Sunday, January 26, 2014

உடலும் - அதன் ஆசைகளும்

                                                                                       -ரஹஅமதுல்லாஹ் மஹ்லரி

நமது ஆசைகளை மனம் சார்ந்த ஆசைகள், உடல்சார்ந்த ஆசைகள் என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். அன்பு ஆசை, காதல் இவை எல்லாம் நம்முடைய மனம்சார்ந்த ஆசைகளாகும். இதேபோல, நமது உடலுக்கும் சில ஆசைகள் உள்ளன.
தனது தேவைகளை உணர்த்தி அவற்றைக் கேட்டுப் பெறுவதற்கும், வேண்டாத பொருட்களை வெளியேற்றுவதற்கும் நம்முடைய உடல் சில (சிக்னல்களை) அறிவிப்புகளை வெளியிடுகிறது. அவற்றைத்தான் நாம் உடல் சார்ந்த ஆசைகள் - இச்சைகள் என்பதாக நடைமுறையில் நாம் குறிப்பிடுகிறோம்.
இப்படியான உடல் ஆசைகள் பல உள்ளன. கண்ணீர், தும்மல், கொட்டாவி, தூக்கம், பசி, தாகம், மலம், சிறுநீர், காற்று, ஏப்பம் இப்படியாக பத்து உள்ளன. இதிலே நாம் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன.
           முதலாவதாக... இந்த இச்சைகள் இயல்பான அளவில் இருக்கும்வரை நம்முடைய உடல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். இவற்றில் ஏதாவது ஒன்று அதிகமானாலோ, குறைந்தாலோ பிரச்சனைதான். சிறுநீர் அதிகமாக வந்தால், சக்கரை நோயாக இருக்க வாய்ப்புண்டு. தும்மல் அதிகமாக வந்தால், தடுமலாக இருக்கலாம்.
           இரண்டாவதாக... இந்த இச்சைகள் வருவதும் - அவற்றை நாம் தீர்த்துக் கொள்வதும் இயல்பாகவும் - முறையாகவும் இருக்க வேண்டும். இந்த இச்சைகள் தோன்றாத சமயத்தில் அவற்றை நாம் வற்புறுத்தி வரவழைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால், அதன் மூலமாகவும் நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
           மூன்றாவதான முக்கிய விஷயம்: இந்த இச்சைகளில் எதையுமே நாம் அடக்கி வைக்கக் கூடாது. நாகரீகம் என்று கருதியோ, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று வெட்கப்பட்டோ இவற்றை அடக்கி வைத்தால், அது பல்வேறு நோய்களில் கொண்டு போய் நம்மைத் தள்ளிவிடும். ஏதோ ஒருநாள், ஒரு சமயம் என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து நடக்கும் போது, பல நோய்களுக்கு அது வழிவகுக்கும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

'சுன்னத்' என்று சொல்லப்படுகிற நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளை நாம் ஆராயும் போது, இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

முதலாவதாக கண்ணீர் பற்றிப் பார்ப்பபோம்...

கண்ணீர் என்பது நமது உடல் சார்ந்த ஓர் இச்சைதான். தன்னம்பிக்கை இல்லாமல், சும்மா கோழைத்தனமாக அழுது புலம்புவதுதான் தவறாகும். மற்றபடி சோக நேரங்களில் கண்ணீர் வடிப்பது தவறல்ல. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களே, என்ன நினைப்பார்களோ என்று கண்ணீரைர அடக்கி வைக்கக் கூடாது.
அழுதால், கண்ணீர் விட்டால் நம் மனதில் உள்ள பாரம் குறையும். அதே சமயம் அதை அடக்கினால், கண்வலி வரும் என்பது மாத்திரமல்ல. என் வழியை ஏன் தடுத்தாய் என்று கோபித்துக்கொண்டு, கண்ணீர் மூக்கு வழியாக, சளியாக ஒழுக ஆரம்பித்து விடும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இபுறாஹீம் இறந்த போது, அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது, அருகில் நின்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்ற நபித்தோழர், இறைத்தூதர் அவர்களே... நீங்களுமா அழுகின்றீர்கள் என்று ஆச்சரியத்துடன் வினவினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒப்பாரி வைத்து அழுவதையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதையும்தான் நான் தடை செய்துள்ளேன். கண்ணீர் விடுவதையும் - அதன் மூலம் சோகத்தை வெளிப்படுத்துவதையும் நான் தடை செய்யவில்லை. சோகத்தின் போது இதயம் வெளிப்படுத்தும் மென்மையான உணர்வு இது. இதை நாம் தடை செய்திடக்கூடாது என்று அவருக்கு விளக்கினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்: இரண்டு துளிகள் இறைவனுக்கு பிடித்தமான துளிகளாகும் என்று, இறைவனின் பாதையில் சிந்தப்படும் ஒரு தியாகியின் உதிரத்துளி. இரண்டாவது தனிமையில் தனது தவறுகளை நினைத்து இறைவனுக்கு முன் அழும் ஒரு வணக்கசாலியின் கண்ணீர் துளி. இந்த நபிமொழியையும் இங்கே நாம், நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக தும்மல் பற்றிப் பார்ப்போம்...

நமது நாசித்துவாரங்களில் தூசு படியும் போது ஏற்படுவதுதான் இந்த தும்மல். தும்மும் போது நமது உடலிலிருந்து கிருமிகள் வெளியாகின்றன. அந்த வகையில் தும்மல் என்பது, நமக்களித்த ஓர் அருட்கொடையாகும். எனவே தான், தும்மியவுடன் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இறைவனைப் புகழுமாறு இஸ்லாம் கற்றுத் தருகிறது.
தும்முவதற்கான உணர்வு ஏற்பட்டால், நாம் அதை தடுத்து நிறுத்த முயலக்கூடாது. அருகில் உள்ளவர்கள் தும்முபவரை ஏளனமாகவும் பார்க்கக் கூடாது. ஏனெனில், தும்முவது என்பது ஒருவருடைய விருப்பத்தைப் பொறுத்ததல்ல. அதோடு தும்மலை எளிதாக அடக்கவி விடவும் முடியாது. அதேசமயம், 'தும்முகிறேன்' என்று சொல்லிக்கொண்டு, எதிரில் உள்ளவரின் ஆடைகள் பறக்கும் அளவுக்கு, அல்லது வெளியாகும் சளி எதிராளியின் மீது மழைஎன பொழியும் அளவுக்கு அநாகரீகமான முறையில் சத்தமாக தும்மக் கூடாது.
தும்மும் உணர்ச்சி நமக்கு ஏற்பட்டதும் உடனே நம்முடைய வாயையும் -மூக்கையும் கைக்குட்டையால் மறைத்து முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தும்முவதால் ஏற்படும் சத்தம் குறையும். வெளியாகும் கிருமி அடுத்தவரை பாதிக்காமலும் இருக்கும். அதன் மூலம் அவர் அருவருப்பு கொள்ளாமலும் இருப்பார்.
நாம் தும்மும்போது காற்று மிக வேகமாக வெளியேறுகிறது. இதை அடக்கும் போது, அந்த வேகமான காற்று அப்படியே திரும்பி உட்புறத்தைத் தாக்கும். இதனால் தலைவலி, கழுத்து வலி, சைனஸ் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். எனவே, 'தும்மல்' வந்தால் தும்மி விடுங்கள். அதனால் 'இன்னல்'குறையும்.

அடுத்து கொட்டாவி, அதைத் தொடர்ந்து வரும் தூக்கம் பற்றிப் பார்ப்போம். கொட்டாவியும் உடல் இச்சைகளில் ஒன்றுதான். மற்றவர்கள் பார்த்தால், தன்னைச் சோம்பேறி என்பார்களே என்று சிலர் கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்குவார்கள். இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அவ்வாறு அடக்கினால், அதன் மூலம் 'இதய நோய்' வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தும்மல் போடும் போது வாயிலிருந்து வெளியே கிருமிகள் வெளியாவதைப் போல, கொட்டாவி விடும்போது வெளியிலிருந்து வாய்க்குள் கிருமிகள் போக வாய்ப்புண்டு. எனவேதான், ''அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்'' சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து நான் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற இஸ்லாம் பணிக்கிறது.
கொட்டாவி விடும் போது இடது கையால் சற்று வாயை மூடியும், சத்தம் அதிகம் வெளியேராமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலர் கொட்டாவி விடும் போது யானை பிளிருவதைப்போல சத்தமிடுவார்கள். தொண்டை மற்றும் குடல் பகுதிகளே தெரியுமளவுக்கு வாயைப் பிளப்பார்கள். இது நாகரிகமான செயல்கள் அல்ல.
பகல் நேரங்களில் சோம்பலினால் சிலருக்கு கொட்டாவி வருவதுண்டு. முறையற்ற தூக்கமே கொட்டாவிக்கான முக்கியமான காரணமாகும். எனவே, கொட்டாவியை அடக்கி அதனால் உடலில் வேண்டாத உபாதைகளை உருவாக்கிக் கொள்வதை விட, சிறிது நேரம் தூங்கி விடுவது நல்லது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் பகல் உணவுக்குப் பின் சிறுது நேரம் ஓய்வெடுப்பதை நமக்கு சுன்னத்தாக்கியுள்ளார்கள். இந்த ஓய்வுக்கு 'கைலூலா' என்று அரபு மொழியில் கூறுவார்கள். இத்தகைய சிறு ஓய்வு, பகலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு உற்சாக மூட்டுவதாக உள்ளது என ஆய்வுகள் அறிவிக்கின்றன.
இரவைப் பொறுத்தவரை, இரவு உணவு, இஷாத் தொழுகை முடிந்தவுடன் தூங்கச் சென்று விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அறிவுத் தேடல், விருந்தினர் உபசரிப்பு, இல்லற உறவு இந்த மூன்று தேவைகளுக்காக மட்டுமே இஷாவுக்குப் பின் விழித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.

இதல்லாமல் வீண் அரட்டை, நடுநிசியைத் தாண்டிய ஆட்டம் பாட்டம், தொலைக்காட்சி காணல் போன்றவை எல்லாம் நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைப்பவை என்பதை நாம் உணர வேண்டும். பகல் உழைப்பு எவ்வளவு இன்றியமையாததோ அது போல, இரவு ஹக்கும் இன்றியமையாத ஒன்று என்பதை நாம் புரிய வேண்டும்.
-தொடரும்..

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}