Tuesday, October 5, 2010

Pallaaku vali (Razhi) மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் (ரழி

      மஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்றும் வாழுகின்ற பெருன்பான்மை மக்கள் கண்ணெதிரே கண்ட வலி (இறைநேசர்) என்ற புகழுக்கும், போற்றழுக்கும் உரிய மாமேதை, இறைநேசச் செல்வர் அல்-ஆரிபில்லாஹ், சாஹிபுல் கஸ்பி வல்கரமா, ஹாஜுல் ஹரமின், ஹழ்ரத் ஹபீப் முஹம்மது சதகதுல்லாஹ் ஆலிம் (ரஹ்) அவர்கள் மக்களால் பல்லாக்கு வலியுல்லாஹ்  என்று அழைக்கப்பட்டனர்.
     'விழாயத்தில்' ஒப்பற்ற உயர்பதவி பெற்ற இப்பெரியார் அவர்கள், அண்ணல் நபி (சள்ளள்ளஹு அலைஹிவசள்ளம்) அவர்களால் "நானும் அபூ பக்கரும் ஒரே மண்ணில் படைக்கப்பற்றவர்கள்" என்று இயம்பப்பட்ட இஸ்லாத்தின் முதலாம் கலிபா அமீருல் முமினீன்   அபூ பக்கர் சித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் 26 வது தலைமுறையில் உதித்தவர்கள்.
இதோ அவர்களின் வம்சாவழித்தொடர்:

1. சையிதுனா அபூ பக்கர் சித்தீக்(ரழி யல்லாஹு அன்ஹு) 
2. இவர்களின் மகனார்: சையிதுனா அப்துர் ரஹ்மான் (ரழியல்லாஹு அன்ஹு )
3.இவர்களின் மகனார்: ரைமு (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
4.இவர்களின் மகனார்: முர்ராஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
5 .இவர்களின் மகனார்: கிலாபு (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
6 .இவர்களின் மகனார்: குசைஈ ( ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
7  இவர்களின் மகனார்: அப்துல் முனாப் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
8  இவர்களின் மகனார்: ஹாசிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
9  இவர்களின் மகனார்: அப்துல் அஜீஸ் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
10  இவர்களின் மகனார்: ஹசன் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
11  இவர்களின் மகனார்: முஹம்மது கல்ஜி (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
12  இவர்களின் மகனார்: கிளுர் முஹம்மது (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
13  இவர்களின் மகனார்: சிஹாபுத்தீன் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
14  இவர்களின் மகனார்: அஹ்மத் ஹாஜி (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
15  இவர்களின் மகனார்: முஹம்மது (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
16  இவர்களின் மகனார்: ஷைக் அஹ்மத் ஆலிம் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
17  இவர்களின் மகனார்: ஷைகு அலி நைனன் நுஸ்கி (ரஹ்மதுல்லாஹி அலைஹீ) 
18  இவர்களின் மகனார்: அலாவுதீன் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
19  இவர்களின் மகனார்: சதகதுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
20  இவர்களின் மகனார்: மஹ்மூத் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
21  இவர்களின் மகனார்: சதகதுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
22  இவர்களின் மகனார்: முன்னா அஹ்மத் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
23  இவர்களின் மகனார்: சதகதுல்லாஹ் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
24  இவர்களின் மகனார்: சையிது இஸ்மாயில் (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
25  இவர்களின் மகனார் :  நூர் முஹம்மது (ரஹ்மதுல்லாஹி அலைஹீ)
26 இவர்களின் அருந்தவ புதல்வர்தான் நமது அண்ணல்
மகான் பல்லாக்கு வலியுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு )   

மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் 1925ஆம்  ஆண்டு இறைவனை நம்பியவர்கள் என்ற சிறப்பு பொருள் பெற்ற நம்புதாளை மாநகருக்கு முதன்முதலாக வருகை தந்தபோது இவ்வூர் மக்கள் மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் மீது பொழிந்த அன்பையும், மரியாதையையும் கண்டு உள்ளம் பூரிதவர்களாஹா மக்களை பார்த்து, ''நம்பெருமான் ஸல்லல்லஹு அலைஹிவசள்ளம் அவர்கள் பெயரில் ஆண்டு தோறும் மௌலிது சரீப் ஒதி வரவேண்டும். இதனுடைய சிறப்பை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வர அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். அதற்காக ஓயான்குண்டு மைதானத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறேன் என்றனர்.  இன்னும் இதற்காக ஜமாதுல் ஹிதாயா சங்கம் என்ற அமைபை நிருவினார்கள். அவர்கள் நிலைநாட்டிய பாரம்பரியமே இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மௌலிது மண்டபத்திற்கு மகாமுத் தபஸ்ஸும் (புன்னகை தவழும் இடம்) என பெயர் சூட்டி மகிழ்வித்தார்கள். மஹான் அவர்களின் ஆயிட் காலம் வரை அன்னாரின் முன்னிலையிலே இவ்விழா நடந்து வந்தது. அல்லாஹ்வின் பெரருளாழும்  மஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) அவர்களின் துஆ பரக்கதாலும் இவ்விழா இன்றும் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1929 -ஆம் ஆண்டு நம்புதாளைக்கு வலியுல்லாஹ் அவர்கள் விஜயம் தந்த பொழுது இவ்வூரில் கடுமையான காலரா நோய் பரவி மக்களை பீதி அடைய செய்திருந்தது. இதை மக்கள் மஹான் பல்லாக்கு நாயகம் (ரஹ்) அவர்களிடம் கவலையோடு முறையிட்டார்கள். மஹான் அவர்கள் இவ்வூரை தனது அருளாட்சிக்கு உட்பட்டதாக தத்து எடுத்துக் கொண்டு இவ்வூரிலுள்ள ஒவ்வரு குடியும் மாதம் 1 -க்கு அரையணா வீதம் வருடத்திற்கு 6 -அனா "இருசால்" செலுத்தி வரவேண்டும் எனக் கட்டளை இட்டார்கள். அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுவரை இருசால் செலுத்தி வரப்படுகிறது. அன்று முதல் இவ்வூரில் இறைவன் அருளால் காலரா என்னும் கொடிய நோய் இல்லாமல் ஆகிவிட்டது. 
நம்புதாளை மக்களின் நல்வாழக்காக இறைவனிடம் துஆ செய்து மூன்று அரபு பைதுகளை (கவிதைகளை) மனமுவந்து வலியுல்லாஹ் அவர்கள் கூற, கண்ணியத்திற்குரிய மாமேதை அ.க. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் எழுதிய மூன்று பைத்துகளின் சிறப்புகளையும் அதன் விளக்கங்களையும் அறிந்த மாமேதைகள், இந்த து ஆ  மதீனா வாசிகள் தங்கள்மீது செலுத்திய பாசத்துக்காக நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் மதீனா வாசிகளுக்காக எவ்வாறெல்லாம் து ஆ செய்தார்களோ அந்த அடிப்படையில் தான் இந்த அற்புதமான து ஆ க்களும் அமைந்துள்ளன. என்று பாராட்டுகிறார்கள். 


இந்த  அற்புதமான து ஆ க்களை நம்புதாளை மக்கள் அனைவரும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களின் இல்லங்களில் ஓதி தாங்களும் தங்கள் சந்ததிகளும், நம்வூர்மக்கள் அனைவரும் எப்பொழுதும் எல்லா வளமும் பெற்று  மஹான் அவர்களின் து ஆ வோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்  அருள் புரிந்து நம் அனைவரையும் இரு உலகிலும் வெற்றியாளர்களாக ஆக்குவானாக. ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.


















No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}