Monday, August 29, 2011

அறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம்



அறிவுச்சுடர் ஒளிரட்டடும்
அறியாமை விலகட்டும்
தொடர் முயற்சி தொடரட்டும்
வாழ்வெல்லாம் வெற்றி மலரட்டும்
வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது.  அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம். ஆக்கப்பூர்வமாக சிந்ததிப்பதன் விளைவுதான்  முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.  அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும்.  ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.
சுய இயக்கம் தேவை
வாய்ப்பு வரும்போது கற்றுக்கொள்ளலாம் என்ற சராசரி மனநிலையிலிருந்து சற்று மாறி, மனதை சுயமாக இயக்கி புதியனவற்றைக் கற்று அறிவு வளத்தைப் பெருகிக்கொள்ளும் சுயமுன்னேற்ற மனிதராக நீங்கள் மாற வேண்டும். ஏனென்றால் வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம்.  முயற்சியே வளர்ச்சிக்கான வழியாகும்.  தொடர்ந்து முயல்பவர்கள் மென்மேலும் வளர்ந்து வளம் பெறுகின்றார்கள். சூழ்நிலையைக் குறை கூறிக்கொண்டு, முடங்கிக் கிடப்பவர்கள் விரக்தியின் மடியில் சோகக் கனவுகளாகின்றார்கள். தொடர்ந்து முயல்பவர்களே வெற்றி வானில் மகிழ்ச்சிச் சிறகுகளை விரிக்கின்றார்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள். மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல.  ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும்.  நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ஒவ்வொரு நாளும் வளருங்கள்
வெற்றியை நோக்கி தினமும் ஒரு சிறு அடியையாவது எடுத்து வையுங்கள்.  அத்துடன் உங்களுடைய அறிவு வளர்ச்சிக்காக சிறு முயற்சியையாவது மேற்கொள்ளுங்கள்.  அதாவது நீங்கள் செய்யும் பணி சம்மந்தமாக ஏதாவது ஒரு புதிய கருத்தை அல்லது நுட்பத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளுங்கள்.  மேலும் சுய முன்னேற்றம் சம்பந்தமான கட்டுரைகள் அல்லது நூலின் ஒரு பக்கத்தையாவது படியுங்கள். உலகம் வேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றது.  அதன் காரணமாக நீங்கள் செய்யும் பணியின் தன்மையும், வேலைமுறைகளும் மாறக்கூடும். ஆகவே, அவற்றிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் புதிய திறமைகளையும், நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால்தான் உங்களுடைய பணியை சிறபாகவும், வாடிகைக்யாளர்களுக்கு திருப்தியளிக்கும் விதத்திலும் செய்ய முடியும்.  வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிதான் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி!  நிறுவனத்தின் வளர்ச்சியே அதில் பணிபுரிவோரின் மகிழ்ச்சி.  ஆகவே செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்தால் நமது வாழ்வு சிறக்கும் என்பதைப்  புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்.
தொடர்ந்து கற்றலே தொடர் வளர்ச்சி
நீங்கள் வெற்றி பெற்றால் அதற்காக மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித்திளைப்பதும், தோற்றுப் போனால் மூலையில் முடங்கி விடுவதும் நல்ல பண்பல்ல.  ஏனென்றால் வெற்றியும், தோல்வியும் வாழ்வின் அங்கம். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். மனநிலை பக்குவப்படுதற்கு தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது உங்களுடைய ஒவ்வொரு வெற்றியையும், தோல்வியையும் பாடமாக ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொண்டே இருங்கள்.
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளலாம். வெற்றியிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது? என நீங்கள் கேட்பதை என்னால் உணர முடிகின்றது. இங்கு இரண்டு முக்கிய விசயங்களைக் கவனிக்க வேண்டும்.
அதாவது உங்களுடைய தோல்வியிலிருந்து  கற்றுக்கொள்வது ஒன்று, மற்றவர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது இன்னொன்று.  நீங்கள் வெல்லும்போது மற்றவர்கள் தோற்றுப் போய் இருக்கக்கூடும்.  அத்தகைய சூழ்நிலைகளில் வெற்றிக்களிப்பில் மூழ்கி விடுவதைவிட, மற்றவர்கள் ஏன் தோற்றார்கள் என்று எண்ணிப்பார்த்து அதிலிருந்தும் கற்றுக்கொண்டு தொடர்ந்து உயர வேண்டும். இதுதான் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ளும் இரகசியமாகும்.
புதிய பண்பாடு
தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு சில பண்பு நலன்களைப் பெற்று இருக்க வேண்டும். உங்களுடைய திறமைக்குத் தகுந்த சம்பளமும், பண்புக்குத் தகுந்த மரியாதையும், கிடைக்கும்.  நீங்கள் வகிக்கும் பதவி பெரியதாக இருந்தாலும், சிறியதாக, உங்களுடைய நற்பண்புகளை பொறுத்தே மற்றவர்கள் உங்களை மதிக்கின்றார்கள். ஆகவே, நற்பண்புகளின் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் நீங்கள் இருந்தால் எப்பொழுதும் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு.  மேலும், மற்றவர்களை நன்கு மதித்து, உரிய மரியாதை கொடுக்கும் பண்புடையவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்தும் பண்புகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டே இருங்கள். ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கென்று தனிப்பண்பும், சுய கௌரவமும் உள்ளது. அதை உணர்ந்து அவர்களை மதித்து பழகுங்கள். உங்களுக்கு வெற்றிப் பாதையை அமைத்துத் தருபவர்கள், உங்களுடன் பணிபுரிபவர்களே என்பதை உணர்ந்து மனித நேயத்துடன் பழகுங்கள். வெல்லுங்கள்!
சமமான மனநிலையை வளருங்கள்
அறிவின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதுடன் ஆரோக்கியமான மனநிலையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனம்போல்தான் வாழ்வு அமையும் என்பார்கள். மனம் செம்மையானால் எண்ணங்கள் தெளிவாகும். எண்ணங்கள் தெளிவானால் செயல்கள் வலுவாகவும், நேர்மையாகவும் இருக்கும். நேர்மையான செயல்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். ஆம்!  வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியான வாழ்வதுதான்.
மற்றவர்களை, குறிப்பாக உங்களுடன் பணிபுரிவோரைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.  அவர்களையும் உங்களைப் போலவே சமமாக நினைக்கின்றீர்களாஅல்லது தாழ்வாகவோ, உயர்வாகவோ நினைக்கின்றீர்களா? என சிந்தித்துப் பாருங்கள்.  மற்றவர்களையும் உங்களைப் போலவே சமமாக அதாவது மனிதத் தன்மைமிக்கவர்களாக நினைப்பீர்கள் என்றால் ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்கின்றீர்கள் என்று பொருள். அவ்வாறில்லாமல், உங்களைவிட உயர்வாக அதாவது மற்றவர்கள் எல்லாம் சிறந்தவர்கள் நீங்கள்தான் தாழ்ந்தவர்கள் என்று எண்ணினால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.  மாறாக, மற்றவர்களை எல்லாம் தாழ்வாகவும் உங்களை உயர்வாகவும் நினைத்தால் உயர்வு மனப்பான்மை (Supperiority Complex) உண்டாகிறது.
ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், உயர்வு மனப்பான்மை இருந்தாலும் அது அவருடைய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் வெகுவாகப் பாதிக்கின்றது.  எப்படியென்றால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் மற்றவர்களிடமிருந்து தன்னிச்சையாக நீங்களே விலகிக்கொள்வதுடன், அச்ச உணர்வையும், தோல்வி மனப்பான்மையையும் நெஞ்சில் சுமக்கின்றீர்கள். அதே நேரத்தில் உயர்வு மனப்பான்மை இருக்குமென்றால், மற்றவர்களையெல்லாம் தாழ்வாக நினைத்து அவர்களை ஒதுக்கி வைத்து விடுகின்றீர்கள். ஆகவே இந்த இரு மனநிலைகளும் உங்களுடைய வெற்றிக்கும், மகிழ்ச்சியான தொழில் வாழ்க்கைக்கும் தடைகளாகும் மற்றவர்களையும் சமமாக மதித்து உள்ளன்போடு பழகும் மனப்பாங்கே சிறந்ததாகும்.
செயல்திறன் உயரட்டும்
உங்களுடைய செயல்திறனைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் சென்ற ஆண்டு செய்த தைவிட இந்த ஆண்டு சிறப்பாகச் செய்வேன். இந்த ஆண்டு செய்ததைவிட அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாகச் செயல்படுவேன் என்ற சுய உறுதிப்பாடு (Self commitment) உங்களுக்கு இருக்கவேண்டும்.  அப்பொழுதுதான் உங்களுடைய பணிகளை மென்மேலும் சிறப்பாகச் செய்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க முடியும்.  அத்துடன், செய்யும் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான திறமைகளையும், அறிவையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகும். ஆகவே எந்த வேலையையும் சிப்பாகவும், இன்னும் சிறப்பாகவும் மிகமிகச் சிறப்பாகவும் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடும், அவ்வாறு சிறப்பாகச் செய்ய என்னால் முடியும் என்ற நம்பிக்கையும், அதற்கு தொடர்ந்து அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தெளிவும் உங்களுக்கு ஏற்படும்.
இவ்வாறு, உங்களுடைய உள்ளத்தில் உண்டாகும் புத்துணர்வு உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்து தொடர் வெற்றியை உங்களுக்குத் தேடித்தரும். உங்களுடைய வாழ்வெல்லாம் வெற்றிக்கு இதுவே அடிப்படை ஆதாரம்!  முயலுங்கள்!  செய்து மகிழுங்கள்.
உள்ளத்தில் தெளிவு உண்டாகட்டும்
ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் மிளரட்டும்
வளர்ந்த இந்தியாவைச் செதுக்கும்
வளமான சக்தி நமதாகட்டும்
 ன்றி-தன்னம்பிக்கை

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}