Thursday, January 12, 2012

நபிகளாரும் தொழுகையும்


நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் உலகிற்கே அருளாக அனுப்பப் பட்ட அருள் நபி ஆவார்கள். என்றுமே தன் சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்தும் , அல்லாஹ்வின் அருளை தன் சமுதாயமும் முழுமையாக பெற வேண்டும் ஆவலில் அதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்து கொண்டே இருந்தனர். மற்ற சமுதாயத்;தை விட எல்லா வகையிலும் நாம் உயர்வுமிக்க  சமுதாயமாக சிறந்திட அவர்களே காரணமாவார்கள். தான் பெற்ற அனைத்து சிறப்புகளையும் தன் சமுதாயமும் பெற வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள். அதில் ஒன்றுதான் நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை சந்தித்து விட்டு வந்த பேற்றினை போன்று தம் பாசத்திற்குறிய சமுதாயமும் ஏதாவது வழியில் அடைய வேண்டும் என்ற நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம அவர்களின் ஆவலை,  அல்லாஹ்; தொழுகையின்  மூலம்; நிறைவேற்றி, தன் ஹபீபை சந்தோஷப் படுத்தினான். அந்த தொழுகையை சாமானிரும் அல்லாஹ்வுடன் சம்பாசனை செய்யும் வணக்கமாகவும் ஆக்கியுள்ளான்.
இஸ்லாமியக் கட்டடத்துக்குள் நுழைந்த எவருக்கும் கலிமாவிற்கு அடுத்த இடத்தில் உள்ள தொழுகை, கட்டாய கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. அதுதான் வணக்கங்களின் இதயம் போன்றதாகும்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை அதிகப்படுத்தும் வல்லமைமிக்க இத்தொழுகைக்கு எவ்வளவோ சிறப்பினை கூறியுள்ளார்கள்.   தன்னுடைய கண்குளிர்ச்சியே தொழுகையில்தான் உள்ளது என்றும், தொழுகைதான் சுவர்க்கத்தின் திறவுகோள் என்று அருளியுள்ளார்கள். அவர்களின் வாழ்வில்; சந்தோஷம், துக்கம், தேவைகள் நிறைவேற, வறுமை அகல என்று எந்தச் சூழல் வந்தாலும் அனைத்து நிலைகளிலும் தொழுகையை கொண்டுதான் உதவி தேடுவார்கள், நன்றி தெரிவிப்பார்கள். போர் காலங்களிலும், கடுமையாக நோய்வாய் பட்டிருந்தபோதிலும் அவர்கள் கடமையான தொழுகையை விட்ட நிகழ்வு பதியப்படவில்லை. அவர்களை பற்றி அன்னை ஆயிஷா ரளி அவர்களிடம் கேட்கப்பட்டபோது...
ஹஜ்ரத் அதாவு ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் அன்னை ஆயிஸா ரளி அவர்களிடம், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தாங்கள் பார்த்த ஆச்சரியமான ஏதேனும் நிகழ்ச்சியை கூறும்படி வேண்டினேன். ' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எந்தச் செயல்தான் ஆச்சரியமற்றது! ஒரு நாள் இரவு என்னிடம் வந்தவர்கள் படுக்கையில் என் பக்கத்தில் படுத்தார்கள். பிறகு 'என்னுடைய இரட்சகனை வணங்க விடு' என்று கூறிவிட்டுப் படுக்கையை விட்டு எழுந்து உளுச் செய்துவிட்டுத் தொழ நின்றுவிட்டார்கள். தொழுகையில் அழ ஆரம்பித்தார்கள். கண்ணீர் அன்னாரின் புனித நெஞ்சுவரை வழிந்தோடியது. பிறகு ருகூவு செய்தார்கள். ருகூவிலும் இவ்வாறே அழுதுகொண்டிருந்தார்கள். ஸஜ்தா செய்தார்கள், அதிலும் இவ்வாறே அழுதுகொண்டிருந்தார்கள், ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின்பும் அழுது கொண்டிருந்தார்கள், சுப்ஹுத் தொழுகைக்கு ஹஜ்ரத் பிலால் ரளி அவர்கள் வந்து அழைக்கும் வரை இந்நிலை தொடர்ந்தது 'யா ரஸூலல்லாஹ், தாங்கள் ஏன் இவ்வளவு அழுகிறீர்கள்? அல்லாஹுத் தஆலா தங்கள் முன்பின் பாவங்களை மன்னித்துவிட்டானே!'' என்று நான் நபி ஸல் அவர்களிடம் கேட்க, 'நான் நன்றியுள்ள அடியானாக ஆக வேண்டாமா?'' என்று பதில் அளித்த நபி ஸல் அவர்கள், ان فى خلق السموات والارض واختلاف الليل والنهار لآيت الاولى الالباب என்ற ஆயத்திலிருந்து சூரா ஆலஇம்ரானின் கடைசி ஆயத்துவரை இன்று என் மீது இறங்கியுள்ள நிலையில் நான் எவ்வாறு வணங்காமல் இருக்க முடியும்' என்று கூறினார்கள். (இகாமத் ஹுஜ்ஜா, இப்னு ஹிப்பான்) இதே போன்று புகாரியில் இடம் பெற்ற ஹதீஸில்
ஹஜ்ரத் முஙீரா ரளி அவர்கள் கூறுகிறார்கள். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் தங்களின் பாதங்கள் வீங்கும் வரை நீண்ட நேரம் நின்று தொழுவார்கள். 'அல்லாஹுதஆலா தங்களது முன் பின் பாவங்களை (நிகழ்ந்து இருந்தாலும்) மன்னித்துவிட்டானே!' (ஏன் இவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்? என்று அன்னாரிடம் கேட்கப்பட்டது''. 'நான் நன்றியுள்ள அடியானாக ஆகவேண்டாமா?'' என்று நபி ஸல் அவர்கள் பதில் சொன்னார்கள்.  (புகாரி)
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் என்றிருந்தும் கூட இத்தனை சிறப்பினை கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றியுள்ளவனாக இருக்ககூடாதா? என்று கேட்டுள்ளனர். தொழுகையில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; தொழும் போது மன ஓர்மையோடு நன்றிப்பெருக்கோடு தொழுதுள்ளார்கள் என்பதை நாம் சிந்தித்து நம் தொழுகையின் நிலைப்பாடு என்ன என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் பல தடவைகள் குறிப்பிட்ட ஆயத்துக்களை ஓதும்போது அழுதுள்ளார்கள். அவர்கள் தொழுகையில் அழும்போது ஏற்படும் சப்தத்தை பற்றி ஹஜ்ரத் அப்துல்லாஹ் ரளி அவர்கள் குறிப்பிடுவார்கள்:-
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும் போது அவர்களின் புனிதமான நெஞ்சிலிருந்து அழும் சப்தம் (சுவாசம் தடைபடுவதால்) திருகையின் சப்தத்தைப் போல், தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்'' என்கிறார்கள்.  (அபூதாவூத்)
இன்று நாம் அதிசயமாக பார்க்கும் சூரிய கிரகணமோ, சந்திரகிரகணமோ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; காலத்தில் ஏற்பட்டால் இது அல்லாஹ்வின் கோபத்தின் வெளிப்பாடோ என்ற அச்சத்தின் காரணமாக உடனே பள்ளிக்கு சென்றுவிடுவார்கள். அவை மாறும் வரை பள்ளியிலேயே வணக்கத்திலே ஈடுபடுவார்கள். அப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  காலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு:-
ஹஜ்ரத் அபூபக்ரா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபியவர்கள் தமது போர்வையை இழுத்தவாறு (விரைவாக) பள்ளிக்குச் சென்றார்கள். ஸஹாபாக்கள் அன்னாரிடம் ஒன்று கூடினார்கள். ஸஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு  ரகஅத் தொழவைத்தார்கள். அதே சமயம் கிரகணமும் நீங்கிவிட்டது. அதன் பிறகு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ் தஆலாவின் அத்தாட்சிகளில் இரு அத்;தாட்சிகளாகும் யாருடைய மரணத்தின் காரணமாகவும் கிரகணம் ஏற்படுவதில்லை (மாறாக வானம், பூமியிலுள்ள இதர படைப்பினங்களைப் போல இவற்றின் மீதும் அல்லாஹுதஆலா தன் ஆதிக்கத்தை செலுத்துகிறான். அவை பிரகாசிப்பதும் அவை இருள்மயமாவதும் அவன் வசம் உள்ளது) ஆகையால், சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டால் கிரகணம் நீங்கும் வரை தொழுகையிலும், துஆவிலும் ஈடுபட்டிருங்கள்'' என்று சொன்னார்கள். (அன்றைய தினம் தான்) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் இப்றாஹீம் ரளி அவர்களின் மரணம் சம்பவித்தது. அச்சமயம் மக்களில் சிலர், 'இவரது இறப்பால் தான் கிரணம் ஏற்பட்டது' என்று பேசத் தொடங்கினர், அதன் காரணமாகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;; இவ்வாறு குறிப்பிட்டார்கள். (புகாரி)
'ஏதேனும் முக்கியமான பிரச்சனை ஏற்பட்டால், உடனே தொழுகையில் ஈடுபட்டுவிடுவது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கமாக இருந்து வந்தது' என்று ஹஜ்ரத் ஹூதைபா ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (அபூதாவூத்)
அல்லாஹ் தன் திருமறையில் ''முஃமின்களே நீங்கள் பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்' என்ற ஆயத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு என்ன தேவை ஏற்பட்டாலும் அவர்கள் தொழுகை கொண்டுதான் முறையிடுவார்கள். அதுபோல் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏவுவார்கள். அதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
குறைஷி கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் வாயிலாக ஹஜ்ரத் மஃமர் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள்.'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தாரின் செலவினங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால், குடும்பத்தார்களைத் தொழுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவுவார்கள். பிறகு, وأمر اهلك بالصلوة واصطبر عليها لا نسئلك رزقا نحن نرزقك والعاقبة للتقوى 'நபியே! உமது வீட்டாரைத் தொழுமாறு ஏவுவீராக! நீரும் தொழுகையைக் கடைபிடித்து வருவீராக, நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை, உமக்குத் தேவையானவற்றை நாமே தருகிறோம். நல்ல முடிவு பயபக்தி உள்ளவருக்கே!' (சூரா தாஹா 132) என்ற ஆயத்தை ஓதிக்காட்டுவார்கள்' என்று முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்)
நபி ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள அவர்கள் கடைசி காலத்தில் கால்கள் தரையில் இழுபட இரண்டு தோழர்களுடைய உதவியுடன் மஸ்ஜிதுக்கு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
பாவக்கறையே படியாத நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹூஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் கண் குளிர்ச்சியை கண்டு, பேரின்பாக்கி தொழுதிருக்கிறார்கள். எந்த முஃமின் தொழுகையை அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் மேலீட்டால் தொழ முற்படுகிறானோ, அவனுக்கு அது கண் குளிர்ச்சியாகவும் பேரின்பமாகவும் ஆகிவிடுகிறது. நம் தொழுகையையும் அல்லாஹ் கண் குளிர்;ச்சியாக ஆக்கியருள்வானாக!

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}