Thursday, December 26, 2013

வாழ்வின் முன்னேற்றத்திற்கு

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
  •  1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ? • நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.
  •  2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ? • தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
  •  3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ? • ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள் 
  •  4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன். • ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள். 
  •  5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ? • நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள் 
  •  6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ? • அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் 
  •  7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ? • அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
  •  8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ? • எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் 
  • இருங்கள் 9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ? • ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள். 
  •  10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?நற்குணமுடையவராக ஆகி விடுங்கள் 
  •  11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ? • குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்  
  • 12. பாவங்கள் குறைய வழி என்ன ? • அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள் 
  •  13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ? • அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
  •  14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ? • பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள் 
  •  15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ? • விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர் 
  • 16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ? • அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள் 
  •  17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ? • (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள் 
  •  18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ? • அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள் 
  •  19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ? • கண்ணீர், பலஹீனம், நோய் 
  •  20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ? • இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக 
  • இருப்பது 
  • 21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ? • மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது 
  • 22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ? • கெட்ட குணம் – கஞ்சத்தனம் 
  • 23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ? • நற்குணம் – பொறுமை – பணிவு 24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ? • மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள் ( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

Sunday, December 15, 2013

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!
**************************************************




 1. அமைதி 
 திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை,தாலி கட்டிய பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

2. அம்மா

ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

3. நண்பர்கள்

பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

4. ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

5. பணம்

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

6. சுதந்திரம்

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

Thursday, December 12, 2013

எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம்

ஹஜ்ரத் இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்களிடம் ஒரு குழுவினர் வந்து

"பெரியார் அவர்களே!அல்லாஹ் எல்லாவிஷயத்திற்கும் என்னிடமே பிரார்த்தனை செய்யுங்கள்.நான் நிறைவேற்றுவேன் என்று திரு குர் ஆனில் கூறி இருக்கின்றான்.அதற்கேற்ப நாங்கள் எமது கஷ்டங்களைப்போக்க மன்னிப்புக்கோரி காலையிலும்,மாலையிலும்,இரவினிலும் இறைவனிடன் துஆ கேட்ட வண்ணம் இருக்கின்றோம்.ஆனால் ஹக்கன் எங்கள் து ஆவை கபூல் ஆக்கவில்லையே.என்ன காரணம்?"என்று கேட்டனர்.

அதற்கு அத்ஹம் அவர்கள் "உங்கள் கல்பில்(நெஞ்சங்களில்)இருக்கும் ஈமான்(நன்நம்பிகை)பத்து வித காரணக்களால் மரித்துப்போய் விட்டது.உங்களது ஈமான் ஒளி மங்கி இருள் அடைந்து போய் விட்டது.அத்தகைய இருள் நெஞ்சத்தின் பிரார்த்தனைகள் இறைவன் சமூகம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை"என பதில் அளித்தார்கள்.

கல்பில் மரித்துப்போன அந்த பத்துவித காரியங்கள்:

1.இறைவன் ஒருவன் தான் என்று நன் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.ஆனால் இறைவனின் ஆணைகளை நிறைவேற்ற மறந்து விடுகின்றீர்கள்.

2.அல்லாஹ்வின் அருளைப்பெற அல் குர் ஆனை தினமும் ஓதி வருகின்றீர்கள்.ஆனால் அதில் உள்ள போதனைப்படி நடக்காமல் இருக்கின்றீர்கள்.

3.ஷைத்தான் (இப்லீஸ்)உங்கள் பகைவன் என்கின்றீர்கள்.ஆனால் அவனை பின் பற்றி நடந்து விடுகின்றீர்கள்.

4.நபிகள் (ஸல்) அவர்களை ஆழமாக நேசிப்பதாக வாதிக்கின்றீர்கள்.ஆனால் அவர்கள் சொன்ன நல்வழியை செயல் படுத்த மறுக்கின்றீர்கள்.

5.சொர்க்கத்தை அடைய ஆசிக்கின்றீர்கள்.ஆனால் அதனை அடைவதற்கு செய்ய வேண்டிய நற்கிரியைகளை செய்ய மறுக்கின்றீர்கள்.

6.நரகத்திற்கு அஞ்சுவதாக பகருகின்றீர்கள்.ஆனால் பாவச்செயல்கள் செய்வதை விட்டும் விலகாமல் இருக்கின்றீர்கள்.

7.பிறரின் குற்றங்களைத்தேடித்திரிகின்றீர்கள்.ஆனால் உங்களிடையே பின்னிக்கிடக்கும் குற்றங்களை சிந்தித்து உணரத்தவறிவிட்டீர்கள்.

8.மரணத்தை நம்புகின்றீர்கள்.ஆனால் அதற்கு முன் நற்செயல்களை செயல்கள் புரியத்தயங்குகின்றீர்கள்.

9.அல்லாஹ்வினால் அளிக்கப்படும் ஆகாரங்களை உண்கின்றீர்கள்.ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த தவறி விடுகின்றீர்கள்.
10.மரணம் அடைந்தவர்களை நல் அடக்கம்செய்கின்றீர்கள்.ஆனால் நீங்களும் இதுபோல் அடக்கப்படுவோம் என்ற பய உணர்வு கொள்ளத்தவறிவிட்டீர்கள்.

இவ்வாறு இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்)அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள்.இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஹக்கனையும்,அவனது ரசூலையும் ஈமான் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அவர்களின் போதனைப்படி நடக்கவேண்டும்.அப்பொழுதுதான் இறைவனின் அருளும் அன்பும் நமக்கு கிட்டும்.நம் நியாயமான பிராத்தனைகளுக்கு இறைவன் செவிசாய்ப்பான்.நாம் கேட்கும் துஆக்களை இறைவன் அங்கீகரிப்பான்.துஆவிலும்,அல்லாஹ்வின் பால் உள்ள அச்சத்திலும், வணக்கத்திலும்,ஏனைய நற்கிரியைகளிலும் ஓர்மை அவசியம் என்பதினை நாம் மறக்கக்கூடாது

Saturday, December 7, 2013

பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்)

"எனக்கு தலைச்சுற்று இல்லை, தலையிடி இல்லை, களைப்போ சோர்வோ இல்லை, ஆனால் டாக்டர் பிரஸர் என்று சொல்கிறாரே" என நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


ஆனால் அதுதான் உண்மை. பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். எனவேதான் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்.

சிலர் அறிவதற்கு முன்னரே அதன் பாதிப்புகளால் இறந்து போகவும் கூடும்.

கடுமையான பாதிப்புகள்
 
எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இந்நோய் ஆபத்தானது. ஏனெனில் பிரஸர் நீண்ட காலம் இருந்தால் அவருடைய உறுப்புகள் காலகதியில் பாதிக்கப்படும்.
  • பிரஸர் இருதயத்திற்கான வேலைப்பளுவை அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் இருதய வழுவலுக்கு (Heart failure) இட்டுச் செல்லலாம்.
  • உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இரத்தக் குழாய்கள் தடிப்படைகின்றன. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
  • பக்கவாதம் (Stroke) ஏற்படலாம்.
  • சிறுநீரகப் பாதிப்பும் பின் சிறுநீரகச் செயலிழப்பும் (Renal failure) ஏற்படலாம். இது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இட்டுச் செல்லலாம்.
  • விழித்திரையின் இரத்தக் குழாய்கள் பாதிப்படைவதால் பார்வை இழப்பு நேரிடலாம்.

கடுமையான நிலையின் அறிகுறிகள்
 
இத்தகைய பாதிப்புகள் உள்ளுரப் பாதிக்க ஆரம்பித்த பின்னரே அறிகுறிகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கும்;.
உதாரணமாக
  • கடுமையான தலையிடி
  • மூக்கால் இரத்தம் வடிதல்
  • பார்வை மங்கல்
  • மூச்செடுப்பதில் சிரமம்
  • கால் வீக்கம்
போன்ற அறிகுறிகள் நோய் தீவிரமாகி நீண்ட காலம் சென்ற பின்னரே வெளிப்படும்.

பிரசரின் ஆரம்ப நிலையிலோ அல்லது சற்றுத் தீவிரம் அடைந்த நிலையிலோ வெளிப்படையாக எதுவும் தெரியாது. எனவே அத்தகைய அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது மருத்துவரிடம் சென்று பிரசரைப் பாருங்கள்

யாருக்கு வரும்

எவருக்கும் வரலாம் ஆயினும் கீழ்க் கண்டவர்களுக்கு பிரசர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • தமது குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு ஆகிய நோய்கள் இருப்பவர்கள். அதாவது இந்நோய்க்கு பரம்பரை அம்சம் உள்ளது எனலாம்.
  • வயது 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். வயது செல்லச் செல்ல இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். 
  • உடலுழைப்பு அற்ற வேலை செய்பவர்கள்.
  • அதீத எடையுள்ளவர்கள்
  • புகைப்பவர்கள்
  • அதிகமாக மதுபானம் அருந்துபவர்கள்.
  • தமது உணவில் உப்பு, கொழுப்பு ஆகியவற்றை அதிகம் உட்கொள்பவர்கள்.
  • கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்கள்.
  • கர்பமாயிருக்கும் போது சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் வருவதுண்டு.
எவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை இடையிடையே சோதித்துப் பார்ப்பது நல்லது. ஆயினும் மேற் கூறியவர்கள் வருடம் ஒரு முறையாவது சோதித்துப் பார்ப்பது அவசியம்.

பிரசரில் நான்கு நிலைகள் உண்டு. 

அவையாவன

சாதாரண அளவு    120/80 க்கு கீழ்
முன்நிலை   140/90வரை
நிலை 1    160/100வரை
நிலை 2    160/100 க்கு மேல்

Blood Pressure
Category
Systolic
mm Hg (upper #)
Diastolic
mm Hg (lower #)
Normalless than 120andless than 80
Prehypertension120 – 139or80 – 89
High Blood Pressure
(Hypertension) Stage 1
140 – 159or90 – 99
High Blood Pressure
(Hypertension) Stage 2
160 or higheror100 or higher
Hypertensive Crisis
(Emergency care needed)
Higher than 180orHigher than 110

உங்கள் பிரஸரின் இரண்டு அலகுகளுமே முக்கியமானவை. முன்னைய காலங்களில் மேலே உள்ள அலகான (Systolic blood pressure(SBP) வயதிற்கு ஏற்ப அதிகரிக்கும் அதனால் அதிகம் இல்லை என நம்பப்பட்டது.

அது தவறு என பல ஆய்வுகள் மூலம் இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமான 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் மேலே உள்ள அலகு 140க்கு மேற்பட்டால் அது உயர் இரத்த அழுத்தமே.

தனியாக கீழே உள்ள அலகு சாதாரணமாக இருந்தாலும் மேலே உள்ள அலகு மாத்திரம் அதிகரித்திருந்தால் அதனை Isolated Systolic Hypertension என்பார்கள். அதற்கும் சிகிச்சை அவசியமே.

பிரசர் உள்ளவர்கள் மேலும் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

  1. இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு  (Lipid Profile) 
  2. சிறுநீரில் புரதம் போகிறதா என அறிய சிறுநீர்ப் பரிசோதனை (Urine Full report)
  3. சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என அறிய இரத்தப் பரிசோதனைகள் (Blood Urea, Creatinine) 
  4. குருதி உப்பு அளவுகள்  (Serum Electrolytes) 
  5. ஈசிஜி (ECG)
  6. ஆல்ரா சவுண்ட் ஸ்கான் (Ultrasound Scan abdomen Kidney) 
  7. வருடம் ஒருமுறையாவது கண்பரிசோதனை- விழித்திரையில் குருதிக் கசிவு, நீர்க் கசிவு ஆகியவற்றால் பார்வை இழப்பைத் தவிர்ப்பதற்காக.

பிரஸரைக் கட்டுப்படுத்த, அல்லது அது வராமலே தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

  1. உங்கள் எடையை உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவில் சரியாகப் பேணுங்கள்.
  2. உங்கள் வாழ்க்கை முறையில் உடல் உழைப்புக்கு அல்லது உடற் பயிற்சிக்கு  போதிய இடம் கொடுங்கள்.
  3. உங்கள் உணவு முறைகளை நல்லாரோக்கியத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். முக்கியமாக எடை அதிகரிகக் கூடிய இனிப்பு, கொழுப்பு, மற்றும் துரித உணவுகளைக் குறைத்த காய்கறி, பழவகைகள் ஆகியவற்றை அதிகளவில் சேருங்கள்.
  4. உணவில் உப்பின் அளவைக் குறையுங்கள்.
  5. புகைத்தலைத் தவிருங்கள்.
  6. மதுவையும் தவிருங்கள், முடியாவிட்டால் அதன் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.
  7. உங்களுக்குச் சிபார்சு செய்யப்பட்ட மருந்தை ஒழுங்காக உபயோகியுங்கள்.
  8. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவம்

Friday, December 6, 2013

நரை முடியும் கறுப்பாகும்

சோற்றுக்கற்றாழையில்:-


Photo: சோற்றுக்கற்றாழையில்:- 

உணவே மருந்து -- | Like | Share | Tag|

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்ல கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமலிருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

Tuesday, December 3, 2013

அப்பாவின் வலிகள்...!






அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...

ஒரு அப்பா குடும்பத்தையே சுமந்து
சைக்கிள் மிதிக்கிறார்...

ஒரு அப்பா குடும்பத்துக்காகவே
மீன் கூடையை
சைக்கிளில் சுமக்கிறார்...

ஒரு அப்பா மன உளைச்சலை
வெளியே விட்டு
சிரித்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்...

ஒரு அப்பா பண்டிக்கைகல் முன்னிரவில்
கடன் கேட்டு வீதியில் அலைகிறார்...

ஒரு அப்பா ஜவுளிக்கடைக்குள்
குடும்பத்தை அனுப்பிவிட்டு
தள்ளு வண்டி காரனிடம்
டவல் வாங்குகிறார்...

ஒரு அப்பா கடன்காரனுக்கு பயந்து
தெரு சுற்றி காலம் கடந்து பசியோடு வீடு வருகிறார்...

பாவம் அப்பாக்கள்.

அப்பாவின் வலி
அப்பா ஆகும்போதே புரியும்...!!!!

Friday, November 29, 2013

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதயஇரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Thursday, November 21, 2013

வியர்வை


வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.

                  பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

              மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

                வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.


         தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். 

நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

நன்றி :அன்பில் வாசல் 

Tuesday, November 5, 2013

தந்தையின் சிறப்பு



தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை. 

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம்,தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து,அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080)மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்?அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள்,பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள்,தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால்,அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தை அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும்,குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும்,உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று,தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை,தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

                                                      

நூ. அப்துல் ஹாதி பாகவி 
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}