Friday, June 24, 2011

கணுக்கால் வலியா...



கணுக்கால் வலியா...

               டந்த இதழில் தோள்பட்டை வலி பற்றி தெரிந்துகொண்டோம்.  தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது.  இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும்.  கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும்.  உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் பாதிப்பினாலே கணுக்கால் வலி உண்டாகின்றது.

கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும்.  காலை அழுத்தி, ஊன்ற முடியாது.  மேலும் சிறு கட்டி போல் (எலும்புபோல்) காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.

பின் மாலை நேரத்திலும் வலி இருக்கும். மாடிப் படிகளில் ஏறி இறங்க முடியாது.  கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.  காலை அழுத்தி ஊன்றி நடக்காததால் நரம்புகளில் சுளுக்கு ஏற்பட்டு தொடையிடுக்கில் நெறி கட்டிக் கொள்ளும்.  இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்
* வாதம், பித்தம், கபம் போன்ற முக்குற்றங்களில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது.  இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

* இதுபோல் கப தோஷம் (சூலை) பித்த நீருடன் கபம் சேர்ந்து நீராக மாறி, உடலின் தன்மைக்கேற்ப பாதம், கணுக்கால் பகுதியில் நீர் கோர்த்து கட்டி போல் இறுகி வலியை உருவாக்குகின்றது.

* பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஒழுங்கற்ற உதிரப்போக்கு, நாள்கடந்த மாதவிலக்கு, ஜலதோஷம் போன்றவற்றால் கணுக்காலில் வலி உண்டாகும்.

* அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளவர் களுக்கும், வாயு நீரானது வாத நீராக மாறி கணுக்காலில் தங்கி வலி ஏற்படுத்தும்.

* இப்படி உடல் கூறுகளின் தன்மையைப் பொறுத்து கணுக்காலில் தங்கும் நீரானது உப்புப் படிவமாக மாறி கட்டிபோல் உருவாகின்றது.  இதை சிலர் எலும்பு வளர்ந்திருப்பதாகக் கூறுவார்கள்.  உப்பும் சுண்ணாம்புச் சத்தும் இணைவதால் திடப் பொருளாக மாறும்.  உடம்பில் உள்ள சர்க்கரையும் சேர்வதால் எலும்புபோல் உறுதியாகிறது.

* பொதுவாக உடலில் சர்க்கரை இருக்கும்.  இந்த சர்க்கரையானது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும்.  அதில் உப்பு கலப்பதால் அவை கட்டியாகிவிடுகின்றன.  உதாரணமாக சுண்ணாம்பு, சர்க்கரை, உப்பு, சேர்ந்தால் கட்டியாக மாறும்.  அதுபோல்தான் இனிப்பு நிர், உப்பு நீர், சுண்ணாம்பு நீர் சேர்ந்து கணுக்காலில் தங்கி கட்டியாகவிடுகின்றது.  இதனால் பாத வெடிப்பு ஏற்படுவதற்கும் காரணமாகின்றது.

* இரவில் அதிகமான கார உணவு உண்பதாலும் காலை, மதிய உணவிலும் காரத்தை சேர்த்துக் கொள்வதாலும் குடல் அலர்ஜியால் பித்த நீர் மேல் எழும்பி தலையில் நீர் கோர்த்து தலைவலி வந்து பின் கணுக்காலில் கட்டியாகிவிடுகின்றது.

* மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

* பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும்.

* உடல் எடை அதிகரித்தாலும் கணுக்கால் வலி உண்டாகும்.

* மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் உடலில் அலர்ஜி உருவாகி கணுக்கால் வலி உண்டாகும்.

* முறையற்ற உணவு, நீண்ட பட்டினி போன்ற வற்றாலும் உருவாகலாம்.

கணுக்கால் வலி வருமுன் காக்க

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதிக வாயுவை உண்டுபண்ணும் உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்லது.

* நாம் உண்ணும் உணவில் காரத்தன்மையைக் குறைக்க வேண்டும்.  கார உணவை மதிய வேளையில் சேர்த்துக்கொள்வது நல்லது.  ஆனால் இரவு உணவில் காரம் சேர்க்கக் கூடாது.

* கார உணவைப் பற்றி சித்தர்கள் அன்றே மாலைக்குப்பின் காரம் தேவையில்லை என்றார்கள். அதனால் கார உணவை தவிர்ப்பது நல்லது.

* மதிய உணவுக்குப்பின் சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமே ஒழிய அதிக நேரம் தூங்கக் கூடாது. நீண்ட தூக்கம் கொண்டால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

* உடலில் இரும்புச் சத்து குறைவதாலும் கணுக்கால் வலி உண்டாகும்.  இதனால் இரும்புச் சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் 1/2 மணி நேரமாவது நடைபயிற்சி செய்வது நல்லது.  அதிகமாக நீர் அருந்த வேண்டும்.

* கணுக்காலின் மேல்புறத்தில் தைல வகைகளான காயத்திருமேனி தைலம், கற்பூராதித் தைலம், வாத நாராயணத் தைலம் போன்ற வலி நிவாரண தைலங்களைத் தடவி 1/2 மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும்.  காலையும், மாலையும் இவ்வாறு செய்வது நல்லது.

வசம்பு    - 5 கிராம்

மஞ்சள்    - 5 கிராம்

சுக்கு    - 5 கிராம்

சித்தரத்தை    - 5 கிராம்

எடுத்து பொடித்து முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

எருக்கின் பழுத்த இலை    - 5

வசம்பு            - 5 கிராம்

இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குணமாகும்

ன்றி-க்கிரன்

பாதங்களையும் கவனியுங்க..



பாதங்களையும் கவனியுங்க..
ன்றி-கூடல்.காம் - 
Take care of your Feets - Beauty Care and Tips in Tamil
நாம் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு பாதங்களை பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடல் எடை முழுவதையும் தாங்குபவை பாதங்கள்தான். எனவே பாதங்களின் கீழ்ப்பகுதியை அவ்வப்போது கவனிக்கவும். சிராய்ப்பு, வீக்கம், வெடிப்பு அல்லது சிறு சிறு காயங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

பாதங்களின் சரும நிறம் மாறாமல் இருக்க வேண்டும். ஏதேனும் மாறுதல் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும். கால் விரல்களுக்கு நடுவில் அல்லது கீழே வலி, அரிப்பு அல்லது தொற்று நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக தயங்கக் கூடாது.

பாதங்களில் மாய்சரைசர் தடவவும். பாதங்களை சுத்தம் செய்து லோஷன் தடவவும். ஆனால் அதிக க்ரீம் அல்லது லோஷன் தடவக் கூடாது. எப்போதும் கால் நகங்களை நேராக வெட்டவும். இல்லையேல் ஓரங்களில் உள்ள தசைகள், உள்பக்கமாக வளர்ந்து வலி உண்டாகும்.

காலை, மாலை இருவேளையும் பாதங்களை டெட்டால் கலந்த நீரில் துடைக்கவும். நகங்களைச் சரியான முறையில் வெட்டி தேய்க்கவும். இரவு வீட்டிற்கு வந்ததும் பாதங்களைத் தேய்த்து துடைத்து, லேசாக க்ரீம் தடவினால் மென்மையாகும். நகங்களை ஒட்ட வெட்டாதீர்கள். இதனால் நகக்கண்களில் நோய்த் தொற்று கிருமிகள் தங்கி விடும் வாய்ப்புள்ளது.

பெடிக்யுர்

மாதத்தில் ஒரு முறை அழகு நிலையம் சென்று பெடிக்யுர் செய்துகொள்ளவும். ஆனால் பெடிக்யுரில் உபயோகிக்கப்படும் உபகரணங்கள் கொதி நீரில் போட்டு சுத்தம் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

ஒரே இடத்தில் நின்றபடி இரண்டு பாதங்களையும் மாறிமாறி ஒரு பக்கமாக ஐந்து முறை சுழற்றவும். பிறகு 5 முறை வேறு பக்கம் சுழற்றவும்.

மாடி படிக் கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்குவதும், பாதங்களுக்குச் சரியான உடற்பயிற்சிதான்.

தினசரி பாதங்களை உப்பு கலந்த குளிர்ந்த நீரில் சிறிது நேரம் மூழ்கும்படி வைக்கவும். இதே போல சிறிது நேரம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரிலும் வைத்து எடுக்கவும்.

மேற்கூறிய குறிப்புகளை முழுமையாக கடை பிடித்தால், பாத வலி நீங்குவதோடு, முதுகு வலி, மூட்டு வலி, கால் வலியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

தட்டையான பாதம் சில சமயங்களில் மூட்டுவலி குதிகால் மற்றும் இடுப்பு வலிக்கு காரணமாகிறது. இத்தகைய பாதங்களைக் கொண்டோர், செருப்பு தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருப்பது அவசியம்.

சிலரின் பாதங்கள் அதிக வளர்ச்சியடைந்து அகலமாக இருக்கும். இவர்களுக்கு மூட்டு மற்றும் தசை நார்களில் வலி உண்டாகலாம். அதனால் அவர்கள் சற்றே தட்டையான, காற்றோட்டமுள்ள காலணிகளை உபயோகிப்பது நல்லது.

கால்கள் மீது அதிக எடை அழுந்துவதால் ஆணிக்கால் எனப்படும் நோய் ஏற்படுகிறது. கால்களை தரையில் அழுந்த வைத்து நடக்க முடியாத அளவுக்கு வேதனை அளிக்கும் நோய் இது.

தோல் தடிப்பு, காய்ப்பு, நீர் கொப்புளங்கள் போன்ற வியாதிகளும் பாதங்களை சிர்குலைத்து விடும்.

பாத எலும்புகள் பெரியதாக வளர்ந்து விட்டாலும் பாதங்களில் வலி எடுக்கும். இதனால் நடப்பது கஷ்டமாகிறது. கூர்மையான, மெல்லிய, உயரமுடைய செருப்புகளை அணிவதால் இப்படி ஏற்படுகிறது.

பாதத்தின் தோல் தடிமனாகி விட்டாலும் பாதங்களில் வலி ஏற்படும். அதிக உடல் எடை மற்றும் தேய்ந்து போன செருப்புகளை உபயோகிப்பதாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது.

பூஞ்சை தொற்று நோய், அரிப்பு, சிறு சிறு கொப்புளங்கள், குதிகாலில் வெடிப்பு ஆகியவை பாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்சினை. இவற்றிலிருந்து விடுபட கீழ்க்கண்ட குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் 2 முறை பாதங்களை சுடு நீரினால் கழுவி நன்றாக ஆற விடவும்.

காட்டன் காலுறைகளை உபயோகிக்கவும். அவை எளிதில் வியர்வையை உறிஞ்சிக் கொள்ளும்.

நீச்சல் குளத்துக்கு அருகில் வெறும் காலுடன் நடக்காதீர். ஏனெனில் மற்றவர்கள் காலில் இருந்து நோய்த் தொற்ற வாய்ப்புள்ளது. நீச்சலுக்குப் பிறகு சுத்தமான நீரில் அவசியம் குளிக்கவும்.

நடைபயிற்சி நல்லது

நீங்கள் தினமும் எவ்வளவு தூரம் காலாற நடக்கிறீர்களோ, அது உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி, பாதங்களில் ரத்த ஓட்டம் சீரடைய உதவுகிறது. மேலும், பாதங்களில் நார்கள் உறுதியாவதும் உங்கள் நடையில்தான் இருக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை சிராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

Wednesday, June 8, 2011

மற்றவர்களை மன்னியுங்கள்….. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!


உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம்.

ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மைஅடைகிறார்கள்.

மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?

உங்கள் மனம் லேசாகிறது:
ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது.

உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது.

கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:
எதிர்மறை உணர்வுகளிலிருந்து எழுகிற அலைகள் நோய்களை உருவாக்க வல்லவை.

தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே ஆவியும் எழுகிறது. ஐஸ்கட்டியும் உருவாகிறது. அதுபோல, உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவே உங்கள் உடலும் மனமும் இருக்கிறது.

ஒருவரை மன்னிப்பதால் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. அதனால் உங்கள் ஆரோக்கியமும் முகப்பொலிவும் கூடுகிறது.

மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள்:
மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை.

முள்ளம்பன்றியின் முட்கள்போல் அவை சிலிர்த்தெழுந்து வறட்டுப் பிடிவாதத்தின் நுனிகளை நீட்டுபவை.

உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.

நீண்டகாலத் துன்பம் முடிவடைகிறது:
ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.

யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்?

அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.

உங்களையே எத்தனை நாள் தண்டிப்பது? :
ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை.

திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம்.

அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.

எப்படி மன்னிப்பது? :
சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம்.

சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.

மற்றவர்களை மன்னியுங்கள்.. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!!
-
சிநேகலதா

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}