு அல்லது தெற்கு திசையை முன்னோக்கி அமரவேண்டும்.3) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிக்க அமரும் போது பூமிக்கு மிக நெருக்கமாகும் போதுதான் தங்களது ஆடையை உயர்த்துவார்கள். (இதனால் நமது மர்மஸ் தானத்தை மற்றவர்கள் பார்க்க முடியாது) (அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் (ரலி)நூல் : திர்மிதி)


இடது கையால் சுத்தம் செய்வது1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “நிச்சயமாக நான் உங்களுக்கு தந்தையைப் போன்றவன். எனவே உங்களுக்கு ஒரு விஷயத்தை கற்றுக் கொடுக்கிறேன். நீங்கள் (மலஜலம் கழித்தபின்) வலது கையைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டாம். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி)நூல் : இப்னு மாஜா)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலது கை உணவருந்துதல் மற்றும் சுத்தமான விஷயங்களுக்காகவும்இடது கை (மலம் ஜலம் கழித்த பின்) சுத்தம் செய்யவும்அசுத்தத்தை நீக்குவதற்கும் பயன்பட்டு வந்தது. (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)


டேலா உபயோகப்படுத்துவதுஉங்களில் ஒருவர் மலம்ஜலம் கழிக்கச் சென்றால் அவர் தன்னுடன் 3கற்களை எடுத்துச் செல்லட்டும். அவைகளைக் கொண்டு சுத்தம் செய்யட்டும். நிச்சயமாக கற்கள் அசுத்தத்தை நீக்கிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூது)பொதுவாக நாம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோம். எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யும் பட்சத்தில் குறைந்த பட்சம் 3 கற்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 3 கற்களைக் கொண்டும் சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் தண்ணீரைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்வதை விட கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்வது சிறந்தது. அவ்வாறு இரண்டைக் கொண்டும் சுத்தம் செய்பவர்களை அல்லாஹ்வே புகழ்ந்து கூறியுள்ளான்.அதிலே (குபா எனும் ஊரிலே) மிக பரிசுத்தவான்களாக இருப்பதை விரும்புபவர்களும் உள்ளனர். அல்லாஹ்வும் பரிசுத்தவான்களை விரும்புகிறான்.            (அல்குர்ஆன் 8:108)என்ற வசனம் இறங்கியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குபாவாசிகளை நோக்கி “அல்லாஹ்வே உங்களின் சுத்தத்தை புகழ்ந்து கூறுமளவிற்கு நீங்கள் சுத்தம் செய்யும் முறைதான் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “யாரஸூலல்லாஹ்! நாங்கள் (மலம்ஜலம் கழித்த பின்) கற்களைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் சுத்தம் செய்வோம். (ஏதேனும் ஒன்றைக் கொண்டு மட்டும் போதுமாக்கிக் கொள்ள மாட்டோம்) என்று பதில் கூறினார்கள்.            (நூல் : இப்னு மாஜா)


இவைகளைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது.நீங்கள் விட்டை (சாணம்) யைக் கொண்டும் எலும்புகளைக் கொண்டும் அசுத்தத்தை நீக்காதீர்கள். ஏனெனில் அவை உங்களின் சகோதர சமுதாயமான ஜின்களின் உணவாக பயன்படுகிறது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.     (அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி)நூல்: திர்மிதி)ஒரு முறை ஜின்களில் ஒரு கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஜராகி, ‘யாரஸுலல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்! உங்களின் சமுதாயம் எலும்புகளைக் கொண்டும்,விட்டையைக் கொண்டும்அடுப்புக் கரிகளைக் கொண்டும் (மலம்ஜலம் கழித்தபின்) சுத்தம் செய் கிறார்கள். ஆனால் அவைகளில் தான் எங்கள் உணவை அல்லாஹ் வைத்துள்ளான்’ என்று முறையிட்டது. அதன் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளைக் கொண்டு சுத்தம் செய்வதை விட்டும் எங்களை தடுத்தார்கள். (அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு மஸ்ஊத்(ரலி)நூல்: அபூதாவூது)


இந்த இடங்களில் கழிக்கக் கூடாது1) “உங்களில் எவரும் (சுவர்களிலோபூமியிலோ) உள்ள பொந்துகளில் சிறுநீர் கழிக்கவேண்டாம்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஸர்ஜஸ் (ரலி)நூல்: அபூதாவூது)பொந்துகள்பூச்சிகள் மற்றும் பாம்புதேள் போன்ற விஷ ஜந்துக்களின் வீடுகள். அதில் சிறுநீர் கழிப்பதால் அவைகளுக்கு தீங்கு நேரிடுகிறது. சில சமயம் விஷ ஜந்துக்கள் வெளியே வந்தால் சிறுநீர் கழிப்பவருக்கு தீங்கு நேரிட வாய்ப்புள்ளது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை விட்டும் தடுத்துள்ளார்கள்.2) “சாபத்தை பெற்றுத் தரக்கூடிய இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறஅவை எவைஎன்று ஸஹாபாக்கள் வினவினார்கள்” (1) நடமாடும் பாதையில் மலம்ஜலம் கழிப்பது, (2) மக்கள் ஓய்வெடுக்கும் மர நிழலில் மலம்ஜலம் கழிப்பது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம்)


மல ஜலம் கழித்த பின் ஓதும் துஆ1) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்துவிட்டு வெளியே வந்த பிறகு ‘குஃப்ரானக’ என்று ஓதுவார்கள்.     (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி)2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்த பின்பு ‘அல்ஹம்துலில்லாஹில்லதி அத்ஹப அன்னியல் அதா வஆஃபானீ’ (என்னை விட்டும் அசுத்தத்தை நீக்கி எனக்கு ஆரோக்கியமளித்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்) என்ற துஆவை ஓதுவார்கள்.   (அறிவிப்பாளர்: ஹள்ரத் அனஸ் (ரலி)நூல்: இப்னுமாஜா)எனவே நாம் கழிப்பிடம் விட்டு வெளியேறும் போது இவ்விரு துஆக்களையும் ஓதிக் கொள்ளவேண்டும்.


கையை நன்றாக கழுவுவதுநான் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன்! ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழித்தபின் அதைக் கொண்டு சுத்தம் செய்தார்கள். பிறகு மண்ணில் தமது கையை தேய்த்தார்கள். பிறகு மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் வர வைத்து உளுஃ செய்தார்கள்.(அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத்)ஹதிஸ் ஒளியில மேலும் சில மஸாயில்கள்1  கழிவறையில் பேசக்கூடாது - அவ்வாறு பேசுபவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்.2 கழிவறையில் இருப்பவர் பாங்கு சப்தத்தைக் கேட்டால் பதில் கூறக்கூடாது. வெளியே வந்தபிறகு தான் கூறவேண்டும். தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் என்று கழிவறையில் நாவினால் கூறக் கூடாது. மனதில் கூறிக்கொள்ளலாம். (ஏனெனில் அது அல்லாஹ்வை துதிப்பதிற்குரிய இடமில்லை. யாரேனும் ஸலாம் சொன்னாலும் பதில் கூறக்கூடாது. சிறுநீரை முழுமையாக வெளியேற்றுவதற்காக சிறுநீர் கழித்ததும் அடி வயிற்றுப் பகுதியை தடவிக் கொடுப்பது அல்லது சற்று கனைப்பது நல்லது. குளியலறையில் சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். அதனால் வஸ்வஸா எனும் (தனது சுத்தத்தின் மீது) சந்தேகம் வரும்.7 சிறுநீர் துளிகள் நம்மீது தெறிக்காத வண்ணம் சிறுநீர் கழிக்க வேண்டும்.8 மேட்டுப் பகுதியை நோக்கி சிறுநீர் கழிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். ஏனெனில் சிறுநீர் நம்பக்கமே திரும்பிவரும். தேங்கியிருக்கும் நீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது.10 கட்டியான பூமியில் சிறுநீர் கழிக்கக் கூடாது. அப்படி கட்டியாக இருப்பினும் அதை கம்பு போன்றதால் சிறிது குத்திவிட்டு அதை இலகுவாக்கிய பிறகு தான் அதில் சிறுநீர் கழிக்கவேண்டும்.


நவீன விஞ்ஞானம் கூறும் பலன்கள்BIO-CHEMISTRY கலை நிபுணர் ஒருவர் கூறுகிறார் : மலம் கழிப்பதற்காக தூரமான இடத்திற்கு செல்லுங்கள். இன்று கிராமங்களெல்லாம் நகரங்களாக மாறி தன் அறையிலேயே கழிவறை இருப்பதால் மனிதன் மலம் கழிக்கும் முன் சிறிது நேரம் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்லை. எனவே தான் மலச் சிக்கல்வாயுப் பிரச்சனை போன்ற கோளாறுகள் உண்டாகிறது. சிறிது நேரம் நடப்பதால் குடல் இயக்கங்கள் சீராகி மலம் முழுவதுமாக இலகுவாக வெளியேறுவதால் மனிதன் ஆரோக்கிய மடைகிறான்.PHYSIOLOGY யில் முதிர்ச்சி பெற்ற வல்லுநர் ஒருவர் எழுதுகிறார். என்னிடம் ஒரு மாற்றுமத விஞ்ஞானி நீங்கள் (முஸ்லிம்கள்) உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு நடை முறையை பேணி வந்தால் உங்களுக்கு நோயே வராது! உங்களிள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலம்ஜலம் கழிப்பதற்கு கற்று கொடுத்துள்ள முறையில் நாமும் மல ஜலம் கழித்தால் (APPERTICITIS) குடல்வாழ் சுழற்சிமூலம்நீங்காத மலச்சிக்கல்கழுத்து சம்பந்தமான நோய்கள் வராது என்று கூறினார்.* மண் கட்டி - டேலாவை உபயோகிப்பதால் நன்றாக சுத்தம் ஏற்படுவது மட்டு மின்றி அதில் இருக்கும் (Ammonium Chloride) நவச்சாரம் சிறுநீர்ப்பை தொற்று நோய் களில் சிறுநீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.* டாக்டர் ஹலூக் என்பவர் கூறுகிறார்: பொதுவாக மண்ணிற்கு கிருமிகளை அடியோடு அழித்திடும் தன்மை உள்ளதால் அதன் மூலம் சுத்தம் செய்வதின் மூலம் (Cancer of Penis) ஆணுறுப்புப் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. மட்டுமின்றி உறுப்புகளில் கிருமிகளின் காரணமாக காயாமல் இருக்கும் காயங்கள் உள்ள ஒருவருக்கு தொடர்ந்து டேலாவை உபயோகப்படுத்த அறிவுறுத்தி பின்பு அதனால் அவருக்கு நிவாரணமும் ஏற்பட்டது.* டாக்டர் முஹம்மது தாரீக் மஹ்மூத் அவர்கள் கூறுகிறார்கள் : டாய்லட் பேப்பர் தயாரிக்கும் ஃபேக்டரியான அதிகாரியை சந்தித்த போது அவர் “பலவகையான கெமிக்கல் சேர்ப்பதின் முலமே இது போன்ற பேப்பர்களை உருவாக்க முடியும். இதனால் தோல் நோய்கள் (Eczema) படைஅரிப்பு,எரிச்சல்ஒவ்வாமை நோய்கள்கொப்புளங்கள் உண்டாக அதிகப்படியான வாய்ப்புள்ளது. எனவே டேலாவே சிறந்தது” என்று என்னிடம் இரகசியமாக கூறினார்.


மேலும் லண்டனிலுள்ள டாக்டர் கெனன் டேவஸ் என்பவர் ஐரோப்பிய மக்களிடம் “நீங்கள் கலர் கலரான டாய்லெட் பேப்பர்களை மட்டுமே உபயோகப் படுத்திக் கொண்டிருப்பதை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வெகு சீக்கிரமே மர்மஸ்தான கேன்ஸர்தோல் அலர்ஜி(Skin Infection)ரைவஸ் எனும் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்கள் (viral Diseases)உங்களை தாக்குவதை எதிர்பாருங்கள்” என்று எழுத்து மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.* எலும்புகள் விட்டைகளில் டெட்டனஸ் Tetanusமற்றும் டைபி என்னும் நோயணுக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே அதன் மூலம் சுத்தம் செய்தால் கிருமிகள் உடலில் ஊடுருவி குடற்காய்ச்சல் (Typhoid) வாய் திறக்க முடியாமல் பூட்டிக் கொள்ளுதல்தசைகள் விறைத்தல்விட்டுவிட்டு வலிப்புமூச்சுவாதம் போன்ற கடும் நோய்கள் மனிதனை தாக்குகின்றன. அது மட்டுமின்றி கிழே கிடக்கும் எலும்புகளில் விஷத்தன்மையுள்ள கிருமிகள் நிறைந்த எச்சில் கொண்ட விலங்குகள்உயிரினங்கள் வாய் வைத்திருந்தால் மேலும் பல நோய்கள் உண்டாகும்.* நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதால் (Prostatitis) சுக்கிலப்பை அழற்சி ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. போகப்போக சிறுநீர் அடைப்புசொட்டு சொட்டாக சிறுநீர் வந்து கொண்டேயிருப்பதுகிட்னியில் கல்குடலிறக்கம் போன்ற நோய்கள் உருவாக ஆரம்பிக்கின்றன.* சிறுநீர் கழித்தபின்பு இடது கையால் சுத்தம் செய்ய வேண்டும். இயற்கையாகவே மனிதனின் வலது கையில் ஆரோக்கியமளிக்கும் திரவமும் இடது கையில் நோயின் திரவமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும். வலது கையைக் கொண்டு அசுத்தத்தை நீக்கினால் திரவ அமைப்பு மாறி அதன் தாக்கம் மூளையிலும் நரம்பு திசுக்களால் உருவாக்கப்பட்ட தண்டுவடத்திலும் ஏற்படுகிறது.* மலம்ஜலம் கழித்ததும் மண் (அல்லது சோப்பு) போட்டு கையை கழுக வேண்டும். ஏனெனில் மண்ணில் உயர் தரமான (Anti Septic) ஆண்டி செப்டிக் உள்ளது. நாயின் எச்சியில் இருப்பது போன்ற விஷத்தன்மை கொண்ட கடுமையான கிருமிகளையும் முழுமையாக அழித்துவிடுகிறது. எனவே முடிந்தளவு மண்ணைக் கொண்டு தேய்த்துக் கழுக வேண்டும்.


சிறுநீரை அடக்கக் கூடாது. எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தொழுகை நேரத்தில் சிறுநீர் வந்தாலும் சிறுநீர் கழித்துவிட்டு தொழுகச் சொல்லியுள்ளார்கள். ஏனெனில் சிறுநீரை அடக்குவதால் மூளைகுடல்கள்நரம்புகள் பாதிப்படைகின்றன.      (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் ஸைன்ஸ்)ஆக நபிகள் நாயகத்தின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிமுறைகளை பேணி நடக்கும் போது ஈருலக பலன்களையும் ஒரு சேர பெற்றுவிடமுடியும். வல்லோன் அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை வழங்குவானாக

நன்றி: யூசுப் காஷிபி 

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}