بسم الله الرحمن
الرحيم
ويل يومئذ للمكذبين
يايها الذين آمنوا
اتقوالله وكونوا من الصدقين
قال النبي صلى الله
عليه وسلم آية المنافق اربع .1 اذا حدّثَ كَذَ بَ 2.اذا ئتمن خان 3. واذا وعد اخلف (بخارى، مسلم)
قال النبي صلى الله
عليه وسلم : قل الحق ولوكان مرا
நபி (ஸல்); அவர்கள் சொன்னார்கள்: நெருப்பு விறகைத் தின்று விடுவது
போல் பொய்யானது ஈமானை தின்று விடுகிறது.
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ
الزُّورِ 22:30
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்: விக்கிரகங்களின்
அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள்
விலகிக் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உண்மை பேசுபவது நன்மையின்
பக்கம் இழுத்துச் செல்கிறது. நிச்சயமாக ஒருவன் உண்மையே பேசிக்கொண்டிருந்தால் இறைவனிடத்தில்
சித்திக்'உண்மையாளர்' என்று எழுதப்படும்.
பொய் பாவத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது, பாவம் நரகத்தின் பக்கம் இழுத்துச்
செல்கிறது. நிச்சயமாக ஒருவன் பொய்யே பேசிக்கொண்டிருந்தால் இறுதியாக அவன் அல்லாஹ்விடம்
பொய்யன் என்று எழுதப்பட்டுவிடுவான். - புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு மனிதன் ஒரு பொய்யை
சொன்னால் அந்த பொய்யின் வாடை வானவர்களை ஒரு மைலுக்கு அப்பால் நிறுத்தி விடுகிறது.
- நூல்: திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : 3 மனிதர்களிடம் அல்லாஹ் தஆலா கியாமத் நாளென்று பேசவும் மாட்டான். அவர்கள் ரஹ்மதுடைய
பார்வையால் பார்க்கவும் மாட்டான். பாவங்களிலிருந்து அவர்களை பரிசுத்தப்ப படுத்தவும்
மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதணையுண்டு. என்ற ஆயத்தை 3 முறை ஓதினார்கள். ஸஹாபாக்கள் யாரஸுலல்லாஹ் நஷ்டமடைந்துவிட்ட, தோல்வியடைந்துவிட்ட அம்மக்கள்
யார்? என அபுதர் ரளி கேட்டார்கள்.
1.கைலியை கெரண்டைக்கு கீழ் தொங்க விடுபவர். 2. உபகாரம் செய்து விட்டு சொல்லிக் காட்டுபவர். 3. பொய் சத்தியம் செய்பவர். (முஸ்லிம்)
وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُواْ حَتَّى إِذَا ضَاقَتْ
عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ أَنفُسُهُمْ وَظَنُّواْ
أَن لاَّ مَلْجَأَ مِنَ اللّهِ إِلاَّ إِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ
لِيَتُوبُواْ إِنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ 9:118
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி
அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத்
தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள்
விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உண்;மை முஸ்லிம் அந்நிய பெண்ணிடத்தில்
ஈடுபடுவானா?
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : சில வேலைகளில் நடப்பதுண்டு.
உண்மை முஸ்லிம் பொய்யுரைப்பானா?
(ஸல்)சொன்னார்கள்: உண்மை முஸ்லிம்
பொய் சொல்ல மாட்டான். பொய் சொல்பவன் உண்மை முஸ்லிம் அல்ல.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : தன் இரு கண்களும் பார்த்திராத
ஒன்றை தன் இரு கண்களுக்கும் காட்டுவது அனைத்தையும் விடப் பெரிய பொய் ஆகும். (புகாரி)
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு முஸ்லிம் கோழையாக
இருக்கலாம்? இருக்கலாம்.
கஞ்சனாக இருக்கலாமா? இருக்கலாம்
பொய்யனாக முடியாது. கூடாது.
إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ قَالُوا نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ اللَّهِ
وَاللَّهُ يَعْلَمُ إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ
لَكَاذِبُونَ (2)
ஒரு போருக்கு சென்றுவிட்டு வந்த போது, அப்துல்லா இப்னு உபை முஹாஜிர்களை
மதினாவை விட்டு வெளியேற்றி விடவேண்டும் என்று அவனது நண்பர்களிடத்தில் பேசிக்கொண்ட விஷயம்
ஜைது ரளி காதுக்கு வந்தது, அதை ஸல் அவர்களிடம் சென்று சொன்னார்கள். ஸல் அப்துல்லாஹ் இப்னு உபையை விசாரித்தார்கள்.
அவன் ஸைது பொய் சொல்கிறார் என்னை மாட்டவைக்க பார்க்கிறார். ஸல் : ஜைது ரளியிடம் கேட்ட
போது அவர்கள் ரொம்ப கவலையடைந்து வீட்டிற்கு சென்று அழுதார்கள். இதை வெளிக்கொண்டு வா
என்று அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒருவன் குற்றவாளி அநியாயக்காரன் என்று தெரிந்தும்
அவனுக்காக வாதாடுபவன், உதவி செய்வன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான்.
பெரியவர் இந்த உலகத்துல கெட்ட பழக்கமில்லாத ஒருத்தர் கூட
இல்லையே!
ஒரு இளைஞர் ஏன் அப்படி நினைக்கிறீங்க நான் இல்ல!
பெரியர்: சிக்ரெட் பிடிப்பீங்களா?
இளைஞர்: இல்லை.
பெரியவர்: மது?
இளைஞர்: இல்லை.
பெரியவர்:பெண் சகவாசம்?
இளைஞர்:இல்லை.
பெரியவர்: தம்பி நீதான் மகாத்மா!
இளைஞர்: பெரியவரே! ஒரு சின்ன வீக்னெஸ் எனக்கு. நான் பொய்
மட்டும் தான் பேசுவேன்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : வாடிக்கையாளர், வியாபாரி தங்களின் கொடுக்கல்
வாங்களில் உண்மைபேசி நாணயத்தோடு நடந்து கொள்ளும் வரை இறைவளம் அவர்களுக்கு வழங்கப்படும்.
அப்படியில்லையென்றால் இறைவளம் இல்லாமல் ஆக்கப்பட்டுப்போகும். (புகாரி)
மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வாங்க சாப்பிடலாம் என்று
சொல்பவருக்கு அவர் அழைப்பை ஏற்று கொள்ளவிலையானால் ஒரு குற்றம் ஏற்றுக்கொண்டால் இரண்டு
குற்றம். 1.பொய்யாக அழைத்தது2.அவர் அழைப்பை ஏற்று சாப்பிட்டு விட்டால், விரும்பி கொடுக்காத சாப்பாட்டை உண்மை புரியாமல் அவர் சாப்பிட்டது.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : நீ சொன்னது உண்மை என்று
நம்பிக்கொண்டிருக்க நீ சொன்னது பொய்யாக இருந்தால் இதைவிட அயோக்கியத்தனம் வேறு என்னவாக இருக்க முடியும்.
(அபு தாவுத்)
قُتِلَ الْخَرَّاصُونَ (11)الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَ
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். 51:11அவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : மறுமையில் பொய் பேசுபவனை நெருப்பிலான இரண்டு நாக்குலோடு
எழுப்புவான் (அபு தாவூத்)
7.ஒரு மனிதர் ஸல் அவர்களிடம் வந்து தான் இஸ்லாத்தை தழுவ பிரியப்படுவதாகவும். ஆனால்
விபச்சாரம், களவு, பொய், மது இவைகளை விட மனசில்லை என்றார். ஆனால் ஏதாவது ஒன்றை விட்டு விடுகிறேன்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : பொய் பேசுவதை அறவே விட்டு
விடு என்றனர். ஒரு நாள் விபச்சாரம் நாடி சென்றபோது அவருக்கு (ஸல்) சொன்னது நினைவு வந்தது. நாளை (ஸல்) கேட்டால் உண்மை சொன்னால்
தண்டனை ஏற்க வேண்டியது வருமே! பொய் சொல்ல முடியாதே! என்று அந்த எண்ணததை விட்டுவிட்டார்.
இப்படியே களவையும், மதுவையையும் விட்டு விட்டார். பின் (ஸல்) அவர்களிடம் வருகிறார் யாரஸுலல்லாஹ்! சத்தியம்
என்ற அரும்பொருளால் எனது பாவச்செயல்களை அடைத்து விட்டீர்கள் என்று பாராட்டினார். (தப்ஸீர்
ராஸி)
மனிதர்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கேடு
விளையட்டும். அவன் நாசமாகட்டும். (அஹ்மத், திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : ஒரு பெண் ஸல் யா ரஸுலல்லாஹ் என் கணவருக்கு இன்னொரு
மனைவி இருக்கிறாள் என் கணவர் எனக்கு அளித்ததை விட அதிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து
சக்களத்தியிடம் இது அனைத்தும் என் கணவர் வாங்கித் தந்தது என்ற தோரணையில் நடந்து கொள்ளலாமா? (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் (கிடைக்காத ஒன்றை) உண்மைக்கு
மாறான முறையில் வெளிப்படுத்துகின்றாரோ அவர் பொய் என்ற ஆடையை அணிந்தவர் போன்றவராவார்.
(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
பெருமைக்காக, பகட்டுக்காக, மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதற்காக இல்லாததை இருப்பது
காட்டுவது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழியில் ஒரு
பெண்மணி தன் குழந்தையை வா இனிப்பு தருகிறேன் என்று அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் உண்மையில்
உங்களிடம் இனிப்பு இருக்கிறதா? என்று கேட்டார்கள். ஆம்! என்றார் பெண்மணி. நபி (ஸல்) அவர்கள்
இனிப்பு இல்லையென்றால் அதுவும் பொய்யில் சேர்க்கப்படும் என்றனர்.
துணைவியாக ஒருவரை மணமுடித்து புதிதாக வீட்டிற்கு அழைத்து
சென்றோம். ஸல்: ஒரு கோப்பையில் பாலை எடுத்து வந்து திருப்தியாக குடித்து விட்டு, மணமகளிடம் கொடுத்தார்கள். பசியிருந்தும்
விருப்பமில்லை என்றர். ஒப்புக்கு பதிலளிப்பதை புரிந்து
கொண்டு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ' நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே! என்று கூறினார்கள். (தப்ரானி)
இஸ்லாத்தில் பெரும்பாவங்கள் எவை? நபி (ஸல்) அவர்கள் கேட்கப்பட்டது. 1.ஷிர்க் 2. பெற்றோருக்கு நோவினை 3. பொய் சாட்சி சொல்வது.