Saturday, January 19, 2013

பற்பசைகளால் பல்துலக்குவதால் பற்கள் சுத்தமாகிவிடுமா.?



பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப்போமா!!!
வேப்பங்குச்சி
இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.
உப்பு
உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கிராம்பு
கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.
ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்
நன்றி -செய்தி.கம் 

Thursday, January 17, 2013

பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்





fastfood-1
பாஸ்ட்புட் உணவுகள் அதிகளவு உட்கொண்டால் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பாஸ்ட்புட் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால் தற்போது இந்த உணவுகள் கண்களையும் பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.
பாஸ்ட்புட் உணவு தொடர்பாக மருத்துவ பத்திரிகை ஒன்று சர்வதேச அளவில் 50 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியது.
இதில் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு கண்களில் எரிச்சல், தண்ணீர் வடிதல் போன்ற பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தது.
மேலும் பாஸ்ட்புட் உணவுகளில் உள்ள விஷ தன்மை வாய்ந்த கொழுப்பு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உடல் நலத்தை கெடுப்பதும் தெரிந்தது.
ஆனால் பழங்கள் அதிகம் சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சரிசெய்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக



''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.



ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.


இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.


இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர்
(recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்.
உஷாருப்பா.. உஷாரு..

Friday, January 11, 2013

உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா?


உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கணுமா?

பசலைக்கீரை, கொடி வகையைச் சேர்ந்த இந்த இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது.

இக்கீரையில் வைட்டமின்  A, B C  போன்ற சத்துக்களும் இரும்பு, சுண்ணாம்பு மற்றும் நார் சத்துக்களும் மிகுந்து காணப்படுகிறது..

தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். உடலில் உள்ள வறட்சியை போக்கி நீர்சத்தை உண்டாக்கும். 

இந்த கீரை கிராமங்களில் பெரும்பான்மையான விடுகளில் வளர்க்கப்படும். இந்த கீரையை பருப்பில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பறந்து போகும்.

கோடைகாலங்களில் அதிக சூட்டை தணிக்க இந்த கீரையின் சாறெடுத்து தலையில் இட்டு சிறிது நேரம் ஊற விட்டு குளித்தால் சூடு தணியும். சூட்டினால் தலையில் உண்டாகும் பொடுகு போன்றவை நீங்கும். 

இதை தொடந்து உணவில் சேர்த்து வந்தால் ஆண்மை சக்தியை வளர்க்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக்கும். பசலைகீரையை நெருப்பில் போட்டு சுட்டு இளம் சூட்டோடு கட்டிகள், வீக்கங்கள் மீது வைத்து கட்டி வந்தால் அவை குணமாகும். 
இதன் அதிசய மருத்துவகுணம் யாதெனில்இக்கீரையில் அடர்த்தியாக காணப்படும் பச்சையம்நம் உடம்பில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பை கரைக்க உதவும். அதிகமான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து வருவது நன்மையை உண்டாக்கும்நன்றி : சிந்திக்கவும் 

Tuesday, January 8, 2013

நடுநிசி-நபித்தோழர்கள்,


டுநிசி
மக்க மாநகர் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.அன்று பவுர்ணமியாதலால் பட்டப் பகல்போல் நகரம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. என்றாலும் ஆங்காங்கு இருந்த வீடுகள் நிழலுள் மூழ்கியும் நிழலைப் பரப்பியும் மவுனமொழி பேசின.                                       .

நான் என்னை ஒரு போர்வைக்குள் மறைத்துக் கொண்டும் நிழல்களுக்குள் ஒளித்துக் கொண்டும் சந்து பொந்துகளில் நடந்து சென்றேன். பின் முக்கிய வீதியொன்றில் முன்னேறி இலக்கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டேன்.
குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த கூடாரங்களை நோக்கியே என் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்கள் பலரும் மக்காவை விட்டு வெளியேறிய பின்னரும் நான் மக்காவிலேயே தங்கியிருப்பதற்குக் காரணம் இருந்தது.

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை இரவில் யாருக்கும் தெரியாமல் மீட்டு மதீனாவுக்குக் கொண்டு சேர்ப்பதே என் பணியாக இருந்தது. அதற்காகவே நான் நடுநிசியில் தன்னந்தனியாக குறைஷிகளின் கூடாரங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன்.

அன்று இரவு ஒரு முஸ்லிம் தோழரை மீட்பதாக வாக்குறுதி அளித்திருந்தேன். அவரும் எனக்காக கண் விழித்துக் காத்துக் கொண்டிருந்தார். முக்கிய வீதியில் சென்ற நான் எதிரில் ஆள் நடமாட்டம் தெரிய அருகிலிருந்த வீட்டின் நிழலுள் நிழலானேன்.

எதிரில் ஒர் உருவம் தென்பட்டது. அது நானிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது அது யாரெனப் பளிச்செனத் தெரிந்தது. அது ஒரு பெண் அவள் பெயர் அனாக்.  அவளை எனக்கு நன்றாகத் தெரியும். அவளையும் பலருக்குத் தெரியும். அவள் ஒரு பாலியல் தொழிலாளி; பசப்பி.

அவளுக்கு நான் ஒரு வழமைச் சவாரி, ஒரு காலத்தில்; அவளைப் போன்றவர்களையெல்லாம் அப்பால் தள்ளி விட்டு இப்பால் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கண்டபடின் வாழ்ந்த காலங்களெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட நிலையில் நான் இப்போது ஒர் உண்மை முஸ்லிம்.

அவள் என்னைப் பார்த்து விட்டால் எனக்கு இருவகை இழப்புகள் ஏற்படலாம். ஒன்று என் செயல் குறித்து அறிந்தால் அவள் மூலம் எதிரிகளின் தொல்லை வரலாம். பணி தடைபடலாம். இரண்டு, என்னை அவள் தன் திசைக்கு அழைக்கலாம். இரண்டுமே நடைபெறாமல் இறைவன் என்னைக் காப்பற்ற வேண்டும் என எண்ணிய நான் என்னையறியாமல் தும்மினேன்.

தும்மலைக் கேட்ட அனாக் திரும்பிப் பார்த்து யாரது! இருளின் மடியில்...!எனக் கேட்ட படி என்னை நோக்கி வந்தாள். அவளின் மடி என் நினைவுக்கு வந்தது .இறைவன் என்னை காப்பாற்றுவான். நான் பதில் பேசாமல் நின்றபடி போர்வையால் முகத்தை முழுவதுமாக மூடிக் கொண்டேன்.

எனக்குத் தெரியாதவர் மக்காவில் யாருமே இருக்க முடியாது... யார் நீஎனக் கேட்டபடி அருகில் வந்து என் போர்வையை வேகமாக உருவினாள். என் முகம் இப்போது நன்றாக தெரிய வர, “மர்ஸத் நீங்களா? என் மனங்கவர்ந்தவர்களில் ஒருவரான நீங்கள் ஏன் என்னிடமிருந்து மறைய வேண்டும்?” எனக் கேட்டபடி அருகில் வந்து என் கையைப் பற்றினாள். நான் கைகளை உதறினேன்.


எனக்கு நா வறண்டது. என்ன பதில் கூறுவது என எனக்குத்தோன்றவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். கண்களிலும் நீர் தளும்பியது.


மர்ஸத், ஏன் பேச மறுக்கிறீர்கள்? ஏன் இப்போது உங்கள் கரங்கள் உதறுகின்றன? மெல்லிய காற்று வீசும் சூழலில் எப்படி வந்தன உங்கள் முகத்தில் வியர்வைத் துளிகள்?”


அனாக்! நான் இப்போது ஒரு முக்கிய வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். அதனால் தான்...


"
என்ன வேலைக்காக தாங்கள் பதுங்கிப் பதுங்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்னைக் கண்டு பேசுவதை விட அவ்வேலை என்ன அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது!"


"
அதைப் பற்றி நான் இப்போது உன்னிடம் பேச முடியாது"


"
ஏன்? என் மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? திருடச் செல்கிறீர்களா? இல்லை, யாரையும் கொலை செய்யப் போகிறீர்களா? அப்படிப்பட்ட ஆளில்லையே நீங்கள்... என்னிடம் சொல்லுங்கள்; இல்லையேல் பரவயில்லை" என்ற அவளின் பேச்சில் என மனம் குளிர்ந்தது.

அனாக் விலை மகளாயிருந்தாலும் அவள் அநியாயத்துக்கு விலை போக மாட்டாள் என எண்ணி, "நான் குறைஷியர் சிறைப்பிடித்துள்ள முஸ்லிம் ஒருவரை மீட்கப் போய்க் கொண்டிருக்கிறேன்" என்ற உண்மையைச் சொன்னேன்.

நல்ல வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. என்றாலும், இன்று நீங்கள் என்னோடு தங்கிச் செல்ல வேண்டும்என அனாக் என்னிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

"
அனாக்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன். எனவே, நான் உன் அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். அல்லாஹ் தவறான பாலியல் உறவைத் தடை செய்துள்ளான். அது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இனியாவது தெரிந்து கொள். இனி நீ கூட அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு ஒரே மனிதருடன் வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

அதெல்லாம் கதைக்குதவாத வீண் பேச்சு.வீடு கட்டிக் கொண்டு வாழ்வதெல்லாம் என்னைப் பொறுத்த வரை வீண் வேலை. எனக்குக் கூடாரமே போதும். அதனால் இப்போது நீங்கள் எனக்கு வேண்டும்.

நீங்கள் என்னுடன் வர சம்மதிக்கவில்லையானால், நான் கூச்சலிட்டுக் குறைஷிகளிடம் உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்என அவள் என்னை எச்சரித்த போதே என் கால்கள் ஒட ஆரம்பித்தன. அவள் கத்தத் தொடங்கினாள்.

கூடாரக்காரர்களே! நீங்கள் அடைத்து வைத்திருக்கும் கைதிகளை மீட்பதற்காக இதோ ஒருவர் வந்து விட்டுத் தப்பித்து ஒடுகிறார். அவரை விரைந்து பிடியுங்கள்என அனாக் கூச்சலிட நான் சிட்டாகப் பறந்தேன்.

குதிகால் பிடரியில் பட ஒடிய நான் திரும்பிப் பார்த்தேன். எட்டுப் பேர் என்னைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருந்தார்கள். அனாக் தூரத்தில் புள்ளியாய் நின்று கொண்டிருந்தாள்.

ஒடினேன்; ஒடினேன்.... ஒடிக் கொண்டே இருந்தேன். ஒடிக் கொண்டிருந்த நான் கந்தமா எனும் மலைக் குகையின் அடிவராத்தில் சென்று மறைந்து கொண்டேன். தேடி வந்த எட்டுப் பேரும் குகையின் மேல் நின்று எட்டுத் திக்கும் எட்டிப் பார்த்திருப்பர் போலும், பேச்சொலி கேட்டது.

பதுங்கியிருந்த என் தலை மேல் சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து வழிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு வகை நாற்றம் மூக்கைத் துளைத்தது. அவை உதட்டில் பட உப்புக் கரித்தது. குகை மேலிருந்து அவர்கள் பெய்த சிறுநீர் என்னைப் பெருமைப்படுத்தியது போலும்! ஏதும் கூற முடியாத நிலையில் அமைதி காத்தேன்.

தேடி வந்தவர்கள் திரும்பிய பின் நீண்ட நேரங்கழித்து மூன்றாம் ஜாமத்தில் என் பணியை மீண்டும் தொடர்ந்தேன். பவுர்ணமி நிலவு கீழ் வானத்தில் போர்வை போர்த்திப் படுத்துக் கிடந்தது. முஸ்லிம்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கூடார மைதானத்தை அடைந்தேன்.

குறட்டை ஒலியே கேட்டது காவலிருந்த குறைஷிகள் குடித்திருந்த காரணத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நான் குறிப்பிட்ட கூடாரத்தை அடைந்தேன். நான் மீட்கச் சென்ற நபர் என்னை எதிர்பார்த்திருந்தார். அவர் கால்களில் காயம்: கைகளில் விலங்கு.

நான் குனிந்து அவரை என் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கனத்த சரீரம் கொண்ட அவரை என்னால் நீண்ட தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவரின் விலங்கை உடைத் தெறிந்தேன். அவருக்கு ஒரளவு வலுகூடியது போலிருந்தது. என்றாலும் கால்களில் இருந்த காயங்களால் தரையில் காலுன்றி நடக்க முடியவில்லை.

மீண்டும் அவரைப் பேரீச்சை மூட்டையைச் சுமப்பது போல் சுமக்க ஆரம்பித்தேன். நகர எல்லையைத் தாண்டியபோது வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பறவைகள் கிறிச்சிட்டுக் கொண்டு பறக்க தூரத்தில் இடி முழக்கங்கள்.

என் கால்களும் கைகளும் வலுவிழந்தன. சுமையோடு விழுந்து விடுவேனோ எனப் பயம் வந்தது. அருகிலிருந்த ஈச்ச மரத்தோப்பில் தங்கியிருந்து விட்டு, மீண்டும் பயணத்தை இரவில் தொடரலாம் என எண்ணினேன். என் முதுகிலிருந்த நண்பரும் நான் எண்ணியதையே செயல்படுத்தச் சொன்னார்.

நண்பரைக் கிழே இறக்கி வைத்து விட்டு தோப்பை ஆராய்ந்தேன். அங்கே ஆளரவம் இல்லை. தோட்டத்தின் பின்புறம் ஒர் உயர்ந்த மணல் மேடு இருந்தது. அம்மணல் மேட்டின் மறைவில் நாங்கள் வீழ்ந்து கிடந்தோம். பசி அரை மயக்கம் அசதி எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை நீண்ட தூக்கத்தில் ஆழ்த்தின. கண் விழித்துப் பார்த்த போது சூரியன் உச்சியில் இருந்தான்.

 
மர்ஸத், உங்கள் உதவிக்கு நன்றி. நம்மிருவரையும் இஸ்லாமிய உறவு இணைத்ததோடு அல்லாஹ்வின் அருள் நமக்கு எவ்வளவு வலுவைத் தந்திருக்கிறது பார்த்தீர்களா? எனத் தோழர் உரைக்க, “ஆம் நண்பரே!எனக் கூறி சபலங்களிலிருந்தும் நான் தப்பித்ததையும் அதற்கு அண்ணலாரின் வழிமுறைதான் காரணம் என்பதையும் கூற மாலை மதியமும் வீசுதென்றலும் வந்து சேர்ந்தன.


பசியும் அசதியும் வலியும் சென்ற இடம் தெரியவில்லை. நாங்கள் மதீனாவை நோக்கிச் செல்ல ஆயத்தமானோ


ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு நம்பு(தாழை) மதியவன் அவர்களால் வடிக்கப்பட்ட ஓர் உண்மைச் சரித்திரம்) (அபூதாவூத், நஸயீ) நன்றி

Wednesday, January 2, 2013

சுன்னத்தான தொழுகைகள்


சுன்னத்தான தொழுகைகள்

ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்:
ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத், ளுஹர், அஸர் இஷா ஜும்ஆ இவைகளுக்கு முன்பாக நான்கு ரக்அத்துகளும், ளுஹர், அஸர் மஃரிப் இஷா பின்பு இரண்டு ரக்அத்துகளும், ஜும்ஆக்கு பின் நான்கு ரக்அத்துகளும்,ஸுன்னத்தான தொழுகைகளாகும்.   இவைகளில் அஸர், இஷாவுக்கு முன்னுள்ள சுன்னத் தொழுகைகளை தவிர மற்றவைகள் கண்டிப்பாக தொழ வேண்டிய சுன்னத்துகளாகும். (அவசியமின்றி விட்டால் தண்டனை பெறுவார்)
ஃபர்ளான தொழுகையை விட்டால் களா செய்வது கடமையாவது போல் சுன்னத்தான தொழுகையை விட்டால் அதை களா செய்வது சுன்னத்தாகும்.
வித்ருதொழுகை:
இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும் வரை வித்ரு தொழுகையை தொழுது கொள்ளலாம். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என ஒற்றைப் படையாகத் தொழ வேண்டும். குறைந்த அளவு ஒன்றும் அதிகளவு பதினொன்று ரக்அத்துகளும் ஆகும்.
மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன' சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, குல்அவூது ரப்பில் பலக், குல் அவூது ரப்பின்னாஸ்' சூராக்களும் ஓதுவது சுன்னத்தாகும்.
இதன் முதல் ரக்அத்தில் 'வஸ்ஸம்ஸி' அல்லது காபிரூன்' சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'அஹது' சூராக்களை ஓதுவது சுன்னத்தாகும்.

ஸலாத்துல் உளு: உளு செய்த பின் தொழ வேண்டிய தொழுகை

உளு செய்தபின் உளுவின் சுன்னத் என நிய்யத்  செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும்

              
தஹிய்யத்துல் மஸ்ஜித்:

இதன் பொருள் 'பள்ளியின் காணிக்கைத் தொழுகை' என்பதாகும். உள் பள்ளிக்கு செல்பவர் அங்கு சென்று அமருவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமருவது சுன்னத்தாகும். தகுந்த காரணமின்றி இத்தொழுகையை விடுவது மக்ரூஹ் ஆகும். பள்ளியில் ஜமாஅத் நடைபெறப் போகிறது என்றால், அங்கு நின்று  கொண்டு பர்ளான தொழுகையை எதிர்பார்ப்பது சுன்னத்தாகும். ஏதாவது காரணத்தினால் பள்ளியினுள் சென்ற பிறகு தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழ விரும்பாதோர் மூன்றாம் கலிமாவை      .
 
سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوّة الاّ بالله العليّ العطيم.  
நான்கு தடவை ஓதுவது சுன்னத்தாகும்.

ஸலாத்துள் ளுஹா:
ளுஹாவின் குறைந்த அளவு இரண்டு ரக்அத்தும் விரிந்த அளவு எட்டு ரக்அத்தும்  மிக விரிந்த அளவு பன்னிரண்டு ரக்அத்துகளுமாகும். சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் 'ளுஹர்' தொழுகையின் வக்து வரை இதன் நேரமாகும். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை தொழுவது மிகச் சிறப்பாகும்.


இஸ்திகாராத் தொழுகை:

நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். ஒருவர் ஒரு செயலை செய்வதா அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில் ஃபாத்திஹா ஸூராவிற்குப் பின் குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹது' சூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். ஒரு தெளிவான முடிவு தெரியும்வரை திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும்.இதை தொழுத பின்பு ஓத வேண்டிய துஆ:                       .
 
الّلهمّ انّي اسْتخيرك بعلمك واستقدرك بقدرتك. واسالك من فضلك العضيم. فانّك تقدر ولا اقدر. وتعلم ولا اعلم. وانت علاّمالغيوب. الّلهمّ ان كنت تعلم انّ هذا الامر خيرلي في ديني ودنياي وعقبة امري وبجله وآجله فقدّره لي. وباركل لي فيه. ثمّ يسّره لي. وان كنت تعلم انّ هذا الامر شرّلي في ديني ودنياي وعاقبة امري وعاجله وآجله فاصرفني عنه. واصرفه عنّي. واقدر لي الخير اينما كان انّك علي كلّ شيئ قدير.


ஸலாத்துல் அவ்வாபீன்:
மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான நபில் தொழுகைகள், தஸ்பீஹ்களை நிறைவு செய்தபின் மிக உச்ச அளவான இருபது ரக்அத்துகளை அல்லது மிகக் குறைந்த அளவான இரண்டு ரக்அத்துகளை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது சுன்னத்தாகும். அதன்பின் கீழ்வரும் துஆவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

اللهم اني أستودعك ايماني في حياتي وعند مماتي وبعد مماتي فاحفظه عليّ انّك علي كلّ شيئ قدير
ஸலாத்துல் குஸூபைன்:   சந்திர, சூரிய கிரகணத் தொழுகைகைள்:

சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கத் துவங்கியது முதல் அது நீங்கும் வரை அல்லது கிரகணம் பிடித்த நிலையிலேயே சூரியன் மேற்கில் மறையும் வரை அல்லது சந்திர கிரகணம் ஏற்பட்ட நிலையில் காலை பொழுது புலரும் வரை கிரகணத் தொழுகைகளைத் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.
சாதாரண சுன்னத் தொழுகையைப் போன்று கிரகணத் தொழுகைக்காக நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுது முடிப்பது இதன் குறுகிய அமைப்பாகும்.
இரண்டாவது முறை முதல் ரக்அத்தில் பாத்திஹாவிற்குப் பின் சூரா பகரா அல்லது அதே அளவில் வேறு சூரா ஓதி முடித்து ருகூவிற்கு சென்று சூரா பகராவின் நூறு ஆயத்துகள் அளவிற்கு அங்கு தஸ்பீஹ் ஓத வேண்டும். பின்பு அங்கிரு:ந்து நிலைக்கு வந்து திரும்பவும் பாத்திஹா சூராவையும் ஆலஇம்ரான் சூராவை அல்லது அதே அளவில் வேறு சூராவை ஓதிய பின் இரண்டாவது முறையாக ருகூவிற்கு செல்ல வேண்டும். அதில் சூரத்துல் பகராவின் எண்பது
ஆயத்துக்கள் அளவிற்கு தஸ்பீஹ் ஓத வேண்டும்.

சூரத்துல் பகராவின் நூறு மற்றும் எண்பது ஆயத்துகள் அளவு தஸ்பீஹ்களை முதலாவது ஸுஜூதிலும் இரண்டாவது ஸுஜூதிலும் ஓத வேண்டும். இதே போல் அடுத்த ரக்அத்தில்பாத்திஹா சூராவிற்குப் பின் சூரத்துன் னிஸாவையோ அதே அளவுள்ள சூராக்களையோ ஓத வேண்டும்.இரண்டாவது நிலைகயில் பாத்திஹாவிற்குப் பின் சூரத்துல் மாயிதாவையோ அதே அளவுள்ள வேறு சூராவையோ ஓத வேண்டும். இரண்டாது ரக்அத்தின் முதல் ருகூஉ, ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் எழுபது ஆயத்துகள் அளவிற்கும், இரண்டாவது ருகூஉ, ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் ஐம்பது ஆயத்துகள் அளவிற்கும் தஸ்பீஹுகள் ஓதி தொழ வேண்டும். இதுவே கிரகணத் தொழுகையின் பரிபூரண அமைப்பாகும்.

தொழுகைக்குப் பின்பு ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டு குத்பா ஓதுவது சுன்னத்தாகும்.

ஸலாத்துல் இஸ்திஸ்கா: மழை தேடித் தொழுதல்             .

தண்ணீர் அறவே இல்லாத போது அல்லது தேவையான அளவை விட குறைவாக கிடைக்கும் போது மழை தேடி தொழுவது சுன்னத்தாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்ற பின் நான்காவது நாளில் நோன்பு நோற்ற நிலையில் வயோதிகர்கள் சிறார்கள் அனைவரும் பழைய ஆடைகளை அணிந்து பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுவது இதன் அமைப்பாகும்.
முதல் ரக்அத்தில் ஏழு முறை தக்பீh கூறி கைகளைக் கட்டிக் கொண்ட பின் பாத்திஹா சூh ஓதி காப் அல்லது ஸப்பிஹிஸ்ம சூரா ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து முறை தக்பீர் கூறிய பின் பாத்திஹா சூரா ஓதி முடித்து இக்தரபத்திஸ்ஸாஅத்து' அல்லது 'ஹல் அதாக' சூரா ஓதுவதும் ஸுன்னத்தாகும்.
பெருநாள் குத்பா போன்று இதிலும் இரண்டு குத்பாக்கள் ஓதுவதும் இதன் முதல் குத்பாவில் ஒன்பது தடவையும், இரண்டாவது குத்பாவில் ஏழு தடவையும் 'இஸ்திக்பார்' கொண்டு ஆரம்பிப்பதும் சுன்னத் ஆகும்.


இரண்டாவது குத்பாவின் இடையில் இமாம் கிப்லாவை நோக்கித் திரும்பியவாறு தனது மேனியிலுள்ள துண்டை-அதன் மேல் பகுதியைக் கீழ்ப் பகுதியாகவும் இடப் பகுதியை வலப் பகுதியாகவும் புறப்பகுதியை உட்பகுதியாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்று மக்களும் செய்வதோடு அனைவரும் சப்தமின்றி துஆ செய்வதும் சுன்னத்தாகும்.

தஹஜ்ஜுத் தொழுகை: இரவுப் பொழுதில் சற்றேனும் உறங்கி விழித்பின்பு தொழும் சுன்னத்தான தொழுகையாகும். இதை வழமையாக தொழுபவர் காரணமின்றி இதை விடுவது மக்ரூஹ் ஆகும்               .

இதன் குறைந்த அளவு இரண்டு ரக்அத்துகள். கூடிய அளவு பன்னிரண்டு ரக்அத்துகள். மிக விரிந்த அளவு கணக்கற்ற ரக்அத்துகள்.

ராவீஹ்தொழுகை:
'ஓய்வு கொள்ளும் தொழுகை' என்பது இதன் பொருள். ராவீஹ் தொழுகை நோன்பு காலங்களில் இஷாவிற்கு பின் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாமில் 20 ரக்அத்துகள் தொழ வேண்டும். இதை ஜமாஅத்தாக தொழுவது போன்று தனியாகவும் தொழுது கொள்ளலாம். ரமலான் 30 நாட்களுக்குள் குர்ஆன் ஷரீபை பரிபூரணமாக ஓதித் தொழுவது சுன்னத்தாகும். எனினும் அவரவர்களுக்குத் தெரிந்த சூராக்களை ஓதியும் தொழுது கொள்ளலாம்;.


தஸ்பீஹ் தொழுகை:
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.                     .
இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒரு ஸலாமில் தொழ வேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது.       முதல் ரக்அத்தில் பதிஹா ஸூராவிற்குப் பின் அல்ஹாக்கு முத்தகாதுரு சூராவும் இரண்டாவது ரக்அத்தில் வல்அஸ்ரி சூராவம் 3வது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன சூராவும், நான்காவது ரக்அத்தில் அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது சுன்னத்தாகும்.
நின்ற நிலையில் ஸனா ஓதிய பின்பு 15 விடுத்தம் சூராக்களை முடித்த பின்10 விடுத்தம், ருகூவில் 10 விடுத்தம், இஃதிதாலில் 10 விடுத்தம், முதல் ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதின் நடுவில் 10 விடுத்தம், இரண்டாவது ஸுஜூதில் 10 விடுத்தம், இவ்வாறு ஒரு ரக்அத்தில் 75 வீதம் நான்கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓத வேண்டும். இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.

முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவம், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும், நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது.
ளுஹர், அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று பெயர்.                                                              .

விதிமுறைகள்:
1. பயணத் தொலைவு 82 கி.மி அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.        .
2.
பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும்.         .
3.
கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.
4.
ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.
5.
பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.
6.
வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் இமைய வேண்டும்.
7.
அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும், மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.
இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும்.                .

ஹாஜத் (தேவை)  நிறைவேற தொழுகை
தேவைகள் நிறைவேறுவதற்காக இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழுது துஆ செய்யலாம். முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்கு பின் ஆயத்துல் குர்;ஸி மூன்று முறையும் மற்ற மூன்று ரக்அத்தில் அல்ஹம்து சூராவுக்கு பின்,குல்ஹுவல்லாஹுஅஹது, குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஒவ்வொரு முறையும் ஓதுவது நல்லது. இவ்வாறு தொழுது முடித்தபின்  துஆ ஓத வேண்டும்.
ஜனாஸாத் தொழுகையைத்
ஒரு முஸ்லிம் இறந்ததுவிட்டால் அவரை குளிப்பாட்டி கபனிட்டு தொழுகை நடத்தி அடக்கம் செய்வது பர்ளு கிபாயாவாகும். ஒரு ஊரில் ஒருவர் செய்தாலும் எல்லோருடைய கடமையும் நீங்கிவிடும். எல்லோரும் அதில் கலந்து கொள்வது எல்லோருக்கும் நன்மையாகும். யாருமே செய்யாவிட்டால் எல்லோரும் குற்றவாளியாவார்கள்.
ஜனாஸா தொழுகையின்  பர்ளு இரண்டு
1.நான்கு தக்பீர் சொல்வது
2.நிலை நிற்பது
ஜனாஸா தொழுகையின் சுன்னத்துகள்
1. மய்யித் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதன் நெஞ்சுக்கு நேராக இமாம் நிற்பது.
2. முதல் தக்பீருக்கு பின் தனா ஓதுவது
3. இரண்டாம் தக்பீருக்குப் பின் அத்தஹிய்யாத்துக்கு பிறகு ஓதக்கூடிய ஸலவாத் ஓதுவது.
4. மூன்றாம் தக்பீருக்குப் பின் மய்யித்திற்காக துஆ செய்வது ஆகியவைகளாகும்.
நிய்யத் செய்யும் முறை
ஜனாஸா தொழுகையின் நான்கு தக்பீர்களை இந்த மய்யித்திற்கு துஆ செய்தவனாக இமாமை பின்பற்றி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் அல்லாஹுஅக்பர் என்று தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும். 
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}