உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இதயத்தை சற்றுதிறந்து வைத்துக் கொள்ளுங்கள்.....
இப்போது கற்பனையில் உங்கள் முன்னால்.... ஓருஜனாஸா,
நான்கு பேர் நான்கு மூலைகளையும் சுமந்தவண்ணம் உங்களை நெருங்கி வருகின்றனர்.
நான்கு பேர் நான்கு மூலைகளையும் சுமந்தவண்ணம் உங்களை நெருங்கி வருகின்றனர்.
உங்கள் முன்னிலையில் ஜனாஸா வைக்கப்படுகின்றது.
அதற்கான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அணிவகுத்து நிற்கின்றனர்..
அதற்கான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அணிவகுத்து நிற்கின்றனர்..
நான்கு தக்பீர்கள் சொல்லப்படுகின்றன. கடைசி த்தக்பீருடன் தொழுகை முடிகின்றது.
இப்போது உங்கள் மனதில் ஒரு நெருடல்....
அந்த மையித் யாருடையது என்பதை பார்க்கவேண்டும் போல் ஓர் உணர்வு.
அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்கள். அதன் முகத்தை மூடியிருக்கும் அதன் திறையை மெதுவாக அகற்றுகின்றீர்கள்.?????????????????????????
அந்த மையித் யாருடையது என்பதை பார்க்கவேண்டும் போல் ஓர் உணர்வு.
அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்கள். அதன் முகத்தை மூடியிருக்கும் அதன் திறையை மெதுவாக அகற்றுகின்றீர்கள்.?????????????????????????
இப்போது ...!
நீங்கள் பார்த்தது யாரையோ அல்ல உங்கள் சொந்த முகத்தைதான்!!!!!!!!!!
நீங்கள்தான் அங்கே மையித்தாக வைக்கப்பட்டுள்ளீர்கள்.
நீங்கள் பார்த்தது யாரையோ அல்ல உங்கள் சொந்த முகத்தைதான்!!!!!!!!!!
நீங்கள்தான் அங்கே மையித்தாக வைக்கப்பட்டுள்ளீர்கள்.
ஆசைப்பட்டு உங்களை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது.
மாடிக்கட்டடங்கள் கட்டுவதற்காக ஹஜ் போகாது சேர்த்த உங்கள் பணம் பிரயோசனமற்றதாகிவிட்டது.
தொழும் நேரங்களை மறந்த்து நீங்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் வீணாகிவிட்டது..
உங்கள் ஆடம்பரவாகனங்கள்,
குழந்தைச் செல்வங்கள்,
அன்புமனைவி..........எல்லாமே முடிந்துவிட்டது.
இப்போது உங்களுக்காக எஞ்சி இருப்பது நீங்கள் உடுத்தி இருக்கும் உங்கள் கபன் பிடவைமட்டுமே!!
உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை சுமந்து உங்கள் நிரந்ததர வீட்டில் வைத்துவிட்டார்கள்.
ஒரு பிடி மண் உங்கள் மேல் விழுகிறது.
உலகமே இடிந்து விழுந்துவிட்டது போல் உணர்கிறீர்கள்.
கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது.
இந்தநிமிடம் .... காரிருளில் நீங்கள் மட்டுமாக
தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள்.
எல்லோரும் நடந்துசொல்லும் நிலமட்டத்திற்கு கீழால் ஆரடி நிலத்தில் நீங்கள் மட்டும் .
நீங்கள் மட்டும் தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள்.. !!
காசோ பணமோ,
குழந்தைகளோ, மனைவியோ இல்லாததனிமை .
குறந்தபட்சம் ஓர்கையடக்கத் தொலைபேசியாவது, இல்லாததனிமை.
இரண்டு மலக்குமார் உங்களை நோக்கிவந்து கொண்டிருக்கிறார்கள்..
இப்போது நீங்கள் என்னபதில் கூறத்தயாராகி இருக்கின்றீர்கள்.
அந்த நிமிடத்தை கொஞ்சம் கற்பனையில் கொண்டுவந்து, (இந்தக்கேள்விகளை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்..)
நான் உண்மையான ஒருமுஃமீனா??
குரானின் ஒளியில் வாழ்கிறேனா??
தொழுகையை விடாது தொழுகிறேனா??
வருடம் ஒரு முறை வரும் ரமலானில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேனா??
கடமையான ஹஜ்ஜை உரியமுறையில் நிறைவேற்றுகின்றேனா?
போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடையை தைரியமாக கூறப்போகின்றீர்களா?
வருடம் ஒரு முறை வரும் ரமலானில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேனா??
கடமையான ஹஜ்ஜை உரியமுறையில் நிறைவேற்றுகின்றேனா?
போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடையை தைரியமாக கூறப்போகின்றீர்களா?
காலத்தை வீணாகக் கடத்திவிட்டேனே.
ஒரு முறையாவாது அல்லஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஹஜ் செய்திருக்கலாமே,
500/= நோட்டுக்களை விளம்பரத்துடன் கொடுத்ததற்குப்பதிலாக, யாருக்கும் தெரியாமல் நன்மைகளை கொள்ளை அடித்திருக்களாமே.
என்நோயை சாட்டுவைத்து நோன்புகளை விட்டுவிட்டேனே, கொஞ்சம் மனச்சாட்சிக்கு பொருத்தமாக நடந்து கொண்டிருக்களாமே.
வட்டி எடுக்காமல் லாபமோ நட்டமோ வியாபாரத்தையே முழுமனதாக செய்திருக்களாமே.
குரான் கூறிய ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய ஆடவர்களின் முன்னால் என் அழங்காரத்தை மறைத்து கணவனுக்கு மட்டும் காட்டி இருக்கலாமே.
குழந்தைகளை சிறந்தமுறையில் வளர்த்திருக்கலாமே..
தொலைக்காட்சியின் முன்மண்டியிட்டதற்குப்பதிலாக சுஜூதில் இறைவனை நெருங்கி இருக்கலாமே.
தொலைபேசியில் அரட்டை அடித்ததற்குப்பதிலாக குரானுடன் உரையாடி இருக்களாமே, இல்லைஏதாவதுபயனுள்ளபுத்த்கத்தைவாசித்துஇருக்களாமே..
என கைசேதப்படப் போகின்றீர்களா??????
சிந்தியுங்கள்!!
உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இடமல்ல.. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை. இம்மை என்பது ஒரு பயணம் தாமதிக்காமல் எம்மை மறுமையின் வாசலில்கொண்டு சேர்த்திடும்.. அந்தப் பயணத்தில் கண் மூடித்தனமாய் காலத்தை கழிக்காமல் திட்டமிட்டு எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இல்லையேல்.. எம்வாழ்வும்இவ்விறைவாக்குகளின்பிரதிபளிப்பாகிவிடும்.
நஊதுபில்லாஹிமின்ஹா...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾ ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾ உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.
وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿11﴾
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
கடைசித் தருணத்தில் இறைவனிடம் கெஞ்சும் துரதிஷ்டவாளிகளாய் நாம் இருக்காது, எம்மை இறைவனின் பாதையில் திசை திருப்பிக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் இறைவன் தன் அருள்மறையில்
لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (சூராரஃத் 11)எனக்கூறுகிறான்.
No comments:
Post a Comment