Monday, October 29, 2012

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட


தேங்காய் நார்கள்
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள் வீட்டில் பாத்திரங்கள் கழுவ பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது.
எவ்வாறென்றால் இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கடைகளில் கூட கிடைக்கிறது.
மாலை நேரத்தில் நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கு புகையை காட்டி, சிறிது நேரம் கழித்து  பார்த்தால் கொசுக்களை மாயமாய் மறைந்துவிடும். இயற்கை நார்களில் இருந்து வரும் புகையால் எந்த பாதிப்பும் வராது.

பச்சை கற்பூரம்
கொசுக்கள் அழிவதற்கு முக்கியமாக பொருள் சல்பர், இந்த சல்பர் இருக்கும் எங்கு இருந்தாலும் கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது.
ஒரு பாத்திர தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் அதில் இருந்து வரும் வாசனையால் கொசுக்கள் அருகில் வராது.

கெரோஷின் மற்றும் கற்பூரம்
இந்த இரண்டுமே கொசுக்களை அழிப்பதில் வல்லமைமிக்கது. கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாக்களில் கெராஸினை விட்டு சிறிது கற்பூரத்தையும் கலந்து பிளக்கில் மாட்டி விடவேண்டும். அதனால் ஏற்படும் வாசனையால் கொசுக்கள் வராமல் இருப்பதோடு, உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

நன்றி- தமிழ்குறிச்சி

Saturday, October 27, 2012

ஸஜ்தா செய்வதால் உண்டாகும் பலன்கள்



ஸஜ்தாவாகிறது தொழுகையில் செய்யக்கூடிய தனித்துவமான,சிறப்பு வாய்ந்த ஒரு செயலாகும். கடமையான வணக்க வழிபாடான தொழுகையின் அடிப்படை தத்துவம்,மனிதர்களுக்கு  சிறந்த  உடற்பயிற்சியை  கொடுப்பது  மட்டுமல்ல,மேலும் மனித உடல் முழுவதற்கும் தேவையான மருத்துவ நன்மைகளை அதிகம் வழங்க கூடியதாக இருப்பதாக வல்லுனர்களால் ஆராய்ந்து உணர்த்தப்பட்டது.
இப்னு மாஜா  எனும்  தீது  கிரந்தத்தில்  ஒரு  தீது,சர்வலோக  அரசர்  முஹம்மது  மு்தபா  ல்லல்லாஹு  அலைஹி  ல்லம்  அவர்கள் கூறுகிறார்கள்,தொழுகையாகிறது அனேக நோய்களுக்கு அருமருந்தாகும்,மேலும் ஸஜ்தாவுடைய நிலை மனிதனை ரப்புல் ஆலமீன் அல்லா்வுக்குமிக நெருக்கமாக்கி வைக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்,“மனிதன் தன்னுடைய ரப்பை ஸஜ்தா செய்யும்போது மிகவும் நெருங்குகிறான்,எனவே  ந்த  நிலையில்  மனப்பூர்வமான  பிராத்தனையை  செய்து  கொள்ளட்டும்”. ஹஜ்ரத்  அனஸ்  பின்  மாலிக்  ரழியல்லாஹு  தஆலா  அன்ஹு அறிவிக்கிறார்கள்,“தொழுகையில் ருகூவையும்,ஸஜ்தாவையும்  சரியாக  செய்யும்படி  முஸ்லிம்களுக்கு  அறிவுரை  பகர்ந்த்தார்கள்  கண்மணி  நாயகம்  முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”.
ஸஜ்தா  செய்வதால்  மனம்  சம்பந்தமான  நோய்கள்  நீங்குகிறது,கவலையே  தங்கள்  வாழ்க்கையாக  கொண்டிருப்பவர்களுக்கு  அவர்கள்  அதிலிருந்து  விடுபட  வழிவகை செய்கிறது. ஒரு  மனிதன்  ஸஜ்தாவில்  இருக்கும்போது  அவனுடைய  முழு  உடலும்  சுறுசுறுப்பாகி  விடுகிறது. அவன் தன்னுடைய  நெற்றியை  பூமியிலும்,கைகளை பக்கத்தில்  வைத்துள்ள  ஜ்தாவுடைய  நிலையானது,உடலிலுள்ள  அனைத்து  தசைகளையும்  சுறுசுறுப்புடன்  செயல்பட  வைத்து  அவைகளுக்கு  சிறந்த உடற்பயிற்சியையும்  கொடுக்கிறது. கைகள்  பிரத்தியேகமான  முறையில்  வைக்கப்படுவதால்  முன்னங்கைகள்  மற்றும்  கைகளில்  உள்ள  தசைகளுக்கு நன்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டு அவைகளுக்கு உறுதியை அளிக்கிறது. இறைத் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,‘ஸஜ்தாவில்  முன்னங்கைகளை தரையில் சமமாக  பரப்பி  வைக்காமல்  சிறிது  உயர்த்தி  வைக்குமாறு’  அறிவுரை  பகர்ந்த்தார்கள். இப்படி  செய்வதால்  கைகளின்  தசைகளுக்கு  சிறந்த  பயிற்சி  கிடைத்து அவைகளை வலுவானதாக ஆக்கும்.
ஸஜ்தா  என்ற  சிறப்புவாய்ந்த  தனித்துவமான  இந்த  ஒரு  நிலையில்  மட்டுமே,  மூளை  இதயத்திற்கு  கீழ்  வருவதால்,  முதல்முறையாக  இரத்தம்  மிக  வேகமுடன் மூளையை நோக்கி பீறிட்டுப் பாய்வது கொண்டு,மூளைக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துகள் கிடைத்து,நினைவாற்றல்,பார்வை,கேள்வி,ஒருமுகப்படுத்துதல்,ஆன்மா ஆகிய இவற்றில் சிறந்த பலன்களை உண்டாக்கி அறிவுக்கூர்மையை ஏற்படுத்துகிறது.
தொழுகையை முறையாக நேரம் தவறாமல் நிறைவேற்றி வருபவர்கள் அதிக மனோதிடம் பெறுவதோடு,அவர்களால் எந்த ஒரு கடினமான பிரச்சினையையும் இலகுவாக சமாளிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள். அவர்களுக்கு தலைவலிகளோ,மனம்,அறிவு சார்ந்த குறைபாடுகளோ மிகவும் குறைவாக இருக்கும். ஸஜ்தா நிலையில் நெற்றியை தரையில் வைக்கும்போது தலையின் முழு பாரத்தை கழுத்து தசைகள் தாங்குவதால் அவைகள் வலுப்பெறுகின்றன.

கழுத்து தசைகள் மிக உறுதியாக இருக்கும்போது,அதனோடு தொடர்புடைய முதுகு எலும்பும் உறுதியடைகின்றன. கழுத்து தசைகளின் உறுதி மிக முக்கியம் ஏனெனில்,அவைகள்  தான முதுகெலும்புக்கு  மேலே  அமையப்  பெற்றுள்ள  தலையை  தாங்கிப்  பிடிக்கிறது.  தலையை  சுழற்றுவதற்கும்,  பல  கோணங்களில்  திருப்புவதற்கும் உறுதுணை புரிகிறது. தலையில் ஏதாவது விபத்து ஏற்படும் சமயத்தில் மருத்துவர்கள் மிக முக்கியமாக பரிசோதிப்பது கழுத்துப் பகுதியேயாகும்,இதிலிருந்து இதன் முக்கியத்துவம்  தெளிவாகும்.  தொழுகையை  ஒழுங்காக  நிறைவேற்றி  வருபவர்களுக்கு  கழுத்து  சம்பந்தமான  நோய்கள் வருவது  மிக  மிக  அரிது  ஏனெனில்,  தினமும் ஐவேளை தொழுகையில் 34 தடவை ஸஜ்தா செய்து வருவதால் கழுத்து தசைகள் மிகவும் வலுவடைந்து விடும்.
ஸஜ்தாவிற்கு செல்லும்போதும் எழும்பும்போதும்,நமது முதுகு தசைகள் நேரடியாக இயக்கப் படுவதால் அவைகள் மிகவும் உறுதியடைகின்றன. ஆதலால் முதுகுவலி வரக்கூடிய வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

இறுதியாக   நினைவில்   கொள்ள  வேண்டியது  யாதெனில்,  தொழுகையானது  அனைத்து  உடல்  உறுப்புகளுக்கும்  தேவையான  மிகச்சிறந்த  பயிற்சியை  கொடுப்பது மட்டுமல்ல,நிறைய மருத்துவ நன்மைகளையும் வழங்கி நாம் முழு ஆரோக்கியமானவர்களாக வாழ்வதற்கும் வழிவகை செய்கிறது. மேலும் ரப்புல் ஆலமீன் அல்லாஹ் ஜல்ல ஜலாலஹுவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு அவனுக்கு முற்றிலும் வழிபட்டு அவன் ஏவிய தொழுகையை நேரந்தவறாமல் நிறைவேற்றி வருவது கொண்டு கிடைப்பதற்க்கு அறிய பாக்கியமான மன அமைதிகிட்டும்.

 தொகுப்பு: W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன்

Tuesday, October 9, 2012

குறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

குறட்டையால் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

மனித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக்காட்டுவது மூக்கு. முகத்திற்கு நடு நாயகமாக அமைந்து, எல்லோரையும் ஈர்க்கும் உறுப்பாக அது இருப்பதால்தான் பெண்கள் அதன் அழகுக்கு முத்திரை பதிப்பதுபோல் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள்.
மூக்கைப் பார்த்து அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர், ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடி
யும்.

மேலோட்டமாக பார்த்தால் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை வளரும்தன்மை கொண்டது.

மனிதன் உயிர் வாழ அடிப்படையான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது. நடுச்சுவர் எலும்பு மூக்கை இரு பாகமாக பிரிக்கிறது. மேல் பாகத் தில் `நேசல் போன்' என்ற எலும்பு உள்ளது. உள்பக்க குழாய் போன்ற அமைப்பின் இரு பக்க மும் தசை இடம்பெற்றிருக்கிறது. இந்த தசை `ஏ.சி' மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக் கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத் தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும்போது தொற்றுக்கிருமிக ளின் தாக்குதலால் தசை வீங்கி விடும். காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.

மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும்பால் ஆன `ஏர்பில் கேவிட்டி' என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும். கிருமித் தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆ...அச்... என்ற தும்மலோடு ஜலதோஷம் வந்தால், அந்த திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும். வெளியே வராமல் சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும். இதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.

ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள்பட `இன்பெக்டிவ் சைனசைட்டீஸ்' ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புற சூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய `ரைனோ சைனசைட்டீஸ்' தோன்றும். அடிக்கடி தும்மல் ஏற்படுதல், தலை பாரம், மூக்கு ஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதி வரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும்.
இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ்ரே எடுக்கப்படுவதுண்டு. சி.டி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலும்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போன்ற அனைத்தையும் கண்டறிந்து துல்லியமான சிகிச்சை பெறலாம்.

சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி' தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை! இதன் கொர்.. கொர்.. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும். தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சிறுவர் சிறுமியர்கள் மைதானங்களுக்கு சென்று ஓடி ஆடி விளையாடுவதில்லை. உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்' தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயல்பான, இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும்.

குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக `ஸ்லீப் ஸ்டெடி' செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து `பாலி சோம்னா கிராபி' என்ற கருவி மூலம் பாதிப்பை அளவிடலாம். ஆஸ்பத்திரியில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.' செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்தபடியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி' என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.

நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். அதனால் மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றுவிடவேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர்வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்


Reference By: http://tech.lankasri.com/

Sunday, October 7, 2012

காய்கறி, பழங்களின் விதைகளால் ஏற்படும் நன்மைகள்



வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விதைகளை எப்போதும் தூக்கிப் போடுவோம். ஏனெனில் அவற்றில் எந்தஒரு ஆரோக்கியமும் இல்லை என்பதற்காக தான்.
ஆனால் இனிமேல் அவற்றின் விதைகளைத் தூக்கிப் போட வேண்டாம். ஏனெனில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி மற்றும் பழங்களின் விதைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.
அத்தகைய காய்கறி மற்றும் பழங்களின் விதைகளால், நமது உடலில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்கலாம். எனவே இனிமேல் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடும் போது, அதன் விதைகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.
பூசணிக்காய் விதை
டயட் மேற்கொள்வோருக்கு பூசணிக்காயின் விதைகள் மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றில் குறைந்த அளவு கலோரியும், கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அதில் எலும்புகளுக்கு வலுவூட்டுகின்ற, சிறுநீரகக் கற்களை கரைக்கக்கூடிய சத்துக்களான இரும்பு மற்றும ஜிங்க் இருக்கின்றன.
மேலும் குடலில் ஏதேனும் ஒட்டுண்ணிகள் இருந்தால், பூசணிக்காயின் விதைகளை சாப்பிட்டால் சரியாகிவிடும். வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் இருந்தால், அவற்றை பூசணிக்காயின் விதைகள் சரிசெய்துவிடும்.
தக்காளி விதைகள்
சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
தக்காளியின் விதைகளை சாப்பிட்டால் விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.
குடைமிளகாய் விதைகள்
தற்போது பல வகையான குடைமிளகாய் வந்துள்ளது. ஆனால் அதில் பெல் பெப்பர் என்னும் குடை மிளகாயில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் இதனை சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையானதாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் குடைமிளகாயை சமைக்கும் போது, அதிலுள்ள விதையை தூக்கிப் போட்டு விட்டு, அதன் சதையை மட்டும் தான் சமைப்பார்கள்.
இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம். ஏனெனில் அதன் விதையில் வைட்டமின் ஏ, சி, கே இருக்கிறது. அதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் வயதான தோற்றத்தை தருவதையும் தடுக்கும்.
ஏனெனில் அந்த விதையில் வயதான தோற்றத்தை தடுக்கும் லைகோபைன் என்னும் பொருள் உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் இளமையோடு காட்சியளிக்கலாம்.
பப்பாளி விதைகள்
அனைவருக்கும் பப்பாளியின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அதன் விதைகளில் எத்தனை சத்துக்கள் உள்ளன என்பது தெரியாது.
எப்படி பப்பாளியின் சதையில் நிறைய சத்துக்கள் உள்ளதோ, அதேப் போல் அதன் விதைகளிலும் உள்ளது. பப்பாளியின் விதைகளை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் இருக்கும் டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறுவதோடு, செரிமானத்தை அதிகரிக்கிறது.
அதிலும் வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு ஸ்பூன் பாப்பாளியின் விதையை சாப்பிட்டால் சரியாகிவிடும். வேண்டுமென்றால் அதனை காய வைத்து, உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம்.
உடல் நலத்திற்கு மட்டும் இது நல்லதல்ல, அழகிற்கும் தான் நல்லது. வேண்டுமென்றால் அதனை ஃபேஸ் பேக்கிற்கு பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக மின்னும்.
மாதுளை விதைகள்
இனிமையான சுவையைக் கொண்ட மாதுளை பழம் முழுவதுமே விதைகளால் மட்டும் தான் நிரம்பியுள்ளது. இதனை யாரும் தூக்கிப் போடமாட்டார்கள். ஆனால் அதன் சிறப்பான பலனை பற்றி சிலருக்கு தெரியாது.
சிலர் அதன் ஜூஸை மட்டும் சாப்பிட்டுவிட்டு, விதையை துப்பி விடுவார்கள். ஆனால் அதன் விதையை டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டால், உடல் எடை ஈஸியாக குறையும்.
அதனை ஒரு ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். மாதுளையில் இருக்கும் பைட்டோகெமிக்கலில், புற்றுநோய், டியூமர், இதய நோய் போன்றவற்றை தடுக்கும் பாலிஃபீனால் இருக்கிறது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டு உடலை நன்கு பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்

Saturday, October 6, 2012

வெங்காயத்தின் மற்ற நன்மைகள்




சமையலுக்கு மட்டும் தான் வெங்காயம் பயன்படுகிறது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது.
ஆகவே மறுமுறை சமைக்கும் போது தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள்.
மெட்டல் பொருட்கள்
சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிட மட்டுமல்லாமல் மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது.
ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன் மீது தேய்த்தால் போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.
வாணலி
பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம்.
ஆனால் இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால் அடிபிடிக்காமல் இருக்கும்.
கறைகள்
வெங்காயம் சமையலறையில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது பாத்திரத்தின் அடியில் உள்ள கருப்பு நிறம் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் வைத்து, அவற்றை நீக்க முடியாமல் இருந்தால், அப்போது வெங்காயத்தை வைத்து அந்த இடத்தை தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும்.
கிரில் மிசின்
வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும்.
வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.
நாற்றம்
வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்

Tuesday, October 2, 2012

இணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்!!



வீட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.

இன்னும் பலருக்கு வேலையே இணையத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தில் வேலை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இணையம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அங்கேயிங்கே சுற்றாமல் நல்ல பிள்ளையாக இருக்கும்வரை எல்லாம் சரிதான். இல்லாவிட்டால் நேரமும் வேலையும் கெட்டுப் போகும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் “யூ ட்யூபிலும்’ “ஆன்லைன்’ ஆட்டங்களிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழி.



நேரத்தை நிர்வகிக்கும் உத்திகளில் இன்றைக்கு மொபைல் போனும் இணையமும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், வலைப்பூக்கள் உள்ளிட்ட இன்னபிற விவாத மேடைகள் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன. ஒரு இ-மெயில் சுவையான, பரபரப்பான, சுண்டி இழுக்கும் தலைப்புடன் வருகிறதென்றால், அதைத் திறந்து பார்க்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை.

தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலைத் திறந்து விடுகிறோம். கண்ணைக் கவரும் படங்கள், இழுத்துச் செல்லும் நகைச்சுவை, அனாவசியத் தகவல்கள், மொக்கைக் கதைகள் என நேரம் போகிறது. இதுபோதாதென, நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற அதைப் “பார்வார்ட்’ செய்வது வேறு.

இ-மெயில் சேவை மற்றும் சமூக வலைச் சேவை செய்யும் நிறுவனங்களெல்லாம் இப்போது இலவச இணைப்பாக அரட்டைப் பெட்டி வசதியையும் தந்திருக்கின்றன. இதனால், ஆன்லைனில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அரட்டை தொடங்கிவிடும். எதிரே இருப்பவர் ஏதாவது முக்கிய அலுவலில் இருக்கிறாரா, இல்லை ஆனந்த சயனத்தில் இருக்கிறாரா என்பதெல்லாம் இந்த அரட்டைக்குப் பொருட்டேயில்லை.

ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.

இணையதளங்களை பார்க்கும் போது, பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். பாப் அப் எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.

ஏதோ கெட்ட உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேரம் விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.

“மல்டி டாஸ்கிங்’ எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் அரட்டை, வலைப்பூக்களை வாசிப்பது, குழு விவாதங்களில் பங்கேற்பது, இணைய விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.

இணையத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன் – மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

இணையம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}