Saturday, December 15, 2012

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயி


எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும் போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.
ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.
கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.
அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
அ‌ப்படி செ‌ய்யு‌ம் போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.
அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.
எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சி தான். அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதை விட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.
ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்

பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அமித் கெஃபன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில் தெரியவந்த தகவல்கள்: ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது, ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது. ஒரே இடத்தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும்

Thursday, December 13, 2012

அதிக வேலைப் பளுவினால் இளைஞர்கள் இதயநோய்க்கு ஆளாகும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை

மாரடைப்பு என்பது வயதானவர்களுக்குத்தான் வரும் என்ற காலம் மாறி இன்றைக்கு இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் பணிச்சுமையினால்தான் இதயநோய்க்கு ஆளாகின்றனர் இளைஞர்கள் என்கின்றது சமீபத்திய ஆய்வு. இது தொடர்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 200000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 23 சதவிகிதம் பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களுக்கு உள்ள பணிச்சுமைதான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
வீட்டைவிட்டு வெளியே போனால் ஆண்களுக்கு கவலைப்பட என்ன இருக்கிறது என்று கூறுபவர்கள்தான் அதிகம். ஆனால் பணிபுரியும் இடங்களில் பணிச்சுமையும் மன அழுத்தமும் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இள வயது ஆண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்புக்கும் அதுவே பிரதான காரணம் என்றும் சொல்கிறது இந்த ஆய்வு முடிவு.

பள்ளியில் தொடங்கும் ஓட்டம் வளர்ந்து பெரியவர்களாகி வேலையில் சேர்ந்த பின்னரும் அவர்களுக்கு தொடர்கிறது. இந்தக் காலத்து இளைஞர்கள் இரவில் அதிகம் கண்விழிக்கின்றனர். அதிகாலையில் பிறர் விழிக்கிற நேரம் தூங்குவதும், கண்ட நேரத்தில் சாப்பிடுவதும் உடற்பயிற்சியே செய்யாமல் புது வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். இதுவே அவர்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

இது தவிர காதல் தோல்வியோ, கல்யாண முறிவோ... பெண்களைவிட, ஆண்களைத்தான் இப்ப அதிகம் பாதிக்குது. ஒருவனுக்கு ஒருத்தி'ங்கிற கொள்கை இப்ப இல்லை. தன் மனைவிக்கு வேற ஆண்களோட தொடர்பு இருக்கிறதை சகிச்சுக்க முடியாமலும் மன அழுத்தத்துல புழுங்கறாங்க. இப்படி வேலை, வீடுன்னு திரும்பின பக்கமெல்லாம் டென்ஷன், எந்தப் பிரச்னையை எப்படி அணுகறதுங்கிற தெளிவின்மை, பகிர்ந்துக்க ஆளில்லாம மனசுக்குள்ளயே போட்டுப் புதைச்சுக்கிறது, சரியான சாப்பாடு இல்லாததுன்னு எல்லாம் சேர்ந்துதான் 30 களில் இதயநோய் ஏற்பட காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

இதயநோயை தவிர்க்கலாம்
மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது. தன் மனதை புரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசலாம். பணத்தின் பின்னால் ஒடுவதால்தான் மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே சக்திக்குத் தகுந்த வேலையை மட்டுமே செய்யுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி செய்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் நிபுணர்க
நன்றி-seithi.com  

Wednesday, December 12, 2012

குர்ஆன் பற்றிய வினாடி - வினா


குர்ஆன் பற்றிய குயிஸ்

1. நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் வஹீ கிடைத்தது?
    ப : 40 வயதில்
2.  முதலாவதாக இறங்கிய வஹீ ( இறைவசனம்) எது?
     ப: இக்ர..; பிஸ்மி ரப்பிகல்லதீ (சூரா அலக்)
3. திருக்குர்ஆனுக்கு முந்திய வேதங்கள் எத்தனை?
     ப: 1.தவ்ராத் 2. ஸபூர் 3.இன்ஜீல்
4. திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
     ப: ரமளான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் இரவில்.
5. கடைசியாக இறங்கிய சூரா எது
     ப: சூரா நஸ்ரு.
5. ஜாமிஉல் குர்;ஆன் (குர்ஆனை ஒன்று சேர்த்து முடித்தவர்) என்ற சிறப்பு பெயர் யாருக்கு கூறப்படும்?
     ப: உஸ்மான் (ரளி) அவர்களுக்கு.
7. திருக்குர்ஆன் முதலில் எங்கு அருளப்பட்டது?
     ப: மக்கா நகரில் ஹீரா மலைக்குகையில்.
8. தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா வெளியிட்டது யார்?
ப: அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஹழ்ரத்.
9. திருக்குர்ஆனில் தலைசிறந்த அத்தியாயம் எது?
     ப: சூரா ..;பாத்திஹா.
10. திருக்குர்ஆனில் தலைசிறந்த ஆயத்(வசனம்) எது?
      ப: ஆயத்துல் குர்ஸீ
11. 'திருக்குர்ஆனின் இதயம்' எந்த அத்தியாம்?
       ப: சூரா யாஸீன் என்ற அத்தியாயம்.
12. வறுமை ஏற்படாதிருக்க இரவில் எந்த சூராவை ஓதிவரும்படி நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?                               
       ப: சூரா வாகிஆ
13. திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்கள் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
       ப: 25 நபிமார்கள்
14. திருக்குர்ஆனில் நபி (ஸல்) அவர்களின் பெயர் எத்தனை இடங்களில் கூறப்பட்டுள்ளது?
     ப: 5 இடங்களில் (4 இடங்களில் முஹம்மது என்றும், ஒரு இடத்தில் அஹ்மது என்றும் கூறப்பட்டுள்ளது)
15. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபித்தோழர் பெயர் என்ன? ப: ஸைத் இப்னு ஹாரிஸா (ரளி)
16. ஒரு பெண்ணின் பெயரைக்கொண்ட சூரா எது?
        ப: சூரா மர்யம் (எண்:19)
17. திருக்குர்ஆனில் எத்தனை மன்ஜில்கள் உள்ளன?
       ப:7 மன்ஜில்கள் உள்ளன.
18. திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய சூரா எது? மிகச் சிறிய சூரா எது?
    ப: பெரிய சூரா அல்பகரா -எண்.2   சிறியது சூராத்துல் கவ்ஸர் எண்.2
19. திருக்குர்ஆனை ஒளுவின்றி தொடலாமா? ஓதலாமா?
     ப: ஒளுவின்றி தொடக்கூடாது. ஒளுவின்றி ஓதுவது கூடும்.
20. குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் பெண்கள், பிள்ளைப்பேறு தொடக்கு உள்ள பெண்கள் குர்ஆனை ஓதலாமா? தொடலாமா?
      ப: ஓதுவதும் கூடாது. தொடுவதும் கூடாது ஹராமாகும்.
21. திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்யலாமா?
    ப: அல்லாஹ்வை தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்வது கூடாது.
22. முதல் சூரா எது? கடைசி சூரா எது
       ப: முதல் சூரா ..;பாத்திஹா, கடைசி சூரா நாஸ்
23. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீமில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
       ப: 19 எழுத்துக்கள்
24. பிஸ்மில்லாஹ் இல்லாத சூரா எது
       ப: சூரா தவ்பா
25. குர்ஆனில் எத்தனை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உள்ளன?
      ப: 114
26. திருக்குர்ஆனின் ஆயத்துக்கள் எத்தனை? ப: (ஆயிஷா (ரளி) அவர்களின் கருத்துப்படி)
ப: 6666

Sunday, December 9, 2012

பேரிச்சம் பழம் சாப்பிடுங்கள்







நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!
பார்வை கோளாறு
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.
மூட்டு வலி
இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.
குடல் கோளாறு
பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.
பற் சொத்தை
நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது
நன்றி :tamilspy  
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}